ஆலயப் பிரவேசம் - Aalaya pravesam

ஆலயப் பிரவேசம் - Aalaya pravesam The purpose of our @ AALAYA PRAVESAM is to record the history and excellence of ancient temples in a

 #ஆன்மீக_சக்தி_கொண்ட_வன்னி_மரம்வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்ன...
15/05/2020

#ஆன்மீக_சக்தி_கொண்ட_வன்னி_மரம்

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.

எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.

இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும்.

மார்ப்புச் சளியை இந்த வன்னிக்காய் பொடி எடுக்கும். இந்த வன்னி இலையை அம்மியில் அரைத்து அப்படியே புண் இருக்கும் இடத்தில் கட்டினால் அப்படியே சரியாகிவிடும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் தொடாது. நெருங்கவே முடியாது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மரத்தினுடைய அமைப்பு எவ்வளவு வலிமையானது என்று.

இதுதவிர, தெய்வீகத் தன்மைகள் இந்த வன்னி மரத்திற்கு மிக அதிக அளவில் உண்டு. ஏனென்றால் சிவாலயங்களில் பல ஆலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம்தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால் வன்னி மரம்தான் தலவிருட்சம். இராம பிராண் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். அதேபோல, வள்ளிக் குறத்தியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும் ஐதீகம்.

அதேபோல, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரிய துணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்ற அதன் தன்மை நமக்குத் தெரிகிறது.

வீரியம், வெற்றி என எல்லாவற்றையும் தரக்கூடியத் தன்மை இந்த மரத்திற்கு உண்டு. மருத்துவ குணங்கள் ஏராளமாக இருக்கிறது. சித்த மருத்துவர்கள் நிறைய கூறுவார்கள். நமக்குத் தெரிந்த வரையில் ஆன்மீகம், மருத்துவம் என எல்லாவற்றிற்கும் மிகச் சிறந்த மரம்.

இந்த வன்னி மரத்தினுடைய கன்று நட்டு பாதுகாத்து வளர்த்து வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கும். அப்படி ஒரு பெரிய சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.

குறிப்பு : நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

என்றும் தேசியமும் - தெய்வீகமும் வழியில்...
#ஆலயப்_பிரவேசம்

29/04/2020

#திருவாசகம்

#கண்டபத்து - நிருத்த தரிசனம்
(தில்லையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா)

என்றும் தேசியமும் - தெய்வீகமும் வழியில்...
#ஆலயப்_பிரவேசம்


#நம்பிஆரூரர்_அடிமை_சிவலோகேஷ்

 #பங்குனி_உத்திரம்_விரத_முறையும்_பலனும்..முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ...
05/04/2020

#பங்குனி_உத்திரம்_விரத_முறையும்_பலனும்..

முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாகவும் அமைந்துள்ளது. சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் மகளான தெய்வானையை பங்குனியில் மணம் செய்து கொண்டார். இந்தவிழா முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் பிரம்மோற்ஸவமாக கொண்டாடப்படுகிறது. தர்மசாஸ்தா அவதரித்ததும், சிவபார்வதி, லட்சுமி கல்யாணம் நடந்ததும் இந்நாளில் தான். உத்திர விரதமிருப்பதால் அனைத்து தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும்.

#உத்திர_விரத_முறை : பங்குனி உத்திரத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முகப்பெருமானை வணங்க வேண்டும். அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் முருகன், சிவன், பெருமாளுக்கு வீட்டில் தீபமேற்றி வழிபடவேண்டும். இந்த விரதத்தால், விரைவில் திருமணயோகமும், செல்வச்செழிப்பும் உண்டாகும்.நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம்.
48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

என்றும் தேசியமும் - தெய்வீகமும் வழியில்...
#ஆலயப்_பிரவேசம்

 #ராமநவமி : வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும்? பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப...
02/04/2020

#ராமநவமி : வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும்?

பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

#வழிபடும்_முறை :
ஸ்ரீராமநவமி இந்நாளில், ராமர் படத்தை பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம், வெள்ளரிக்காய் படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

#பலன் :
ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

என்றும் தேசியமும் - தெய்வீகமும் வழியில்...
#ஆலயப்_பிரவேசம்


#ஸ்ரீ_ராம_நவமி_வாழ்த்துக்கள்

29/03/2020

1500 ஆண்டுகள் பழைமையான சிவாலயம்

#அருள்மிகு_ஸ்ரீ_பூதலிங்கேஸ்வரர்_திருக்கோவில்

திருச்சானூர் (எ) ஜானகிபுரம்

கிராமத்தில் தமிழ்நாடு மற்றும் இன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய வைரஸ் ஆன கொரோனா பிடியில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரவும், அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும் இன்று 28.03.2020 சிறப்பு வேள்வி நடைபெற்றது.

1500 years oldest Lord Shiva temple.

A special yagna performed at
situated at Thirusanur (A) Janakipuram on 28.03.2020 for relief from COVID - 19 across the world.

என்றும் தேசியமும் - தெய்வீகமும் வழியில்...
#ஆலயப்_பிரவேசம்

1500 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் #அருள்மிகு_ஸ்ரீ_பூதலிங்கேஸ்வரர்_திருக்கோவில் திருச்சானூர் (எ) ஜானகிபுரம் கிராமம்.தமிழ்நா...
27/03/2020

1500 ஆண்டுகள் பழைமையான சிவாலயம்

#அருள்மிகு_ஸ்ரீ_பூதலிங்கேஸ்வரர்_திருக்கோவில்
திருச்சானூர் (எ) ஜானகிபுரம் கிராமம்.

தமிழ்நாடு மற்றும் இன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய வைரஸ் ஆன கொரோனா பிடியில் இருந்து உலக நாடுகள் எவ்வகையில் மீளும் என்பது எம் இறைவன் என்பெருமான் கையில்தான் உள்ளது.

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து நாட்டு மக்கள் நலம்பெற வேண்டி நாளை 28/3/2020 காலை 9 மணியளவில் #சிறப்பு_வேள்வி (யாகம்) மற்றும் #சிறப்பு_அபிஷேகம் செய்யப்பட உள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிகாத நிலையில், அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு உள்ளது, எம் இறைவன் மட்டுமே நல்வழி காட்டுவார் என்று சரணாகதி அடைகிறோம்.

#குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் அறிவித்துள்ளார் ஆகையால் வேள்வில் யாரும் கலந்துகொள்ள அழைக்கவில்லை. தயவு செய்து அரசாங்கத்தின் உத்தரவையும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளையும் அனைவரும் கட்டாயம் பின்பற்றும்படி கேட்டு கொள்கிறோம். மற்றும் வேள்வியில் மூன்று நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். அரசாங்கத்தின் உத்தரவை கட்டாயம் பின்பற்றுவோம்.

என்றும் தேசியமும் - தெய்வீகமும் வழியில்...
#ஆலயப்_பிரவேசம்

வாழ்வின் யதார்த்தம் பற்றி  #காஞ்சி_மஹா_பெரியவர்,,,,,நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்...
27/03/2020

வாழ்வின் யதார்த்தம் பற்றி
#காஞ்சி_மஹா_பெரியவர்,,,,,

நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்; ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை. எது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள். உங்கள் உடலே உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!.

உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்?. உடலை விடுங்கள். உங்களின் தலை முடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத்தான் பிடிக்கும்?. முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!.

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?. தெரியாது. உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்?. அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?.
இல்லையே. இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப்பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.

மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது! உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது!. நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கின்றன! நீங்கள்தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப்பிடிப்பவரோ!. உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை!
எதுவுமே உங்கள் பொறுப்பில் இல்லை.

அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை!. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்கு ஏன் வீண் கவலை?!
எதுவும் உங்கள் கையில் இல்லை. அமைதியாய் இருங்கள்.

"நான்" என எண்ணி ஒரு போதும் பயன் இல்லை.

அகம் பிரம்மம்🙏

என்றும் ஆன்மீக வழியில்... #ஆலயப்_பிரவேசம்

 #கஷ்டங்களை_போக்கும்_தேய்பிறை_அஷ்டமி_வழிபாடு...!!பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று...
16/03/2020

#கஷ்டங்களை_போக்கும்_தேய்பிறை_அஷ்டமி_வழிபாடு...!!

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.
அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.
அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.

Address

Chengalpattu

Telephone

+19894439188

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆலயப் பிரவேசம் - Aalaya pravesam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஆலயப் பிரவேசம் - Aalaya pravesam:

Share

Category