07/01/2026
சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் பவானி
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல் கூடுகை
இறை மக்கள் யாவருக்கும் இறை மகன் இயேசுவின் இனிய திருப்பெயரால் அன்பின் நல் வாழ்த்துகள் நமது திருச்சபையின் வழக்கத்தின்படி நமது *ஆயர்தலைவர் அருட்பணி முனைவர் விக்டர் ராஜ் ஐயா அவர்கள்* குடும்பத்தாரை சந்தித்து இறைமக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
போதக சேகர குழு,திருமண்டில பேரவை உறுப்பினர்கள் , பெண்கள் ஐக்கிய சங்கம், வாலிபர் ஐக்கிய சங்கம், வல்லமை ஜெபக்குழு, தன்னார்வத்திருத்தொண்டர்கள் , ஊராட்சிக்கோட்டை கிளைத்திருச்சபை , நண்பர்கள் சுவிசேஷ ஜெபக்குழு ஆகியவற்றின் சார்பில் *ஆயர் தலைவர் அருட்பணி முனைவர் ஜே,விக்டர் ராஜ்*, *ஆயரம்மா திருமதி லாரா விக்டர் ராஜ்* மற்றும் ஆயரது *அன்பு மகள் ஹாசினி* ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது,
ஆயர் அவர்களது குடும்பத்தாருக்காகவும், அவர்களது இறைப்பணி, சமூகப்பணி மற்றும் கல்விப்பணிகளுக்காக சிறப்பு இறைவேண்டல் ஏறெடுக்கப்பட்டது.
இக்கூடுகையில் இறைமக்கள் , ஆலயதிருப்பணியாளர் , உடன் ஊழியர் , செயலர் , பொருளர், போதக சேகர குழு உறுப்பினர்கள் , திருமண்டல பேரவை உறுப்பினர்கள் , பெண்கள் ஐக்கிய சங்கத்தார் , வாலிபர் ஐக்கிய சங்கத்தார் , வல்லமை ஜெபக்குழுவினர் , தன்னார்வத்திருத்தொண்டர்கள் , ஊராட்சிக்கோட்டை கிளை திருச்சபையார் , ஆலயப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
இந்த புதிய ஆண்டில் ஆயர் தலைவர் குடும்பத்தாரை நமது திருச்சபைக்கென்று கடவுள் வைத்திருக்கும் தரிசனங்கள் திட்டங்கள் இலக்குகள் ஆகியவற்றை அடையும் வகையில் கடவுள் தனது திருக்கரங்களால் வல்லமையுள்ள கருவியாக பயன்படுத்தப்படவும் , இறை வழிகாட்டலும் , இறை ஞானமும் , இறை பாதுகாப்பும் ஒவ்வொரு நாளும் உடனிருந்து ஆக்கப்பூர்வமான முறையில் வழி நடத்த சபையார் தங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபங்களில் ஜெபித்துக்கொள்ளவும்