அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் Arulmigu Sri Kannan Thiru Kovil

  • Home
  • India
  • Aundipatti
  • அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் Arulmigu Sri Kannan Thiru Kovil

அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் Arulmigu Sri Kannan Thiru Kovil Arulmigu Sri Kannan Thiru Kovil promoting Spiritual life to all people. Serve people and develop people by Spirituality.

Sri Kannan Nagar, T.Subbulapuram West, T.Subbulapuram (PO), Aundipatty (TK),
Theni (DT), Tamil Nadu (ST)
India - 625536

01/05/2026
01/05/2026
⛰️ Sathuragiri Hills மலை ஏறும் முழு வழிகாட்டிSundara Mahalingam Temple செல்ல பக்தர்கள் நடைபயணம் (trekking) செய்ய வேண்டும...
15/03/2026

⛰️ Sathuragiri Hills மலை ஏறும் முழு வழிகாட்டி
Sundara Mahalingam Temple செல்ல பக்தர்கள் நடைபயணம் (trekking) செய்ய வேண்டும். மொத்தம் சுமார் 8 கி.மீ. மலைப்பாதை.
1️⃣ ஆரம்ப இடம்
தொடங்கும் இடம்: Thaniparai
இங்கு Forest Check Post இருக்கும்.
காலை 6:00 AM – 10:00 AM வரை மட்டுமே ஏற அனுமதி.
2️⃣ முதல் பகுதி – Thaniparai → Pilavadi Karuppasamy
தூரம்: ~1 கி.மீ
பாதை: சிறிய ஏற்றம்
இங்கு Pilavadi Karuppasamy Temple இருக்கும்.
பக்தர்கள் முதலில் இங்கு வழிபட்டு பிறகு மலை ஏறுவார்கள்.
3️⃣ இரண்டாம் பகுதி – Karuppasamy → Vazhukkupaarai
தூரம்: ~2 கி.மீ
பாதை: காட்டு பாதை, சில இடங்களில் கடினமான ஏற்றம்
Vazhukkupaarai (வழுக்கும் பாறை) என்பதால் கவனமாக செல்ல வேண்டும்.
4️⃣ மூன்றாம் பகுதி – Vazhukkupaarai → Irattai Lingam
தூரம்: ~2 கி.மீ
வழியில் சிறிய நீரூற்றுகள் மற்றும் ஓய்வு இடங்கள் இருக்கும்.
இங்கு Irattai Lingam தரிசனம் செய்யலாம்.
5️⃣ நான்காம் பகுதி – Irattai Lingam → Sundara Mahalingam
தூரம்: ~3 கி.மீ
இறுதி ஏற்றம் இருக்கும்.
முடிவில் Sundara Mahalingam Temple கோவில் அடைவீர்கள்.
6️⃣ அடுத்த கோவில்
இங்கிருந்து ~1 கி.மீ மேலே சென்றால்
Santhana Mahalingam Temple தரிசனம் செய்யலாம்.

திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம்!“திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம்” — இந்த ஒரு பழமொழிக்குள் நமது சான்றோர்கள் மறை...
05/03/2026

திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம்!

“திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம்” — இந்த ஒரு பழமொழிக்குள் நமது சான்றோர்கள் மறைத்து வைத்திருக்கும் ஆன்மீக ரகசியம் மிகவும் ஆழமானது. காலத்தின் ஓட்டத்தை உணர்ந்து வாழ்ந்தவர்கள் தான் நம் முன்னோர்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரு உண்மை என்னவென்றால் — காலத்தை மதித்தால் வாழ்க்கை வளரும்.

அந்த காலத்தை அளந்து காட்டும் தெய்வீக கணக்கே பஞ்சாங்கம்.
பஞ்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்கள்:

திதி – வாரம் – நட்சத்திரம் – யோகம் – கரணம்

இந்த ஐந்து அங்கங்களும் சேர்ந்து ஒரு நாளின் ஆன்மீக சக்தியை நிர்ணயிக்கின்றன.

அதில் மிக முக்கியமானது “திதி”.

திதி என்றால் என்ன?

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள கோணத் தொலைவை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவது தான் திதி.

அமாவாசை நாளில் சூரியனும் சந்திரனும் ஒரே திசையில் இணைந்து இருக்கும். அன்றே புதிய திதி சுழற்சி ஆரம்பமாகிறது. அதன் பிறகு சந்திரன் மெதுவாக வளரத் தொடங்குகிறான்.

இதனால் உருவாகும் வளர்பிறை காலம் “சுக்ல பட்சம்” என்று அழைக்கப்படுகிறது.

அமாவாசைக்கு பிறகு வரும் 15 திதிகள்:

வளர்பிறை (சுக்ல பட்சம்)

பௌர்ணமிக்கு பிறகு வரும் 15 திதிகள்:

தேய்பிறை (கிருஷ்ண பட்சம்)

இவ்வாறு ஒரு மாதத்தில் மொத்தம் 30 திதிகள் நடைபெறுகின்றன.

திதியின் ஆன்மீக ரகசியம்

நமது முன்னோர்கள் ஒரு முக்கியமான பழக்கத்தை கடைப்பிடித்தனர். தினமும் காலையில் எழுந்தவுடன் பஞ்சாங்கத்தைப் பார்த்து அன்றைய திதியை சொல்லுவார்கள்.

அதற்கு காரணம் உண்டு.

சாஸ்திரம் கூறுவது:

திதியைச் சொன்னால் செல்வம் பெருகும்

வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும்

நட்சத்திரத்தைச் சொன்னால் பாவங்கள் நீங்கும்

யோகத்தைச் சொன்னால் நோய்கள் அகலும்

கரணத்தைச் சொன்னால் காரியங்கள் நிறைவேறும்

இந்த ஐந்து அங்கங்களையும் சொல்லிவிட்டு பின்னர் ஸ்நானம் செய்து நித்திய கர்மாக்களை செய்வது வாழ்க்கையில் நன்மையை அளிக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

திதி நித்யா தேவிகளின் தெய்வீக மகிமை

ஸ்ரீவித்யை மரபில் லலிதா பரமேஸ்வரி மிக உயர்ந்த சக்தியாக போற்றப்படுகிறாள். அவள் ஸ்ரீசக்கர ரூபத்தில் உலகை அருளால் காக்கும் பராசக்தி.

அந்த பராசக்தியின் அமிர்த கலைகள் 15 பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒரு தேவியாக வெளிப்பட்டு 15 நித்யா தேவிகளாக லலிதாம்பிகையைச் சுற்றி அமர்ந்திருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.

இந்த தேவிகளே “திதி நித்யா தேவிகள்” என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த 15 தேவிகளுக்கும் தலைவியாக மகா நித்யா — அதாவது அம்பிகை லலிதா பரமேஸ்வரி திகழ்கிறாள்.

அந்தந்த திதிகளில் அந்தந்த தேவதைகளை மனமார வழிபட்டால்:

வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும்

வறுமை விலகும்

மன அமைதி கிடைக்கும்

அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்

தொடங்கிய காரியங்கள் வெற்றி பெறும்

என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வளர்பிறை திதிகளுக்குரிய தெய்வங்கள்

பிரதமை – குபேரன், பிரம்மன்
துவிதியை – பிரம்மன்
திரிதியை – சிவபெருமான், கௌரி அம்மன்
சதுர்த்தி – விநாயகர், எமதர்மன்
பஞ்சமி – திரிபுரசுந்தரி
சஷ்டி – செவ்வாய் பகவான்
சப்தமி – இந்திரன், முனிவர்கள்
அஷ்டமி – கால பைரவர்
நவமி – சரஸ்வதி
தசமி – வீரபத்திரர்
ஏகாதசி – மகாவிஷ்ணு, ருத்ரன்
துவாதசி – பெருமாள்
திரயோதசி – மன்மதன்
சதுர்த்தசி – காளி
பௌர்ணமி – லலிதாம்பிகை

தேய்பிறை திதிகளுக்குரிய தெய்வங்கள்

பிரதமை – துர்கை
துவிதியை – வாயு பகவான்
திரிதியை – அக்னி
சதுர்த்தி – விநாயகர், எமதர்மன்
பஞ்சமி – நாக தேவதைகள்
சஷ்டி – முருகப்பெருமான்
சப்தமி – சூரியதேவன்
அஷ்டமி – மகா ருத்ரன், துர்கை
நவமி – சரஸ்வதி
தசமி – துர்கை, எமதர்மன்
ஏகாதசி – சிவபெருமான், மகாவிஷ்ணு
துவாதசி – சுக்கிரன்
திரயோதசி – நந்தி
சதுர்த்தசி – ருத்ரன்
அமாவாசை – காளி, பித்ருக்கள்

பிறந்த திதியின் மகத்துவம்

ஒரு மனிதன் பிறந்த நாள் முக்கியமானது போலவே பிறந்த திதியும் மிகவும் முக்கியமானது.

அவரவர் பிறந்த திதியை அறிந்து கொண்டு அந்த நாளில்:

விரதம் இருப்பது

தீபம் ஏற்றுவது

அந்த தெய்வத்தை தியானிப்பது

மந்திரம் ஜபிப்பது

இவற்றைச் செய்தால் வாழ்க்கையில் உள்ள தடைகள் மெதுவாக நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அதனால் தான் சான்றோர்கள் சொன்னார்கள்:

“திதியை அறிந்தவன் வாழ்க்கையை அறிந்தவன்.”

ஏனெனில்,
காலத்தை மதிப்பவன் — விதியையே மாற்ற முடியும்.

அதனால் தான் நம் முன்னோர்கள் கூறிய அந்த மாபெரும் வார்த்தை:

“திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம்.”

15/02/2026

🟢🙏🟢🙏🟢🙏🟢🙏
*இன்று 15.02.2026*
*ஞாயிற்றுக்கிழமை....*
*மகா சிவராத்திரி*
*சுப தினம்.*

*_மகா சிவராத்திரி 2026 பஞ்சபூத தலங்கள் தவிர தமிழகத்தில் செல்ல வேண்டிய டாப் 10 சக்தி வாய்ந்த சிவாலயங்கள்_*
* 🛕🛕🛕மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ பூஜை, சிவ அபிஷேகங்களை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். இரவு முழுவதும் நடைபெறும் நான்கு கால பூஜைகளை தரிசிக்க அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் கூடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவது ஒவ்வொரு சிவன் கோவிலான சென்று வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.

இன்றைய தினம் தமிழகத்தில் சென்று வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்களில் மிக முக்கியமான, பிரபலமான ஆலயங்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*மகா சிவராத்திரி வழிபாடு :*

> மகா சிவராத்திரி என்பது சிவ பெருமானை வழிபடுவதற்குரிய நாள் மட்டுமல்ல. இது பிரபஞ்ச ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்வது வழக்கம். மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக கருதப்படுகிறது. அதே போல் சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தி காட்டிய இரவாகவும் கருதப்படுகிறது. சிவனின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானின் அருளை பெற மகாசிவராத்திரி அன்று தமிழகத்தில் உள்ள சில முக்கியமான, பழமையான கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பானதாகும்.

*சிறப்புமிக்க சிவ தலங்கள் :*

வழக்கமாக தமிழகத்தில் சிவ தலங்களில் என்றால் பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவானைகாவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காளஹஸ்தி காளாத்தீஸ்வரர் கோவில் ஆகியனை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆனால் இந்த பஞ்ச பூத தலங்களை தவிர சிறப்பு மிக்க, புகழ்பெற்ற, பல மடங்கு புண்ணியம் தரும் சிவ தலங்கள் உள்ளன. அவர்களில் முக்கியமான 10 கோவில்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

*மகா சிவராத்திரியன்று செல்ல வேண்டிய 10 சிவன் கோவில்கள் :*

1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் - பெரிய கோவில், பெரிய லிங்கம், பெரிய நந்தி என அனைத்து பெரிய என சிறப்பித்து கூறப்படும் தலம். மிக பழமையான, பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த சிவ தலம் இது. மிகப் பெரிய சிவ தலமாகவும், பாரம்பரிய சின்னமாகவும், பழமையான சிவாலயமாகவும் விளங்கும் தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பெருவுடையாரை தரிசனம் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் ஆகும்.
2. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை - பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் ஒரே தலம் மதுரை. சிவ பெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம். சிவ பெருமான் ஆண்டவனாக மட்டுமின்றி அரசனாகவும் ஆட்சி புரியக் கூடிய தலம். சொக்கநாதர், சுந்தரேஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தல சிவனை பற்றியும், இக்கோவில் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.

*உலகின் முதல் சிவன் கோவில் :*

3. திருஉத்திரகோசமங்கை திருக்கோவில், ராமநாதபுரம் - உலகின் முதல் சிவன் கோவில் என போற்றப்படும் பெருமைக்குரிய தலமாகும். மிகப் பெரிய மரகத நடராஜர் அமைந்துள்ள ஒரே தலம்.🟢🙏🟢🙏🟢🙏🟢🙏
*15.02.2026*
*ஞாயிற்றுக்கிழமை....*
*மகா சிவராத்திரி*
*சுப தினம்.*

*_மகா சிவராத்திரி 2026 பஞ்சபூத தலங்கள் தவிர தமிழகத்தில் செல்ல வேண்டிய டாப் 10 சக்தி வாய்ந்த சிவாலயங்கள்_*
* 🛕🛕🛕மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ பூஜை, சிவ அபிஷேகங்களை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். இரவு முழுவதும் நடைபெறும் நான்கு கால பூஜைகளை தரிசிக்க அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் கூடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவது ஒவ்வொரு சிவன் கோவிலான சென்று வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.

> இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்று வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்களில் மிக முக்கியமான, பிரபலமான ஆலயங்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*மகா சிவராத்திரி வழிபாடு :*

> மகா சிவராத்திரி என்பது சிவ பெருமானை வழிபடுவதற்குரிய நாள் மட்டுமல்ல. இது பிரபஞ்ச ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்வது வழக்கம். மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக கருதப்படுகிறது. அதே போல் சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தி காட்டிய இரவாகவும் கருதப்படுகிறது. சிவனின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானின் அருளை பெற மகாசிவராத்திரி அன்று தமிழகத்தில் உள்ள சில முக்கியமான, பழமையான கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பானதாகும்.

*சிறப்புமிக்க சிவ தலங்கள் :*

வழக்கமாக தமிழகத்தில் சிவ தலங்களில் என்றால் பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவானைகாவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காளஹஸ்தி காளாத்தீஸ்வரர் கோவில் ஆகியனை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆனால் இந்த பஞ்ச பூத தலங்களை தவிர சிறப்பு மிக்க, புகழ்பெற்ற, பல மடங்கு புண்ணியம் தரும் சிவ தலங்கள் உள்ளன. அவர்களில் முக்கியமான 10 கோவில்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

*மகா சிவராத்திரியன்று செல்ல வேண்டிய 10 சிவன் கோவில்கள் :*

1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் - பெரிய கோவில், பெரிய லிங்கம், பெரிய நந்தி என அனைத்து பெரிய என சிறப்பித்து கூறப்படும் தலம். மிக பழமையான, பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த சிவ தலம் இது. மிகப் பெரிய சிவ தலமாகவும், பாரம்பரிய சின்னமாகவும், பழமையான சிவாலயமாகவும் விளங்கும் தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பெருவுடையாரை தரிசனம் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் ஆகும்.
2. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை - பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் ஒரே தலம் மதுரை. சிவ பெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம். சிவ பெருமான் ஆண்டவனாக மட்டுமின்றி அரசனாகவும் ஆட்சி புரியக் கூடிய தலம். சொக்கநாதர், சுந்தரேஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தல சிவனை பற்றியும், இக்கோவில் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.

*உலகின் முதல் சிவன் கோவில் :*

3. திருஉத்திரகோசமங்கை திருக்கோவில், ராமநாதபுரம் - உலகின் முதல் சிவன் கோவில் என போற்றப்படும் பெருமைக்குரிய தலமாகும். மிகப் பெரிய மரகத நடராஜர் அமைந்துள்ள ஒரே தலம். சகஸ்ரலிங்கம் உருவாக காரணமான தலமாகவும், சிவ பெருமான் நிரந்தரமாக வீற்றிருந்து அருள்புரியும் தலமாக கருதப்படும் கோவில் இது. வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
4. கபாலீஸ்வர் கோவில், சென்னை - சென்னையில் உள்ள சப்தசிவ தலங்களில் இதுவும் ஒன்று. அம்பிகை, மயில் உருவில் வந்து ஈசனை வழிபட்டு, வரம் பெற்ற தலம். முருகப் பெருமானை சிவனை வழிபட்டு சக்திவேல் பெற்ற தலம். பிரம்ம தேவரே தன்னுடைய பாவங்கள் நீங்க வழிபட்ட தலம் என ஏராளமான சிறப்புகளைக் கொண்ட சென்னை மியலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில்.

*அனைத்து தோஷ பரிகார தலம் :*

5. சங்கமேஸ்வரர் கோவில், பவானி, ஈரோடு - அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் ஆகியவை நீங்குவதற்கான பரிகார தலமாக விளங்கும் கோவில் இது. விஸ்வாமித்ரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை இங்கு தரிசனம் செய்யலாம். தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் புண்ணிய தலம் இது.

6. அர்த்தநாரீஸ்வர் கோவில், திருச்செங்கோடு - ஈசன், தன்னுடைய உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து சிவன் பாதி, சக்தி பாதியாக காட்சி தரும் தலம். மலைமீது சுயம்பு உருவமாக ஈசனும், அம்பிகையும் உறைந்திருக்கும் தலம். உலகிலேயே உமையொரு பாகனாக ஈசன் காட்சி தரும் சிறப்பு மிக்க தலம். மலையே லிங்கமாக காட்சி தரும் தலம். இங்கு பெருமாளும் அருள்புரிவதால் இந்த மலையை கிரிவலம் வந்தால் கைலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

*யம பயம் போக்கும் சிவ தலம்*

7. திருவாரூர் தியாகராஜர் கோவில் - கடவுள்கள் அனைவருக்கும் மகாராஜா என ஈசன் போற்றப்படும் தலம். ஆசியாவின் மிகப் பெரிய தேர் அமைந்துள்ள கோவில். சைவ மரபில் பெரிய கோவில் என போற்றப்படும் ஒரே கோவில். திருவாரூரில் பிறந்தே முக்தி என்பார்கள். இங்குள்ள நடராஜரின் திருமுகத்தையும், கரங்களையும் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பாதத்தை தரிசிக்க முடியும்.
8. அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர் - மார்கண்டேயருக்காக எமனையே ஈசன் வதம் செய்த தலம். தன்னுடைய பக்தனுக்காக அமாவாசை திதியில் அம்பிகை முழு நிலவு காட்டிய தலம். எம பயம் போக்கி, தீர்க்க ஆயுள் அருளக் கூடிய தலம். சொல்லிக் கொண்டே செல்லும் அளவிற்கு அளவில்லாத சிறப்புக்களை கொண்ட அற்புத தலம்.

*பாவம் போக்கும் புண்ணிய தலம் :*

9. ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் - இந்தியாவில் உள்ள முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் தலம். ஸ்ரீராமபிரானே தன்னுடைய பாவம் நீங்க வழிபட்ட தலம். அக்னி தேவர் உள்ளிட்ட பலரும் வழிபட்டு, பாவம் மற்றும் சாப நிவர்த்தி பெற்ற தலம். இங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட்டால் பித்ருதோஷம் உள்ளிட்ட அனைத்து தமிழகத்தில் நீங்கும்.
10. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி - தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிவ தலங்களில் இதுவும் ஒன்று. மரண பயத்தை போக்கி, தன்னுடைய பக்தர்களுக்கு காவலமாக இருந்து அருளக் கூடியவர் இத்தல ஈசன். ஈசன் நெல்லையப்பராகவும், அம்பிகை காந்திமதி அம்மனாகவும் அருள்புரியும் அற்புத தலம்.

*வாழ்க வளமுடன்*
🙏🙏🙏🙏🙏 சகஸ்ரலிங்கம் உருவாக காரணமான தலமாகவும், சிவ பெருமான் நிரந்தரமாக வீற்றிருந்து அருள்புரியும் தலமாக கருதப்படும் கோவில் இது. வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
4. கபாலீஸ்வர் கோவில், சென்னை - சென்னையில் உள்ள சப்தசிவ தலங்களில் இதுவும் ஒன்று. அம்பிகை, மயில் உருவில் வந்து ஈசனை வழிபட்டு, வரம் பெற்ற தலம். முருகப் பெருமானை சிவனை வழிபட்டு சக்திவேல் பெற்ற தலம். பிரம்ம தேவரே தன்னுடைய பாவங்கள் நீங்க வழிபட்ட தலம் என ஏராளமான சிறப்புகளைக் கொண்ட சென்னை மியலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில்.

*அனைத்து தோஷ பரிகார தலம் :*

5. சங்கமேஸ்வரர் கோவில், பவானி, ஈரோடு - அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் ஆகியவை நீங்குவதற்கான பரிகார தலமாக விளங்கும் கோவில் இது. விஸ்வாமித்ரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை இங்கு தரிசனம் செய்யலாம். தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் புண்ணிய தலம் இது.

6. அர்த்தநாரீஸ்வர் கோவில், திருச்செங்கோடு - ஈசன், தன்னுடைய உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து சிவன் பாதி, சக்தி பாதியாக காட்சி தரும் தலம். மலைமீது சுயம்பு உருவமாக ஈசனும், அம்பிகையும் உறைந்திருக்கும் தலம். உலகிலேயே உமையொரு பாகனாக ஈசன் காட்சி தரும் சிறப்பு மிக்க தலம். மலையே லிங்கமாக காட்சி தரும் தலம். இங்கு பெருமாளும் அருள்புரிவதால் இந்த மலையை கிரிவலம் வந்தால் கைலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

*யம பயம் போக்கும் சிவ தலம்*

7. திருவாரூர் தியாகராஜர் கோவில் - கடவுள்கள் அனைவருக்கும் மகாராஜா என ஈசன் போற்றப்படும் தலம். ஆசியாவின் மிகப் பெரிய தேர் அமைந்துள்ள கோவில். சைவ மரபில் பெரிய கோவில் என போற்றப்படும் ஒரே கோவில். திருவாரூரில் பிறந்தே முக்தி என்பார்கள். இங்குள்ள நடராஜரின் திருமுகத்தையும், கரங்களையும் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பாதத்தை தரிசிக்க முடியும்.
8. அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர் - மார்கண்டேயருக்காக எமனையே ஈசன் வதம் செய்த தலம். தன்னுடைய பக்தனுக்காக அமாவாசை திதியில் அம்பிகை முழு நிலவு காட்டிய தலம். எம பயம் போக்கி, தீர்க்க ஆயுள் அருளக் கூடிய தலம். சொல்லிக் கொண்டே செல்லும் அளவிற்கு அளவில்லாத சிறப்புக்களை கொண்ட அற்புத தலம்.

*பாவம் போக்கும் புண்ணிய தலம் :*

9. ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் - இந்தியாவில் உள்ள முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் தலம். ஸ்ரீராமபிரானே தன்னுடைய பாவம் நீங்க வழிபட்ட தலம். அக்னி தேவர் உள்ளிட்ட பலரும் வழிபட்டு, பாவம் மற்றும் சாப நிவர்த்தி பெற்ற தலம். இங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட்டால் பித்ருதோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
10. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி - தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிவ தலங்களில் இதுவும் ஒன்று. மரண பயத்தை போக்கி, தன்னுடைய பக்தர்களுக்கு காவலமாக இருந்து அருளக் கூடியவர் இத்தல ஈசன். ஈசன் நெல்லையப்பராகவும், அம்பிகை காந்திமதி அம்மனாகவும் அருள்புரியும் அற்புத தலம்.

*வாழ்க வளமுடன்*
🙏🙏🙏🙏🙏

15/02/2026

🟢🙏🟢🙏🟢🙏🟢🙏
*இன்று*
*"மகா சிவராத்திரி"* (15.02.2026)

*நான்கு கால பூஜைகள் மற்றும் பலன்கள்*

🙏*முதல்* *கால* *பூஜை* (மாலை 6:00 9:00) : பிரம்ம தேவர் வழிபட்ட நேரம்

அபிஷேகம்: பால், பஞ்சகவ்யம் (பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்தது).

பூக்கள்: வில்வம் மற்றும் தாமரை மலர்கள்.

நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல், பழங்கள்

பலன்: நம்முடைய கடந்த கால பாவங்கள் நீங்கும்.

*🙏இரண்டாம்* *கால* *பூஜை* (இரவு 9:00 12:00) : மகாவிஷ்ணு வழிபட்ட நேரம்

அபிஷேகம் : இளநீர், பஞ்சாமிர்தம்

பூக்கள்: துளசி மற்றும் வில்வம்

நைவேத்தியம்: பருப்பு பாயசம், கற்கண்டு சாதம்

பலன்: செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி மற்றும் ஐஸ்வர்யம் உண்டாகும்.

🙏*மூன்றாம்* *கால* *பூஜை* (நள்ளிரவு 12:00 3:00) : அம்பாள் வழிபட்ட நேரம் (லிங்கோத்பவ காலம்)

அபிஷேகம்: தேன் மற்றும் பழச்சாறுகள்

நைவேத்தியம் : எள் சாதம் அல்லது எள் பலகாரம்

பூக்கள்: மல்லிகை, தும்பை, தாழம்பூ (வருடத்தில் இந்த ஒரு நேரம் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ சூட்டப்படும்).

பலன்: தீய சக்திகள் அகலும், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.

*🙏நான்காம்* *கால* *பூஜை* (அதிகாலை 3:00 6:00) : தேவர்கள், ரிஷிகள் வழிபட்ட நேரம்

அபிஷேகம் : கரும்புச்சாறு மற்றும் பன்னீர்

பூக்கள்: அல்லி, சாமந்தி, நந்தியாவட்டை

நைவேத்தியம்: சுத்தமான அன்னம் அதில்🟢🙏🟢🙏🟢🙏🟢🙏
*மகா சிவராத்திரி* (15.02.2026)

நைவேத்தியம்: சுத்தமான அன்னம் அதில் ஒரு சொட்டு நெய் விட வேண்டும்.

பலன்: காரியத் தடைகள் நீங்கும், முக்தி மற்றும் மன அமைதி கிடைக்கும். சிவாயநமஹ.
*வாழ்க வளமுடன்* ஒரு சொட்டு நெய் விட வேண்டும்.

பலன்: காரியத் தடைகள் நீங்கும், முக்தி மற்றும் மன அமைதி கிடைக்கும். சிவாயநமஹ.
*வாழ்க வளமுடன்*

🐘 விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள்: வாழ்வின் விக்னங்களை நீக்கும் புனிதத் தலங்கள்! 🕉️முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள்...
30/01/2026

🐘 விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள்: வாழ்வின் விக்னங்களை நீக்கும் புனிதத் தலங்கள்! 🕉️

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஞானத்தின் வடிவான விநாயகப் பெருமானுக்கும் ஆறு படைவீடுகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

நம் வாழ்வின் தடைகளை நீக்கி வெற்றியைத் தரும் கணபதியின் அறுபடை வீடுகள் மற்றும் அவற்றின் சிறப்புகளைக் காண்போம்.

1️⃣ முதல் படைவீடு: திருவண்ணாமலை (அல்லல் போம் விநாயகர்)
சிறப்பு: அண்ணாமலையார் கோயில் கோபுர நுழைவாயிலிலேயே வீற்றிருக்கும் இவரை 'அல்லல் போம் விநாயகர்' என்று அழைக்கிறார்கள்.

பலன்: "அல்லல் போம் வல்வினை போம்" என்ற வாக்கிற்கேற்ப, இவரை வழிபட நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் அனைத்தும் பனி போல் விலகும்.

📍 முகவரி: அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601.

2️⃣ இரண்டாம் படைவீடு: விருத்தாசலம் (ஆழத்துப் பிள்ளையார்)
சிறப்பு: பழமலைநாதர் கோயிலில் நிலத்திற்கு அடியில் சுமார் 18 அடி ஆழத்தில் உள்ள சன்னதியில் இவர் எழுந்தருளியுள்ளார். அதனால் 'ஆழத்துப் பிள்ளையார்' என்று பெயர்.

பலன்: இவரை வணங்கினால் நிலையான செல்வம், சிறந்த கல்வி மற்றும் மேன்மையான வாழ்வு அமையும்.

📍 முகவரி: அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம் - 606001.

3️⃣ மூன்றாம் படைவீடு: திருக்கடவூர் (கள்ளவாரணப் பிள்ளையார்)
சிறப்பு: தேவர்கள் அமுதம் உண்ணும் முன் விநாயகரை வழிபட மறந்தனர். அதனால் அமிர்த கடத்தை மறைத்து வைத்ததால் இவருக்கு 'கள்ளவாரணப் பிள்ளையார்' என்று பெயர் வந்தது.

பலன்: ஆயுள் பலம் தரும் தலம். இவரை வணங்கினால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

📍 முகவரி: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்டம் - 609311.

4️⃣ நான்காம் படைவீடு: மதுரை (சித்தி விநாயகர்)
சிறப்பு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறார். மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் செல்லும் முன் இவரை வணங்கியதாக வரலாறு.

பலன்: 'சித்தி' என்றால் வெற்றி. நாம் தொடங்கும் காரியங்களில் தடையற்ற வெற்றியையும் காரிய சித்தியையும் தருபவர் இவர்.

📍 முகவரி: அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை - 625001.

5️⃣ ஐந்தாம் படைவீடு: பிள்ளையார்பட்டி (கற்பக விநாயகர்)
சிறப்பு: குடைவரைக் கோயிலில் வீற்றிருக்கும் இவர், தனது கையில் சிவலிங்கத்தை ஏந்தி சிவபூஜை செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார். இது மிகவும் அரிய கோலமாகும்.

பலன்: கேட்டதைத் தரும் கற்பக விருட்சம் போன்றவர். இவரை வழிபட ஞானமும், தெளிந்த சிந்தனையும் கிட்டும்.

📍 முகவரி: அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம் - 630211.

6️⃣ ஆறாம் படைவீடு: திருநாரையூர் (பொள்ளாப் பிள்ளையார்)
சிறப்பு: 'பொள்ளா' என்றால் உளியால் செதுக்கப்படாத (சுயம்பு) என்று பொருள். நம்பியாண்டார் நம்பிக்கு நேரில் தோன்றி அருள்புரிந்து, தமிழ் வேதங்களான திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர்.

பலன்: புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன் இவரைத் துதித்தால் உடனடி வெற்றி கிட்டும்.

📍 முகவரி: அருள்மிகு சௌந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர் (சிதம்பரம் அருகில்), கடலூர் மாவட்டம் - 608306.

ஓம் கம் கணபதயே நமஹ! 🙏

இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். விநாயகரின் அருளால் உங்கள் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி வளம் பெருகட்டும்! 🚩

#ஆன்மீகம் #விநாயகர் #அறுபடைவீடுகள்

27/12/2025

ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்

இதோ அதற்கு ஓர் உதாரணம்:

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். "செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பி விட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.
சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக் கூடச் சிரமப்படவில்லை.பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக்கட்டளையிட்டான்.

""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச் சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.. அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்து விடுகிறது.

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்.'' வினையை விதைத்து விட்டு அறுவடைக் காலத்தில் சாமர்த்தியமாக வெளியூர் சென்று விட்டாலும் வினையிடமிருந்து தப்ப முடியாது.

வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.

நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பது இல்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள் தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போது தான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை.

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.பட்டினத்தடி...
07/12/2025

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். "அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்" என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி, "ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று" என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்குரிய கடனைக் கழித்தார்.

அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை...

1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ?

2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் ?

3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ?

4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன் ?

5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு ?

6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே" என அழைத்த வாய்க்கு ?

7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ! - மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய் ?

10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்!
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; - பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!

துறவியே ஆகிப் போனாலும் ஒவ்வொரு ஆண்மகனும் தம் தாய், தந்தையருக்கு செய்யும் கடமைகளை மறவாது நிறைவேற்றி முன்னோர்கள், ஞானிகள், சித்தர்கள் ஆசிகளை பெற்றுய்வோம்.

Address

West Side T. Subbulapuram
Aundipatti
T.SUBBULAPURAM-625536

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் Arulmigu Sri Kannan Thiru Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் Arulmigu Sri Kannan Thiru Kovil:

Share

Category