Attur Paris

Attur Paris Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Attur Paris, Church, 636102, Attur.

இன்று பிறந்த நாள் காணும்  எங்கள் அன்பு பங்குதந்தை அருட்திரு.இ. கிரகோரி ராஜன் அடிகளார் அவர்களுக்கு  நல்ல ஆன்ம உடல் நல சுக...
09/05/2020

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் அன்பு பங்குதந்தை
அருட்திரு.இ. கிரகோரி ராஜன் அடிகளார் அவர்களுக்கு நல்ல ஆன்ம உடல் நல சுகமும், சமாதானமும், மற்றும் இன்று போல் என்றும் இறை பணியிலும் வழிநடத்துதலிலும் சிறந்தவராக இருக்க எல்லாம் வல்ல மூவொரு இறைவனிடம் மன்றாடுகிறோம். ✝️

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !!!!

🎂🕺🏻⛪🙏🏼🥳

எங்கள் அன்பு பங்குதந்தையே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

04/04/2020

அன்பு இறைமக்களே!

கண்ணுக்குத்தெரியாத கொரொனா நம்மை சமூக விலகலில் விலக்கிவைத்திருக்கிறது.
அரசாங்கமும் சமூக அக்கறையோடு உயிர்காக்க ஊரடங்கு உத்தரவில் நம்மை வீட்டிலிரு விலகியிரு விழித்திரு என வீட்டிலிருந்து உயிர்பிழைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது
உலகவரலாற்றில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது..
தொற்று நோய் நம்மை தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சம் பயம் உணர்வில் வாழும் சூழல் தொடர்கிறது
சளி இருமல் காய்ச்சல் மூச்சுத்திணரல் போன்ற அறிகுறிகள் மருத்துவ தொடர்புக்கு அழைக்கிறது.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் மேற்காண் அனைத்தையும் கடைபிடித்து சமூக அக்கறையோடு பொது நலன் பேண கடமைப்பட்டிருக்கிறோம். பிறருடைய நலனுக்காகவும் நம்முடைய நலனுக்காகவும் முழுமையாய் இவற்றை கடைபிடிப்போம்.

எதுவும் உலகில் நிரந்தரமல்ல. இதுவும் கடந்துபோகும்

பணம் பட்டம் பதவி அந்தஸ்து அதிகாரம்
எதுவுமே நிலைக்காது

கண்ணுக்குத்தெரியாத இந்த கொரொனா
கண்ணுக்குத்தெரிகிற நம்மை எப்படி அழிக்கிறதோ அப்படியே அனைத்தும் நிகழும்

இத்தாலியில் மக்கள் பணத்தையெல்லாம் வீதிகளில் எறிந்த செய்தியும்
டாட்டா 1500 கோடி இந்தியாவில் நிவாரண நிதிக்காக கொடுத்ததும் நமக்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது.

இத்தவக்காலத்தில் நாம் செய்கிற ஒரு மிகப்பெரிய ஒருத்தல் முயற்சியே இவ்வில்லம் தங்குதல்

கட்ப்பாட்டுடன் இல்லத்திலிருப்போம்
இளையோரே உங்கள் நிலைமை புரிகிறது. இவ்விளையோர் ஆண்டிலே நீங்கள் செய்யும் மிகப்பெரிய தியாகம் கட்டுப்பாட்டுடன் வீட்டிலிருப்பதுதான்

வெளிநாடுகளில் கொடூரமாக பரவிக்கொண்டிருக்கும் இக்கொள்ளைநோய் நமக்கு பரவாமலிருக்க ஊரடங்கு உத்தரவை உறுதியாய் கடைபிடியுங்கள்.

நமது பங்கு ஆலயத்தில் தினந்தோறும் திருப்பலி ஒபபுக்கொடுக்கப்படுகிறது.
இத்தொற்று நோய் நீங்க செபமாலை ஆராதணை சிறப்பு விண்ணப்பங்கள் ஏறெடுக்கப்படுகிறது.

புனித வார திருநிகழ்வுகள் அனைத்தும் நமது சேலம் மறைமாவட்ட அப்போஸதலிக்க பரிபாலகரின் வழிகாட்டுதலின்படி இறைமக்கள் இல்லத்திலேயே இருக்கும்படி பங்கு ஆலயத்தில் நடைபெறும்

ஏற்கனவே நோட்டீஸில் உள்ளபடி அதே குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்

அனைத்து திருநிகழ்வுகளும் U_ TUBE இணையதளம் மூலம் ஔிபரப்பப்படும்

சரியான நேரத்தில் நீங்களும் குடும்பமாக இல்லத்தில் இருந்தவாறே பங்கேற்க உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

செபத்தால் இணைவோம்

செபத்தால் வெல்வோம்

அருள்தந்தை கிரகோரி
பங்குத்தந்தை
ஆத்தூர், சேலம்

ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம்
27/03/2020

ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம்

27/03/2020

Good morning brother's let it know to all our parishioners about this page and let them joined

Address

636102
Attur
636102

Telephone

+919952635853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Attur Paris posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category