Arulmigu Kanalvadivu Amman Temple, Aruppukottai

Arulmigu Kanalvadivu Amman Temple, Aruppukottai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arulmigu Kanalvadivu Amman Temple, Aruppukottai, Hindu temple, South Street, Aruppukottai, AruppuKottai.

13/03/2018

கந்தசஷ்டி கவசத்திற்கு விளக்கம் தெரியுமா?

கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.

சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.

முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,

இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

11/03/2018

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்..?

1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு #சனீஸ்வரன் அருகில் வரமாட்டார்

2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு
#பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..

3. ஆந்தையை போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு #லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்...

4. சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன் இரு
#பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள்...

5. அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதை போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள் #சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள் ...

6. எலி போல தொழிலில் ஊழல் செய்யாமலிரு வினைகளை அழிக்கும் #விநாயகர் உன் வீடு
தேடி வருவார்...

7. மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு அழகன் #முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பான்...

8. உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை போல பறக்கட்டும் அப்பொழுது #கண்ணன் வருவான் அகத்திற்கு...

9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில், உலகை படைத்த ஜோதியான தந்தை #ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு...

10/03/2018

*ஏன் பைரவ வழிபாடு செய்ய வேண்டும் ?*

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.

நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ,அசுர,மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன்,பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.

தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.

அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால் தான், ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

*இரண்டு பைரவர்கள்*

அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர் - 612 401, திருஅரிசிற்கரைப்புத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3நிலைகளைக் கொண்டது.

இத்தலவிநாயகர் சொர்ணவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

முன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவிலட்சுமியுடன் காட்சி தருகிறார்.

அருகில் சுந்தரர், மனைவிபரவை நாச்சியாருடன் இருக்கிறார். சொர்ணவிநாயகர்,தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை வணங்கியபின்பே,சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம்.

பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.முருகன், தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில்இருக்கிறது.

இங்கு பைரவர்களை வேண்டிக்கொள்ள தவறைதட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பதுநம்பிக்கை.

01/03/2018
09/02/2018

சில ஆன்மீகக் குறிப்புகள்
✦ பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.

✦ வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைய வேண்டும். நாம் அணைக்கக் கூடாது.

✦ திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

✦ அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது

✦ கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

✦ எலுமிச்சை விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

✦ சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

✦ சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.

✦ நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

✦ திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

✦ ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

✦ கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

✦ குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது

✦ விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

✦ பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

✦ செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

✦ இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

✦ வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.

✦ பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

✦ புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

✦ கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

✦ சிதம்பரத்தைத் தரிசித்தாலும், காசியில் இறந்தாலும், திருவாரூரில் பிறந்தாலும், திருவண்ணாமலையை நினைத்தாலும் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.

✦ விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவ பிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும், முருகனை மூன்று முறையும் சுற்றி வழிபாடு செய்தல் வேண்டும்.

✦ காலையில் படுக்கையில் இருந்நு கண் விழித்தெழுந்ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற்பலன்களை தரும் என்பது சாஸ்திரம் நெறியாகும்.

04/02/2018

*பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்*

1 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

2 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது

3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4 தாராசுரம் (கும்பகோணம்) ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது

6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில்
நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )

8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்

11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது

12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது

13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது

14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது

19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை

21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.

23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை

25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை

26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

33 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது

34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

35 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.

36 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது

Varushabishekam..🙏
04/02/2018

Varushabishekam..🙏

30/01/2018

தைப்பூசம் - ஜனவரி 31–ந்தேதி (புதனன்று) கொண்டாடப்படவிருக்கிறது.

இருபத்தேழு நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் பௌர்ணமி நாளாக இருக்கும். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.

தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.

அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.

விரதம் இருப்பது எப்படி?

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து முருகப் பெருமானை வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும். அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்குச் சென்று முருகனை வழிபட்டு வரலாம்.

தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார்.

இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும். தொழில் மேன்மை உண்டாகும். தைப்பூசம் அன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.

இது தவிர பூச நட்சத்திரம், தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் (குரு பகவான்) நட்சத்திரம் என்பதால் பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வதும் மிகுந்த பலனைத் தரும்.

பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டவமாடிக் காணும்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.

அத்துடன் வாயுபகவானும், வருணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத் தைப்பூச நன்னாளாகும்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைமாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் கலந்தார். இதை குறிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் தைமாதத்தில் தைப்பூசத்தன்று அதிகாலை ஜோதிதரிசனம் நடைபெறுகிறது. அன்று மேட்டுக்குப்பத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வள்ளலாரின் விழாவை கொண்டாடுகின்றனர்.

இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும் இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் இத் தைப்பூச நன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது

பூரண கும்பம்உலகமும் அதிலுள்ள தாவர சங்கமப் பொருள்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. மறுபடியும் பிரளய காலத்த...
19/01/2018

பூரண கும்பம்

உலகமும் அதிலுள்ள தாவர சங்கமப் பொருள்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. மறுபடியும் பிரளய காலத்தில் தண்ணீரிலேயே லயமாகி விடுவதாக வேதம் கூறுகின்றது. ஆகையால் ஆதிகர்த்தாவாகிய இறைவன் நீரின்மூலம் உருவ வழிபாட்டுக்குக் கொண்டுவருவதே பூரண கும்பத்தின் அர்த்தம்.

இப் பூரண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவனை தியான, ஜப, பிரார்தனையின் மூலம் யாகசாலையில் வைத்து யாகமும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. சக்தி வாய்ந்த ஸ்ரீ ஜாக்ஷரங்கள் கொண்ட மந்திரங்களில் கும்பநீர் சுத்தி செய்யப்பட்டு அதில் தெய்வ ஆவாகனம் செய்யப்படுகின்றது. இந்த நீர் கெடாதிருக்க கராம்பு, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ முதலிய திரையங்கள் சேர்க்கப்பட்டுகின்றன. அஷ்டலக்ஷ்மிகளின் கடாட்ஷம் நிறைந்திருக்க மாவிலை வைக்கப்படுகின்றது.

தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, தர்ப்பை, கூச்சம், ஸ்வர்ணம், அக்ஷதை ஆகிய எட்டு மங்களப் பொருள்களால் கும்பம் அலங்கரிக்கப்படுகின்றது.

கும்ப தத்துவம்
மங்கள காரியங்களுக்காக வைக்கப்படும் நிறைகுடத்தில் 5 மாவிலைகள் இடம் பெறுகின்றன. இவ் ஐந்து மாவிலைகளும் ஐம்புலன்களையும் நினைவு படுத்துவதாக அமைகின்றன. குடமும் நீரும் நமது உடலை நினைவு படுத்துவதாகும்.

நிறைகுடமாகிய பூரண கும்பத்தை ஒரு முழுமதியாக ஒப்பிட்டார் கம்பர். எப்படியிருப்பினும் மனித உடல் ஐம்புலன், சிரசு, இவற்றை அடக்கும் கருவியாக பூரண கும்பம் இடம்பெறுகின்றது. பூரண கும்பம் இல்லாத சடங்குகளே இல்லை என்றே கூறலாம்.

18/01/2018

அன்பே சிவம்.

வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி
தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக்
கண்டெடுத்தான்.
அதை அரசனிடம் எடுத்துச்
சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை
நீயே
வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து
அபிஷேகம் செய்”
என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான்.

இறை வழிபாடு என்றால் என்ன என்று
தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள்
ஏளனமானவை என்பதை அறியாமல்,
பிணம் எரித்த
சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம்
செய்து வழிபட்டான்.
ஒருநாள் திடீரெனப் பெய்த
மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும்
கரைந்து விட்டது.
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய
சாம்பல் இல்லையே என வருந்திய அவனும்
விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது
மனைவியிடம்
”நான் இந்த தீயில் விழுகிறேன். என்
உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான்.
ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால்
இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில்
குதிக்கின்றேன்” என்று கூறிக்கொண்டே தீயில்
வீழ்ந்தாள்.
இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன்
பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை
உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார்.
இதைக் கேட்ட அரசனும் தங்கத்தால் ஆன
சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்
வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த
எனக்கு காட்சிதராத இறைவன்,
சுடுகாட்டுச்
சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு
மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும்
’பக்தி’
என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே
மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்...

ஓம் நம சிவாய

சூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள்காலையில் நீராடிவிட்டு இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்ற...
13/01/2018

சூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள்

காலையில் நீராடிவிட்டு இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும்.

1. சூரியக் கடவுள் ‘கொடிநிலை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் சூரிய கோவில் உச்சிகிழான் கோட்டம் என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது.

2. உலகில் எழுந்த பழமையான நூலான ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு குறிக்கப்பட்டிருக்கிறது. சௌராஷ்டிரம் என்ற பாரத வர்ஷத்தின் ஐம்பத்தி இரண்டு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.

3. ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன.

4. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாகவும், யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்றும், அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர்.

5.சூரியன் காலையில் ரிக் வேத சொரூபியாகவும் மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும் மாலை வேளையில் சாம வேத சொரூபியாகவும் திகழ்கிறான்.

6. “ஆதித்யானாம் அஹம் விஷ்ணு’ என்கிறார் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர். இதன் அர்த்தம் “நானே சூரியனாகத் திகழ்கிறேன் என்பதாகும்.

7. சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.

8. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய “காலம்‘ என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருபவராக புராணங்கள் கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் விளங்குகிறார். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

9. சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.

10.ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை “சூரியநாராயணன்’ என்று போற்றுகின்றனர்.

11. சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் “சிவசூரியன்’ என்று போற்றுகின்றனர்.

12. சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர்.

13.தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு “ரதசப்தமி’ என்று பெயர். அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்.

14. ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி உலகின் நலனைக் கருதி ராவணனை வெல்ல முனைந்தபோது ஸ்ரீ ராமனுக்கு கவசமாக, பாதுகாப்பாக, ஆதித்ய ஹ்ருதயத்தை அகஸ்தியர் உபதேசித்தார்.

15. வேதியர்கள் தினமும் ஓதும் காயத்ரி மந்திரம் சூரியனுக்குரியதே. ஆதித்ய ஹ்ருதயமும் காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக் கூடியவையாகும்.

16. இந்தியாவில் சூரியனுக்கென்று தனியே ஒருசில ஆலயங்களே உள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது, ஒரிசாவில் கோனார்க், கயாவில் தட்சிணார்க்கா, ஆந்திராவில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அஸ்ஸலமில் சூர்யபஹார், மத்திய பிரதேசத்தில் உனாவோ, கேரளாவில் ஆதித்யபுரம், காஷ்மீர், ஸ்ரீநகரில் 2000 ஆண்டுகள் பழைமையான “மார்த் தாண்டா’ ஆலயம் ஆகியவையாகும்.

17. நம் ஆரோக்கியத்துக்கும் அதி பதியாக இருப்பவர் சூரிய பகவான்! ‘சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு’ என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன.

18.காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில், சிறிது நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக நம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும்.

19. சூரிய வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் சீனர்களும் ஜெர்மானியர்களும் தங்கள் வாழ்நாளை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்பவர்கள் மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்களும், பூப்படையாத பெண்களும், முக்கியமாக கண்பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது.

20. கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை உலகத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.

21. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன.

22.வேதகால ரிஷிகள், “சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா” என்று குறிப்பிடுகிறார்கள்.

23. சூரிய ஒளியில் நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வர்ணம் என்றும் பொருளுண்டு.

24. சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக விளங்கினர்.

25. சூரியனைப் பரம்பொருளாக “ஆதித்ய ஹிருதயம்” கூறுகிறது. “மார்க்கண்டேய புராணம்”, “பவிஷ்ய புராணம்” முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் “காயத்ரி” சூரியனுக்கு உகந்த மந்திரம்.

26. சூரிய வழிபாடு “சௌர மதம்” என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌர மதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருந்தது.

27. ஆதிகாலத்தில் சௌர மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வழிபட்டார்கள். ஆதிசங்கரர்தான் இதை மாற்றினார்.

28. அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரிய கிரணங்களை “ஜீவத்திறல்” என்றும் “ஆயுளை வளர்க்கும் அன்னம்” என்றும் போற்றினார்கள்.

29. சூரிய வழிபாட்டினை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கிறார்கள். எகிப்தியர்கள் சூரியனை ஆமன்-ரா (ஆரோக்கியம் தருபவன்) என்று போற்றுகிறார்கள். கிரேக்கர்கள் “போபஸ்- அப்போலோ’ என்றும், ஈரானியர்கள் “மித்ரா’ என்றும் அழைக்கிறார்கள்.

30. நைல் நதிக்கரையில் வாழ்பவர்கள் சூரிய வழிபாடு செய்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

31. கருங்கடல் கரையோர நாடுகளில் கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

32. எகிப்தில் கி.மு. 14-ஆம் நூற்றாண்டிலேயே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றாக பிரமிடுகள், புராதனக் கலைப்பொருட்கள், கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

33. ஈரானில் கி.மு. 551-லும், சுமேரியாவில் கி.மு. 4000-லும், மேற்கு ஐரோப்பாவில் கி.மு. 2000-லும் சூரிய வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன..

34. கேரளாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பகவதி அம்மன் கோவில்களில் பொங்கல் படைத்து வழிபடுவர்.

35. ஆந்திராவில், பெருமாள் கோவில்களில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் நடைபெறும்.

36. கர்நாடகாவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகளினால் பந்தலிட்டு சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடு வது வழக்கம்.

37. மகாராஷ்டிராவில் மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடுவர். அப்போது எள்ளுருண்டை முக்கியத்துவம் பெறுகிறது. முதல் நாள் போகி அன்று எள் சேர்த்து கேழ்வரகு மாவு ரொட்டியும், காய்கறி கூட்டும் சமைத்து இறைவனுக்குப் படைத்து உண்பர். இரண்டாம் நாள் சங்கராந்தியன்று இனிப்பு, பழங்கள், கரும்புகள், பொங்கல் படைப்பர். மூன்றாம் நாள் கிங்கராந்தியன்று வடை செய்வார்கள். தை மாதம் குளிராக இருப்பதால் வழிபாட்டில் எள்ளுருண்டை முதலிடம் பெறுகிறது.

38. அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங் களில் “போகாலிபிஹூ’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடுவர்.

39. உத்திரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருபவர்களை கரும்புத்துண்டுகள் மற்றும் தாம்பூலத்துடன் ஆசீர்வதிப்பர்.

40 .உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள், மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைப்பர். அதனைச் சேர்த்து வைத்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் கொண்டாடுவர். சாணப்பிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிடுவார்கள்.

Address

South Street, Aruppukottai
Aruppukottai
626101

Telephone

9036175502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Kanalvadivu Amman Temple, Aruppukottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category