கிங் சிட்டி ஏ.ஜி. சபை அந்தியூர் - King City AG Church

  • Home
  • India
  • Anthiyur
  • கிங் சிட்டி ஏ.ஜி. சபை அந்தியூர் - King City AG Church

கிங் சிட்டி ஏ.ஜி. சபை அந்தியூர் - King City AG Church Word & Spirit

03/11/2025

இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளும் மதச் சுதந்திரமும்.

தேவா ஊழியர்களுக்கான ஆலோசணை.
1. தேவனுடைய ஊழியத்தை செய்கின்ற நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
2. பரிசுத்த ஆவியானவரின் துணையோடு தைரியமாகவும் உற்சாகமாகவும் ஜனங்களையும் திடப்படுத்தி கிறிஸ்துவுக்குள் வழிநடத்துங்கள்
3. உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை, வருவாய்துறை உள்ளாட்சி துறை போன்ற முக்கியமான துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகளுடன் நல்ல உறவையும், ஐக்கியத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.
4. அது உங்கள் ஊழியத்தின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் அரசு அதிகரிகள் பொதுமக்களுகான சேவகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
5. வீட்டு கூட்டங்கள், ஆராதனைகள், ஜெபங்கள், Cell Group, Prayer Cell, நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு காத்திருக்க வேண்டியதில்லை. கூட்டம் நடத்துவதை கடிதம் மூலம் தெரியப்படுத்தினால் போதும், சட்டம் நியமித்துள்ள பெரிய கூடங்களுக்கு மட்டுமே அனுமதி பெற வேண்டும்.
6. கிறிஸ்துவை அறியாத ஏற்றுக்கொள்ளாத மக்கள் வழிபடுகின்ற கடவுளையும் அவர்கள் நம்பிக்கைகளையும் குறை சொல்லுவதையும், தரக்குறைவாக பேசுவதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது. அவர்களையும் கிறிஸ்துவுக்குள். கொண்டுவர வேண்டும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்
7. நீங்கள் நடத்துகின்ற பொதுவான விக்ஷே நிகழ்ச்சிகளிலும்,கூட்டங்களிலும் உள்ளூரில் உள்ள முக்கியஸ்தர்களையும், அரசு அதிகாரிகளையும் அழைத்து சிறப்பித்து அவர்களையும் பேசவைத்து கணப்படுத்துங்கள் இதனால் நமக்கும் மக்களுக்கும் நல்ல ஒரு உறவும் ஐக்கியமும் உண்டாகும்,
8. நம்முடைய இந்திய தேசம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவதால் யார் ஆட்சி செய்தாலும் சட்டத்தின்படி தான் நிர்வாகம் செய்யப்படும் அந்த நிர்வாக அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிற நாமும் எதை செய்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு செய்கிறோமா என்பதை கவனத்தில் வைத்துக்கொள்வேண்டும்
9. நீங்கள் விரும்புகின்ற ஏதாவது ஒரு ஊழிய ஐக்கியத்தில் இணைந்திருங்கள், அந்த ஐக்கியம் உங்கள் ஆவிக்குறிய வளர்ச்சிக்கும் உங்கள் சபை வளர்ச்சிக்கும், சபை பாதுகாப்பிற்கும், வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் இருப்பது மிகமிக அவசியம்.

03/11/2025

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளும் மதச் சுதந்திரம்
தேவாலயம் கட்டுவது தொடர்பாக,
1. நாம் தேவாலயம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். என்றும். நாம் கட்டும் வழிபாட்டு ஸ்தலத்திற்கும் மற்றொரு வழிபாட்டு ஸ்தலத்திற்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும் என்று எந்த அரசனையும் Go கிடையாது, வாய்மொழியாக 300 மீட்டர் என சொல்லப்படுகிறது
2. சட்டம் ஒழுங்கு அடிப்படையில் அமைதியை பாதிக்காத வகையில் ஆட்சேபனை இல்லாத இடத்தில் தேவாலயம் கட்டலாம்
3. தேவாலயம் கட்டப்படும் இடம் பட்டா இடமாக இருப்பின் ஸ்தாபனம் அல்லது போதகர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு அங்கிகார சான்று APProval பதிவு பெற்ற உரிய பொறியாளரிடம் கட்டிட வரைபடம் Blueprint பெற்றிருக்க வேண்டும்
4. இடம் சம்மந்தமான ஆவணங்களான பட்டா, சிட்டா, EC, வரி ரசீது, அடங்கல் பெற்றிருக்க வேண்டும்.
5. திருச்சபையின் இடம் திருச்சபை பெயரிலேர அல்லது பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பெயரிலோ இருந்து. பேராயத்தின் பரிந்துறை கடிதத்தையும் இணைத்து கட்டிடம் கட்டவும் அது மின்இணைப்பை பெறவும், மற்றும் அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கும் மிகவும் எளிதாக இருக்கும்
6. திருச்சபையின் இடம் அரசு புறம்போக்கு இடமாக இருந்தால் ஊராட்சி மூலமாக தீர்மானம் பெற்று தடையில்லா சான்று, Noc பெற்றிருப்பது நல்லது அது பாதுகாப்பானது.
7. திருச்சபை வடகை இடமாக இருப்பின் உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்த பத்திரத்தில் சபை நடத்துவதற்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிடபட்டிருக்கவேண்டும்

21/10/2025

Anthiyur AG Church

15/10/2025

Lesana Kaariyam |

03/05/2025

தேவனால் பயன்படுத்த முடியாத பாத்திரம்.

🔥
03/05/2025

🔥

18/03/2025

தலைசாய்க்கும் கல் நீரையா...

Ps. கிதியோன்

#அந்தியூர் #நம்மஅந்தியூர்

14/03/2025

Word& Spirit
Ps. Gideon
Contact: 9790303353

Address

SSM Complex, ThavittuPalayam
Anthiyur
638501

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிங் சிட்டி ஏ.ஜி. சபை அந்தியூர் - King City AG Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share