அருள்மிகு பூலோக நாயகி சமேத பூலோகநாதர் சிவாலயம்

  • Home
  • India
  • Ammapettai
  • அருள்மிகு பூலோக நாயகி சமேத பூலோகநாதர் சிவாலயம்

அருள்மிகு பூலோக நாயகி சமேத பூலோகநாதர் சிவாலயம் ARULMIGU POOLOGANAYAGI SAMADHEA BOOLOGANATHAR திருப்பணி இளைஞர்கள?

" பேரழகுக் கோவில்"

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கீழ கோவில்பத்து கிராமம் , அருள்மிகு பூலோக நாயகி சமேத பூலோகநாதர் ஆலயம்..

மேற்கு நோக்கிய மிகவும் அரிதான பழமையும் பாரம்பரியமும் மிக்க சிவாலயம்...

இது பூலோக நாதர் ஆட்கொள்ளும் சன்னதி என்பதால் பூலோகம் மனை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வாஸ்து பரிகார ஸ்தலம்..

இதில் சர்வ உலகத்தையும் கட்டியாளும் பூலோக நாயகி இங்கே அருள்பாலிக்கின்றார்..

கூடுதல் சிறப்பு வன்னிமர வன்னி விநாயகர்... வன்னி மரத்தின் சிறப்பை நாம் அறியாதது ஒன்றுமில்லை அவ்வளவு சிறப்பு வாய்ந்த வன்னி மரம் விநாயகர்..

விநாயகரின் தம்பியும் தமிழர்களின் தகப்பனும் தமிழ் கடவுள் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கிறார்..

இத்திருக்கோவிலில் நவகிரகம் கிடையாது சிவபெருமான் இங்கு உள்ள சிவபெருமானை நாம் பூலோகநாதர் என அழைக்கப்படுவதால் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால் தனி நவகிரகம் இங்கு கிடையாது..

சிவபெருமானின் இடது புறத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமைத்திருக்கிறார்...




அடித்தளம் முதல் சிகரம் வரை செங்கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட எழிலான கோவில்..

காலத்தின் கோரப்பிடியில் சிக்கி சிதறுண்டு அழிவின் விளிம்பில் உள்ள கோவில். உருகி உருக்குலைந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ளப் போராடும் ஒரு கோவில்..

இத்தனை சிதைவுக்குள்ளானப்போதும் ... இன்றும் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பேரழகு. கருவறையில் கனிவே வடிவான கடவுள்... இவரை பார்க்கும்போதே அப்படியொறு பரவசம்.


இந்தப் பொக்கிசத்தை போற்றிப் பாதுகாப்பது நம் கடமை அல்லவா..?

Address

Ammapettai
614402

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு பூலோக நாயகி சமேத பூலோகநாதர் சிவாலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category