22/09/2025
*!!!ஓம் கோடிதாத்தா போற்றி!!!*
"நாடி வந்தால், கோடி நலம்."
மஹாசித்தர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமிகளின் 31-ஆம் வருட குரு பூஜை விழா, வரும் 11-10-2025 அன்று நமது மஹாமடத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மஹா கலசாபிஷேகம், சங்காபிஷேகம், கனகாபிஷேகம், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்று நமது தாத்தா பக்தர்களுக்கு பரிபூரண ஆசிர்வாதம் வழங்க உள்ளார். விழாவின் முடிவில் அனுக்கிரஹ அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
காலை 5.50 மணிமுதல் 10.00 மணி வரை:
கோபூஜை, யாகசாலை பூஜைகள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை
காலை 10.30 மணிக்கு:
ப்ரம்மகுரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமிகளுக்கு கலசாபிஷேகம், சங்காபிஷேகம், ருத்ராபிஷேகம்
நண்பகல் 12.00 மணிக்கு:
கனகாபிஷேகம் மற்றும் குரு ஆசீர்வாதம்
மதியம் 12.30 மணிக்கு:
அன்னதானம் வழங்கல்
இவ்வுலகிலுள்ள 84 இலட்சம் ஜீவராசிகளின் நலனுக்காவும், உலக அமைதிக்காகவும் வருடம் முழுவதும் பற்பல யாகங்கள், பூஜைகள் நடத்தியும், சூட்சும இரகசியங்களால் பக்தர்களைக் காத்தும் வரும் நமது தாத்தாவிற்கு, அவரது ஆசீர்வாதங்களால் நற்பலன்கள் அடைந்த நாமும், நம்மைப் போன்ற பிற சேவார்த்திகளாலும், நம் மஹாகுருவிற்கு நம்மால் செய்யப்படக்கூடியது இந்த குருபூஜை விழா.
இவ்விழாவின் ஏற்பாடுகளில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவோர், தங்கள் நன்கொடைகளை பொருளாகவோ அல்லது பணமாகவோ அளித்து எல்லாம் வல்ல ஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமிகளின் திருவருள் பெற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் : *+91-94 8785 3322* .
முகவரி:
ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ பொன்முடி கோட்டீஸ்வரர் ராமநாத மஹாமடம்,
சென்னப்பமலை, பாட்டூர் கிராமம், ஆம்பூர் தாலுக்கா, திருப்பத்தூர் மாவட்டம்.
இணைய வழிக்குறிப்பு:
https://maps.app.goo.gl/JKKpnJXRWF5msDpn9?g_st=com.google.maps.preview.copy
swami
#சிவன் #சித்தர்கள்ரகசியம் #சித்தர்வாக்கு #சித்தர் #ஒம்நமச்சிவாய