24/08/2023
அம்பாசமுத்திரம் ஜாமியா பள்ளிவாசல் ஜமாத்
சமூக நல்லிணக்க நிகழ்வில் பங்கேற்பு:
அம்பாசமுத்திரம் தாலுகா மணல் ஓடைத்தெரு புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ தங்கம்மன் தளவாய் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நாள்: 21/08/2023 நடைபெற்றது.
இந்த விழா குழு தலைவர் கல்யாணி மற்றும் நிர்வாக குழு ஆறுமுகம் நயினார், சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ஜாமியா பள்ளிவாசல் தலைவர் அமானுல்லா கான், இமாம் முஹம்மது ஷா, நெல்லை கிழக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சம்சுதீன், ஜமாத் முக்கியஸ்தர்கள் ஹாஜி உல்ஃபத், ஜகிர், மஜீத், அப்பாஸ், லுக்மான், உசேன், உமர் அலி, சவுக்கத், ஜாகிர் மற்றும் இளைஞர்கள் அணி முகமது ஆரிப், வழக்கறிஞர் பரித், மோதி, நியாஸ், எம்.எஸ் முகமது சையது, அம்பை ஜலில், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...