09/02/2019
கிருபையில் பலப்படுங்கள் [சத்தியத்தில் வளருங்கள்]!
இயேசு கிறிஸ்துவினுடைய சித்தம் தன் பிள்ளைகள் கிருபையில் பலப்படவேண்டும் என்பது.
11 பேதுரு 3:18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் "கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்".
II தீமோத்தேயு 2:1 ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
கிருபையில் நாம் பலபட வேண்டும் அல்லது வளர வேண்டுமென்றால் நமக்கு முதலாவது தெரியவேண்டியது , கிருபையென்றால் என்ன என்பதும், மற்றும் கிருபையையும் கிறிஸ்த்துவையும் நாம் பிரித்துப்பார்க்கமுடியாது என்பதையும் அறியவேண்டும்.
இன்று அநேகர் கிருபையை ஒரு தயவாக மட்டும் பார்க்கிறார்கள். அதற்கொரு வரைவிலக்கணம் கொடுக்கிறார்கள். ஆதலால் கிருபையின் முழுமையை அறியமுடியவில்லை மற்றும் கிருபையில் வளர முடியவில்லை.
கூடுதலான பேர் சொல்லுவார்கள் எப்படியென்றால் கிருபையால் இரட்சிக்கப்பட்டோம் உண்மைதான் அது எங்களுக்கு அவர் காட்டின ஒரு தயவு. இதை வைத்துக்கொண்டு நாம் கிறிஸ்துவுக்குள் நம் இரட்சிப்பை 'நாம்' காக்க [நம் மாம்சபெலத்தால், நம் பரிசுத்தத்தால் காக்க] வேண்டும், இந்த இரட்சிப்பை காத்தல் தான் கிறிஸ்தவவாழ்க்கை என்றும், மற்றும் இதற்காக விசுவாசிகள் செய்யும் கிரிகைகள் தான் ஆவிக்குரிய வாழ்க்கை என நினைத்து மாம்சத்தில் ஓடுகிறார்கள், மற்றும் பரிசுத்தத்தை காக்கவில்லையென்றால் நமக்கு நித்திய ஆக்கினைத்தீர்ப்பு, அதுவும் சிலர் பயன்படுத்துவார்கள், நீதியுள்ள ஆக்கினைத்தீர்ப்பு என சொல்லுவார்கள். ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்திவின் வாழ்க்கையை நாம் இலவசமாக பெற்று, அவர் மூலமாக அந்த நித்திய வாழ்க்கையில் நாம் [ஆவிக்குரிய அறிவில்] வளருதல் , இங்கு நம் காத்தலுக்கு இடமேயில்லை. "நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்"- கலா 2 :20
"நாம் பாவத்திற்கென்று ஒருதரம் மரித்து நீதிக்கென்று ஒருதரம் பிழைத்தோம் [இந்த ஆவிக்குரிய பிறப்பு ஒருமுறைதான், திரும்ப, திரும்ப நாம் பாவத்திற்கு மரிக்கமுடியாது. இதுவே நம் மறுபடி பிறத்தல்- புதுசிரிஷ்ட்டி- புதிய மனித ஆவியை பெற்று பரிசுத்த ஆவியோடு/பிதாவோடு இணைந்தோம்".
முன்னேயும் ஒருமுறை நான் எழுதியிருந்தேன் கிருபை என்றால் அதற்க்கு வரைவிலக்கணம் கர்த்தராகிய கடவுள் இயேசுகிறிஸ்துதான் என்றும் இதில் சந்தேகம் இருக்கக்கூடாது.
ரோமர் 5:2 அவர்மூலமாய் நாம் இந்தக் "கிருபையில் பிரவேசிக்கும்" சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று "நிலைகொண்டிருந்து", தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
"கிருபையில் பிரவேசிக்கும்"
கிருபை, கிறிஸ்துவை குறிக்கவில்லையென்றால், அது ஒரு வரைவிலக்கணம் அல்லது தயவு மட்டுமென்றால், எப்படி கிருபையில் நாம் பேரவேசிக்கமுடியும்?
கிருபையில் [ இயேசுவில்] நிலைகொண்டிருந்து!
எப்படி அதில் நிலைத்திருக்கமுடியும்? நம் முயற்சியா? இல்லை, இல்லை அவரே நம்மை நிலைத்திருக்கப்பண்ணுகிறார். நாம் பிள்ளையானால் நாம் சுதந்தரராமே! பிள்ளை என்ற அடையாளத்தை யாராலும் அழிக்கவோ, மாற்றவோ முடியாது.
இந்த கிருபை [இயேசு] இல்லையென்றால் நமக்கு நம்பிக்கையும் இல்லை என்றுதான் வசனம் சொல்லுகிறது.[தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்].
இயேசு கிறிஸ்து எங்களுக்காக "கிருபையும் சத்தியமுமாக" வெளிப்பட்டார். அவரை விசுவாசித்து அறிந்துகொண்டவர்களின் ஆவியில் அவர் கிருபையின் ஆவியாகவும் சத்திய ஆவியாகவும் கலந்திருப்பதே உண்மை.
வேதாகமம் நியாயப்பிரமானத்தையும் [மோசேயையும்] கிருபையையும் [இயேசுகிறிஸ்துவையையும்] பிரித்து காண்பிக்கிறது। எப்படியெனில், நியாயப்பிரமாணம் "மோசேயின்" மூலமாய்க் "கொடுக்கப்பட்டது", கிருபையும் சத்தியமும் "இயேசுகிறிஸ்துவின் மூலமாய்" "உண்டாயின"-யோவான் 1 :17.
நியாயப்பிரமாணம் "கொடுக்கப்பட்டது" என்றும்
கிருபை "உண்டானது" என்றும் கூறப்படுகிறது. இதிலும் வித்தியாசத்தை பாருங்கள் அதாவது கொடுக்கப்பட்டத்திற்கும் நமக்குள் உண்டான[உருவான] கிறிஸ்துவுக்கும் [கிருபைக்கும்] எவ்வளுவு வேறுபாடு உள்ளது.
கிறிஸ்துவை உடையவன், கிருபையையும் சத்தியமுமாகிய ஆவியை உடையவன். சத்திய ஆவியானவர் அவனுக்குள் வாசமாக இருக்கிறார். அவனை அவர் சத்தியங்களுக்குள் நடத்திச்செல்லுகிறார் [புல்லுள்ள இடங்களில் மேயப்பண்ணுகிறார்].
கிருபையையும், சத்தியத்தையும், இயேசுவையும் பிரித்து பார்க்கமுடியாது. உதாரணமாக, பிதா, குமாரன், பரிசுத்தஆவியை போன்ற ஒரே கடவுள் மாதிரி.
சத்தியம்!
சிலர் சொல்லுகிறார்கள் சத்தியம் என்றால் நியாயப்பிரமாணம் என்று. ஆதலால் கிருபையிலும் பலப்படவேண்டும் நியாயப்பிரமானத்திலும் பலப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஆனால், சத்தியத்திற்கும் நியாயப்பிரமணத்திற்கும் இடையில் பெரும் பிளவு இருக்கிறது, இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது. மாறாக, நியாயப்பிரமாணத்தில் உள்ளவர்களை விடுதலையாக்குகிறது இந்த சத்தியம். எப்படியென்றால்
யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். கலா 4 : 4। நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி "நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை" மீட்டுக்கொள்ளத்தக்கதாக, [ சத்தியமாகிய இயேசுகிறிஸ்து வெளிப்பட்டார்].
யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
யோவான் 17:19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
ஆ என்ன வல்லமை, ஆகா என்ன அற்புதம், பாவத்தில் கர்பந்தரித்த எங்களை, உள்ளான மனிதனில் பாவியாக இருந்த நம்மளை, எந்த நற்கிரிகைகளை செய்தும் நம்மளை நாமளே காப்பாற்ற முடியாமல் மரணத்தில் இருந்த நம்மளை மற்றும் எவ்வளவு நற்கிரிகைகள் செய்தாலும் பிதாவினுடைய பரிசுத்தத்திற்கு நாம் கிட்ட நெருங்கமுடியாத "செத்த கிரிகைகள்" உள்ள மனிதர்களாகிய எங்களை தன்னுடைய சத்தியதால் மீட்டுக்கொண்டார்। யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
அப்படியிருந்தும் இன்று மனிதர்கள் தங்கள் கிரிகைகள் ஊடாக பிதாவை சேர முயற்சிக்கிறார்கள், தங்கள் பரிசுத்தம் போதுமென நினைக்கிறார்கள் வெறும் முட்டாள் தனம். ஆதாமும் ஏவாளும் தங்கள் சிந்தனையில் பாவம் கர்ப்பந்தரித்தவுடன் [ நன்மை தீமை அறிந்து கடவுளை தாங்களே தங்கள் கிரிகையூடாக அடையநினைத்தார்கள். இதுவே மூல பாவம். ஆனால் அந்த கனியை புசித்தவுடன்[சாத்தானுடைய வார்த்தையை தனக்குள் எடுத்தவுடன்] தாங்கள் நிர்வாணிகள் [பாவிகள்] என தாங்களே குற்றம்சுமத்தப்பட்டார்கள்.
"கவனித்தீர்களா? மனிதன் தன் கிரிகைகளினால் கடவுளை சேர நினைத்தவுடனேயே பாவம் கர்ப்பந்தரிக்கிறது। சுய நீதி தேவனுடைய நீதிக்கு விரோதமானது. ஆனால் தேவனுடைய நீதியோ கிறிஸ்துவால் வருகிறது".
பின்னர் தங்களுக்கு தாங்களே அத்தியிலையால் ஆடைதைத்து தங்கள் நிர்வாணத்தை [பாவத்தை] மூடினார்கள், ஆதி 3 : 7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
இதன் அர்த்தம், தங்கள் பாவத்தை தங்கள் கிரிகைகளினால், தங்கள் பெலத்தினால் மூடுகிறதற்கு ஒப்பனையானது. அதாவது மனிதகிரிகையினால் வரும் பரிசுத்தம், இது அத்தியிலைக்கு ஒப்பானது. இந்த பரிசுத்தம் நம்முடைய பார்வையில் இச்சகிக்கப்படதக்கதாக இருக்கும் ஆனால் பிதாவினுடைய பார்வையில் செத்த கிரியை என்று வேதாகமம் சொல்லுகிறது.
இப்படியிருக்க பிதாவானவர், அவர்களோடு உறவை ஏற்படுத்துவதற்காக ஆதாமும் ஏவாளும் தங்கள் பாவத்தைமூட செய்த கிரிகைகளாகிய மனிதனுடைய கிரிகைகளை வெறுக்கிறார் [அத்தியிலை ஆடையை வெறுத்து], தான் தோலினால் தானே ஒரு ஆடையை உண்டுபண்ணி அவர்கள் நிர்வாணத்தை [பாவத்தை] மூட தான் உண்டுபண்ணின ஆடையை உடுத்தினார். ஆதி 3 : 21। தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். இதன் அர்த்தம் கிறிஸ்துவால் வருகிற "நீதி" யின் ஆடை கிறிஸ்துவின் பரிசுத்த ஆடை.
இதை தான் பவுல் சொல்லுகிறார்; கிறிஸ்துவே எங்களுக்கு I கொரிந்தியர் 1 : 31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
கிறிஸ்துவின் கிரிகை!
பிதாவுக்கும் எங்களுக்கும் இருந்து இந்த பெரிய பிளவை தன் கிரிகையினால் முறியடித்து அதாவது,
சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தை தானே நினைவேற்றி, பாவம் அறியாத பரிசுத்தர் நமக்காக பாவமாகி, நாம் அடைய இருந்த மரணத்தை தன் பரிசுத்தத்தால் வென்று நம்மை கட்டியிருந்த பாவம், மரண பிரமானமாகிய நியாப்பிரமானத்திற்கு நம்மை முற்றிலும் விடுதலையாக்கி அதுமட்டுமல்லாமல் நம்மை ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் 'பிதாவுக்குள்' நிறுத்தினமையே அவரின் பரிசுத்த கிரிகை. பாவியை நீதிமானாக்கியதே அவரின் நம் தகப்பனின் வெற்றி. கிருபையால் விசுவாசத்தைக்கொண்டு நம்மை இரட்சித்தார்.
எவன் ஒருவன் இந்த கிருபையை அறிந்து தன்னை தாழ்த்துகிறானோ அவன் அவரின் ஆவியால் மறுபடி பிறக்கிறான். அவன் அவரால் புதிய ஆவியை பெற்று இந்த புது அனுபவத்தை பெற்று பரிசுத்த ஆவியோடு நித்திய உறவில் வளர்கிறான். அவன் எக்காரணம் கொண்டும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை மாறாக புதிய அழியாத அவரின் பரிசுத்தஉடன்படிக்கையால் என்றென்றைக்கும் காக்கப்படுபவன். அவர் தன் கிரிகைகளினால் பரிசுத்தத்தை காப்பதில்லை மாறாக கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கை அவனை காக்கிறது.
இதை தான் நிழலாக பழைய உடன்படிக்கையில் "உடன்படிக்கை பெட்டி" இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த உடன்படிக்கை தான் அவர்களை காத்தது அந்த உடன்படிக்கைப்பெட்டி கிறிஸ்துவுக்கு ஒப்பனையானது. அன்று அவர்கள் சுமந்தார்கள் இன்று கிறிஸ்து [புதிய உடன்படிக்கை] நமக்குள் இருக்கிறது. அவரின் புதிய உடன்படிக்கைதான் நம்மை பரிசுத்தப்படுத்தி என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறது.
எபிரேயர் 10:10। இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
11। அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.
12। இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
நாம் புதிய உடன்படிக்கையின் ஊழியர்கள், ஆனால் நியாயப்பிராமணத்தின் ஊழியர்கள் அல்ல.
II கொரிந்தியர் 3 : 6। புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
சிலர் கேட்ப்பார்கள் அப்படியென்றால் பிதாவுக்கு ஏற்ற 'நம்முடைய கிரியை' என்ன?
யோவான் 6 : 27। அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே 'கிரியை நடப்பியுங்கள்'; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
28। அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி "தேவனுக்கேற்ற கிரியைகளை" நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
29। இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: "அவர் அனுப்பினவரை நீங்கள் "விசுவாசிப்பதே" தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது" என்றார்.
இங்கே பார்த்தீர்களா? இன்று உலகமே கவனிக்கவேண்டிய மிகவும் மிகவும் முக்கியமானதொன்று என்னவென்றால்
தேவனுக்கேற்ற கிரியை எது? அவர் விரும்பும் கிரிகை எது? நம்மை இரட்சித்து அவரோடு சேர்க்கும் கிரிகை எது?
நாம் மாம்சத்தில் விரும்பி செய்யும் அல்லது அவரை அடைய நினைத்து அல்லது ஆசீர்வாதங்களை பெற நினைத்து செய்யும் கிரிகைகளா? நாம், நம் பரிசுத்தத்தை பிதாவுக்கு காண்பிக்க செய்யும் கிரிகைகளா? இவைகள் எல்லாம் செத்தவைகள்.
தேவனுக்கேற்ற கிரிகை ஒன்றே ஒன்றுதான். இந்த கிரிகைமட்டும்தான் நம்மை பரிசுத்தனாக பிதாவோடு இணைக்கும் இதன் பின் தான் கிறிஸ்து நம்க்குள் வருகிறார் பின்னர் அவர் நமக்குள் இருந்து தனக்கேற்ற கிரிகைகளை அவரே நடப்பிப்பார்। அந்த கிரிகை தான் இயேசு கிறிஸ்து சொன்னார் "அவர் அனுப்பினவரை நீங்கள் "விசுவாசிப்பதே". அதாவது தன்னை விசுவாசிப்பது ஒன்றுதான் பிதாவுக்கேற்ற கிரிகை என்று ஒரு வார்த்தையில் சொல்லிமுடித்தார்.
ஏன்?
கிறிஸ்து நமக்காக செய்து முடித்த கிரிகையில் தான் பரிசுத்தம், நீதி, ஜீவன்/வாழ்க்கை இருக்கிறது. அவர் செய்து முடித்த கிரிகையில் தான் முழுமை/அர்த்தம்/ இருக்கிறது, மற்றதெல்லாம் மாயை ஆனால் சாத்தான் உங்களுக்கு கிறிஸ்துவின் கிரிகையை மறைத்து உங்களை உயர்துவான் இதுதான் இன்று சபைகளில் நடக்கிறது. ஆனால் ஆதி சபையில் விசுவாசிகள் கூடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தாமல் கிறிஸ்துவின் செயலை ஒருவரோடு ஒருவர் விபரமாய் பேசி அவருக்கு நன்றியையும் மற்றவர்களை சத்தியத்தில்/கிருபையில் வளர உதவினார்கள்.
ஆனால் இன்று உலகம் இதை அறியாமல் இந்த கிருபையில் பலப்படாமல் தங்கள் கிரிகைகளை நிலைநாட்டிட விரும்புகிறார்கள். ஆதலால் கிறிஸ்துவுக்கு பகையாக இருக்கிறார்கள். இன்று சத்தியத்தில் பலப்படாமல் நியாயத்தீர்ப்பை குறித்து பயப்படுகிற விசுவாசிகள் தான் அதிகம். ரோமர் 8 : 1। ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
ஏன் பயம்? அவர்கள் அவரின் அன்பில் பூரணப்பட்டவர்கள் அல்ல ஆதலால் பயப்படுகிறார்கள். அவரின் அன்பை அறிந்ததுபோதாது மற்றும் அவர்கள் இன்னுமும் நியாயப்பிரமாணத்திற்கு கீழ் வாழ்கிறபடியால், அவர்கள் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள்.
1 யோவான் 4 : 16। தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம்। தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
17। "நியாயத்தீர்ப்புநாளிலே" நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.
18। அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
நீங்கள் மாம்சத்தின்படி நடந்தால் ஆக்கினைதீர்ப்பு நினைப்புதான் இருக்கும் ஏனென்றால் நீங்கள் உங்கள் கிரிகைகளினால் முடிவடைய நினைக்கிறீர்கள். உங்கள் பரிசுத்தத்தை நம்புகிறீர்கள். அதலால், நீங்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுகிறீர்கள்.
நாங்கள் , ஆவிக்குரியவர்கள் அதாவது கிறிஸ்துவால் உயித்தெழுந்தவர்கள், பிதாவின் வலதுபாரிசத்தில் உட்க்காந்திருக்கிறவர்கள் என்று அறிந்து ஆவியில் நடந்தால், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
ஆகவே கிருபையில் புலப்படுவது அல்லது சத்தியத்தில் வளர்வது பிதாவுக்கு மிகவும் முக்கியமானதொன்று. இதற்காகவே அவர் நம்மளை பெர்றேடுத்தார். அவர் பிள்ளை எப்பவும் அவரை புகழ்வான்.
முன்னே நான் மோசேக்கு கீழே, மோசே மூலமாக கொடுக்கப்பட்ட நியாயபிரமானத்திற்குள் வாழ்ந்த போது, எனக்குள் எப்பவும் ஒரு வெற்றிடம்தான் இருந்தது, பாவ குற்ற உணர்வு, நியாத்தீர்ப்பை குறித்த பயம், பாவமன்னிப்புக்காக தினம்தோறும் வேண்டுதல், ஆசீர்வாதங்களுக்காக காலைதோறும், மாலைதொறும் வேண்டுதல் என ஒரு நிரந்தரம் இல்லாதா மற்ற மத மனிதர்களை போன்ற வாழ்க்கை தான் இருந்தது. எப்பவும் ஆசீர்வாதங்களுக்க்காக விண்ணப்பம், இப்படியாக விசுவாசம் என்கிற பேரில் ஒரு விசுவாசம் இல்லாத வாழ்க்கை தான் இருந்தது. ஏன் என்னுடைய ஊழியங்கள் கூட நான் ஆசீர்வதிக்கப்படவேண்டும், பரலோகத்தில் ஓர் இடத்தை பெற்றிடவேண்டுமென, பெறுவதற்காக ஓடினேன்.
இப்படியிருக்கும்போதுதான், கிறிஸ்துவின் ஆவியானவர் எனக்கு கிருபையையும் அதின் உடன்படிக்கையையும் பார்க்கும்படி கண்ணைத்திறந்தார். அதின் பிறகுதான் எனக்கு பிதாவின் உண்மையான உருவம், தோற்றம், நோக்கம், அன்பு எல்லாமே தெரிந்தது. நான் விசுவாசியாக இருந்தும், சாத்தான் என் கண்ணை மூடியதை நான் அறிந்திருக்கவில்லை. நான் நினைத்தேன் நான் ஒரு நல்ல கிறிஸ்தவன், மற்றவனைவிட நான் கிரிகையில் சிறந்தவன் ஆகவே கிறிஸ்து என்னை நேசிக்கிறார் என என்னை நானே புகழ்ந்தேன், ஏமாற்றினேன். ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது நான் அல்ல எல்லாமே கிறிஸ்துதான். "அவரின் செயலில்தான் ஜீவன்".
வேதாகமம் தொடக்கம் வரை முடிவுமட்டும் அவரை தான் மையப்படுத்துகிறது. அவரால் மட்டுமே சுயதீதி நிறைந்த உலகத்திற்கு மீட்ப்பு. சாத்தானுக்கு நீங்கள் துதிப்பது, ஆடுவது பாடுவது மற்றும் தவறாமல் church ற்கு போகிறதில பிரட்ச்சனையில்லை மாறாக சத்தியத்தை அதாவது கிறிஸ்துவுக்குள், நீங்கள் யாரென்ற உண்மையை [பரிசுத்தம், நீதி] நீங்கள் அறியக்கூடாது, அறிந்தால் அவன் உங்களை ஏமாற்றமுடியாது ஆகவே, அதற்க்காவே ஜெபியுங்கள் சாத்தானின் கண் நீக்கப்பட்டு, கிறிஸ்துவின் கண் எல்லாருக்கும் திறக்கப்படட்டும்। ஆமென்.
Grace and peace to you!
Balasingam Sabeshan
।
Like
Show more reactions
Comment
Share
Comments
Balasingam Sabeshan
Write a comment...