Paris Murugan Kovil, ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயம், பாரிஸ்.

  • Page d'Accueil
  • France
  • Paris
  • Paris Murugan Kovil, ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயம், பாரிஸ்.

Paris Murugan Kovil, ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயம்,  பாரிஸ். First Hindu Murugan Kovil in France - Paris Religiöse Gemeinschaft

நிகழும் கந்தசஷ்டி விரத பூஜையில் இருந்து சில துளிகள்......
17/11/2020

நிகழும் கந்தசஷ்டி விரத பூஜையில் இருந்து சில துளிகள்......

கந்தசஷ்டி விழா:கடந்த 15.11.2020 முதல் 20.11.2020 கந்தசஷ்டி விரத காலத்தில் தினமும் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை நடைபெறு...
17/11/2020

கந்தசஷ்டி விழா:

கடந்த 15.11.2020 முதல் 20.11.2020 கந்தசஷ்டி விரத காலத்தில் தினமும் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும் (காலை 9 மணி முதல் மாலை 19.15 வரை ஆலயம் திறந்திருக்கும்)

21.11.2020 காலை விஷேட பாரனை பூஜையூம் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு:

தற்போது நிகழும் அசாதாரண நிலமை கருதி ஆலயம் காலை 9 மணி முதல் மாலை 19.15 வரை மட்டுமே திறந்திருக்கும், அரசு உத்தரவுகளினால் நேரத்தில் மாற்றம் செய்யப்படலாம்.

அடியார்கள் அனைவரும் அரசாங்க விதிமுறைக்கு ஏற்ப சுகாதார விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி உங்களதும், சுற்றத்தார்களின் நலத்தையும் பாதுகாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

நன்றி.

தீர்க்க சுமங்கலியாக இருக்க... கேதார கௌரி விரதம்!  கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் கிடைக்கும்! தீர்க்க சுமங்கலியாக ஆச...
14/11/2020

தீர்க்க சுமங்கலியாக இருக்க... கேதார கௌரி விரதம்! கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் கிடைக்கும்!

தீர்க்க சுமங்கலியாக ஆசீர்வதிக்கும் விரதம்... கேதார கெளரி விரதம். தாலி பாக்கியத்தைத் தந்தருளும் விரதம், தாலி பலம் தரும் விரதம், கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம், குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தித் தரும் விரதம் என்றெல்லாம் கேதார கெளரி விரதத்தை போற்றுகின்றனர் பெண்கள்.

பிருங்கி முனிவர் மிகுந்த சிவபக்தர். சதாசர்வ காலமும் சிவலிங்க பூஜை செய்து வருவதில் அலாதி ஆனந்தம் அவருக்கு! தன் கணவரை இப்படி நெக்குருகி பூஜித்து வருகிறார்களே என்று ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும், ‘சக்தியாகிய நம்மை வழிபடவில்லையே முனிவர்’ என வருந்தினாள் பார்வதிதேவி.

சிவம் வேறு சக்தி வேறு அல்ல என்பதை உலகத்தாருக்கு உணர்த்த விரும்பினார். பூவுலகுக்கு வந்தாள். கௌதம மகரிஷி ஆஸ்ரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கௌதமரிடம் வழி கேட்டாள். அவளுக்கு அருமையான ஒரு விரதபூஜையை உபதேசித்தார் கௌதம மகரிஷி.

சக்திதேவியும், கர்ம சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்தாள். நித்திய அனுஷ்டானமாக அந்த பூஜையைச் செய்தாள். பூஜையிலேயே லயித்தாள். இதில் மகிழ்ந்த சிவபெருமான், பூவுலகுக்கு வந்து அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார். அத்துடன், தன் திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார்.

உமையவள் கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கேதார கௌரி விரதம் என்றும் போற்றுவார்கள். கௌரிதேவியாகிய உமையவள் மேற்கொண்ட விரதம் என்பதால் கேதார கௌரிவிரதம் என்று இந்த விரதம் சொல்லப்பட்டது. இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பார்கள். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். இந்த நாட்களிலும் விரதம் மேற்கொள்வார்கள்.

தேய்பிறை அஷ்டமியில் துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் எனப்படும்! குறிப்பாக, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பார்கள். மிக மிக முக்கியமாக, இந்தநாளில்தான் விரதம் மேற்கொள்வார்கள் பெண்கள்.

கேதார கௌரி விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டும். ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் குளக்கரைகளிலும் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜித்து வந்தார்கள் அந்தக்காலத்தில்! ஆலமரத்தடியிலும் பூஜை செய்து பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.

விரத நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபட்டு, பிருங்கி, கௌதம முனிவர்களை வணங்கி சிவபூஜையைத் துவங்க வேண்டும். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும்.

21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். நம்மால் முடிந்தவற்றைக் கொண்டும் நைவேத்தியம் செய்யலாம். பூஜையில் முக்கிய அங்கமாகத் திகழ்வது நோன்புச்சரடு. சிவனாரையும் சக்தியையும் மனதாரப் பிரார்த்தித்து, நோன்புச்சரடு கட்டிக்கொள்வார்கள் பெண்கள். வயது முதிர்ந்த சுமங்கலிகள், மற்ற பெண்களுக்கு, சுமங்கலிகளுக்கு நோன்புச்சரடைக் கட்டிவிடுவார்கள்.

கேதார கௌரி விரதத்தை, ஆத்மார்த்தமாகவும் முறையாகவும் செய்தால், பிரிந்த தம்பதி ஒன்றுசேருவார்கள். தாம்பத்யம் சிறந்து விளங்கும். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். கணவரின் ஆயுள் நீடிக்கும்.

மாங்கல்யம் காத்தருளும் கேதார கெளரி நோன்பு இருந்து சிவ சக்தியை வழிபடுவோம்

அனைத்து மக்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
14/11/2020

அனைத்து மக்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நவராத்திரி ஸ்பெஷல் !நவராத்திரி பூஜை முறை !9நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு • இரண்டாம் நா...
16/10/2020

நவராத்திரி ஸ்பெஷல் !

நவராத்திரி பூஜை முறை !

9நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
• மூன்றாம் நாள் –முத்து மலர்
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:

• முதல்நாள் – தோடி
• இரண்டாம் நாள் – கல்யாணி
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
• நான்காம் நாள் – பைரவி
• ஐந்தாம் நாள் – பந்துவராளி
• ஆறாம் நாள் – நீலாம்பரி
• ஏழாம் நாள் – பிலஹரி
• எட்டாம் நாள் – புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் – வஸந்தா

ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:

• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:

• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம்
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – ஆரஞ்சு
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:

• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.

நவராத்திரி விழா நல்வாழ்த்துகள் !

தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !

09/09/2020

மூத்தோருக்கும் ஆசாபாசங்கள் உண்டு; அவற்றை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்!
----------------------------------------------------------------------------------------

அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?

‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’

ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும் என பேத்தி அடம் பிடித்தாள்.

பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும் என மருமகள் சொன்னார்.

பாட்டியும், ஆமாம் என்று ஆமோதித்தார்.‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!

பத்து வயதுப் பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள்.

ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்.

அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள்.

சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்.

பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’

இது எதுக்கும்மா?

இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன் என்று செய்து காட்டினாள்.

பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்.

அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்.

பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க என்றாள்.

பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார்.

எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்.

பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்.

இதை எப்போ கொண்டு வந்தே?என்று பாட்டி கேட்டதற்கு, ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி என்றாள் குறும்பாக.

படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?என்றான் மகன். உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்.

பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள். வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார்.

அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்.

அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள்.

நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?

எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்.

தன் பத்து வயது மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்.

09/09/2020

படித்ததில் பிடித்தது.........

* #வாழ்க்கை*

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!

இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.

அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனை பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!

எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!

அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!

அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!!

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!

நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!

ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டுகொள்ள வேண்டும்????

யார் இவர்கள்????

என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்????

நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!

அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!

அதுவும் வெகு தொலைவில் இல்லை!

சர்வமும் ஒருநாள் அழியும்!

மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!

கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!

தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.

நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதேபோல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப்போவதில்லை. இது தான் வாழ்க்கை.

"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்"

நமது பயணம் முக்தியை அடைய முயற்சிப்போம்

🦅🦅🦅🦅ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அ...
09/09/2020

🦅🦅🦅

🦅ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.
அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை.
அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
ஒருநாள் திடீரென்று
"இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?''
என்று சந்தேகம் வந்தது.

🦅பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம்
தெரியும் என்று சமாதானம் செய்துகொண்டது.
ஒருநாள் அந்தக் கழுகு
"இன்று எனக்கு உணவு கிடைக்குமா?"
இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...என்று யோசித்தது.

🦅உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும்
பாறை மீது நின்று,
"இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

🦅உடனே விண்ணிலிருந்து
ஒரு குரல்.
"உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.

🦅மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை,
எப்படியும் உணவு கிடைத்துவிடும்''
என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு, அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.

🦅நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.
ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று, இரவும் வந்துவிட்டது.

🦅"நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

🦅அப்போது ஒரு குரல் கேட்டது.
"என்ன குழந்தாய், சாப்பிட்டாயா?''
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.
"குழந்தாய் சற்று திரும்பிப் பார்.
உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது."
கழுகு பின்னால் சென்று பார்த்தது.
அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது.

🦅கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
"இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?"

🦅இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.
நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.
திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்?"

🦅"கடுகளவேனும் முயற்சி
செய்ய வேண்டும்.
ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.
அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்''
என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது...

தெய்வ நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது.
முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை....
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை...

#முயற்சி #திருவினையாக்கும்.

படித்ததில் பிடித்தது.....வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை சொல்லவா ?ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது.கோப...
22/08/2020

படித்ததில் பிடித்தது.....

வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை சொல்லவா ?

ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது.
கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம்.
கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார். வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும். ஆயினும் சுற்றியிருக்கும் பூத கணங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்,
வந்தாயா எருமையே! வா, வா எப்படி இருக்கிறாய்? என்றார்.
எருமைக்கு கோபம் தீர்ந்தபாடில்லை.
முக்காலமும் உணர்ந்த ஐயனே! நீர் அறியாததா? எனது நலம்?! ஆயினும் நீங்கள் கேட்டதன் பின் பதிலுரைக்காமல் இருத்தல் தகுமோ! அதனால் சொல்லித்தான் தீர வேண்டும்.
எம்பெருமானே! எங்களை ஏன் இப்படிப் படைத்தீர்கள். பூலோகத்தில் மானுடர்கள் எங்களைச் சுத்தமாக மதிப்பதே இல்லை. நாளும் அவர்களது பொல்லாச் சொற்களில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள். சேற்றில் புரளும் எருமைகளே! மந்த புத்தி எருமைகளே! எருமை மாட்டில் மழை பெய்தார் போல, எருமை போல அசையா ஜென்மமே, சூடு, சொரணை இல்லாத எருமைகளே! என்று எப்படியெல்லாம் மானுடர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள் தெரியுமா? நினைத்தால் கோபத்திலும், ஆத்திரத்திலும் மனம் புழுங்கிச் சாகிறது. நாங்கள் அப்படியென்ன பாவம் செய்தோம்? இப்படி ஒரு பெயர் வாங்க?!
எம்பெருமான் தமக்குள் புன்னகைத்துக் கொண்டவராக எருமையை நோக்கி இப்படிச் சொன்னார்...
என்னைக் கூட சுடுகாட்டில் ஆடுபவன், பிணம் எரித்த சாம்பல் பூசித் திரிபவன், கபால ஓட்டில் பிச்சையெடுப்பவன் என்று மானுடர்களில் பலர் சொல்வதுண்டு என்றார்.
எருமை அவரது பகடியைக் கவனித்தது போலத் தெரியவில்லை.
ஐயனே... உங்கள் அருமை அறியாதவர்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்... எங்களுக்கு ஆறாத மற்றொரு ரணம் உண்டு. பசுக்களுக்கும், எங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்? அவை தரும் பாலும் வெண்மையாகத்தான் இருக்கிறது. நாங்கள் தரும் பாலும் வெண்மையாகத் தான் இருக்கிறது. ஆனால், இந்த மட மானுடர்கள் அவைகளை மட்டும் புனிதம் என்ற பெயரில் போற்றிப் புகழ்கிறார்கள். கோமியத்தைப் பிடித்து வீட்டு மூலை, முடுக்கெல்லாம் தெளித்து பரிமள வாசம் என்று மெச்சிக் கொள்கிறார்கள். ஆனால், எங்களை என்னடாவென்றால் வீட்டுக்குள் நுழையவே விடுவதில்லை. எப்போது பார்த்தாலும் மந்த புத்தி எருமை என்று கரித்துக் கொட்டுகிறார்கள். இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். நாங்களும் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும். பரம்பொருளான உங்களால் முடியாதது உண்டா?! எங்களை தயவு செய்து பசுக்களுக்கு இணையாக மாற இக்கணமே வரமளியுங்கள்.
- என்று சிவனிடம் கோரிக்கை வைத்தது எருமை.
இதழ்களில் நெளியும் புன்னகையுடன், சாந்த ஸ்வரூபியாக எருமை சொன்னதைச் செவி மடுத்த ஈசன்... அதைக் காத்தருளும் அபய முத்திரையுடன் எருமையை ஆசிர்வதித்து.
எருமையே பிரம்மன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவையே. ஒன்றில் உயர்வும் பிறிதொன்றில் தாழ்வும் எப்போதும் இல்லை. உன் கோரிக்கை நியாயமானது தான். ஆதலின் அதை நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன். அதற்கு முன்பு நீ எனக்கொரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அளித்தால் நான் உன்னை பசுக்களுக்கு இணையாக மானுடர் மதிக்கும் படியாகச் செய்வேன் என்றார்.
எருமைக்கு ஒரே சந்தோசமாகி விட்டது.
உத்தரவிடுங்கள் எம்பெருமானே... என்றது.
ஈசன் சொன்னார்... பூலோகத்தில் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்ற உனது விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டுமெனில், நீ இன்று முதல் சேற்றில் புரளும் உன் இன்பத்தைக் கைவிட வேண்டும். சொந்த ஆசையிலோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ கூட நீ இனி எப்போதும் சேற்றில் அமிழ்ந்து புரளக்கூடாது. இந்த உத்தரவாதம் மட்டும் அளித்தாயானால் நாளை முதல் பூலோகத்தில் எருமைகளும், பசுக்களும் ஒரே விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று நான் வரமளிக்கிறேன்' என்றார்.
எம்பெருமானின் கருணையில் முகம் பூரித்தாலும் எருமைக்கு அவர் கேட்ட உத்தரவாதம் நடு மண்டையில் கல்லைத் தூக்கிப் போட்டாற் போலிருந்தது.
அது ஒரு நொடி திகைத்து நின்றது. பின் எம்பெருமானை நோக்கி;
சர்வேஸ்வரா, நீங்கள் கேட்கும் உறுதிமொழியை என்னால் தர இயலாது. மானுடர்களின் மதிப்பு, மரியாதைக்காக என்னால் எனது சிற்றின்பத்தைப் பலி கொடுக்க முடியாது. சேற்றில் புரள்வது எருமைகளான எங்கள் இனத்திற்கு கோடானு கோடி இன்பங்களில் ஒன்று. அதைத் தாரை வார்த்து விட்டு பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு நாங்கள் பெறப்போவது ஏதுமில்லை. என் கோபத்தின் மீதே எனக்கிப்போது கோபம் வருகிறது. உங்கள் ஆசி போதும். எனக்கு வரம் ஏதும் வேண்டாம்' என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடிப் போனது.
நடந்தது அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த நந்தி தேவரும், பூத கணங்களும் எம்பெருமானின் அருகில் அணைந்து;
மகாதேவரே! எருமையின் கோரிக்கையில் தவறென்ன? என்றார்கள்.
ஜடைமுடியில் உச்சிப் பிறைநிலா பளீரென ஒளி விட... மந்தகாசப் புன்னகையுடன் அவர்களை நோக்கிய மகா நீலகண்டர்...
கோரிக்கையில் தவறில்லை நந்தி... அந்தக் கோரிக்கையை அடைவதற்கான முயற்சியில் தான் தடை. எருமை முடிவெடுத்து விட்டது சேற்றில் புரள்வது தான் தனக்கு இன்பம் என. அப்படி இருக்கையில் மானுடர்கள் அதை குளிப்பாட்டி பூஜித்து நடு வீட்டில் கொண்டு வைக்க நினைத்தாலும் அதன் நினைவெல்லாம் சேற்றைத் தேடிக் கண்டடைவதாகத் தான் இருக்கும். நினைவில் எப்போதும் சேற்றைத் தேடும் எருமையை மானுடர் எப்படி பூஜிப்பர்? எருமை சேற்றைக் கைவிட முடியாததோடு தமக்கு நிஜமான இன்பம் மானுடர்களின் மரியாதையில் இல்லை என்பதையும் கண்டு கொண்டது. இது தன்னையறிந்த நிலை. இந்த நிலையை மனிதர்கள் அடைவார்களாயின் அவர்களுக்குள் போட்டி பொறாமை என்பதே இல்லாமல் நீங்கி விடும்.
வாழ்வின் ரகசியம் இது தான்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானறிந்து செயல்பட்டால் அதற்குண்டான வெற்றிக்கும், தோல்விக்கும் தானன்றி வேறெவரும் காரணமில்லை என்பதையும் உணர்வார்கள். அதோடு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்த தியாகத்தைச் செய்து வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேற எருமைக்கு மனமில்லை. அதனால் அது தனது வழக்கமான நிலையிலேயே நீடிக்கிறது என்றும் ஈசன் பகர்ந்தார். இனிமேல் அதற்கு தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டில் மனக்குறை இருக்காது என்று மென்னகையுடன் நிஷ்டையில் ஆழ்ந்து போனார் மூவுலகையும் பரிபாலிக்கும் எம்பெருமான் ஈசன்..

ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார்“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”பல வகையான மா...
18/08/2020

ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார்

“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.

ஆம்... பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

இந்த கொரானா சூழ்நிலையும் ஒரு வேகத்தடைதான், இதை நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் , பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.

(படித்ததில் பிடித்தது)

18/08/2020

படித்ததில் பிடித்தது, நீங்களும் அறிய இதோ அந்த பதிவு......

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்....

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த "வரிசையில்" நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது......

நாம் வரிசையில், எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை......

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது.
நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது.
நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.....

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.....

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.....

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.....

நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்......

உங்கள் முன்னால் யாரையும் பசியில் வாட விடாதீர்கள்!

அன்பே சிவம் 🙏

18/08/2020

ஒருமுறை சொன்னா 7தலைமுறை பாவம் போக்கும் மந்திரம்!!!

இந்த மந்திரத்தை, நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால், நாம் − அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா, அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா.

Adresse

Rue Des Solitaires 31
Paris
75019

Heures d'ouverture

Lundi 11:00 - 14:00
18:00 - 20:00
Mardi 11:00 - 14:00
18:00 - 20:00
Mercredi 11:00 - 14:00
18:00 - 20:00
Jeudi 11:00 - 14:00
18:00 - 20:00
Vendredi 11:00 - 14:00
18:00 - 20:00
Samedi 11:00 - 14:00
18:00 - 20:00
Dimanche 11:00 - 14:00
18:00 - 20:00

Téléphone

+33142410371

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Paris Murugan Kovil, ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயம், பாரிஸ். publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter Le Lieu De Culte

Envoyer un message à Paris Murugan Kovil, ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயம், பாரிஸ்.:

Partager