11/08/2026
அன்பான கிறிஸ்துவுக்குள் சகோதரர்களே, சகோதரிகளே, தேவபிள்ளைகளே,
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறேன்.
இலங்கை நாட்டில், வருகிற நவம்பர் மாதம் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கொழும்பில், ஒரு சிறப்பான இரண்டு நாள் கிறிஸ்தவ மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டை EASL / C2B Global அமைப்பு ஏற்பாடு செய்கிறது. தேவனுடைய ஊழியர்களையும், சபைகளையும் ஒன்றிணைத்து, இலங்கை தேசத்தில் தேவனுடைய ராஜ்யத்தின் பணியை மேலும் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் தலைப்பு “Called to Build” – “கட்டுவதற்காக அழைக்கப்பட்டவர்கள்” என்பதாகும்.
இலங்கையின் பல பகுதிகளில் இருந்து தலைமை போதகர்கள், தேவ ஊழியர்கள் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் கலந்து கொண்டு, இந்த இரண்டு நாட்களிலும் விசேஷமான கூட்டங்கள் மற்றும் பயிற்சிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் அநேகர் ஆவிக்குரிய விதத்தில் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
குறிப்பாக, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவ ஊழியர்களும், தேவபிள்ளைகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, இலங்கை சபைகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கிறது.
மேலும், மாநாடு முடிந்த பிறகு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், விருப்பமுள்ள ஊழியர்கள் இலங்கையின் பல்வேறு சபைகளுக்குச் சென்று, அங்குள்ள சபை ஊழியர்களோடு இணைந்து பிரசங்கிக்கவும், ஊழியம் செய்யவும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான உதவிகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்து தருகிறார்கள்.
இந்த மாநாட்டிற்கான பதிவு கட்டணம் ஒருவருக்கு 50 அமெரிக்க டாலர்கள். மேலும், குறைந்த செலவில் தங்குவதற்கான ஹோட்டல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கும், பதிவு செய்வதற்கும், தயவுசெய்து
www.c2bglobal.com
என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்,Tel:+94775121570 Pastor Priya.
ஆகவே, வெளிநாடுகளில் வசிக்கும் அன்பான தேவ ஊழியர்களே, சகோதரர்களே, சகோதரிகளே, இந்த அழைப்பை ஒரு சாதாரண அழைப்பாக பார்க்காமல், இலங்கை தேசத்திற்கும் அங்குள்ள சபைகளுக்கும் நாம் செய்யக்கூடிய ஒரு ஆவிக்குரிய பங்களிப்பாக கருதி, இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் எல்லோரும் ஒன்றிணைந்து, இலங்கை தேசத்தில் தேவனுடைய ராஜ்யத்தை கட்டியெழுப்புவதற்காக செயல்படுவோம்.
“Called to Build” – கட்டுவதற்காக அழைக்கப்பட்டவர்கள்.
உங்களுடைய பங்கேற்பும், ஜெபமும், ஊழியமும் இலங்கை தேசத்திற்கு நிச்சயமாக ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்.
தேவன் உங்களை அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
நன்றி. வணக்கம்.Pastor Paulambi
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன்.