18/10/2023
Bremen Shri Shirdi Sai baba Temple :
Humble regards to all devotees. Shirdi Sai baba attained Mahasamadhi on the auspicious day of vijayadashami, the coming 24.10.2023 (Tuesday). The temple will open from 12.00pm to 9.00pm on Tuesday .Baba , who prophetically understood his final days, invited and emphasized his devotees to read sacred scriptures, mantras and slokas around him. On the same basis, we are elated to inform you that on 24.10.2023, Abishekam will be held followed by Special Pujas with vedic chanting and Aarathi for baba at about 6.30 p.m at our Bremen baba Temple. Hence, all devotees are cordially invited to unfailingly take part in the occasion and acquire the divine grace and blessings of Shirdi Sai baba.
Thank you!
பிறேமன் ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா கோவில் :
பக்தர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம். வருகின்ற விஜயதசமி 24.10.2023 (செவ்வாய்க்கிழமை) ஷீர்டி பாபா மஹாசமாதி அடைந்தத் திருநாள். தனது இறுதிக்கட்டத்தைத் தீர்க்கதரிசனத்தில் அறிந்துகொண்ட பாபா, பக்தர்களை அழைத்து தன்னருகில் புனிதநூல்களையும், மந்திரங்களையும் ஸ்லோகங்களையும், படிக்குமாறு அறிவுறுத்தினார். இதனடிப்படையில் நமது பிறேமன் பாபா கோவிலில் 24.10.2023 அன்று மாலை 6.30 மணியளவில் பாபாவுக்கு அபிஷேகமும், மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும் , தீப ஆராதனையும் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பக்தர்கள் அனைவரும் சிறப்புப் பூஜைகளில் தவறாமல் கலந்துகொண்டு ஷீர்டி பாபாவின் அருளாசியையும் அனுகிரஹத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
நன்றி !