இறைவாழ்வு - Iraivaalvu

இறைவாழ்வு - Iraivaalvu இறைவாழ்வில் இணைவோம்..இறைவனை புகழ்வோம்..

16/11/2024
12/08/2024
தெரிந்து கொள்வோம்... #மடு  #அன்னையின் வரலாறு #மடு அன்னை (Shrine of Our Lady of Madhu) கன்னி மேரியின் ரோமன் கத்தோலிக்க தே...
16/04/2024

தெரிந்து கொள்வோம்...
#மடு #அன்னையின் வரலாறு #
மடு அன்னை (Shrine of Our Lady of Madhu) கன்னி மேரியின் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மடு என்ற இடத்தில் அமைந்துள்ளது.

400 ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.

ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொள்வர். ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்தது. இனப்போரின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். ஏப்ரல் 2008 இல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது. இதனால் அங்கு அடைக்கலமடைந்திருந்ந்த மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். இதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் அன்னையின் திருவுருவச் சிலையின் பாதுகாப்புக் கருதி அச்சிலை ஏப்ரல் 4, 2008 இல் மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

2011 ஆவணி மாத திருவிழாவிற்கு முன், மன்னார் மேதகு ஆயர் ஜோசப் ஆண்டகை அவர்கள், 2008 இல் ஆரம்பிக்கப்பட்ட அழகிய இரண்டு மாடிக் கட்டிடத்தை, குருக்கள் தங்குவதற்காக திறந்து வைத்தார். பல ஆண்டுகளின் பின் இக்கட்டிடம் ஒன்றே மடுத்திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1544ம் ஆண்டுக்கு முன்னரே பிரான்சிஸ்கன் சபைக் குருக்களினால் மாந்தையில் வைக்கப்பட்ட மாதா சுரூபம் 500 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் மடுவில் மடுமாதா என பக்தர்களால் அன்பாக அழைக்கப்பட்டு அருள்மழை பொழிந்து கொண்டிருக்கின்றார்.

வருடந்தோறும் நடைபெறும் மடு அன்னையின் திருநாட்கள்:

1. தை 1ம் நாள் – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா திருவிழா (Mother of God)

2. மாசி 2ம் நாள் – காணிக்கை மாதா திருவிழா

3. பங்குனி 10ம் நாள் – தென்பகுதி சிங்களவர்களினால்;; பாராம்பரியமாக கொண்டாடப்படும் திருவிழா (Feast that is being celebrated traditionally by the Sinhalease brothern from Southern part of Srilanka)

4. பெரிய வியாழன் தொடக்கம் உயிர்த்த ஞாயிறு வரை – பரிசுத்த ஞானொடுக்கம்

5. வைகாசி 1ம் நாள் – ஞாயிறு மாதாவின் மாதம் (Month of Mary)

6. ஆடி 2ம் நாள் – மரியாயின் மாசற்ற இதயம் – திருவிழா

7. ஆவணி 15ம் நாள – தூய கன்னி மரியாயின் விண்ணேற்புத் திருவிழா

8. புரட்டாதி 8ம் நாள் – தூய கன்னி மரியாயின் பிறப்பு திருவிழா (Birth of Mother Mary)

9. ஐப்பசி 1ம் சனி – மடுத் திருப்பதியின்; திருவிழா (Madhu Church Feast)

10. மார்கழி 8ம் நாள் – தூய கன்னி மரியாயின் அமலோற்பவ திருவிழா (Holy Conception of Mary Mother)

matha

1670 – 2011 ம் ஆண்டு வரையான மருதமடு அன்னையின் தேவாலயத்தை பரிபாலித்த

ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர்

ஆண்டு ஆயர்கள் – குருக்கள் – பொதுநிலையினர்

1. 1670-1697 மடு ஒரேடேரியன் சபை வ.பிதா யோசவாஸ் (Oratorians)

2. 1697-1720 வண.பிதா பெற்றோ பெரேரா (Rev.Fr.Pedro Perrao)

3. 1720-1727 வண. பிதா. அந்தோனியோ டீ டவாரோ (

4. 1727-1728 வண. பிதா. பெற்ரோ டீ. சல்டன்கா

5. 1728-1732 வண. பிதா. யோவா டீ. சா

6. 1733-1743 வண. பிதா. பிரான்சிஸ்கோ கொண்சல்வாஸ்

வண. பிதா. பிராஸ் பெரேரா (சுநஎ.குச.டீசயள Pநசநசைய)

வண. பிதா. கஸ்ரோடியோ டீ. அந்திராதி

வண. பிதா. தியாயோ டீ. றொசாரியோ

7. 1743-1847 மடுப்பரிபாலனம் ஒறோரேரியன் குருக்களினால் வழிநடாத்தப்பட்டது. இக்காலப்பகுதியில் போர்த்துக்கேயர் 16 நூற்றாண்டில் தென் ஆசியாவிலுள்ள சில நாடுகளை தமது ஆளுகைக்கு உட்படுத்தியதால் ஆயர்களின் பாதுகாப்பில் பாட்ராடோவை உட்படுத்தின. பரிசுத்த பாப்பரசரின் ரோமை ஆளுகைக்கு உட்பட்ட திருச்சபை புரப்பக்கண்டா என அழைக்கப்பட்டது. இக்காலத்தில்; மடுப் பகுதியில் நிச்சயமற்ற தன்மை நிலவியது.

8. 1848-1849 இக்காலப்பகுதியில், இலங்கைத் திருச்சபை கொச்சின் மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வந்தது. “பாப்பாண்டவர் கிரகோரி 16” கொச்சியிலிருந்து இலங்கையை பிரித்து 03-12-1834 இல் தனி “விக்கார் அப்போஸ்தலிக்க” மறை நாடாக்கினார். 1வது ஒரட்ரோரியன் குருவாக கோவையை சேர்ந்த வண.பிதா பிரான்சிஸ் சேவியர் அ.ம.தி. நியமிக்கப்பட்டார்.

9. 1848-1852 வண. பிதா ஜோசப் சியாமின ஆளுகை.

10. 1852-1855 மடுமாதா தேவாலய நிர்வாகத்தில் நிச்சயமற்றதன்மை காணப்பட்ட இக்காலத்;;;தில் வண. பிதா ளு. விவியன் இடைக்கால பொறுப்பாளராயிருந்தார்.

11. 1856-1857 அதி. வந்த வடமாகாண ஆயர் கலாநிதி பெற்றாச்சின் ஆயரின் மறைவிற்குப்பின், வண. பிதா து.டீ.நு புளோரின் ஆளுகை.

12. 1857-1862 மடு பரிபாலனம் அமல உற்பவ சபையினரின் (அ.ம.தி.) நிர்வாகத்திற்கு உட்பட்ட காலம். வண. பிதா கு.ஆ.து கோரடஸ் வண. பிதா யு.து. ளுவ.ஜீனிஸ்.

13. 1862-1868 அதி. வந்த வடமாகாண ஆயர் ளு.செமாரியா அவரின் இறப்பிற்குபின் வண. பிதா யு.து.ஆ.டு . பூஷாக் – அ.ம.தி.ஆளுகை.

14. 1869-1873 வண. பிதா து. து. ஆ . பௌசின் அ.ம.தி. ஆளுகை.

15. 1873-1875 இருவருடங்களாக மடு பரிபாலனம் பற்றி இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. ஆயருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

16. 1875-1883 அதி வந்த. வடமாகாண ஆயர் கலாநிதி பொஞ்ஜீன் அ.ம.தி. ஆளுகை.

17. 1883-1893 அதி வந்த வடமாகாண ஆயர் கலாநிதி அன்று மெலிசன் அ.ம.தி. ஆளுகை.

18. 1893-1919 அதி வந்த. வடமாகாண ஆயர் கலாநிதி கென்றி யுலியன் அ.ம.தி. ஆளுகை.

19. 1919-1923 அதி வந்த. வடமாகாண ஆயர் கலாநிதி பிறேல்ட் அ.ம.தி. ஆளுகை.

20. 1924-1950 அதி வந்த வடமாகாண ஆயர் கலாநிதி து.யு கைமர் அ.ம.தி. ஆளுகை.

21. 1950-1972 அதி வந்த. யாழ் ஆயர் கலாநிதி எமிலியானுஸ்பிள்ளை மேற்றிராசன குரு ஆளுகை.

22. 1972-1973 அதி வந்த. யாழ் உதவி ஆயர் கலாநிதி டு.சு அன்ரனி மேற்றிராசன குரு ஆளுகை.

23. 1973-1981 அதி வந்த. யாழ் ஆயர் கலாநிதி தியோகுப்பிள்ளை மேற்றிராசன குரு ஆளுகை.

24. 1981-1992 அதி வந்த. மன்னார் ஆயர் கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் மேற்றிராசன குரு ஆளுகை.

25. 1992-10-20 அதி வந்த. மன்னார் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் மேற்றிராசன குரு ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டு இற்றைவரை (2013) பொறுப்பேற்றுக்கொண்டார்.

மடு அன்னையின் சமாதான யாத்திரைகள்

மடு அன்னையின் திருச்சுரூபம் கீழ்க்கண்ட ஆண்டுகளில் திருச்சுரூப பாதுகாப்பிற்காகவும் மக்களின் நன்மை கருதியும் மடுத்தேவாலயத்தை விட்டு; வெளியில் எடுத்துச்செல்லப்பட்டதாக சரித்திரம் கூறுகின்றது.

i. முன்னைய காலத்தில் மடுத்திருப்பதியை நிர்வகித்த கோவில் சக்கிடுத்தார் போன்றோரால் மடுக்கிராமத்தில் பஞ்சம், வரட்சி, நிலவியபோதும் சகல ஊர்மக்களும், இடம்பெயர்ந்தபோதும் மடுமாதாவின் திருச்ச்சுரூபம் 5 கி.மீ தூரத்திலுள்ள கள்ளியட்டைக்காடு எனும் விவசாய கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதாக பல சான்றுகள் உள்ளன.

ii. இதேபோன்று மடுமாதாவின் பக்தர்களுக்கிடையில் பிணக்குகள் ஏற்பட்டபோது ஒரு பிரிவினரால் மாதாவின் திருச்சுரூபம் முன்னைய ஆண்டுகளில் கள்ளியட்டைக்காட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பழைய தரவுகள்; சான்று பகர்கின்றன.

iii. 1949ல் மடுமாதாவின் முடிசூட்டு விழாவின் முன்னோடியாக செபமாலை ஓதல் எனும் கருப்பொருளில் யாழ் மேற்றிராசணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

iv. 1974ல் மடுமாதாவின் 50 வருட முடிசூட்டு விழா ஞாபகமாக மனம்திரும்புதல் எனும் கருப்பொருளில் யாழ் மேற்றிராசணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

v. 2000ல் 75 வருட முடிசூட்டு விழா ஞாபகமாக சமாதானம் எனும் கருப்பொருளில் யாழ் மேற்றிராசணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

vi. 2001ல் இலங்கையின் சமாதானத்தை வேண்டி மன்னார் மாவட்ட ஆலயங்கள், கொழும்பு, அனுராதபுரம், சிலாபம், கண்டி, போன்ற மறைமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

vii. 2009 சித்திரையில் மடு அன்னையின் பழமை வாய்ந்த புனித சுரூபத்தை கடும் போரில் இருந்து காப்பாற்ற வண பிதா எமிலியானுஸ்பிள்ளை அவர்களால் 21 கி.மீ தூரத்திலுள்ள தேவன்பிட்டி தேவாலயத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது.

viii. 2009 ஆவணி 5ம் திகதி போர் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்தபோது, மீண்டும் மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.

ix. 2009 ஆவணி 10ம் திகதி இராணுவம் மடுத்தேவாலயத்தை ஆயரிடம் கையளித்தபின் திருச்சுருபம் மீண்டும் மடு தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

x. 2009 ஆவணி 15ம் திகதி மடுத்தேவாலயம் மந்திரிக்கப்பட்டு மீண்டும் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டது.

xi. அன்று முதல் இன்றுவரை இயல்பு நிலையில் அன்னையின் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

Adresse

Bielefeld
33729

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von இறைவாழ்வு - Iraivaalvu erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an இறைவாழ்வு - Iraivaalvu senden:

Teilen