Tamil Catholic Media

Tamil Catholic Media கத்தோலிக்க நிகழ்வுகளை இறைமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லல்

அருள் வீரரின் அறப்போர் காவியம்: 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரங்கேறும் புனித அருளானந்தர் சரிவ மரபு நாடகம்!  ​பேசாலை ...
20/09/2026

அருள் வீரரின் அறப்போர் காவியம்: 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரங்கேறும் புனித அருளானந்தர் சரிவ மரபு நாடகம்!

​பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயச் சமூகம் பெருமையுடன் வழங்கும் கம்பீரமான வரலாற்று நிகழ்வு!

முப்பத்தாறு வருடங்களுக்குப் பின்னர், இன்றைய இளைய தலைமுறையினரின் கைவண்ணத்தில் மீண்டுமொரு முறை மேடையேறுகிறது புலவர்மணி அவுறான் செபஸ்தியான் குரூஸ் (குரூசுப் புலவர்) அவர்களின் படைப்பான 'புனித அருளானந்தர் சரிவ மரபு நாடகம்'.

​ஆன்மீகமும் வீரமும் சங்கமிக்கும் இப்பிரமாண்ட நாடகக் காவியத்தைக் கண்டு களிக்க உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

​நாடகத்தின் பெயர்: புனித அருளானந்தர் சரிவ மரபு நாடகம்

​நாடகாசிரியர்: புலவர்மணி அவுறான் செபஸ்தியான் குரூஸ் (குரூசுப் புலவர்)

​நாட்கள்: 2026 புரட்டாதி 25 மற்றும் 26 ஆகிய
திகதிகளில்

​நேரம்: மாலை 7:00 மணிக்கு

​இடம்: மன் / புனித பத்ரிமா ம. ம. வித்தியாலய விளையாட்டு அரங்க, பேசாலை.

​வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, அருளாளர் காட்டிய அறவழியைப் பின்பற்றி, இறையாசீரைப் பெற்றுச் செல்லுமாறு உங்களைச் அன்புடன் அழைக்கிறோம்!

வத்திக்கானில் கோலாகலமாகத் தொடங்கியது திருக்குடும்ப துணை குருக்களின் சர்வதேச மாநாடு: திருத்தந்தையின் ஆசியுடன் சிறப்பான சந...
20/09/2026

வத்திக்கானில் கோலாகலமாகத் தொடங்கியது திருக்குடும்ப துணை குருக்களின் சர்வதேச மாநாடு:
திருத்தந்தையின் ஆசியுடன் சிறப்பான சந்திப்பு!

​உரோமாபுரி:
புரட்டாதி மாதம் 17ஆம் திகதியன்று, வத்திக்கான் உரோமாபுரியில் அமைந்துள்ள திருக்குடும்ப சபை தலைமை இல்லத்தில், திருக்குடும்ப துணை குருக்களின் சர்வதேச மாநாடு விமரிசையாக ஆரம்பமாகி வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றது.

​இறைப்பணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றுவரும் இம்மாநாட்டில், திருக்குடும்ப சபையின் உலகளாவிய தலைவி அருட்சகோதரி அனா மரியா அவர்களும், சபை ஆலோசகர்களும் தலைமை தாங்கியுள்ளனர்.

மேலும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இத்தாலி, கொங்கோ, கமரூன் மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 33 குருக்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.

​இவர்களுடன் திருக்குடும்ப சபையின் ஏனைய அழைத்தல்களான தியான யோக சபையினர், அப்போஸ்தலிக்க சபையினர், பொதுநிலை அங்கத்தவர்கள் மற்றும் மதசார்பற்ற அங்கத்தவர்களும் கலந்துகொண்டு மாநாட்டின் சிறப்பை மேலும் மெருகூட்டியுள்ளனர்.

இம்மாநாட்டின் மிக முக்கிய அம்சமாக, மாநாட்டில் கலந்துகொண்ட திருக்குடும்ப துணை குருக்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களை நேரில் சந்தித்து, அவருடைய பொன்னான ஆசியைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆன்மீகச் சந்திப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரது உள்ளங்களிலும் பெரும் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ் மாநாட்டில் மன்னார், யாழ் மறைமாவட்ட அருட்பணியாளர்களும் கலந்து கொண்டு இறையருளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் நிறைவடைந்த அதிபர்கள் மற்றும் உருவாக்குநர்களுக்கான விசேட பயிற்சிப் பாசறை!​கண்டி//Tami...
19/09/2026

கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் நிறைவடைந்த அதிபர்கள் மற்றும் உருவாக்குநர்களுக்கான விசேட பயிற்சிப் பாசறை!
​கண்டி//Tamil Catholic Media

​இலங்கை கத்தோலிக்க திருஅவையில் குருத்துவப் பயிற்சி பெறும் மாணவர்களின் உருவாக்கல் பணியில் ஈடுட்டுள்ள அதிபர்கள் மற்றும் உருவாக்குநர்களுக்கான (Rectors & Formators) விசேட பயிற்சிப் பாசறை, கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.

​கடந்த புரட்டாதி மாதம் 13ஆம் திகதி தொடங்கி இன்று (19ஆம் திகதி) வரை நடைபெற்ற இத்தவணைப் பயிற்சி முகாமுக்கு, இந்தியாவிலிருந்து வருகை தந்த சலேசியன் சபை அருட்தந்தை பினு அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.

​உளவியல் பங்கு: குருத்துவ உருவாக்கத்தில் உளவியலின் இன்றியமையாத பங்கும் அதன் பயன்பாடுகளும்.

​மதிப்பீட்டு முறைமை: உருவாக்கத்தில் உள்ள மாணவர்களுக்கான முறையான மற்றும் ஆக்கபூர்வமான மதிப்பீட்டு வழிமுறைகள்.

​ஆளுமை விருத்தி: எதிர்காலத் திருஅவைத் தலைவர்களின் ஆளுமையை வளர்த்தெடுப்பதற்கான பயிற்சிகள்.

​ஆன்மீக உருவாக்கம்: ஆழமான ஆன்மீக அடித்தளத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டல்கள்.

​இலங்கை முழுவதிலுமிருந்து வருகை தந்த 22 அதிபர்கள் மற்றும் உருவாக்குநர்கள் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்குபற்றி முழுமையான பயனடைந்தனர்.

எதிர்காலத் திருஅவைக்குச் சிறந்த, பக்குவப்பட்ட குருக்களை உருவாக்கும் இத்தகைய ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள், கத்தோலிக்க திருஅவையின் கல்வி மற்றும் உருவாக்கப் பணிகளுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தூய ஆவியின் அபிஷேகத்தில் மலர்ந்த வங்காலை புனித ஆனாள் பங்கு, விமரிசையாக நடந்த உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம்!மன்னார் மறைம...
19/09/2026

தூய ஆவியின் அபிஷேகத்தில் மலர்ந்த வங்காலை புனித ஆனாள் பங்கு, விமரிசையாக நடந்த உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம்!

மன்னார் மறைமாவட்டத்தில் ஆன்மீக எழுச்சியும் இறை ஆசீர்வாதமும் நிறைந்த ஒரு பொன்னான நாளாக இன்றைய தினம் (19.09.2026) அமைந்தது.

வங்காலை புனித ஆனாள் பங்கில், இன்று சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு, பங்குதந்தை அருட்பணி நியூட்டன் அடிகளாரின் சிறப்பு ஒழுங்கமைப்பில், 72 மாணவ மாணவிகளுக்கு உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் மிக விமரிசையாக வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்கள் தலைமை தாங்கி இத்திருவருட்சாதனத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.

​பல மாத காலமாக இப்பங்கு மறையாசிரியர்களும் அருட்சகோதரிகளும் ஒன்றிணைந்து, மாணவர்களை ஆன்மீக ரீதியில் வழிநடத்தி, திருவருட்சாதனத்தைப் பெற அவர்களை முழுமையாக ஆயத்தப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

​இன்றைய உறுதிப்பூசுதல் திருப்பலியானது, ஓய்வு நிலை ஆயரின் தலைமையில் மிகவும் பக்திபூர்வமாக கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியில் வங்காலை பங்குதந்தை அருட்பணி நியூட்டன் அடிகளார், உதவிப் பங்குதந்தை சுதன் அடிகளார், மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் அருட்பணி அலஸ் அடிகளார் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்ல நிதியாளர் அருட்பணி L. சுரேந்திரன் றெவ்வல் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​கத்தோலிக்க திருச்சபையின் ஏழு திருவருட்சாதனங்களில் 'உறுதிப்பூசுதல்' (Confirmation) என்பது ஞானஸ்நானத்தின் வழியைத் தொடர்ந்து, கிறிஸ்தவ வாழ்வை முதிர்ச்சியடையச் செய்யும் மிக முக்கியமானதொரு அருட்சாதனமாகும்.

கத்தோலிக்க திருச்சபையின் மரபுப்படி, திருத்தூதர்களின் வழிவந்த ஆயர்களே வழக்கமாக உறுதிப்பூசுதல் திருவருட்சாதனத்தை வழங்குபவர்களாகத் திகழ்கிறார்கள். திருத்தூதர்கள் காலத்தில் கைவைப்பு மூலமாகவும், தூய ஆவியின் பொழிதல் மூலமாகவும் விசுவாசிகளுக்கு ஆவியானவர் வழங்கப்பட்டதை இது நினைவூட்டுகிறது.

​ஆயர் அவர்கள், உறுதிப்பூசுதலைப் பெறும் மாணவர்களின் நெற்றியில் 'கிரிஸ்து தைலம்' (Chrism) பூசி, "தூய ஆவியாகிய கொடையைப் பெற்றுக்கொள்வாயாக" என்று கூறி ஆசீர்வதிப்பார். திருதைலம் பூசுவது என்பது விசுவாசிக்கு திருச்சபையில் ஒரு சிறப்பான முத்திரை பதிக்கப்பட்டு, அவர் கிறிஸ்துவின் சாட்சியாக வாழ அழைக்கப்படுகிறார் என்பதைக் குறிக்கிறது.

இந்த நிகழ்வின் மூலம், இளம் பிள்ளைகள் தங்கள் சொந்த விசுவாசத்தில் வளர்ந்து, உலகிற்கு வெளிச்சமாகவும் உப்பாகவும் வாழ தூய ஆவியின் முழுமையான பலனைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

​இத்தகு பெருமைமிக்க ஆன்மீக நிகழ்வு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற மாணவர்களை மாதக்கணக்கில் அர்ப்பணிப்புடன் வழிநடத்தி, ஆன்மீக ரீதியில் அவர்களைத் தயார்படுத்திய அருட்சகோதரிகள் மற்றும் மறையாசிரியர்கள் அனைவரின் அயராத உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பங்குச் சமூகம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
Photo : St Annes media

புதிய அகவையில் காலடி பதிக்கும் மன்னார் மறைமாவட்ட  அருட்பணியாளர்களை வாழ்த்துகின்றோம். 19.09.2026இன்று 19.09.2026 சனிக்கிழ...
19/09/2026

புதிய அகவையில் காலடி பதிக்கும் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களை வாழ்த்துகின்றோம். 19.09.2026

இன்று 19.09.2026 சனிக்கிழமை தங்களது அகவை தினத்தினை நினைவு கூர்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்தும் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களான
🎂வண பிதா எமில் அடிகளார் மற்றும் வண பிதா அ.சிம்ப்சன் அடிகளார் இருவருக்கும் #தமிழ்க் #கத்தோலிக்க #ஊடகம் சார்பாகவும் இறைமக்கள் சார்பாகவும் அகவை தின நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

தந்தையர்களே! கடந்த ஆண்டு முழுவதுமாக உங்களை கண்ணின் கருமணி போல பாதுகாத்து வந்த மருதமடு அன்னைக்கு நன்றி செலுத்துகின்றோம்.

உங்கள் பணி வாழ்வில் ஆண்டவர் தாமே உங்களுக்கு முன்னும், பின்னும், இடமுமாக வலமுமாக இருந்து வழிநடத்தவும், நீண்ட ஆயுளோடும்,உடல், உள ஆன்மிக பலத்தோடும் பணிகளை முன்னெடுக்கவும், பணிவாழ்வில் வரும் சவால்களை நல் மனதோடு ஏற்றுக்கொண்டு அன்னை மரியாளின் அசையாத நம்பிக்கையோடு புதிய அகவை தினம் அமையப்பெற இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றோம்.

பணி வாழ்க்கையில் வரும் இன்பமோ துன்பமோ எது வரினும் பரிசுத்த ஆவியானவரின் துணை கொண்டு நம்பிக்கையோடும், அசையாத விசுவாசத்தோடும் உங்கள் ஆன்மீகப் பணி தொடரவேண்டும் என இறையாசீர் கூறி
இனிய அகவைதின நல் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றோம்.

நன்றி
உங்கள் அன்பில் மகிழும்
தமிழ்க் கத்தோலிக்க ஊடகம்.(சுவிஸ்)

சுவிட்சர்லாந்தில்  நடைபெற்ற கத்தோலிக்க  இளையோர் ஒன்றுகூடல் 2026!​ சுவிஸ் வாழ் கத்தோலிக்க  இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெள...
18/09/2026

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் 2026!

​ சுவிஸ் வாழ் கத்தோலிக்க இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும், ஆன்மிக மற்றும் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும் வருடாந்த இளையோர் ஒன்றுகூடல் 2026 கடந்த செப்டம்பர் 13, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓல்ரன் (Olten) நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இயக்குநர் அருட்பணி ஆ.யூட்ஸ் முரளிதரன் அடிகளாரின் அறிவுறுத்தலின்படியும், இளையோர் பொறுப்பாளர்களின் சிறப்பான ஒழுங்குமைப்பிலும் இந்நிகழ்வு வெற்றிகரமாக அரங்கேறியது.

​யாழ் மறைமாவட்ட அருட்பணியாளர் வண. பிதா லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார் மற்றும் இயக்குநர் அருட்பணி ஆ.யூட்ஸ் முரளிதரன் அடிகளார் ஆகியோர் இணைந்து இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வை வழங்கினர்.

​இளையோர்களின் வழிகாட்டல்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் எதிர்காலப் பணிகள் குறித்து விரிவான உரைகளும், சுவாரஸ்யமான கலந்துரையாடல்கள் மற்றும் கேள்வி-பதில் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

​சுவிஸின் பல்வேறு மண்டலங்களில் இருந்தும் 90-க்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​ஆன்மிக பலம் சேர்க்கும் வகையில் இடம்பெற்ற கூட்டுத் திருப்பலியுடன் நிகழ்வு நிறைவுபெற்று, இளையோருக்கான சிறப்பாசீர் வழங்கப்பட்டது.

​"இளைஞர்களின் எழுச்சியே சமூகத்தின் வளர்ச்சி" என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வைச் சிறப்பாக ஒழுங்கமைத்த அருட்பணி முரளிதரன், அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார் மற்றும் அனைத்து இளையோர் பொறுப்பாளர்களுக்கும் தமிழ்க் கத்தோலிக்க ஊடகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

“ஆயர் பணியை அரசியல் அளவுகோலால் மதிப்பிட வேண்டாம் - உண்மை, மரியாதை, ஆன்மீகப் பொறுப்பு ஆகியவற்றை மதிப்போம்” மன்னார் மறைமாவ...
18/09/2026

“ஆயர் பணியை அரசியல் அளவுகோலால் மதிப்பிட வேண்டாம் - உண்மை, மரியாதை, ஆன்மீகப் பொறுப்பு ஆகியவற்றை மதிப்போம்”

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் மறைமாவட்டம் சார்பான பகிரங்க கண்டன அறிக்கை - 18.09.2026

குருத்துவ தின நல் வாழ்த்துக்கள் 18.09.2026.இன்று தங்களது குருத்துவ தினத்தை நினைவு கூர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் அ...
18/09/2026

குருத்துவ தின நல் வாழ்த்துக்கள் 18.09.2026.

இன்று தங்களது குருத்துவ தினத்தை நினைவு கூர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் அருட்பணி அ.விக்டர் சோசை அடிகளார் மற்றும் அருட்பணி ஸ்ரிபன் ராஜ் அடிகளார் அவர்களுக்கு! ​இறைவனின் பேரன்பும், அளப்பரிய அருளும் உங்களை வழிநடத்தும் இந்த நன்னாளில், உங்களுக்கு சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஊடகம் சார்பாகவும், இறைமக்கள் சார்பாகவும் இதயங்கனிந்த குருத்துவ தின நல் வாழ்த்துகளை இறை அன்போடு சமர்ப்பிக்கின்றோம்.

“என் இதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை நான் உங்களுக்குத் தருவேன்; அவர்கள் உங்களை அறிவூட்டலினாலும் ஞானத்தினாலும் மேய்ப்பார்கள்." — எரேமியா 3:15

​அன்பையும், கருணையையும், வழிகாட்டுதலையும் உங்கள் இறைப்பணியின் மூலம் தொடர்ந்து வழங்கி வரும் உங்களை, இறைவன் மேலும் பல ஆசீர்வாதங்களால் நிரப்ப வேண்டுகிறோம்.

​இறைவன் உங்களுக்கு நல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும், நீடித்த ஆயுளையும் தந்தருளட்டும்.

​ நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு இறைப்பணியிலும் தேவ ஆவியின் வழிநடத்துதலும், தடைகளற்ற வெற்றியும் தொடரட்டும்.உங்களது வார்த்தைகளினாலும், சேவையினாலும் இறைவன் இன்னும் திரளான மக்களைத் தன் அன்பின் பாதையில் சேர்க்க அருள் புரிவாராக.

​"அன்னை மரியா உங்களை எப்போதும் நடத்தி, வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை உறுதியாக்குவார்." (ஏசாயா 58:11)

​இறைவனின் மாறாத அன்பும், தாயின் அரவணைப்பும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் பிரசன்னமாகி உங்களை என்றென்றும் காப்பதாக!

​இனிய குருத்துவ தின நல் வாழ்த்துகள், அருட்பணியாளர்களே...💐💐💐💐

உங்கள் மகிழ்வில் கலந்து நிற்கும்
தமிழ்க் கத்தோலிக்க ஊடகம்
சுவிஸ்

மன்னார் மறைமாவட்டத்தின் பொன்விழா நோக்கிய ஆன்மீகப் பயணம்:, தோட்டவெளியில் விமரிசையாக நடைபெற்ற  புதுப்பித்தல் வழிபாடுகள்!​ம...
16/09/2026

மன்னார் மறைமாவட்டத்தின் பொன்விழா நோக்கிய ஆன்மீகப் பயணம்:, தோட்டவெளியில் விமரிசையாக நடைபெற்ற புதுப்பித்தல் வழிபாடுகள்!

​மன்னார் மறைமாவட்டத்தின் 50வது ஆண்டு ஜூபிலியை (1971 - 2031) நோக்கிய ஆன்மீக எழுச்சியின் மூன்றாவது புதுப்பித்தல் வழிபாடுகள், இன்று (செப்டம்பர் 16, 2026) மன்னார் மறைக்கோட்டம் தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் மிகச் சிறப்பாகவும் இறைசக்தியுடன் நிறைவேற்றப்பட்டன.

​தோட்டவெளி பங்கு மக்கள், தாழ்வுபாடு பங்கு மற்றும் யோசவ்வாஸ் நகர் பங்கு ஆகிய மூன்று பங்குகளைச் சேர்ந்த இறைமக்கள் பெருமளவில் திரண்டு வந்து இவ்வழிபாடுகளில் ஆன்மீக ஈடுபாட்டுடன் கலந்துகொண்டனர்.

​மாலை 5.00 மணிக்குத் திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து கூட்டுத் திருப்பலி, பாவசங்கீர்த்தனம், இறைவார்த்தைப் பகிர்வு மற்றும் நற்கருணை ஆராதனை என பக்திபூர்வமாக நடைபெற்றது.

மன்னார் மறைக்கோட்ட முதல்வரும், புனித செபஸ்தியார் பேராலயப் பங்குத்தந்தையுமான அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் தலைமையில்
​அருட்தந்தை விமல்றோய் அடிகளார்
​திருகோணமலை மறைமாவட்ட அருட்பணியாளர் அருட்தந்தை றஜீவன் அடிகளார் ,​கள்ளிக்கட்டைக்காடு இறை இரக்க தியான இல்ல அருட்தந்தை சேவியர் அன்ரனி அடிகளார் (VC) ​அருட்தந்தை அன்ரனி அடிகளார் மற்றும் மறைக்கோட்டத்தின் பங்குத்தந்தையர்கள், உதவிப் பங்குத்தந்தையர்கள் என பலரும் கலந்துகொண்டு திருப்பலியைச் சிறப்பித்தனர்.

​நற்கருணை ஆராதனையினை திருகோணமலை மறைமாவட்ட அருட்தந்தை றஜீவன் அடிகளாரும், அருட்தந்தை அன்ரனி சேவியர் அடிகளாரும் (VC) இணைந்து சிறப்பு நற்கருணை ஆராதனை வழிபாடுகளை நடத்தியதுடன் அருட்தந்தை சேவியர் அன்ரனி அடிகளாரால் நற்கருணை இறையாசீர் வழங்கப்பட்டது.

​ஜூபிலி ஆண்டை நோக்கிச் செல்லும் மன்னார் மறைமாவட்டத்தின் விசுவாசப் பயணத்தில், இம்மூன்று பங்குகளின் கூட்டு வழிபாடும் இறைசமூகத்தின் ஒருமைப்பாடும் மாபெரும் ஆன்மீக எழுச்சியை ஊட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Adresse

Suhr

Öffnungszeiten

Montag 08:00 - 17:00
Dienstag 08:00 - 17:00
Mittwoch 08:00 - 20:00
Donnerstag 08:00 - 20:00
Freitag 08:00 - 20:00
Samstag 08:00 - 20:00

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamil Catholic Media erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen