Murugan swiss

Murugan swiss Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Murugan swiss, Religiöses Zentrum, Industriestraße 27, Sankt Margrethen.

திருக்கல்யாணம்
06/11/2016

திருக்கல்யாணம்

https://youtu.be/bc31a0xd1FU
31/10/2016

https://youtu.be/bc31a0xd1FU

updated by S.Sathish Kumar +91 99623 21420 Affluenz Technologies Chennai Kanda sasti kavasam is a song composed by Devaraya Swamigal. It is a rare and valuab...

29/10/2016
யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கலாசாரங்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமானதும் தனித்துவமானதும் ஆடிப்பிறப்பே ஆகும். ஆடிப்ப...
16/07/2016

யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கலாசாரங்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமானதும் தனித்துவமானதும் ஆடிப்பிறப்பே ஆகும். ஆடிப்பிறப்பினை கொண்டாடும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண மக்கள் உள்ளனர். இந்த அளவுக்கு ஆடி மாதத்தின் சிறப்பு பண்டைய யாழ்ப்பாணத்து மூத்த குடியினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சிறப்பான அம்சமும் பெருமைப்பட வேண்டிய அம்சமும் என்னவென்றால் பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மக்கள் தமது பாரம்பரியங்களையும் சம்பிரதாயங்களையும் இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கைவிடாது கைக் கொண்டு வருவதே ஆகும். தமிழ் நாட்டுத் தமிழர்கள் கூட ஆடிமாதம் வந்துவிட்டால் பெரும்பாலும் அம்பாள் கோவில்களில் கூழ் ஊற்றல் என்ற சடங்கினை செய்து வருகின்றனர். எனினும் யாழ்ப்பாண மக்களைப் போல தமிழில் ஆடிமாதம் முதலாம் நாளில் தமக்கே உரிய வகையில் அந்த நாள் மட்டும் சமைக்கும் இனிப்பு கூழ் பற்றி அவர்கள் அறியமாட்டார்கள். நாம் அறிந்த வகையில் ஆடிமாதத்தின் சிறப்பினை எடுத்துப் பார்த்தால் "ஆடிக்காற்றுக்கு அம்மியும் பறக்கும்' என்ற பழிமொழிக்கேற்ப யாழ்ப்பாணத்தின் மீது தென்மேல் பருவக்காற்று பலமாக வீசும் காலம் இது. யாழ்ப்பாணத்தை நோக்கி தெற்கில் இருந்து வடக்காக காற்று வீசும் இந்தக் காலத்திலேதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வர்ண வர்ணமாக வித விதமான வகையில் பல பட்டங்களை கட்டி வானில் பறக்க விட்டு மகிழ்வார்கள். அதேபோல் பண்டைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஆடி மாதத்தில் தான் பெரும்பாலும் கார்ணிவல்கள், வானவேடிக்கை விழாக்கள், களியாட்ட விழாக்கள் எல்லாம் நடந்ததாக பல மூதாதையர்களின் கதைவழியாக நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அடுத்ததாக 12 மாதங்களைக் கொண்ட ஒரு ஆண்டில் முதல்பாக அரையாண்டு முடிவடைந்து அடுத்த பாகம் தொடங்கும் நாள் ஆடி முதலாம் நாள் என்றபடியால் இந்த நாளையும் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அதாவது தைமாதம் முதலாம் நாள் எவ்வாறு தைப்பொங்கல் எனக் கொண்டாடி பொங்கல் செய்து படைத்துக் கொண்டாடுகின்றார்களோ அதேபோல் ஆடி மாதம் முதலாம் நாளினையும் கொண்டாட அவர்கள் தலைப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இது இவ்வாறிருக்க முதல் பாதி ஆண்டு தேவர்களுக்குரியதென்றும் அடுத்த பாதி ஆண்டு பிதிர்களுக்கு உரியதென்றும் கூறப்படும் ஒரு ஐதீகமும் இருப்பதன் காரணத்தால் இனிப்பான கூழும் கொழுக்கட்டையினையும் சமைத்து பிதிர்களுக்கு படைத்தனர் எனவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது. எது எப்படியோ யாழ்ப்பாணத்தில் ஆடி மாதம் என்பது ஒரு மகிழ்ச்சியான மாதமாகவே இருக்கும்.ஏனெனில் காற்றில் பட்டங்கள் விடுவதும் யாழ்ப்பாணத்தில் மக்கள் விழா எனக் கருதக்கூடிய நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவம் இந்த மாதம் முழுமையாக இடம்பெறுவதாலும் இதன் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளி இடங்களுக்குச் சென்றவர்கள் அனைவரும் ஒன்று கூடும் காலமாக இருப்பதால் நவீன காலத்தில்கூட இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு மகிழ்வான காலரமாகவே தெரிகின்றது. ஒருகாலத்தில் ஆடிப்பிறப்பு எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதும் அதன் முதல் நாளே நாளைய ஆடிப்பிறப்பு பற்றி சிறுவர்கள் கொள்ளும் சந்தோசத்தையும் மையமாக வைத்து நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாடியுள்ள பாடலில் இருந்து தெரியவருகின்றது. இதிலிருந்து ஒரு காலத்தில் ஆடிப்பிறப்புக்கு யாழ்ப்பாணத்தில் விடுமுறை விடப்பட்டுள்ள வரலாறு புலப்படுகின்றது சரி அந்தப் பாடலை இந்த நாளில் மீட்டிப் பார்ப்பது சிறப்பாக இருக்கும்.. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப் பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குத்தி செந்நெல் பச்சை அரிசி இடித்து தெள்ளி வாசப்பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப்பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரின் சக்கரையுங் கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே வண்ணப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததை கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே! என அந்தப் பாடல் வரிகள் அமைந்துள்ளன. இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஆடிப்பிறப்புக்கு கூழ் எப்படி ஆக்குவது என்ற குறிப்பினையும் புலவர் பாடலிலேயே தெரிவித்துள்ளதுதான். எனவே யாழ்ப்பாண மக்கள் ஆடிப்பிறப்புக்கு வழங்கியிருந்த முக்கியத்துவம் இந்தப் பாடலில் இருந்து புலனாகியிருக்கும். இன்று கடந்தகால மூன்று தசாப்த யுத்தத்தின் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் கூடிழந்த குருவிகளாக சிதறிப்போய் வெவ்வேறு நாடுகளின் கூடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள புலம்பெயர் ஈழத் தமிழ் மக்கள் தாம் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கும் தமது கலாசாரங்களை மறக்காமல் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தைப் பேணி வளர்ப்பதற்கு உலகத் தமிழினமே எழுந்து நின்று ஒரு சபாஷ் போடலாம்

Sri Lanka Latest News Updates in Tamil Language: News, Politics, Video, Finance, Business, Sports, Horoscope .

29/05/2016
29/05/2016
29/05/2016

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.

http://mobil.fm1today.ch/ #!mobilenews/detail/215420?forcemobile=1
28/05/2016

http://mobil.fm1today.ch/ #!mobilenews/detail/215420?forcemobile=1

Das hinduistische Tempelfest in St.Margrethen dauert jeweils zehn Tage. Heute Samstag erreicht es den Höhepunkt mit dem grossen Wagenfest. Wir haben für die die schönsten Bilder in der Galerie.

Adresse

Industriestraße 27
Sankt Margrethen
9430

Öffnungszeiten

Montag 18:00 - 20:00
Dienstag 18:00 - 20:00
Mittwoch 18:00 - 20:00
Donnerstag 18:00 - 20:00
Freitag 14:00 - 22:00
Samstag 18:00 - 20:00
Sonntag 18:00 - 20:00

Telefon

0041717400816

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Murugan swiss erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an Murugan swiss senden:

Teilen