Jeh Mission

Jeh Mission Evangelical Ministries

24/12/2017
13/02/2017

அன்புடன் வணக்கம் சகோதரி Brintha Suthan
உங்களின் கேள்விகளுக்கு பதில் தர கடமைப்பட்டுள்ளேன்.
நீதிமொழிகள் 13,8. மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும். முதலாவது எந்த கோவிலிலும் சேர்க்கப்படும் நிதியைக்கொண்டு வறுமை, பிணி, யுத்தவலயம் , பேரிடர்கள் போன்றவற்றில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உண்மையில் உதவ வேண்டும். அவர்கள் பிராணனை மீட்க முன்வரவேண்டும் என பைபிளில் காணலாம்.
நான் 2004 முதல் 2010 வரை நீங்கள் குறிப்பிடும் கர்த்தருடைய திருச்சபையில் விசுவாசியாக இருந்துள்ளேன்.நான் என்னால் முடிந்தவரை மாதாந்தம் 100 சுவிஸ் பிராங்கிற்கு குறையாமல் கொடுத்து வந்துள்ளேன்.ஆயினும் நான் கணக்கு கேட்டதில்லை.காரணம் நான் கர்த்தராகிய இயேசுவுக்கே கொடுத்தேன்.அவர்கள் என்ன செய்திருந்தாலும் கேட்கப்போவதில்லை.
ஆயினும் பலர் தங்கள் வருமானத்தில் பத்து வீதம் கொடுப்பது நன்கு தெரியும்.
PMC மட்டுமல்ல பல தேவாலயங்கள் ( புலம்பெயர்ந்தவர்கள் ) யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமது பெயரை வடகிழக்கில் நிலைநிறுத்த ஆலய கட்டிடங்களை நிர்மானித்தனரே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள் என்பது என்னவோ வெறும் கண்துடைப்பு மட்டும் தான்.
மேலும், ஆரம்பத்தில் மாதாந்தம் ஊழியர்களின் கையிலேயே கொடுத்து ஜெபிப்பது வழக்கம். பின்னர் ஆலய வங்கிகணக்கிற்கு மாதாந்தம் பணம் செலுத்துவோம்.
எவரையும் ஆலயத்தை விட்டு வெளியேற்றவில்லை. அனைவருமே தாமாகவே வெளியேறினர்.

நல்லூர் திருவிழாவில் சேர்ந்த பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைந்ததா? நிச்சயமாக இல்லையே. அதை குறித்து நீங்கள் விசாரிக்கலாமே. பரவாயில்லை.அதை பின்னர் தவறாமல் செய்யுங்கள். புலம்பெயர் இந்து ஆலய கணக்கையும் நமக்கு காட்டுங்கள்.
சரி, இவை நிற்க, உண்மையில் பைபிளின்படி, சேர்க்கப்படும் நிதி இந்த வசனங்களின்படி செலவு செய்யப்பட வேண்டும்.
ஏசாயா 58 அதிகாரம்
1. சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.

2. தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.

3. நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.

4. இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்

5. மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?

6. அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,

7. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

8. அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

9. அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

10. பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.

11. கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

12. உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
இவை பழைய ஏற்பாடு. எனினும் புதிய ஏற்பாட்டிலும் தெளிவாக எழுத்தப்பட்டுள்ளதே.

அப்போஸ்தலர் 6 அதிகாரம்
1. அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

2. அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.

3. ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.

4. நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.

5. இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,

6. அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.

7. தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
உண்மையில் மற்றவர்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் என்பவற்றை பாதுகாக்க, மீட்க, இரட்சிக்க ஆலய நிதி செலவு செய்யப்பட வேண்டும்.
I தீமோத்தேயு 5:8 ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்து தூக்கிவிடாமல் இஸ்ரேல் நாட்டுக்காக உபவாசித்து ஜெபிக்கும் தமிழர்களை என்ன சொல்லி நோவது.
இறுதியாக, தேவ ஊழியர்களை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதென்பது கவலை தருகிறது. சரியான நிர்வாக கட்டமைப்பு எப்போதும் பாதுகாப்பானதே. உயிரிற்கு போராடும் மக்களுக்கு உதவிசெய்வதுடன் கட்டட நிர்மாணங்களையும் செய்வதே சாலப் பொருத்தமானது.
நன்றி
அன்புடன் இயேசுவின் பணியில்
சகோ. எரிக் யேசுதாசன்

John 14:27Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your hearts b...
24/12/2016

John 14:27
Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your hearts be troubled and do not be afraid. - (JESUS).

23/09/2016

Message By: Bro.Eric S.J

23/09/2016

Message By: Bro.Eric Jesuthasan JEH MISSION

03/07/2016

Adresse

Mooshüslistrasse 32 Emmen
Emmen
6032

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Jeh Mission erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an Jeh Mission senden:

Teilen