Saivam

Saivam Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Saivam, Hinduistischer Tempel, Bern.

அனுமனின் மார்கழி ! ஆன்மீக அன்பர்களே, உங்களுக்கான விளக்கமான பதிவு இது - Margazhi | Hanuman
18/12/2019

அனுமனின் மார்கழி ! ஆன்மீக அன்பர்களே, உங்களுக்கான விளக்கமான பதிவு இது - Margazhi | Hanuman

அனுமனின் மார்கழி ! ஆன்மீக அன்பர்களே, உங்களுக்கான விளக்கமான பதிவு இது... Facebook - https://www.facebook...

Ayyappan Swamy - ஐயப்பன் கட்டளை பாகம் ( 01 )
06/12/2019

Ayyappan Swamy - ஐயப்பன் கட்டளை பாகம் ( 01 )

ஐயப்பன் கட்டளை பாகம் 01 Facebook : https://www.facebook.com/Hin...

நிழலாக வருவேன் - Anjaneya Swamy | Hinduism
01/12/2019

நிழலாக வருவேன் - Anjaneya Swamy | Hinduism

Singers : Unni Krishnan Music : D.V.Ramani பாடல் த...

London Creators Pvt LtdList of ServicesWebsite Designing & Development Domain RegistrationBanner and Poster DesigningSof...
05/01/2018

London Creators Pvt Ltd

List of Services

Website Designing & Development
Domain Registration
Banner and Poster Designing
Software Development and Installation
Business Card Design and Print
Email Marketing
3D Architect Design
We Design the Site in Tamil also

Viber and Whatsapp
Special Offer Available Call Me
+44 755 222 42 06
+33 075 808 70 01

Customer Care Tamil and English Language

England Contact Us : +44 755 222 42 06 , +44 785 988 92 60
France Contact Us : +33 075 808 70 01 , +33 434 295 559
Website : www.londoncreator.com ,
Email : [email protected]

சிவன் பாடல்கள் – Lord Shiva Songs
14/09/2017

சிவன் பாடல்கள் – Lord Shiva Songs

Home Devotional Songs சிவன் பாடல்கள் – Lord Shiva Songs சிவன் பாடல்கள் – Lord Shiva Songs September 14, 2017 1 0 Share on Facebook Tweet on Twitter RELATED ARTICLESMORE FROM AUTHOR கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | Kanda Sashti Kavacham சிறந்த விநாயகர் பாடல்கள் தொகுப்பு | Vinayaka Chaturti மங்காலா…

02/09/2017

மக்களுக்காக கடலை உள்வாங்கும் ...அதிசய சிவனின் சக்தி....

சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி என்று சிவனை விமர்சித்து இன்று பலர் நம்மையும் குழப்பி,மற்றவர்களையும் குழப்பி வருகிறார்கள். ...
18/08/2017

சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி என்று சிவனை விமர்சித்து இன்று பலர் நம்மையும் குழப்பி,

மற்றவர்களையும் குழப்பி வருகிறார்கள்.

இதன் உண்மை சூட்சுமம் என்ன? இதுபற்றிய ஒரு பார்வை.

சுடுகாடு என்பது உயிர் எனும் *மெய் இருந்த கூடாகிய நம் உடலை விட்டு* பிரிந்த பின் கூடு ஆகிய உடலை பயனற்ற கூட்டை நெருப்பு கொண்டு எரிக்கும் இடம் சுடுகாடு.

அதாவது, உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம்,

உயிரற்ற உடல் பிணம் (சவம்).

60 – 70 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் நம் ஆன்மா பரிதவிக்கும்.

*ஒரு ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு நாம் பிரியும்போது ஏற்படும் உணர்வு போல*.... 60 – 70 ஆண்டு காலம் இருந்த கூடு தமக்கு என்றும் *நிரந்தரம் என நினைத்து பேணி காத்த* உறவுகள் அனைவரும் நம் உடலை எரித்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விடும்போது இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்ற மெய்யை உணர்ந்து நமது ஆன்மா பரிதவிக்கும் போது,

மாபெரும் கருணை யாளன் எம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அந்நேரத்தில் நமக்கு அபயம் அளிக்கிறார்,

இதை உணர்த்தவே அப்பர் பெருமான் திருஅங்கமாலை தேவாரத்தில்....

*உற்றார் ஆருளரோ*
*உயிர் கொண்டு* *போகும்பொழுது*
*குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ..?*

என்று மிக தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்பட்டு நம் ஆன்மா பரிதவிக்கும் நேரத்தில்,

சிவன் மட்டுமே நமக்கு கருணையுடன் அடைக்கலம் தந்து நமக்கு அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று சிவனை கூறுவது எவ்வளவு சிறுமை என்று உணர்ந்து பாருங்கள்.

சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை,

அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன்,

நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி,

சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு காக்கிறான் என்பதே உண்மை.

இதை உணராதவர்கள் தான் வீண்பேச்சு பேசுகிறார்கள்.

மாபெரும் கருணையாளன் ஈசன்
கருணையை உணராமல் அல்லது *மெய் உணராமல் இருப்பவர்கள்,*

மெய் உணர வேண்டி ஈசன் திருவருளால் அடியார்கள் பாதம் பணிகிறேன்

நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல..!*நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்து...
11/08/2017

நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல..!*

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம்.

ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் "ரகசியம்"அல்ல என்பதும், அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும்.

ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

*யார் அந்த ஒன்பது பேர்?*

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் (வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன், எமன், காலம் (நேரம்).
பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலே, அதனுள் எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்- என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.

*எமன் என்பவன் யார்?* அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர். இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது.

அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த = ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் 'சித்திர' 'குப்த' என்றனர்.

ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது.அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுப்தன் அல்லது எமனுக்குத் தெரியும்.

சித்திரகுபதன் அல்லது எமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்களையெல்லாம் கூட்டிக் கழித்து, பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.
இந்துக்களுத்குத்தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது.

நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.

நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்னி சாட்சியாக கோவலன் - கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும்.

காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.
விண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைப்புறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்; சி.சி. டிவி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து தப்பிக்க வழி உண்டு. இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!

ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.

*ஒன்றே செய்க; அதுவும் நன்றே செய்க; அதையும் இன்றே செய்க.*

- *சித்தர்களின் குரல் shiva shangar*

தமிழ்கலாச்சாரத்தை சீரளிக்கும் எம்மவர்மத்தியில் தேசம்கடந்து நம் யாழ் நல்லூரில்!
08/08/2017

தமிழ்கலாச்சாரத்தை சீரளிக்கும் எம்மவர்மத்தியில் தேசம்கடந்து நம் யாழ் நல்லூரில்!

Adresse

Bern

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Saivam erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an Saivam senden:

Teilen