14/12/2024
உ
சிவமயம்
விநாயகர்துணை!
�
ஸ்ரீ விநாயகர் ஆலயம் லங்னவ்
Schärischachen 809b
3552 Bärau / Langnau i.E.
இந்த மடல் மூலம் மேற்படி ஆலயத்தின் தற்போதைய நிலையை அனைவருக்கும் விளக்கிக் கூற எண்ணுகின்றேன்.
சென்ற கூட்டத்தில் திரு கோபால்ராசனின் ஆலோசனையின் படி என்னை வெளியேற்றி அறிக்கை எழுதினார்கள். இது முறையற்ற செயல் என்று நீதிமன்றம் ஆலோசனை கூறியதால் இம்முறை கூட்டத்தில் என்னை வெளியேற்றுவதற்கு நிகழ்ச்சி நிரலில் முதலாவதாகச் சேர்த்து அறிவித்துள்ளனர்.
நான் வழக்கு தாக்கல் செய்ததைக் காரணம் காட்டி கடந்த கால நிர்வாகமும், தற்போதைய நிர்வாகமும் பழி வாங்கும் எண்ணத்துடன் என்னை வெளியேற்ற முடிவு எடுத்துச் செயற்படுகின்றன. இவர்களிடம் நீதி கிடைக்க இல்லை என்பதாலேயே நீதி மன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டது.
இவைகளுக்கு முக்கிய காரணம் கடந்த நிர்வாகத்தின் பிழையான செயற்பாடுகளையும், பூசையில் நடந்த தவறான விடயங்களையும், நடவடிக்கைகளையும், மோசடிகளையும், தன்னிச்சையான செயற்பாடுகளையும், வெளிக் கொண்டு வந்ததும், கணக்கு பிழைகளைச் சுட்டிக் காட்டியதும், வீண் செலவுகளைத் கண்டு பிடித்ததும், கேள்வி கேட்டதும், ஆலயத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களைக் கூறியதும், திரு திருஜன் நிர்வாகத்தில் இருக்கத் தகுதியற்றவர் என்று கூறியதும் நிர்வாகத்தில் உள்வர்களுக்கு பிடிக்வில்லை. இதுவே நான் செய்த தவறாகும். இதற்கு பழிவாங்குவதே இன்றைய திட்டம் ஆகும். இதன் மூலம் இன்னும் உங்கள் பணம் வீண் விரயம் ஆகின்றது
இவைகளுக்காகவே இந்த நிர்வாகத்தினர் எங்கள் குடும்பத்தினரை இழிவு படுத்தியதும், தேர்த் திருவிழாவை எங்களிடம் இருந்து கைப்பற்றியதும் திட்டமிடல் மூலம் சதியாகவே
நடை பெற்றவையாகும்.
இவர்கள் வெளியிட்ட கணக்கறிக்கையில் மோசடிகள் இருப்பதை அங்கத்தவர்களாகிய நீங்கள் அறிவீர்களா? கூட்டத்திற்கு வருகை தரும் அங்கத்தவர்களில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டால் சரியென முடிவு எடுக்கின்றார்கள். இக் கணக்குகளை எந்தக் கணக்காளாராவது சரியான முறையில் பக்கம் பக்கமாகப் பார்த்து உள்ளீர்களா? அப்படிப் பார்த்தால் இவைகளில் உள்ள தவறுகள் வெளியே வரும்.
இந்த நிர்வாகத்தினர் தன்னிச்சையாகச் செயற்பட்டு இத்தனை வருடங்களீக இயங்கும் ஆலயத்தை CHF. 200’000.- இரண்டு இலட்சம் சுவிஸ் பிராங்கிற்கு மேல் செலவு செய்து திருத்திக் கும்பாபிசேகம் செய்த காரணம் என்னவென யாராவது அங்கத்தவர்கள் கேட்பீர்களா?
நீதிமன்ற ஆணையை ஏற்று மீண்டும் 15.12.2024 அன்று கூட்டத்தில் வெளியிட இருக்கும் புதிய கும்பாபிசேக அறிக்கையை சரியாவெனப் பார்வையிடுங்கள்.
இப்போது மீண்டும் CHF. 130’000.- ஒரு இலட்சத்திமுப்பதாயிரம் சுவிஸ் பிராங்கிற்கு மேல் கடனை ஆலயத்திற்கு கூட்டிய காரணம் என்ன? இந்தக் கடன் எடுப்பதற்கு எந்தக் கூட்டத்திலாவது அங்கத்தவர்களாகிய உங்களிடம் அனுமதி பெற்றார்களா?
இதுதான் நிர்வாகத்தின் தன்னிச்சையான செயற்பாடாகும். பணத்தைக் கொடுத்து விட்டு எது நடந்தாலும் சரியெனக் கண்ணை மூடிக் கொள்ளாதீர்கள். நியாயத்தைத் தட்டிக் கேளுங்கள். எக்காரணம் கொண்டும் அங்கத்தவர்களாகிய உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள்.
25 வருடங்களின் முன் இந்த ஆலயத்தை ஒன்றாக்க முன் நின்றவன் என்ற முறையில், ஆலயம் நல்ல முறையில் செயற்பட வேண்டும் என்பதே எனது எண்ணமுமாகும்.
அடுத்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இறுதியாக நடைபெற்ற வழக்கு வரும் மாசி மாத இறுதி வரை (Ende Februar) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறை அருளால் நிர்வாகத்தினருக்கு மனமாற்றம் வரலாம் என்ற நப்பாசையால் நிறுத்தஇ வைக்கச் சம்மதித்தேன். இந்த நிலை இப்போதும் மாறாததால் விரைவில் வழக்கு இணக்கசபை போன்ற நீதிமன்றிலிருந்து விரைவில் அடுத்த நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். இதனையும் இப்போதே அங்கத்தவர்களாகிய உங்களுக்கு அறியத் தருகின்றேன்.
அடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை மூலம் ஆலயத்திற்கு மீண்டும் வழக்கிற்கு பணம் செலவாகும்.அதாவது அங்கத்தவர்களாகிய உங்கள் பணம் வீண் விரயமாகும் என்பதையும் இப்போதே கூறி வைக்கின்றேன்.
இந்த வழக்குகள் போடப்பட்டமைக்கோ, பணச்செலவுகள் ஏற்பட்டமைக்கோ நான் காரணம் இல்லை. வழக்குகள் விரும்பிப் போடப்பட்டவையும் இல்லை. பலமுறை நாங்களே எங்களுக்குள் சமாதானமாகப் பேசி முடிவு எடுக்க முயற்சி செய்தோம். தற்போதைய நிர்வாகத்தின் ஆணவப் போக்காலும், தன்னிச்சையாகச் செயற்பட்டவர்களை பலர் பின் நின்று ஊக்குவித்ததாலும், அங்கத்தவர்கள் நீங்கள் நியாயம் கேட்க முன் வராததாலுமே இந்த நிலையும் பணச்செலவும் ஏற்படுகின்றது.
இப்படியே காலப் போக்கில் அங்கத்தவர்களை வெளியேற்றி விட்டு ஆலயத்தை ஒரு சிலர் கைப்பற்றும் எண்ணத்துடன் திட்டமிட்டே காய் நகர்த்தல் நடைபெறுகின்றது.
இன்று எனக்கு நடை பெறுவது நாளைக்கு உங்களுக்கும் நடக்கும் இது உறுதியானதும் உண்மையானதும் ஆகும்.
வரும் காலங்களிலாவது அங்கத்தவர்களாகிய நீங்கள் சிந்தித்து செயற்படுங்கள்.
ஆலய விடயமா எத்தனையோ மடல்கள் எழுதி உள்ளேன். இந்த மடல் மூலம், என்னுடன் பயணித்தவர்கள், எங்களுடன் இணைந்து தேர்த்திருவிழா செய்தவர்கள், நிர்வாகத்தில் இருந்து கொண்டு நியாயத்திற்காகக் குரல் கொடுத்தவர்கள்,எனக்கு பல வகையிலும் உதவியவர்கள், ஆலோசனை தந்த பெரியார்கள், முக்கியமாக ஆலய விதிமுறை விடயங்களுக்கு ஆலோசனையும், ஆக்கமும், ஊக்கமும் தந்த அந்தணர்கள், முகநூல், சமூக ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள், நடைபெற்ற, நடைபெறும் வழக்குகளின் வழக்கறிஞர்கள், ஏனைய ஆலய நிர்வாகிகள், அடியார்கள், விநாயகர் அடியார்கள், மற்றும் லங்னவ் விநாயகர் ஆலய அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது அன்பையும், நன்றியையும் அனைவர் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேற்படி விடயங்கள் தொடர்பாக விளக்கம் தேவையெனில் தொடர்பு கொள்ளுங்கள்.
வருங்காலங்களிலாவது ஆலய விடயங்களில் அங்கத்தவர்களாகிய நீங்கள் அனைவரும் கூட்டங்களில் பங்கேற்று முடிவு எடுக்க வேண்டும் இதுவே எனது வேண்டுகோளாகும்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
விநாயகரே துணை🙏
நன்றி வணக்கம்!
இப்படிக்கு
ஆலய அங்கத்தவர்
தில்லையம்பலம் தர்மகுலசிங்கம்
12.12.2024
இணைப்பு
பிரதிகள்:
பொதுக்கூட்ட அழைப்பிதழ்
Protokoll 30.10.2024