Tamil Catholic Media

Tamil Catholic Media கத்தோலிக்க நிகழ்வுகளை மக்களின் பார்வைக்கு வெளிக்கொண்டுவருதல்.

 #மன்னார்  #மறைமாவட்டத்தில்  #பணியாளர்கள்  #குறைந்து  #செல்லுகின்றது.  #இளைஞர்  #யுவதிகள்  #அழைப்பின்  #குரலுக்கு  #செவி...
18/09/2022

#மன்னார் #மறைமாவட்டத்தில் #பணியாளர்கள் #குறைந்து #செல்லுகின்றது. #இளைஞர் #யுவதிகள் #அழைப்பின் #குரலுக்கு #செவிசாயிக்க #வேண்டும்.

ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை

மன்னார் மறைமாவட்டத்தில் பணி வாழ்வுக்கான தேவ அழைத்தல்கள் குறைந்து செல்வதால் இளைஞர் யுவதிகள் உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் பெறுகின்ற உங்கள் மத்தியில் இதற்கான அழைப்பின் குரல் கேட்கும்போது அதற்கு செவிமடுக்க வேண்டும் என இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

பேசாலை பங்காகிய புனித வெற்றிநாயகி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (18.09.2022) பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் அழைப்பை ஏற்று 71 இளைஞர் யுவதிகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையினால் உறுதிபூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கும் திருச்சடங்கில் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தனது மறையுரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்

பேசாலை பங்கில் இன்று (18.09.2022) இளைஞர் யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்குவதற்கு இறைவன் சித்தம் கொண்டுள்ளார்.

இறைவனின் சித்தத்தின்படி நாம் வாழந்து கொண்டு இருக்கின்றோம். அவரே நமக்கு வாழ்வை தந்து கொண்டிருக்கின்றார்.

அவரே நம்மை வாழ வைப்பதால் அவரிடமிருந்தே அழைப்புக்களையும் பொறுப்புக்களையும் நாம் பெறுகின்றோம்.

இங்கு வீற்றிருக்கும் பிள்ளைகள் கடந்த மூன்று நான்கு மாதங்களாக இந்த உறுத்pப்பூசுதல் அருட்சாதனத்தை பெறுவதற்காக தங்களை தயாரித்துள்ளனர்.

பங்கு தந்தையினர் மறையாசிரியர்கள் மற்றும் அருட்சகோதரிகளினால் இவர்கள் மறையறிவை கற்று மற்றும் பயிற்சிகளை பெற்றே இந்த அரட்சாதனத்தை பெறுவதற்காக தயார் நிலையில் இருக்கினறனர்.

ஆகவே நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் இவர்கள் தூய ஆவியின் கொடைகளை பெறுவதற்கு இறைவன் சித்தம் கொண்டமைக்காக.

நாம் திருமுழுக்கு பெற்ற காலத்திலிருந்து இறைவனின் பிள்ளைகளாக வாழந்து வருகின்றபோதும் எமது வாழ்க்கை எப்பொழுதும் புனிதமாக இருக்கின்றதா என்பது சொல்ல முடியாது.

நாம் எமது குற்றம் குறைகளினால் பாவங்கள் பல செய்து வருகின்றோம். இவற்றிலிருந்து எம்மை மீட்கவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.

ஒப்புறவு திருவருட்சாதனத்தின் மூலம் நீங்கள் மனமாற்றம் பெற்று வருவீர்கள் என இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.

ஆகவே நாம் பொறுப்புள்ள பிள்ளைகளாக வாழ வேண்டும் என இறைவன் எம்மை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.

பிள்ளைகளே அன்று நீங்கள் திருமுழுக்கு பெற்றபோது உங்கள் சார்பாக உங்கள் ஞான பெற்றோர் வாக்குறுதி வழங்கினர். இன்று நீங்கள் முழு உள்ளத்தோடு அதை புதுப்பிக்கின்றீர்கள்.

இதன் மூலம் நீங்கள் தூய ஆவியானவரில் நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றீர்கள். திருஅவையை ஏற்றுக்கொள்வதுடன் புனிதர்களின் உறவை விசுவசிப்பராகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.

இன்றைய காலக்கட்டத்திலே திருச்சபையில் அங்கம் வகித்தவர்கள் எம்மை விட்டு விலகி வேறு வழிக்குச் சென்று விட்டனர். அவர்களிடம் விசுவாசம் அற்ற நிலை காணப்பட்டமையாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவேதான் நாம் எமது நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் மூவிரு கடவுளில் நம்பிக்கை வைப்பதுபோல திருச்சபையிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
உங்கள் நாளாந்த வாழ்க்கையில் இறைவனுக்காக பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.

நாம் ஒன்றிப்பு , பங்கேற்பு , பணி என மூன்றையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

மன்னார் மறைமாவட்டத்தில் தேவ அழைத்தல்கள் குறைந்து கொண்டு போவதனால் பணி வாழ்வுக்கு எதிர்காலம் எப்படியாகுமோ என்ற ஐயப்பாடு தோன்றுகின்றது.

பணி வாழ்வுக்காக உங்களுக்கு அழைப்பு கிடைக்கும்போது பிள்ளைகளாகிய நீங்கள் செவி சாய்க்க வேண்டும்.

இதற்காக பரிசுத்த ஆவியின் கொடைகள் உங்களுக்கு நிறைவாக கிடைக்கட்டும். பல பிரச்சனைகள் மத்தியில் வாழும் நாம் அதிலிருந்து விடுபடவும் இன்றையத் திருப்பலியில் வேண்டிக் கொள்வோம் என இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

(தமிழ்க் கத்தோலிக்க ஊடக சுவிஸ் இலங்கை செய்தியாளர் #வாஸ் #கூஞ்ஞ)

அருட்சகோதரி மேரி கெலன் அவர்களின் அன்பு  தாயார் மேரி திரேசா (புஸ்பம்)  அவர்கள் 16:9:2022 மாலை இறைபதமைடைந்து விட்டார்.சின்...
16/09/2022

அருட்சகோதரி மேரி கெலன் அவர்களின் அன்பு தாயார் மேரி திரேசா (புஸ்பம்) அவர்கள் 16:9:2022 மாலை இறைபதமைடைந்து விட்டார்.

சின்னப்பண்டிவிரிச்சானை சேர்ந்த அருட்சகோதரி மேரி கெலன் அவர்களின் அன்பு தாயார் மேரி திரேசா (புஸ்பம்) அவர்கள் 16.9.2022 மாலை இறைபதமைடைந்து விட்டார் என்பதை அறியத்தருகின்றோம்.

அருட்சகோதரியின் அன்பு தாயாரின் பிரிவால் துயர் கொள்ளும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அருட்சகோதரி அவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

அத்தோடு அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை மன்றாடுவோம்.

 #இலங்கையின்  #முதலாவது  #தமிழ்க்  #கத்தோலிக்க  #ஆயரான   #எமிலியானுஸ்பிள்ளை  #ஆண்டகையின்  #உருவச்சிலை  #திறந்து  #வைப்பு...
12/09/2022

#இலங்கையின் #முதலாவது #தமிழ்க் #கத்தோலிக்க #ஆயரான #எமிலியானுஸ்பிள்ளை #ஆண்டகையின் #உருவச்சிலை #திறந்து #வைப்பு.

யாழ் மறைமாவட்டத்தின் முதலாவது சுதேச ஆயராக பணியாற்றிய ஆயர் எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை யாழ் புனித மரியன்னை பேராலய வளாகத்தில் நடை பெற்றது.

யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து சிறப்பித்து ஆயர் அவர்களின் உருவச்சிலையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.

யாழ் மறைமாவட்டத்தின் மூத்தகுரு அருட்திரு இம்மானுவேல் அவர்கள் ஆயர் அவர்களின் விபரங்கள் அடங்கிய நினைவுக்கல்லை திறந்து வைத்தார்.

ஆயர் எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் மறைவின் 50வது ஆண்டு நிறைவில் முன்னெடுக்கப்பட்ட இந் நிகழ்வில் குருக்கள் துறவிகள் இறைமக்களெனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஆயர் எமிலியானுஸ் பிள்ளை ஆண்டகை அவர்கள் தமது பணிக்காலத்தில் யாழ். மறைமாவட்டத்தில் அளப்பரிய பணிகள் ஆற்றியவர் என்பதுடன் இலங்கையின் முதலாவது தமிழ் கத்தோலிக்க ஆயர் இவரே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 #வங்காலைப்பாடு   #ஆரோக்கிய  #அன்னை  #ஆலய  #திருவிழா  #திருப்பலி 2022வங்காலைப்பாடு புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா திர...
12/09/2022

#வங்காலைப்பாடு #ஆரோக்கிய #அன்னை #ஆலய #திருவிழா #திருப்பலி 2022

வங்காலைப்பாடு புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா திருப்பலி 2022 செப்டம்பர் 12 அன்று காலை 6.30 மணிக்கு அருட்பணி அன்ரனிற்ரோ அருள்ராஜ் குரூஸ் அடிகளாரின் தலைமையில் வங்காலை பங்குத் தந்தை அருட்பணி ஜெயபாலன் அடிகளார், உதவி பங்குத் தந்தை அருட்பணி பிரசாந்தன் அடிகளார் மற்றும் அருட்பணி டிக்சன் அடிகளார் ஆகியோரினால் கூட்டுத் திருப்பலியாக நிகழ்த்தப்பட்டது. திருப்பலி முடிவில் அன்னையின் திரிச்சுரூபம் வங்காலைப்பாட்டு கிராமத்தின் ஊடாக எடுத்து செல்லப்பட்டு கடற் கரை வழியாக மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்து இறுதியில் திரிச்சுரூப ஆசீர் இடம்பெற்றது.

மேலும் இதற்கு முன்னைய நாள் 11 ந் திகதி மாலை 5.30 மணிக்கு திருப்பலியும் வேஸ்பர் நற்கருணை மாலை ஆராதனையும் நடைபெற்றது. இதனை சிறிய குருமட துணை அதிபர் அருட்பணி
டிக்சன் அடிகளார் நிகழ்த்தி வைத்தார்.

இவ்வழிபாடுகள் அனைத்தையும் வங்காலை பங்குத் தந்தையும் உதவி பங்குத் தந்தையும் முன்னின்று ஒழுங்குபடுத்தி நடாத்தி வைத்தமை குறிப்பிடத் தக்கது.

வங்காலைப்பாட்டு மக்களின் கடின உழைப்பின் மத்தியில் இத்திருவிழா மிகச் சிறப்பாக இனிதே நடந்தேறியது.

மறைக்கல்வி வாரம் ஆரம்பம் பேசாலையில்.நடப்பு வருடமாகிய 2022 ஆண்டுக்கான மறைக்கல்வி வாரம் மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புன...
12/09/2022

மறைக்கல்வி வாரம் ஆரம்பம் பேசாலையில்.

நடப்பு வருடமாகிய 2022 ஆண்டுக்கான மறைக்கல்வி வாரம் மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயப் பங்கில் ஞாயிற்றுக்கிழமை (11.09.2022) ஆரம்பமாகி 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற இருக்கின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (11) காலை 7.30 மணியளவில் மறைவாழ்வு கொடியேற்றப்பட்டு மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனரின் கூட்டுத்திருப்பலியுடன் தொடக்கி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இவ் மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் மறைவாழ்வு பணியாளர்களை மத்தேயு , மார்க் , லூக்கா மற்றும் யோவான் என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கிடையே பேச்சு . கட்டுரை . கவிதை , பைபிள் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் , கத்தோலிக்க பாட்டுக்குப் பாட்டு மற்றும் கருத்தமர்வுகள் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 #மட்டக்களப்பு  #கல்லடி கடற்கரையில் வீற்றிருந்து அற்புதம் பொழியும் அன்னை  #வேளாங்கண்ணி  #ஆலய வருடாந்த பெருவிழா _ 2022மட்...
12/09/2022

#மட்டக்களப்பு #கல்லடி கடற்கரையில் வீற்றிருந்து அற்புதம் பொழியும் அன்னை #வேளாங்கண்ணி #ஆலய வருடாந்த பெருவிழா _ 2022

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வீற்றிருந்து அற்புதம் பொழியும் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த பெருவிழா திருப்பலியானது 11.09.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக் கொடுக்கப்படட்டது.

கடந்த வியாழக்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நேற்றைய தினம் திருச்சுருப பவணி இடம்பெற்று கூட்டுதிருவிழா திருப்பலியுடன் நிறைவு பெற்றது.

2022ஆம் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்ற உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை பங்கு சமூகம் தெரிவித்து நிற்கின்றமை குறிப்பிட தக்கது.

மணி  #விழா  #கண்ட  #ஏழு  #ஆசிரியர்களுக்கு  #கௌரவிப்பு
11/09/2022

மணி #விழா #கண்ட #ஏழு #ஆசிரியர்களுக்கு #கௌரவிப்பு

Tamil Catholic Media Switzerland//மணி விழா கண்ட ஏழு ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு.. பேசாலை 08.09.2022

 #மணி  #விழா  #கண்ட  #ஏழு  #ஆசிரியர்களுக்கு  #கௌரவிப்புபேசாலை சென்.மேரிஸ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக ஆற்றல் மிகு ஆசி...
11/09/2022

#மணி #விழா #கண்ட #ஏழு #ஆசிரியர்களுக்கு #கௌரவிப்பு

பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக ஆற்றல் மிகு ஆசிரியர்களாக இருந்து அரும்பணியாற்றி கற்பித்து தற்பொழுது ஓய்வுபெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்கள் திருமதிகள் மேரி வசந்தி மருசலின் குரூஸ் , ஜேன் காமலிற்றா லெம்பேட் . நாகராசா நிர்மலா லுமினா . ஜாக்குலீன் (அமிற்றா) கொன்சால் வாஸ் கூஞ்ஞ , அமலவதி லீனஸ் கூஞ்ஞ . பிறிசில்லா செல்வராணி ரெக்ஸ் பீரிஸ் . அனா அருந்ததி தேவகுமார் ஆகியோரின் பெறுமதி மிக்க சேவையைப் பாராட்டி பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் இவ் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் யாவரும் இணைந்து சேவைநலன் பாராட்டு விழாவை நடாத்தினர்.

வியாழக்கிழமை (08.09.2022) காலை 10 மணியளவில் சென்.மேரிஸ் வித்தியாலயத்தின் சிசிலியா மண்டபத்தில் இவ் விழா இடம்பெற்றது.

இதன்போது இவ் விழாவில் கௌரவிக்கப்பட்ட ஆசிரியை திருமதி மேரி வசந்தி மருசலின் குரூஸ் அவர்களினால் ஆரம்பக்கல்வி மாணவர்களுக்காக ஆக்கப்பட்ட 'இசையால் இசைவோம்' என்னும் நூல் மற்றும் இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றது

(தமிழ்க் கத்தோலிக்க ஊடக சுவிஸ் இலங்கை செய்தியாளர் #திரு. #வாஸ் #கூஞ்ஞ)

08/09/2022

யாழ் நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய பெருவிழா திருப்பலி 08.09.2022

08/09/2022

யாழ் நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய பெருவிழா திருப்பலி பகுதி 2

 #சென். #மேரிஸ்  #வித்தியாலயத்தில்  #மணி  #விழா  #காணும்  #ஏழு  #மங்கையர்  #ஆசிரியர்களுக்கு 08.09.2022  #கௌரவிப்பு  #விழ...
07/09/2022

#சென். #மேரிஸ் #வித்தியாலயத்தில் #மணி #விழா #காணும் #ஏழு #மங்கையர் #ஆசிரியர்களுக்கு 08.09.2022 #கௌரவிப்பு #விழாவும் #நூல் #வெளியீடும்.

மன்னார் கல்வி வலயத்திலுள்ள பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலயத்தில் கற்பித்த ஏழு ஆசிரியர் மங்கையருக்கு மணி விழாவும் அத்துடன் நூல் வெளியீடும் இடம் பெறுகின்றது.

பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக ஆற்றல் மிகு ஆசிரியர்களாக இருந்து அரும்பணியாற்றி கற்பித்து தற்பொழுது ஓய்வுபெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்கள் திருமதிகள் மேரி வசந்தி மருசலின் குரூஸ் , ஜேன் காமலிற்றா லெம்பேட் . நாகராசா நிர்மலா லுமினா . ஜாக்குலீன் (அமிற்றா) கொன்சால் வாஸ் கூஞ்ஞ , அமலவதி ஜெயசீலி லீனஸ் கூஞ்ஞ . பிறிசில்லா செல்வராணி ரெக்ஸ் பீரிஸ் . அனற் அருந்ததி தேவகுமார் ஆகியோரின் பெறுமதி மிக்க சேவையைப் பாராட்டியே பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் இவ் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் யாவரும் இணைந்து இவ் சேவைநலன் பாராட்டு விழாவை நடாத்துகின்றனர்.

வியாழக்கிழமை (08.09.2022) காலை 10 மணியளவில் சென்.மேரிஸ் வித்தியாலயத்தின் சிசிலியா மண்டபத்தில் இவ் விழா இடம்பெறுகின்றது.

இத்துடன் இவ் விழாவில் கௌரவிக்கப்படும் ஆசிரியை திருமதி மேரி வசந்தி மருசலின் குரூஸ் அவர்களினால் ஆரம்பக்கல்வி மாணவர்களுக்காக ஆக்கப்பட்ட 'இசையால் இசைவோம்' என்னும் நூல் மற்றும் இறுவட்டு வெளியீடும் இங்கு இடம்பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(தமிழ்க் கத்தோலிக்க ஊடகம் சுவிஸ் இலங்கை செய்தியாளர் வாஸ் கூஞ்ஞ)

 #சந்தோஷபுரம்  #பங்கின்  #அன்னை  #வேளாங்கன்னி  #ஆலய  #வருடாந்த  #ஆண்டு  #பெருவிழாஇந்தியா தமிழ் நாட்டின் செங்கல்பட்டு மறை...
05/09/2022

#சந்தோஷபுரம் #பங்கின் #அன்னை #வேளாங்கன்னி #ஆலய #வருடாந்த #ஆண்டு #பெருவிழா

இந்தியா தமிழ் நாட்டின் செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சந்தோஷபுரம் பங்கின் அன்னை வேளாங்கன்னி ஆலய வருடாந்த ஆண்டு பெருவிழா சனிக்கிழமை (03.09.2022) சந்தோஷபுரம் ஆலய பங்குத் தந்தை அருட்பணி அ.எட்வின் லாரன்ஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 01.09.2022 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ் விழா வெள்ளிக்கிழமை (02.09.2022) நற்கருணை விழாவாகவும் இதைத் தொடர்ந்து 03.09.2022 சனிக்கிழமை பெருவிழா கூட்டுத் திருப்பலியும் வேளாங்கன்னி அன்னையின் திருச்சுரூப பவனியும் இடம்பெற்றது.

இவ் விழாவின்போது 'மரியாளின் ஆன்மீக வாழ்வு' . 'புதிய உடன்படிக்கை பேழை' , 'மரியாளின் மனித நேயம்' என்பன மையக்கருத்தாகக் கொண்டு சிந்திக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(தமிழ்க் கத்தோலிக்க ஊடகம் சுவிஸ் இலங்கை செய்தியாளர் #வாஸ் #கூஞ்ஞ)

Adresse

Aarau
5034

Telefon

+41763314497

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamil Catholic Media erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen