06/25/2026
நிலையான நகரத்தை நோக்கி.... | TOWARDS CONTINUING CITY.... | INNERMAN DEVOTIONS
எபிரெயர் 13:14 - நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
இந்தப் பூமியிலே, தங்களை பக்தர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள், புனித ஸ்தலங்களை நோக்கி யாத்திரை செய்யும்போது, பொதுவாக, அவர்களுடைய நோக்கம் ஒன்றாகவே இருக்கின்றது. அவர்கள் பல்லாயிரம் மைல்களை கடந்து செல்கின்றார்கள். போகும் வழிகளிலே, தங்குமிடங்களிலே இரவிலே தூங்கிவிட்டு, அதிகாலையிலே தங்கள் யாத்திரைரைய மறுபடியும் ஆரம்பிக்கின்றார்கள். போகும் வழியிலோ அல்லது தங்கும் இடங்க ளிலே நடைபெறும் அசௌகரியங்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தங்களைப் பார்த்து நகைக்கின்றவர்களை பற்றி கவனம் செலுத்துவதில்லை. அநாவசியமற்ற பேச்சு வார்த்தைகளிலோ, வாக்குவாதங்களிலோ நேரயத்தை விரயப்படுத்துவ தில்லை. வேறு எந்த காரியங்களும் தங்கள்; கவனத்தை திருப்புவதற்கு இடங் கொடுப்பதில்லை. எந்த வேளையிலும் தங்கள் இலக்கை குறித்த கவனமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். காரியம் அப்ப டியாக இருந்தால், நித்தியமான, அழிவில்லாத, ராஜ்யத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாம், எவ்வளவு ஜாக்கிரதையுள்ள வர்களாக இருக்க வேண்டும். சில சமயங்களிலே, பெரிதான தியாகங்களை தங்கள் வாழ்வில் செய்து வரும் விசுவாசிகள், அற்பமான சின்ன காரியத்திற்டகாக தங்கள் பிரதானமான நோக்கத்தை மறந்து போய்விடுகின்றார்கள். ஒருவன் தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, சூதாட்டத்திலே பந்தயம் கட்டி, முழுவதையும் இழந்து போவதைப் போல, தங்கள் கடும் பிரயாச ங்களை யாவையும் பலனற்றுப்போகும்படி செய்து விடுகின்றார்கள். இன்னும் சிலர், வரப்போகின்ற ராஜ்யத்தின் மேன்மையை உணராமல், தற்போது இருக்கும் ராஜ்யத்தின் அழிந்து போகின்ற மேன்மைகளை இறுகப் பற்றிக் கொள்கின்றார்கள். ஒரு யாத்திரியானவன், தான் இரவு தங்கும் விடுதியிலே நிரந்தரமாக தங்க முடிவெடுத்துவிட்டால், அவனுடைய மதியீனத்தைக் குறித்து என்ன கூறிக் கொள்ள முடியும்? பிரிய மான சகோதர சகோதரிகளே, விசுவாசிகளாகிய நாம் வசிக்கும் இந்த பூமியில் உண்டாகும் எந்த மேன்மையும், நான் தாபரிக்கும் நிலையான நகரத்திற்கு நிகரானதல்ல. எனவே, வரப்போகிற நிலையான நகரமாகிய பரலோகத்தை நாடித் தேட வேண்டும். பூமியிலே உங்களுக்குப் பொக்கி ஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்;. நிலையான குடிப்யிருப்பாகிய பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள் அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை.
ஜெபம்: பரலோக தேவனே, இந்த பூமி எனக்கு சொந்தமானதல்ல என் பதை ஒருபோதும் மறவாமல், என் சொந்த தேசமாகிய பரலோகத்தை நாடி, அதன் மேன்மைகளை தேட எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:21
Hebrews 13:14 - For here have we no continuing city, but we seek one to come. (KJV)
Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada
Background Music: Recorded by Grace Tabernacle apostolic church