Melmaruvathur Arulmigu Athiparasakthi Youth Wing

Melmaruvathur Arulmigu Athiparasakthi Youth Wing ||MOOLA MANTRA|| Om Sakthiye ParaaSakthiye! Om Sakthiye Adhi ParaaSakthiye! Om Sakthiye Maruvur Arasiye! Om Sakthiye Om Vinayagha! Om Sakthiye Om Kaamatchiye!

Om Sakthiye Om Bangaru Kaamaatchiye!! ************************* *www.supremesakthi.com* A CHRONOLOGICAL ACCOUNT OF ADHIPARASAKTHI MANDRAM
MELBOURNE AUSTRALIA [A.M.M.A]

During the 2005-2006 Irrumudi festival period, Arul Thiru AMMA instructed a Melbourne youth to institute a Mandram / Adhiparasakthi Worship Centre during a normal Paatha Poojai, specifically to increase the youth’s involvement in t

he pathway of spirituality. Arul Thiru AMMA’s exact words were,
"ILAINJARGALAI (AANMIGATHIL) VAZHARTHU VIDU"
- signifying the involvement of youth in spirituality is to be encouraged. INAUGURATION POOJAI

With Arul Thiru AMMA’s guidance, the Adhiparasakthi Mandram, Melbourne Australia [A.M.M.A] commenced its very first conduction of prayers on the 3rd of March, 2006 at the Chandler Secondary College hall. This date was not limited to being an auspicious one for the youth of Melbourne, but moreover signified Arul Thiru AMMA’s 66th Incarnation year of having entered our Kali Yuga, and was being celebrated by Sakthis of the Melmaruvathur Omsakthi Movement from around the globe. REGULAR POOJAS / VAZHIPAADU

Followed by our first Pooja, regular prayers were conducted one Friday a month at the Southern Community Centre in years 2006 and 2007. Soon after, Arul Thiru AMMA instructed the youth to conduct Her prayers on Sundays. From 21st of January 2008, our prayers were held on every third Sunday of the month. In September 2010, when asked if we should commence weekly poojas, Arul thiru AMMA knowing HER children's spiritual thirst kindly stated that we are doing well, and to do so by saying,
“NALLA SEYYIREENGA, SEIYINGA." With Arul Thiru AMMA’s blessings, weekly Poojas commenced from the 9th of January 2011 onwards at the Southern Community Centre. MAJOR FESTIVALS

Our first major festival celebration was Arul Thiru AMMA’s 67th Incarnation day. With the initiation and request by the youth from our mandram this festival was collaboratively celebrated with existing Mandrams in Melbourne and was held on the 3rd of March 2007 at the Southern Community Centre. The Pooja started with Vazhipaadu, Paatha Pooja, followed by Vizhaku Pooja, birthday cake cutting and Annathaanam. Following this, each festival celebrated at Melmaruvathur including Chithira Pournami, Adipooram and Navaraathiri were observed in Melbourne in accordance with Arul Thiru AMMA’s instructions for the benefit of the country and its people. On the 14th of January 2009, Arul Thiru AMMA also bestowed us with the blessings to celebrate Thai poosam Jothi celebrations in Melbourne. POURNAMI THIRU VIZHAKU POOJAI WITH CHAKKARAM

During the 2007-2008 Irumudi festival period, Arul Thiru AMMA gifted us with blessings to commence monthly Thiru Vizhaku Poojai. Arul Thiru AMMA specifically stated to draw different Chakkarams each month as seen and done in Melmaruvathur Siththar Peetam, to use only new Omsakthi Vizhaku from Siththar Peetam on the Chakkaram and for all Sakthis partaking in the Thiru Vizhaku Poojai to be wearing red cotton attire by pointing at HER own red Veshti / Dhoti and to be extremely careful at all times with fire when conducting Thiru Vizhaku Poojai. Most important and radical / revolutionary instruction by Arul Thiru AMMA was HER direction to conduct these Pournami Thiru Vizhaku Poojas on the Sunday following a full moon day should it occur on a day other than a Sunday. One can only recollect the story of Thiru Abirami Pattar in the late 18th century (In the Manthira Nool under Sakthi Vazhipaadu Verse 25 this story from yore is specified). With Arul Thiru AMMA’s guidance, our first monthly Thiru Vizhaku poojai commenced following our 2008 Chithira Pournami festival. SPIRITUAL WORKSHOPS

On the 14th of February 2008, we put together our very first quarterly workshop. The purpose of these workshops was to provide the youth, AMMA devotees and the public with more information about: Arul Thiru AMMA Vazhipaadu Procedures and Personal spiritual experiences of devotees These workshops to date have included guest speakers, spiritual videos, iinformative slide shows, interactive games and presentations by the youth. ARUL THIRU AMMA’S SPIRITUALITY ON THE WORLD WIDE WEB

On the 29th of June 2007, a Youtube channel was started to display an array of videos related to the Melmaruvathur Adhiparasakthi Spiritual movement globally. On 9th of December 2007, we embarked on taking Arul Thiru AMMA’s spiritual teachings to the social network with our Facebook Group ‘Melmaruvathur Arulmigu Athiparasakthi Youths’ and the page ‘Melmaruvathur Arulmigu Athiparasakthi Youth Wing’. This platform has allowed for Sakthis across the globe to share photos, videos related to Arul Thiru AMMA, ask and obtain information / clarifications about Omsakthi Spiritual Movement, share Arul Thiru AMMA’s Divine Oracles, publish spiritual experiences, poems, essays and artwork related to Arul Thiru AMMA and also give regular updates on significant events happening in Melmaruvathur Siththar Peetam, Sakthi peetams and innumerous Mandrams spread all over the globe. COMMUNITY SERVICES

In March 2008, we engaged in our first community service project by organising a blood drive followed by tree plantation in August 2008, second blood drive in January 2009 and ‘Clean up Australia day’ in March 2009. In May 2009 Arul Thiru AMMA instructed us to conduct social services inline with every major festival celebrated by our Mandram. With HER blessings, we have been partaking in annual blood donations, tree plantations and new projects involving increasing penguin habitats in Phillip Island. Arul Thiru AMMA’s blessings were made apparent during our recent tree plantation activity in August 2010. There was heavy rain throughout the day except during the three to four hours we were planting trees. With such a large group present 2500 plus trees were planted collectively at our site. KUDUMBA NALA VELVI / YAGNA FOR FAMILY WELFARE

On the 11th of May 2008, our mandram conducted its first Kudumba Nala Velvi / Yagna at a Mandram Sakthi's home. To date our Mandram, with Arul Thiru AMMA overseeing us, have conducted a total of 4 Kudumba Nala Velvi - 3 of them being in the year 2010.

"Don't blame me!" - A Sai Baba devotee's experience. -
19/12/2017

"Don't blame me!" - A Sai Baba devotee's experience. -

10/07/2017

#ஆன்மவளர்ச்சி

நான் பலமுறை சித்தர் பீடத்திற்கு வந்திருக்கிறேன். எல்லோரும் ஆன்மிகம், ஆன்மிக வளர்ச்சி என்று சொல்கிறார்கள். அந்த ஆன்மிக வளர்ச்சி என்ன என்பது உண்மையாகவே புரியவில்லை. சிலரிடம் கேட்டதில் அவர்களும் சரியாக விளக்கம் சொல்லவில்லை. தயவுசெய்து ஆன்மிகம், ஆன்மிக வளர்ச்சி என்றால் என்ன என்றுதான் விளக்குங்கள்.*

தன்னைத்தானே ஒருவன் புரிந்து கொள்வது; தன்னைத்தானே ஒருவன் அறிந்து கொள்வது; தன்னைத்தானே ஒருவன் உணர்ந்து கொள்வதுதான் ஆன்மிகம் என்பது அன்னையின் அருள்வாக்கு.

ஆன்மிக வளர்ச்சி என்பது மனத்தை ஒட்டிய வளர்ச்சி. அந்த வளர்ச்சி புத்தகப் படிப்பால் மட்டும் வராது.தத்துவம் படித்தால் மட்டும் வராது; சாஸ்திர ஞானத்தால் மட்டும் கிடைத்துவிடாது் மனம் தூய்மையடைந்து அகங்காரம் குறைந்து, கடவுள் இயக்குகிறான்; நாம் இயங்குகிறோம் அவ்வளவே என்று ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு உணர்ந்து வாழ்கிறாரோ அந்த அளவு அவர் ஆன்மிக வளர்ச்சி பெற்றவர் என்று கூறலாம்.

உலக நாடத்தில் நமக்கு ஒரு வேடம் கிடைத்திருக்கிறது. இந்த வேடத்திற்குத் தக்கபடி நாம் ஆடிவிட்டுப் போக வேண்டியவர்களே! இந்த நாடகத்திற்குச் சூத்திரதாரி ஒருவர் உண்டு அவர் ஆட்டுவிக்கிறபடி நாம் ஆடுகிறோம், நடப்பன எல்லாம் நன்மைக்கே; பிரபஞ்ச இயக்கமெல்லாம் ஏதோ ஒரு சட்டதிட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறது. நம் வாழ்க்கையும் அதற்குத் தக்கபடி நடக்கிறது என்றெண்ணி கிடைத்த வாழ்க்கையை ஒப்புக் கொண்டு வாழ்பவன் ஆன்மிகப் பக்குவம் பெற்றவன். வயிற்றுக்குச் சோறு! மானத்தை மறைக்கத் துணிமணி! இவை போதும் என்று மனத்தை ஆசைகளால் விரிவுபடுத்திக் கொள்ளாதவன். ஆன்ம வளர்ச்சி பெற்றவன். உண்பது நாழி! உடுப்பவை இரண்டே! என்றெண்ணி அவன் வாழ்வான். மனத்தை தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டுவந்து பழக்குவான். அவ்வப்போது மனத்தில் அழுக்கு சேராதபடியும், சேர்ந்த அழுக்குகளை வெளியேற்றிக் கொள்ளவும் வேண்டியே பக்தி, தியானம், தொண்டு ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வான். அவன் மேற்கொள்கிற ஆன்மிக சாதனைகள் யாவும் ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வன அல்ல; மனத்தூய்மைக்காகவே.

பக்தி பக்திக்காகவே! என்றெண்ணிப் பலன் கருதாமல் தன் வாழ்க்கையில் விதிக்கப்பட்ட கடமைகளைக் கடவுள் நினைப்போடு செய்து கொண்டு போகிறவன் ஆன்ம வளர்ச்சி பெற்றவனாவான்.

நன்றே வரினும், தீதே விளைகினும் யான்றிவது ஒன்றேயும் இல்லை. எல்லாம் உனக்கே அடைக்கலம் என்றெண்ணி எல்லாச் செயல்களையும் அவற்றின் பலன்களையும் கடவுளுக்கு அர்பணித்துவிட்டு மனத்தை அலட்டிக் கொள்ளாமல் வாழ்கிறானே அவன்தான் ஆன்ம முன்னேற்றம், ஆன்மவளர்ச்சி பெற்றவன். அவன் புதுக்கருமங்களைச் சேர்த்துக் கொள்வதில்லை.

பழைய கருமவினைகளைப் பக்தி, தியானம், தொண்டுகளால் கரைத்துக் கொள்வான். அனுபவித்தே தீர வேண்டிய பிராரப்த கர்மவினையை இறையருள் துணைகொண்டு வாழ்நாளின் போது அனுபவித்துக் கழித்துவிடுவான்.

இதற்கு மாறாக யார் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் ஆன்ம முன்னேற்றம் பெற்றவர்களல்லர். மரணம், பிறவி என்கிற சுழலுக்குள் சிக்கி அனுபவம் பெற்று மேலே ஏறி வரவேண்டியவர்களே! பல பிறவிகளை எடுத்து அடிபட்டு, உதைபட்டு அனுபவம் பெற வேண்டியவர்களே!

சக்திஒளி
டிசம்பர் 89

10/05/2017

Melmauvathur History is the Official YouTube channel for knowing about His Holiness Arulthiru Bangaru Adigalar and all the happenings in Melmaruvathur. You c...

28/04/2017

#சிலருக்கு_அம்மாவின்மேல்_நம்பிக்கை #இருக்கிறது_சிலருக்கு_இல்லை. #அம்மாவின்_மேல்_நம்பிக்கை_இருந்தாலும் #கஷ்டங்கள்_வரும்போது_அந்த_நம்பிக்கை #போய்விடுகின்றது_அம்மாவின்_மேல் #நம்பிக்கை_இல்லாதவர்கள்_நன்றாக #வாழ்வதைப்_பார்க்கும்_போது_இந்த #நம்பிக்கை_அவசியமா_என்று_கூட #நினைக்கத்_தோன்றுகிறது_ஏன்?*.

ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்ற பிரபஞ்ச விதிப்படி கடவுளை நம்புவதாலும், வழிபாடு செய்வதாலும் அதற்கான பலன்களும் நிச்சயம் உண்டு.

அப்படியிருக்க அன்னையை நம்புகிற, வழிபடுகிற உங்களுக்குக் கஷ்டங்கள் வருகின்றன என்றால் ஏதோ காரணங்கள் இருக்க வேண்டும். காரணமில்லாமல் ஒரு காரியம் இல்லை.

என்ன காரணம்?

1. உங்கள் முன்னைய ஊழ்வினைப் பயன் உங்களைத் தாக்குகிறது. இந்தப் பிறப்பிலும், பழம்பிறப்பிலும் செய்த பாவ வினைகள் உங்களை உலுக்கி வைக்கிறது.

2. அன்னை,தன் பக்தர்களின் வினை முடிச்சை அவிழ்த்துவிட்டு தன்னுடைய இந்த அவதார காலத்திலேயே கொஞ்சம் அனுபவித்து கழிக்க வைத்து அதன்பின் குணப்படுத்த எண்ணுகிறாள்.

என் பார்வையிலேயே எல்லாவற்றையும் அனுபவித்துக் கழித்து விடடா மகனே! என்று அன்னை தன் அணுக்கத் தொண்டர் ஒருவர்க்கு இங்கே சொல்லியதுண்டு.

3. தன் பக்தர்களை சோதிக்க அவள் சோதனைகளை வைப்பதுண்டு. யார் யாரெல்லாம் அந்தச் சோதனைகளை அனுபவிக்கிறார்களோ அவர்களெல்லாம் அன்னை மடிமீது கிடந்து துடித்துக்கொண்டு, கையையும், காலையும் உதறிக்கொண்டு அழுகிற குழந்தைகள். அவர்கள் படுவது அடியானாலும் இருப்பது தாயின் மடியில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சோதனையில் அகப்பட்டவர்கள் அனைவரும் அம்மாவிற்கு நெருக்கமானவர்களாக உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று பொருள்.
கஷ்டங்களையும், சோதனைகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அம்மாவின் மேல் நம்பிக்கை போய்விடுகிறது என்றால் அவள் மடியில் இருந்து உதறிக்கொண்டு கீழே விழுந்து விட்டீர்கள் என்று பொருள்.
மீண்டும் நீங்களாக தவழ்ந்து தவழ்ந்து ஏறித்தான் மடியில் இடம்பிடிக்க வேண்டும்.

நம்பாமல் போனாலும் அவளுக்கு நஷ்டமில்லை இன்னும் பல பிறவிகள் எடுத்து அன்னையிடம்தான் மீண்டும் ஓடிவரப் போகிறீர்கள்.
நீங்கள் நம்பவிட்டால் அம்மா இல்லை என்றாகி விடுமா?
சென்னை மாநாட்டில் 1000 பேர்க்கு காட்சி கொடுத்தது பொய்யாகி விடுமா? இந்த அவதார காலத்தில் யார் யார்க்கோ காட்சி கொடுத்து மறைந்தாளே! அவையெல்லாம் பொய்யாகிவிடுமா? மருத்துவமனை சென்று யார்யார்க்கோ நோய் தீரத்து வைத்தாளே அவை பொய்யாகிவிடுமா?

நம்புவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. நம்பாமல் இருக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. உங்களுக்கு அவளே கொடுத்த இச்சா சுதந்திரம் அது.

#என்னிடம்_நம்பிக்கை_வைப்பவர்கள்_வீண் #போவதில்லை_நல்லதும்_கெட்டதும் #உனக்குள்ளேதான்_இருக்கின்றன.
என்ற அன்னை வாக்கால் அறியலாம்.

நம்முடைய துன்பங்களுக்கும், தவறுகளுக்கும் நாமே காரணமாக இருந்து கொண்டு ஒருசில தடவை கோயிலைச் சுற்றி வந்துவிட்டுக் கஷ்டம் தீரவில்லையே என்று அன்னையை நொந்து கொள்வது அறியாமை.

அம்மாவை நம்பாதவர்களெல்லாம் வசதியாக இருக்கிறார்கள் என எண்ணுவது தவறு. இந்த வசதிகளும், இன்பங்களும் பொய்யான இன்பங்கள். இந்த வெளித் தோற்றத்தை வைத்து மயங்காதீர்கள். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தீராத பிரச்சனை என்று ஒன்று உண்டு. இன்ப, துன்பம் என்பது எல்லோருக்கும் பொது.ஆத்திகனுக்கும் பொது.நாத்திகனுக்கும் பொது.

உங்களை விட வசதியான மேல்தட்டில் இருக்கிறவர்களைப் பார்க்கிற நீங்கள் உங்களை விட கீழ்தளத்தில் , அடிமட்டத்தில்
கிடக்கிறார்களே...உண்ண உணவில்லாமல்...உடுக்க உடையில்லாமல் ஒரு மாற்றுத்துணி இல்லாமல் தவிக்கிறார்களே அவர்களை விட நாம் எவ்வளவோ மேல் என்ற திருப்தி நமக்கு வருகிறதா...

இதைத்தான் அன்னை அருள்வாக்கில்,

#உன்னுடைய_வாழ்க்கையை_அடுத்தவன் #வாழ்க்கையோடு_ஒப்பிட்டுப்பார்க்கக் #கூடாது.
#உன்னதமான_வாழ்க்கை_முறையை_நீ #மேற்கொண்டு_வாழ_முயலும்போது, #மற்றவர்களைப்_பார்த்து_உன்_வாழ்க்கை #முறையை_மாற்றிக்_கொள்ளக்கூடாது. #இறங்கிவிடக்கூடாது.
#எந்த_நோக்கத்தோடு_இந்த_உலகத்திற்கு #வந்தாயோ_அதை_நிறைவேற்றவேண்டும் "
என்று கூறுகிறாள்.

நாம் யாருக்காவது எதையாவது கொடுத்து வைத்தால்தானே நாளைக்கு நமக்கென்று கொடுக்கப்படும். நாத்திகன் பழம்பிறப்பில் யாருக்கோ எதையோ கொடுத்து வைத்தவன் . அந்தப் புண்ணியப் பலனைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

அந்தப் புண்ணியப் பலன்கள் காலியாகிக் கிடக்கிற தொண்டர்களை எல்லாம் அன்னை தான, தருமங்களைச் செய்யத் தூண்டுகிறாள். அன்னதானம், ஆடைதானம் செய்யச் சொல்கிறாள். உங்கள் கணக்கில் புண்ணியப் பலன் காலியாக இருப்பதால் அடிக்கடி வற்புறுத்தி உங்களைத் தருமம் பண்ண வைக்கிறாள். உங்கள் புண்ணியக் கணக்கில் வரவுகள் ஏற வேண்டும் என்று கணக்குப் போடுகிறாள்.

இதையே தன் அருள்வாக்கில்,
#உன்னிடம்_உள்ள_குறையைத்_தர்மம் #செய்துதான்_நிறைவு_செய்யமுடியும்.
என்கிறாள்.

நம் மன்றத் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்? சும்மா சும்மா அம்மா செலவு செய்ய வைக்கிறாள் என நினைக்கிறார்கள்.

#அம்மா என்று நம்பித் தன்னிடம் வந்து விட்ட ஒருவனைக் கரையேற்ற வேண்டி அவள் போடுகிற கணக்கினை அவள்தான் அறிய முடியும். ஒவ்வொருவனையும் புண்ணியம் செய்ய வைத்து பாவத்தைக் குறைக்கிறாள். சிலருக்குத் துன்ப அனுபவம் தந்து பாவக்கணக்கைக் குறைக்கிறாள்.

எனவே துன்ப அனுபவங்களால் துவள்கிற போது அம்மாவின் மேல் மேலும் பக்தி வலுப்பட வேண்டும். உங்கள் நம்பிக்கை தளர்கிறது என்றால் அந்த நம்பிக்கை நம்பிக்கையே அல்ல. அது அரைகுறை நம்பிக்கை. அந்த அரைகுறை நம்பிக்கையுடன் அவள் திருவருளை உங்களால் சுவைக்க முடியாது. முன்னேறி வர முடியாது.

* #என்னை_முழுவதுமாக_நம்பியவர்களை #எந்த_நிலையிலும்_நான்_கைவிட #மாட்டேன்.*
என்பது அன்னை வாக்கு

என்ன கஷ்டம் வந்தாலும் அவள் படத்தின் முன் அமர்ந்து கொண்டு தனிமையில் வாய்விட்டுச் சொல்லி ஒரு முறை அழுதுவிடுங்கள். படத்தில் உயிர்ப்போடுதான் அவள் இருக்கிறாள். அழுது பிடிவாதம் பண்ணுங்கள். அவளிடம் முழுமையான நம்பிக்கை இருந்தால் உரிமையாகச் சண்டை பிடிக்கலாம். அரைகுறையான நம்பிக்கையோடு சண்டை பிடிக்க உங்களுக்கு உரிமை ஏது? கவலை போக்கும் மருந்தாகக் கடவுளின் திருவடியைத்தான் புகலிடமாகப் பெரியவர்கள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.

* #என்னை_வெறும்_படம்_என்று_எண்ணாதே! #அதில்_நான்_உயிரோட்டமாய் #இருக்கிறேன். #உன்னுடைய_கஷ்டம்எதுவானாலும்_ஒருசொட்டுக்_கண்ணீர்விட்டுச்_சொன்னாலே_போதும்*
#அதைச்_சுக்குநூறாய்_உடைத்து_விடுவேன்.*
அன்னையின் அருள்வாக்கு!!!!!

ஆசிரியர்
சக்திஒளி
மே 89

22/02/2017
17/01/2017
What Arul Thiru AMMA said specifically to the Youth Mandram in Australia (but may apply more widely). - "People are not ...
17/10/2016

What Arul Thiru AMMA said specifically to the Youth Mandram in Australia (but may apply more widely). - "People are not coming to Mandram and instead are indulging in alcohol. Give the Mandram Navaratri Kaapu prasatham to all and ask them to apply it on their head and take a head bath. Let's see after this if there will be any change". Arul Thiru AMMA.

03/09/2016

#அபிடேகம், #அலங்காரம், #அர்ச்சனை, #தியானம் இவற்றால் எல்லாம் என்னை அடைய முடியாது. உன்னை நீயே அடைய வேண்டும்!

கம்பி மூலம் மின்சாரம் பாய்வதுபோல, கருத்துக்கள் மூலம் பொருள் புரிவதுபோல, அடிகளார் மூலம்தான் என்னை நீங்கள் நெருங்க முடியும்.

காந்தத் தன்மை பெற்ற காந்த ஊசியினால் இரும்பு கவரப் படுவதுபோல அடிகளார் மூலமாகத்தான் என்னை நீங்கள் நெருங்க முடியும்.”

அன்னையின் அருள்வாக்கு

ஒரு குருவின் மூலமாகத்தான் நீங்கள் என்னை நெருங்க முடியும். என்னை அடைய முடியும் என்ற கருத்தை மேற்கண்டவாறு அன்னை விளக்கிச் சொல்கிறாள்.

உன்னை நீயே அடைய வேண்டும் என்று அம்மா சொல்கிறாளே… அப்படியானால் நான் யார்? எதைத் தொலைத்து விட்டேன்?! அதை அடைவதற்கு….! புரியவில்லை அல்லவா?

அபிடேகம், அர்ச்சனை, அலங்காரம், தியானம் இவற்றால் எல்லாம் என்னை அடைய முடியாது என்கிறாளே அன்னை. அப்படியானால் அதற்குப் பயன்கள் இல்லையா…..? உலகியல் பயன்கள் உண்டு. ஆன்மிகப் பயன்கள் இல்லை.

அம்மாவிடம் நாம் என்னவெல்லாம் கேட்கிறோம்….?

அம்மா! என் பையனுக்குப் படிப்பு வரவேண்டும்.

அம்மா! எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும்.

அம்மா! என் மனைவிக்குப் புற்று நோய். டாக்டர் சொல்லி விட்டார் காப்பாற்றிக் கொடு.

அம்மா! என் பங்காளிகள் மோசம் பண்ணி என் சொத்தை அபகரித்துக் கொண்டார்கள் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. சாதகமாக எனக்குத் தீர்ப்பு வழங்க வேண்டும்.

அம்மா! என் மகளுக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது. கல்யாணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. அவள் கல்யாணம் நல்லபடி நடக்க அருள் வழங்கு!

இப்படித்தான் நாம் எல்லாம் கேட்கிறோம். அம்மாவும் பலருக்கு அவர்தம் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கிறாள்.

இதுபோன்ற கோரிக்கைகள் உலகியல் பயன்கள் எனப்படும்.

ஒரு சிலர் மட்டும் இத்தகைய கோரிக்கைகளை அம்மாவிடம் கேட்பதில்லை.

அம்மா! இந்தப் பிறவியுடன் என் கணக்கை முடித்துவிடு! எனக்கு மீண்டும் ஒரு பிறவி வேண்டாம். பிறவா வரம் கொடு! உபதேசம் கொடு!

அம்மா! எனக்கு முக்தி கொடு! என்றெல்லாம் கேட்பவர்கள் உண்டு.

இத்தகையோர் கோரிக்கைகள் ஆன்மிகப் பலன்களை எதிர்பார்ப்பவை. இப்படிக் கேட்பவர்கள் விவரமானவர்கள். சற்றே பக்குவம் வந்தவர்கள்.

இவர்களைப் போல நம்மால் கேட்க முடியாமல் போவது ஏன்? அப்படிப்பட்ட நினைப்பே வரமாட்டேன் என்கிறதே! ஏன்?

காரணம் மாயை! ஆதிபராசக்தியின் மாயை நம்மை மயக்கி வைத்திருக்கிறது. அவளது மாயசக்தி பெரிது! அந்த மாய வலைக்குள் சிக்கிக் கொண்டு, சின்னச் சின்ன அற்பமான பலன்களையே பெற விரும்புகிறோம்.

ஒரு குருவிடம் ஆன்ம வளர்ச்சி, ஆன்ம முன்னேற்றம், ஆன்ம விடுதலை மட்டுமே அருளை எதிர்பார்க்க வேண்டும். ஆனால் நம்மால் முடிவதில்லை. அவற்றைக் கேட்பதில்லை. ஆனாலும் குருமார்கள் கருணை காட்டுகிறார்கள்.

வள்ளலாரும் - அடிகளாரும்…….

வள்ளலார் பக்தர் ஒருவர் அம்மாவிடம் கேட்டார். அம்மா! வள்ளலார் வளர்த்த ஆன்மிகத்திற்கும், அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்திற்கும் வேறுபாடு என்னம்மா?

“மகனே! இருவருக்கும் ஆன்மிகத்தின் கொடுமுடி ரகசியங்கள் தெரியும்.”

“கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று அவன் வந்து விட்டான். என் பாலகன் கொள்வாருக்குத் தக்கபடி கடை விரித்திருக்கிறான். உலகம் எதை விரும்புகிறதோ கேட்டுப் பெற்றுக் கொள்ளட்டும்!” என்றாளாம்.

விவரம் அறிந்தவர்கள் பக்குவம் வந்தவர்கள், பிறவா வரம் வேண்டும். உபதேசம் வேண்டும். மோட்சம் வேண்டும் என்று வேண்டுகிறார்கள். ஏனையோர் உலகியல் பலன்களை வேண்டுகிறார்கள்.

எது எப்படியோ - குருவின் மூலம்தான் ஒருவன் ஞானம் பெற முடியும். அந்த ஞானத்தின் மூலமே மோட்சம் பெற முடியும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன.

24/08/2016

A Soul's Experience With God - An AMMA devotee for 30 years talks about the importance and benefits of holding onto AMMA only.

Address

Southern Community Centre. Rupert Drive
Monash, VIC
3170

Alerts

Be the first to know and let us send you an email when Melmaruvathur Arulmigu Athiparasakthi Youth Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share