07/01/2023
- முத்து முஹம்மது மாலை -
இஃது கண்மணி நாயகம் ﷺ அவர்களின் அன்பிலும் இஷ்க்கிலும் இதயக்கமல்கள் தழைக்க, ஸலவாத்து மஜ்லிஸுகளின் துவக்கத்தில் ஓதுவதற்கு ஒரு உவப்பான புகழ்ப்பா. இஃது நாகூர் P. S. அப்துல் ஹமீது ஸாஹிபு காதிரீ இயற்றிய "சுவர்க்கத்தின் பூங்கா" கிதாபில் உள்ள ஒரு கவிதையின் நீட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
- Garland of Muhammadan Pearls -
English translation of a praise poem in Tamil upon the Prophet Muhammad ﷺ to set hearts aright and alight before gatherings of salawat.It is worth noting that this is an extension of a poem found in the anthology “Suvargathin Poonga” by P. S. Abdul Hameed Sahib Qadiri of Nagore.
-*-*-*-*-*-*-*-
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்
யா ரப்பி ஸல்லி அலைஹி வசல்லிம்
Allahumma salli ‘ala Muhammad
Ya Rabbi salli ‘alaihi wa sallim
-*-*-*-*-*-*-*-
(௧) அல்லாஹ்வின் அருள் அண்ணல் முஹம்மது
அஹதோனின் அன்பு அஹ்மது முஹம்மது
அண்டத்தின் அழகு அபார முஹம்மது
அகிலத்தின் அமுது அற்புத முஹம்மது
Allah’s mercy is the emissary Muhammad ﷺ
The Unique One’s love is Ahmad Muhammad ﷺ
Universe’s beauty is the immense Muhammad ﷺ
Earth’s amrita is the wondrous Muhammad ﷺ
(௨) ஆண்டவன் ஆக்ஞை ஆண்டகை முஹம்மது
ஆசான்கள் ஆசி ஆருயிர் முஹம்மது
ஆண்டோர் ஆதர்சம் ஆஷிஃகு முஹம்மது
ஆண்டியர் ஆறுதல் ஆபிது முஹம்மது
God’s Command is the eminent Muhammad ﷺ
Teachers’ blessings are (from) the precious Muhammad ﷺ
Rulers’ exemplar is the lover Muhammad ﷺ
Wretches’ solace is the worshipper Muhammad ﷺ
(௩) இகபர இன்பம் இர்ஃபான் முஹம்மது
இர்ஃபானின் இரகசியம் இஷ்க்கே முஹம்மது
உலமாக்கள் உபதேசம் உண்மை முஹம்மது
உலகத்தார் உயிர்நாடி உன்னத முஹம்மது
Joy of both worlds is in the gnosis of Muhammad ﷺ
Secret to that gnosis is in the love of Muhammad ﷺ
Scholars’ counsel is from the truthful Muhammad ﷺ
World’s jugular vein is the sublime Muhammad ﷺ
(௪) எளியோரின் எழுச்சி எஜமான் முஹம்மது
எதையும் எதிர்கொள்ளும் எண்ணம் முஹம்மது
ஒழுங்கின் ஒளிர்தான் ஒப்பில்லா முஹம்மது
ஒழுக்கத்தின் ஒளிவட்டம் ஒப்பற்ற முஹம்மது
People’s renaissance is the master Muhammad ﷺ
Bravery, courage and conviction is Muhammad ﷺ
Beacon of propriety is the matchless Muhammad ﷺ
Halo of morality is the peerless Muhammad ﷺ
(௫) ஆமினா ஈன்றெடுத்த ஆதி முஹம்மது
ஃகதீஜா அரவணைத்த கற்பக முஹம்மது
ஃபாதிமா ஃபனாவான ஃபானி முஹம்மது
ஆயிஷா ஈமான்கொண்ட ஆஃகிரு முஹம்மது
Amina birthed the origin-of-life Muhammad ﷺ
Khadhija embraced the tree-of-life Muhammad ﷺ
Fatima dissolved in the annihilated Muhammad ﷺ
Aisha believed in the ultimate Muhammad ﷺ
(௬) ஜமாலின் உருவம் ஜோதி முஹம்மது
ஜலாலின் உருவம் ஜீவன் முஹம்மது
கமாலின் உருவம் கருணை முஹம்மது
இன்சான் காமில் இமயம் முஹம்மது
Beauty manifests in the illumination of Muhammad ﷺ
Rigour manifests in the life of Muhammad ﷺ
Perfection manifests in the compassion of Muhammad ﷺ
The Perfect Man is the himalayan Muhammad ﷺ
(௭) நபிமார்கள் போற்றும் நயினார் முஹம்மது
வலிமார்கள் போற்றும் வசந்தம் முஹம்மது
வானோர்கள் போற்றும் வாஞ்சை முஹம்மது
வேதங்கள் போற்றும் வேந்தர் முஹம்மது
Prophets glorify the lord Muhammad ﷺ
Saints glorify the spring Muhammad ﷺ
Celestials glorify the affectionate Muhammad ﷺ
Revelations glorify the sovereign Muhammad ﷺ
(௮) ஜ(za)பூர் வர்ணிக்கும் ஜ(za)ம்-ஜ(za)ம் முஹம்மது
தௌராத் வர்ணிக்கும் தௌஹீது முஹம்மது
இன்ஜீல் வர்ணிக்கும் இஹ்சான் முஹம்மது
ஃபுர்கான் வர்ணிக்கும் ஃபுஆது முஹம்மது
Zabur (Psalms) describes the Zam Zam of Muhammad ﷺ
Tawrat (Torah) describes the Tawhid of Muhammad ﷺ
Injil (Gospel) describes the Ihsan of Muhammad ﷺ
Furqan (the Criterion) describes the Fu‘ad of Muhammad ﷺ
(௯) ஜிப்ராயில் பணியும் ஜிஹான் முஹம்மது
மீகாயில் பணியும் மீட்பர் முஹம்மது
இஸ்ராஃபில் பணியும் இனிய முஹம்மது
அஸ்(z)ராயில் பணியும் அகமிய முஹம்மது
Gabriel obeys the cosmos Muhammad ﷺ
Michael obeys the saviour Muhammad ﷺ
Raphael obeys the benevolent Muhammad ﷺ
Azrael obeys the spiritual Muhammad ﷺ
(௰) ஃசித்தீக் நேசிக்கும் சிகரம் முஹம்மது
ஃபாரூக் நேசிக்கும் பாரிய முஹம்மது
ஃகனியார் நேசிக்கும் கஸ்தூரி முஹம்மது
ஃஅலியார் நேசிக்கும் அமரர் முஹம்மது
al-Siddiq loves the pinnacle Muhammad ﷺ
al-Faruq loves the prodigious Muhammad ﷺ
al-Ghani loves the musk-scented Muhammad ﷺ
‘Ali (b. Abi Talib) loves the immortal Muhammad ﷺ
(௰௧) நுஃமான் துதிக்கும் நூரே முஹம்மது
மாலிக் துதிக்கும் மஃஷூக் முஹம்மது
ஷாஃபியீ துதிக்கும் ஷாஃபீ முஹம்மது
ஹன்பலி துதிக்கும் ஹகீகத் முஹம்மது
Nu‘man (Abu Hanifa) lauds the Light of Muhammad ﷺ
Malik lauds the beloved Muhammad ﷺ
al-Shafi‘i lauds the healer Muhammad ﷺ
Ibn Hanbal lauds the Reality of Muhammad ﷺ
(௰௨) முஹ்யுத்தீன் புகழும் முத்து முஹம்மது
ரிஃபாயி புகழும் ரத்தின முஹம்மது
ப(ba)தவி புகழும் பிரதான முஹம்மது
த(da)சூகி புகழும் தயாளர் முஹம்மது
Muhyuddin (al-Jilani) adores the pearl Muhammad ﷺ
al-Rifa‘i adores the gem Muhammad ﷺ
al-Badawi adores the foremost Muhammad ﷺ
al-Dasuqi adores the generous Muhammad ﷺ
(௰௩) தீனோர்கள் நாடும் தீரர் முஹம்மது
நல்லோர்கள் நாடும் நஞ்சை முஹம்மது
மாற்றாரும் நாடும் மாட்சிமை முஹம்மது
அனைவரும் நாடும் அளுள்மிகு முஹம்மது
Religionists seek the valiant Muhammad ﷺ
Righteous seek the verdant Muhammad ﷺ
(Even) non-Muslims seek the majestic Muhammad ﷺ
(In the end) all seek the holy Muhammad ﷺ
(௰௪) க்கல்பில் முஹம்மது, ரூஹில் முஹம்மது
நஃப்சில் முஹம்மது, அறிவில் முஹம்மது
கருவில் முஹம்மது, க்கப்ரில் முஹம்மது
பிறப்பில் முஹம்மது, இறப்பில் முஹம்மது
Muhammad ﷺ in every heart, Muhammad ﷺ in every soul,
Muhammad ﷺ in every self, Muhammad ﷺ in every intellect.
Muhammad ﷺ in every womb, Muhammad ﷺ in every grave,
Muhammad ﷺ at every birth, Muhammad ﷺ at every death.
(௰௫) உடலும் முஹம்மது, உயிரும் முஹம்மது
உயர்வில் முஹம்மது, உயிர்ப்பில் முஹம்மது
உதிப்பில் முஹம்மது, உள்ளத்தில் முஹம்மது
உணர்வில் முஹம்மது, உணர்ச்சியில் முஹம்மது
Body is Muhammad ﷺ, life is Muhammad ﷺ,
Muhammad ﷺ in ascension, Muhammad ﷺ at resurrection,
Muhammad ﷺ in thoughts, Muhammad ﷺ in feelings,
Muhammad ﷺ in consciousness, Muhammad ﷺ in emotions.
(௰௬) மூச்சில் முஹம்மது, பேச்சில் முஹம்மது
செவியில் முஹம்மது, பார்வையில் முஹம்மது
எலும்பில் முஹம்மது, தசையில் முஹம்மது
நரம்பில் முஹம்மது, ரத்தத்தில் முஹம்மது
Muhammad ﷺ in every breadth, Muhammad ﷺ in every word,
Muhammad ﷺ in every seeing, Muhammad ﷺ in every hearing,
Muhammad ﷺ in every bone, Muhammad ﷺ in every flesh,
Muhammad ﷺ in every vein, Muhammad ﷺ in every blood.
(௰௭) கனவில் முஹம்மது, நினைவில் முஹம்மது
விழிப்பில் முஹம்மது, வாழ்வில் முஹம்மது
இன்பத்தில் முஹம்மது, துன்பத்தில் முஹம்மது
இம்மையில் முஹம்மது, மறுமையில் முஹம்மது
Muhammad ﷺ in dreams, Muhammad ﷺ in memories,
Muhammad ﷺ when awake, Muhammad ﷺ when alive,
Muhammad ﷺ in pleasure, Muhammad ﷺ in pain,
Muhammad ﷺ in this world, Muhammad ﷺ in the Hereafter.
(௰௮) சகராத்தில் முஹம்மது, சந்தூக்கில் முஹம்மது
மஹ்ஷரில் முஹம்மது, மன்றாடும் முஹம்மது
தீர்ப்பில் முஹம்மது, திராசில் முஹம்மது
கௌதரில் முஹம்மது, கொடுப்பதும் முஹம்மது
Muhammad ﷺ at the pangs of death, Muhammad ﷺ at the bier,
Muhammad ﷺ at the Gathering, Muhammad ﷺ the intercessor.
Muhammad ﷺ at the Judgement, Muhammad ﷺ at the Scale,
Muhammad ﷺ at the Fountain, Muhammad ﷺ the giver.
(௰௯) சிறாத்தில் முஹம்மது, சொர்க்கத்தில் முஹம்மது
லிவாவும் முஹம்மது, லிக்காவும் முஹம்மது
அங்கும் முஹம்மது, இங்கும் முஹம்மது
எங்கும் முஹம்மது, எப்போதும் முஹம்மது
Muhammad ﷺ at the Bridge, Muhammad ﷺ in the Garden,
Banner is Muhammad’s ﷺ, Beatific Vision is Muhammad’s ﷺ.
Muhammad ﷺ there, Muhammad ﷺ here,
Muhammad ﷺ in every place, Muhammad ﷺ at every moment.
-*-*-*-*-*-*-*-
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்
யா ரப்பி ஸல்லி அலைஹி வசல்லிம்
Allahumma salli ‘ala Muhammad
Ya Rabbi salli ‘alaihi wa sallim
-*-*-*-*-*-*-*-