தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், நெதர்லாந்து

  • Startpagina
  • Nederland
  • Schijndel
  • தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், நெதர்லாந்து

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், நெதர்லாந்து Tamil catholic chaplaincy Netherlands

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் 24வது வருட தமிழர் திருயாத்திரை24th Annual Tamil Pilgrimage of the Neth...
14/09/2026

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் 24வது வருட தமிழர் திருயாத்திரை
24th Annual Tamil Pilgrimage of the Netherlands Tamil Catholic chaplaincy

❤️FOLLOW US ON SOCIALS :✅Facebook - https://www.facebook.com/profi...

13/09/2026

13-09-2026 திருப்பலி மறையுரை

புலத்தில் தமிழ் கத்தோலிக்கம் புதிய ஆரம்பம் அன்னை மரியாவின் அகவை நாளில்
08/09/2026

புலத்தில் தமிழ் கத்தோலிக்கம் புதிய ஆரம்பம் அன்னை மரியாவின் அகவை நாளில்

❤️FOLLOW US ON SOCIALS :✅Facebook - https://www.facebook.com/profi...

07/09/2026
24வது வருட தமிழர் திருயாத்திரை – Tienray, Netherlands 🌹🙏தூய கன்னி மரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, Netherlands தமிழ்...
06/09/2026

24வது வருட தமிழர் திருயாத்திரை – Tienray, Netherlands 🌹🙏

தூய கன்னி மரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, Netherlands தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் முன்னெடுத்த 24வது வருட தமிழர் திருயாத்திரை, இன்று 06-09-2026 அன்று, Netherlands-இல் அமைந்துள்ள சிறிய லூர்து அன்னை திருத்தலம் (Kleine Lourdes) நோக்கி மிகவும் சிறப்பாகவும் பக்தி நிறைந்த முறையிலும் நடைபெற்றது. 🙏⛪

அன்னை மரியாளின் அருளை வேண்டி, பக்தர்கள் ஒன்றிணைந்து செபமாலை, திருப்பலி மற்றும் பக்தி நிகழ்வுகளில் பங்கேற்று, தங்களது இறைநம்பிக்கையையும் தமிழர் ஆன்மீக ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர். 🌹🙏

24 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த புனித தமிழர் திருயாத்திரை, எமது தமிழ் கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையையும், அன்னை மரியாளின் மீது கொண்டுள்ள அன்பையும் பக்தியையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறப்பான ஆன்மீகப் பயணமாக அமைந்துள்ளது. ❤️🙏

“அருள்நிறைந்த மரியே, உம்மை நாடி வரும் எங்கள் அனைவரையும் உமது தாயன்பால் அரவணைத்து, எங்கள் குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் இறை அருளையும் சமாதானத்தையும் பெற்றுத்தாரும்.” 🌹

இந்த புனித 24வது வருட திருயாத்திரையில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து இறைமக்களுக்கும், அருட்பணியாளர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியும் இறையருளும்! 🙏🌹

📍 திருத்தல முகவரி:
Kloosterstraat 1, 5865 AA Tienray, Netherlands

🌹 தூய கன்னி மரியாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
🙏 எங்கள் தமிழர் சமூகத்தை உமது தாயன்பில் காத்தருளும்!

நல்ல போராட்டத்தைப் போராடினேன்; ஓட்டத்தை முடித்தேன்; விசுவாசத்தைக் காத்தேன்.“ 2 தீமோத்தேயு 4:7மண்டைதீவைப் பிறப்பிடமாகக்கொ...
06/09/2026

நல்ல போராட்டத்தைப் போராடினேன்; ஓட்டத்தை முடித்தேன்; விசுவாசத்தைக் காத்தேன்.“
2 தீமோத்தேயு 4:7

மண்டைதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட அருட்பணி அன்ரனி பெர்ணாண்டோ பெனற் அடிகளார் இன்று 06/09/2026 கனடாவில் காலமாகிவிட்டார்.

முன்னாள் பருத்தித்துறை மறைககோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அடிகளார் இன்று கனடாவில் காலமாகி விட்டார். இவர் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக.

கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை, பரந்தன் ஆகிய பங்குகளின் பங்குத்தந்தையாகவும்.
கிளிநொச்சி, பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும்.
யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குனராகவும்.
ஜேர்மனி தமிழ் கத்தோலிக்க பணியக இயக்குனராகவும் மறைபணியாற்றிய அடிகளாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை மன்றாடுவோம்.

தேவதாயின் பிறப்பு விழா திருப்பலி நேரலை Live
06/09/2026

தேவதாயின் பிறப்பு விழா திருப்பலி நேரலை Live

06-09-2026காலை 11.00 மணி

நெதர்லாந்தில் சிறிய லூர்து அன்னை நோக்கிய தமிழர் திருயாத்திரை  06-09-2026
31/08/2026

நெதர்லாந்தில் சிறிய லூர்து அன்னை நோக்கிய தமிழர் திருயாத்திரை 06-09-2026

நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. தூய கன்னிமரியாளின் பிறப்பு வி....

நெதர்லாந்தில் சிறிய லூர்து அன்னை நோக்கிய தமிழர் திருயாத்திரை  06-09-2026
31/08/2026

நெதர்லாந்தில் சிறிய லூர்து அன்னை நோக்கிய தமிழர் திருயாத்திரை 06-09-2026

தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24.....

Adres

18 Vicaris Van Alphenstraat 5482HL Schijndel
Schijndel
6482HL

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், நெதர்லாந்து nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Snelkoppelingen

Delen