24/06/2024
♦21ம் நூற்றாண்டில் பெற்றோர்கள் மாணவர்கள் & ஆசிரியர்கள். தன்முனைப்பு உரை/ Motivation Talk.♦
மலேசிய இந்து சங்கம் ரவாங் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் 22/6/24 சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில், ரவாங் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் பேராசிரியர் முனைவர் Dr. காதர் இப்ராகிம் அவர்களது தன்முனைப்பு உரை இடம் பெற்றது.
🔖பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.
🔖பெற்றோர்கள் முயற்சி, மாணவர்கள் விடா முயற்சி,ஆசிரியர்கள் வழிகாட்டல் - சிறந்த எதிர்காலத்தை அமைத்து தரும்.
🔖புறப்பாட நடவடிக்கைகள் - திறமைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
🔖அறிவை அதிகரித்தல்/மேம்படுத்தல் ~ உடல் ஆரோக்கியம் பேணுதல் ~ கட்டொழுங்கு கடைபிடித்தல் ~ தர்மம் செய்தல் ~ பெரியோர் ஆசீர்வாதம். ☺️ இவை அனைத்தும் மனிதனின் வெற்றிக்கு பெரும் உதவியாக அமையும்..☺️
➡️ போன்ற பல கருத்துகளை எடுத்துகாட்டுகளோடு சுலபமான முறையில் விளக்கம் அளித்தார்.
➡️ இரவு 10.00 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது. சுமார் 60 க்கும் மேற்பட்ட சுற்று வட்டார பொது மக்கள் கலந்து கொண்டனர்.
➡️ நிகழ்வில் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய தலைவர் மதிப்புமிகு டத்தோஸ்ரீ பாலகிருஷணன் ,செயலாளர் திரு. சிவா, மஇச ரவாங் வட்டார தலைவர் மதிப்புமிகு டத்தோ சுரேஸ் ராவ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
நன்றி வணக்கம் 🙏
Malaysia Hindu Sangam,
Rawang Council.