Sri Muniswarar Temple, Alor Semadom, Kedah

Sri Muniswarar Temple, Alor Semadom, Kedah Om Namah Shivaya _/\_
Welcome to the official page of Sri Muniswarar Temple of Alor Semadom, Kedah.

Our temple, aged more than a century, have been the main place for prayers, religious activities for people around here.

01/02/2021

நமது ஆலயத்திற்கு நாம் எவ்வாறு உதவுவது?

இவ்வாலயத் திருப்பணி வெற்றி பெற மக்கள் தஙளால் இயன்ற உதவியினை பணமாகவோ பொருளாகவோ வழங்கலாம். ஓர் ஆலயத்தை மேம்படுத்துவது ஒரு சமூகத்தையே மேம்படுத்துவதற்குச் சமம் ஆகும். இந்த நல்ல காரியத்திற்கு உதவ மக்கள் அணுக வேண்டிய தொடர்புக்குரியவர்கள் கீழ்கண்டவாறு:-

தலைவர் : திரு K. பரமசிவம் : 012-4946285
செயலாளர் : திரு K. மோகனதாஸ் : 019-2370785/014-6438237
பொருளாளர் : திரு R. மகேந்திரன் : 017-4730014

அதனையொட்டி இவ்வாலய திருப்பணிக்காக நன்கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு, வங்கி விபரங்கள் இதோ:-

KUIL SRI MUNISWARAR (No. Pendaftaran: 001-02-18021991)
CIMB BANK: 7046302808

அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. இறைவன் ஆசிகள் என்றும் துணை இருக்கட்டும். 🙏😀❤

இன்று நம் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் நிலை என்ன? நம் ஆலய நிர்வாகத்தினர் கெடா மாநில அரசு செயலாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கி...
16/01/2021

இன்று நம் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் நிலை என்ன?

நம் ஆலய நிர்வாகத்தினர் கெடா மாநில அரசு செயலாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. விவரத்தைப் புரிந்துக் கொண்ட அவரின் ஆலோசனைப் படி 16 அரசு இலாக்காகளிடம் ஆலயம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தயார் செய்து ஒப்படைத்தோம். அதன்படி, இவ்வாலயம் தற்போது இருக்கும் நிலத்திலேயே நிலைத்திருக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானபடியால், இவ்வாலயம் கெடா மாநில அரசு செயலாளரின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியமாகிறது.

அடுத்து இவ்வாலயம் புணரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால், நிர்மாணிப்பு மற்றும் திருப்பணி செய்ய நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் முறையாக தயார் செய்து நகராண்மைக் கழகத்திடம் ஒப்படைத்து அனுமதியும் கிடைக்கப்பெற்றுவிட்டது. 🙏😀❤

13/01/2021

ஆலய நில விவகாரம்...

அரசாங்க நிலத்தில் அமைந்திருக்கும் இவ்வாலய நில உரிமையைப் பெற, திரு A. முனியாண்டி அவர்கள் தலைமையில் இருந்த முன்னாள் கோவில் நிர்வாகம் பல வருடங்களாக முயற்சி எடுத்து வந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது திரு K. பரமசிவன் தலைமையில் இயங்கிவரும் புதிய நிர்வாகம், ஆலய நில விவகாரத்தில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டது; பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

எங்கள் ஆலயத்தில் நடைப்பெற்ற பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளுள் சில...
12/01/2021

எங்கள் ஆலயத்தில் நடைப்பெற்ற பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளுள் சில...

12/01/2021

எங்களைப் பற்றி....

அலோர் ஸ்டார் நகரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான எங்கள் பழமை வாய்ந்த அலோர் ஸ்மாடோம் (கித்தா தோப்பு) ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் இவ்வட்டார மக்களின் வழிப்பாட்டிற்கான முக்கிய தளமாக விளங்கி வருகின்றது. மேலும், இவ்வாலய நிர்வாகம் இவ்வட்டார மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் சமயம், கல்வி, கலாச்சாரம் தொடர்புடைய பல நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. 🙏❤😀

Address

Alor Semadom
Alor Setar
05200

Telephone

+60124946285

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Muniswarar Temple, Alor Semadom, Kedah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category