இலங்கை சைவநெறிக் கழகப் பணிகள்

இலங்கை சைவநெறிக் கழகப் பணிகள் இலங்கை சைவநெறிக் கழகச் செயற்பாடுகளை முகநூலில் ஆவணமாக்கும் நோக்கில் இத்தளம், இலங்கை சைவநெறிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகின்றது.

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராங்கண்டல் ...
14/06/2026

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராங்கண்டல் தமிழ் மகாவித்தியாலயத்திலும், முள்ளியவளை தமிழ் மகாவித்தியாலயத்திலும் கழகத்தின் சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்டம் 13- 06 - 2026ஆம் நாள் சனிக்கிழமையன்று
கழகப் பதில் தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும்,
கல்விக்குழுச் செயலாளரும் கழகப் பதில் செயலாளருமான சைவத்திரு.சி.பிரியதர்சன் அவர்களும், கழக உபதலைவரும் கல்விக்குழுப் பொருளாளருமான சைவத்திரு.ச.யோகேந்திரபிரசாத் அவர்களும், நேரடியாகச் சென்று கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.

சிவபூசையுடனும் சைவப்பெரியார் சூரன்பெருமானார் குருபூசையுடனும் இவ்வகுப்புகள் தொடங்கிவைக்கப்பட்டன. ஒவ்வொரு சனிக்கிழமையும் சிவபூசையும் சைவப்பெரியார் சூரன்பெருமானார் குருபூசையோடு இப்பாடசாலைகளில் சிறுவர் கல்வி மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.சிவபெருமானைச் சிக்கெனப்பிடித்தோர் உயர்வர் என்பதனை நம் சமூகம் தெளிந்து, கல்வி தொழில் முதலிய வாழ்வியலில் சிவபரத்துவத்துடன் விளங்கும்பொருட்டுப் பணியாற்றுவதே கழகத்தார் கடனாகும்.

🙏🏾எல்லாம் திருவருட் சம்மதம்🙏🏾

முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளை முதல் சைவப்பெரியார் சூரன்பெருமானாருக்குக் கிழமை தோறும் குருபூசை நடைபெறும் என்பதுடன்; சி...
12/06/2026

முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளை முதல் சைவப்பெரியார் சூரன்பெருமானாருக்குக் கிழமை தோறும் குருபூசை நடைபெறும் என்பதுடன்; சிவபெருமானை வழிபட்டால் கல்வியில் மேம்படுவர் என்னும் கந்தபுராணக் கலாசாரமும் செழித்தோங்கும்!

🙏🏾எல்லாம் திருவருட் சம்மதம்🙏🏾

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவால் தலவாக்கல்லை தலவாக்கெல்லை டான்சினன் இலக்க...
06/06/2026

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவால் தலவாக்கல்லை தலவாக்கெல்லை டான்சினன் இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் சைவப்பெரியார் சூரன்பெருமானார் சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்ட சனிக்கிழமை தோறுமான கல்விச்செயற்பாடும் தேர்வுப்பயிற்சியும் இன்று (06 -06 - 2026) மிகச்சிறப்பாக நடைபெற்றது. தரம் - 2 வகுப்பில் 4 மாணவரும் தரம் 3 வகுப்பில் 9 மாணவரும் தரம் 4 வகுப்பில் 2 மாணவரும் தரம் 5 வகுப்பில் 8 மாணவரும் கலந்துகொண்டனர்.

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவால் தலவாக்கல்லை தங்கக்கெல்லையில் தங்கக்கெலை ...
06/06/2026

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவால் தலவாக்கல்லை தங்கக்கெல்லையில் தங்கக்கெலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் சைவப்பெரியார் சூரன்பெருமானார் சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்ட சனிக்கிழமை தோறுமான கல்விச்செயற்பாடும் தேர்வுப்பயிற்சியும் இன்று (06 -06 - 2026) மிகச்சிறப்பாக நடைபெற்றது. தரம் - 2 வகுப்பில் 6 மாணவரும் தரம் 3 வகுப்பில் 6 மாணவரும் தரம் 4 வகுப்பில் 12 மாணவரும் தரம் 5 வகுப்பில் 6 மாணவரும் கலந்துகொண்டனர்.

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவினால் கொழும்பு இந்துக்  கல்லூரி இரத்மலானைப் ...
06/06/2026

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவினால் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானைப் பழைய மணவர் சங்கத்துடன் இணைந்து, இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவின் சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்டம் (தரம் 2இல் இருந்து தரம் 5வரை சனிக்கிழமை தோறுமான தேர்வுப்பயிற்சியும் கற்பித்தல் செயன்முறையும்) இன்று சிறப்பாக கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் நடத்தப்பட்டது.

தரம் 2ஆம் வகுப்பில் 17 மாணவரும், தரம் 3ஆம் வகுப்பில் 26 மாணவரும், தரம் 4ஆம் வகுப்பில் 32 மாணவரும், தரம் 5ஆம் வகுப்பில் 30 மாணவருமாக, மொத்தம் 105 மாணவர் கலந்துகொண்டனர்.கடந்த சனிக்கிழமை மொத்தம் 85 மாணவர் கலந்துகொண்டனர்.கல்லூரி அதிபரின் சமூகத்தின்பாலான பெரும் அக்கறையொன்றே, இப்பணி சாத்தியமாவதற்குப் பெரும் காரணியாகும்.அத்துடன் ஆசிரியர் சமூகம், பெற்றோர் சமூகம் முதலிய கல்விச்சமூகத்தின் கரிசணையும் ஒத்துழைப்பும் போற்றுதலுக்குரியதாகும். நல்லவற்றை நல்லோர் போற்றுவர் என்பது உலக நியதியாம். இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவுடன் இணைந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இப்பெரும்பணியை முன்னெடுப்பது, பழைய மாணவர் சங்கங்களுக்கு முன்னுதாரணமானவொன்றும் பாராட்டுக்குரியவொன்றுமாகும்.

சிவபூசை, சைவப்பெரியார் சூரன்பெருமானர் குருபூசை, திருமுறை ஓதுதல் என்பவற்றுடன் இக்கல்விச் செயற்றிட்டம் காலை 9.00 மணிக்குத் தொடங்கி, மதியம் 12.00 மணிக்கு முடிவுற்றது.சிவபெருமானே நம் இனம் கல்வியில் மேம்படுவதற்கு உற்றதுணை என்பதனை மாணவர் நன்குணர்ந்து உயரும்பொருட்டு, பாடசாலையின் கீதத்தில் விளங்கும் வழிபடுகடவுளாகிய சிவகாமியம்மை உடனாய கூத்தப்பெருமானின் பூசையையே
சிவபூசையாக மேற்கொள்ளும் வழக்கு உருவாக்கப்பட்டுள்ளது. சைவப்பெரியார் சூரன்பெருமானார் குருபூசையும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இலங்கையில் தென்னிலங்கை, மலையகம் என்பவற்றோடு கொழும்புப் பாடசாலைகளிலும் இலங்கைச் சைவநெறிக் கழகம் ஏற்படுத்தியுள்ளதோடு, விரைவில் மட்டக்களப்பு முல்லைத்தீவுப் பாடசாலைகளிலும் ஏற்படுத்தப்படவுள்ளது.

🙏🏾எல்லாம் திருவருட் சம்மதம்🙏🏾

திருவாவடுதுறை ஆதீனத்தின் திருவிடைமருதூர் கட்டளை விசாரணை அருட்திரு திருச்சிற்றம்பலத் தம்பிரான் சுவாமிகள் இலங்கைத் திருநாட...
05/06/2026

திருவாவடுதுறை ஆதீனத்தின் திருவிடைமருதூர் கட்டளை விசாரணை அருட்திரு திருச்சிற்றம்பலத் தம்பிரான் சுவாமிகள் இலங்கைத் திருநாட்டிற்கு எழுந்தருளியிருப்பது இலங்கைச் சைவப்பெருமக்களின் தவப்பயனாகும்.

கடந்த வியாழக்கிழமை (04-06-2026) , இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் நடத்தப்படும் யாழ்ப்பாணத் திருவாவடுதுறை ஆதீனச் சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு கல்வி கற்ற மாணவரும், இவ்வாண்டு கல்வி கற்றுவரும் மாணவரும் ஒன்றிணைந்து, கழக இணைப்பாளர் சைவத்திரு.கிருஷாந்தன் அவர்கள், யாழ்ப்பாணச் சைவசித்தாந்தரத்தின மன்றத்தின் தலைவர் சைவத்திரு.புவனதாஸ் அவர்கள் இணைந்து ஏற்படுத்திய நெறிப்படுத்துதலில் , இலங்கைச் சைவநெறிக் கழக யாழ்ப்பாணச் சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் பேராசான் சிவத்திரு.ஜெயேந்திரன் பெருமகனாரின் தலைமைத்துவத்தில், கொக்குவில் தென்னாடு திருமடத்தில் தம்பிரான் சுவாமிகளைத் தரிசித்து சிவஞானவுரையினைச் செவிமடுக்கும் பேறுபெற்றுக் கொண்டதுடன், தம்பிரான் சுவாமிகளிடம் அருளாசிபெற்றுக் கொண்டனர்.

கொக்குவின் தென்னாடு செந்தமிழாகத் திருமடத்தில் சிவாலயவழிபாட்டினைத் தொடர்ந்து, தம்பிரான் சுவாமிகளின் சிவஞானவுரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, ஆதீனச் சித்தாந்த மாணவர் கொக்குவில் தென்னாடு திருமடத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாகேசுவரப்பூசையில் கலந்து இன்னமுது ஏற்றனர்.

தென்னாடு கொக்குவில் திருமடத்தார் தமிழ்நாட்டிலிருந்து எழுந்தருளும் தம்பிரான்சுவாமிகளையும் ஆதீன அன்பர்களையும் வரவேற்று விருந்தோம்பும் பெரும்பொறுப்பை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாது, இலங்கைச் சைவநெறிக் கழக விண்ணப்பத்தை ஏற்று, சித்தாந்த மாணவர் தம்பிரான் சுவாமிகளைத் தரிசிக்கவும் மாணவர் குழாத்தினர் மாகேசுவரப்பூசை ஏற்கவும் சகல ஏற்பாடுகளையும் செய்துதவினர்.

தென்னாடு செந்தமிழாகமத் திருமடத்திற்கு இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் நன்றி உரித்தாகுக.

🙏🏾எல்லாம் திருவருட் சம்மதம்🙏🏾

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவும் கொழும்பு இந்துக் கல்லூரி-இரத்மலானையின் ப...
30/05/2026

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவும் கொழும்பு இந்துக் கல்லூரி-இரத்மலானையின் பழைய மாணவர் சங்கமும் இணைந்து சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவின் சனிக்கிழமை தோறுமான தரம் 2 தொடக்கம் தரம் 5 வரையான மாணவருக்குரிய தேர்வுப்பயிற்சி வகுப்புக்கள் வைபவரீதியாகக் கடந்த 23 - 05 - 2026ஆம் நாள் தொடங்கப்பட்டு, முதலாவது வகுப்பு நேற்று (30 - 05- 2026) மிகச்சிறப்பாக நடைபெற்றது.

🙏🏾எல்லாம் திருவருட் சம்மதம்🙏🏾

களுத்துறை மாவட்டத்தின் பதினொரு பாடசாலைகளை ஒருங்கிணைத்து, அரப்பொலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் நடத்திய தரம் ஐந்தாம...
23/05/2026

களுத்துறை மாவட்டத்தின் பதினொரு பாடசாலைகளை ஒருங்கிணைத்து, அரப்பொலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் நடத்திய தரம் ஐந்தாம் ஆண்டுக்குரிய புலமைத்தேர்வு மாதிரி வினாத்தாள் கருத்தரங்கு இன்று மிகச்சிறப்புடன் இலங்கைச் சைவ்நெறிக் கழகச் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விக்குழுவால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. 105 மாணவர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பெற்றோர் உடனின்று உணவு முதலியவை கொடுத்து உறுதுணைசெய்தனர். கழகத்தின் களுத்துறை மாவட்ட இணைப்பாளர் சைவத்திருமதி கோகிலா அவர்களின் மேற்பார்வையில் செவ்வனே இப்பணிகள் திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அரப்பொலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலய அதிபர் சைவத்திரு.சஞ்சீவன் அவர்களின் வழிகாட்டலும் திருவருட்பேறாக விளங்கியது.

இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர் கி.பிரதாபன் அவர்களும், பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் பொருளாளர் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும், திருமதி இளையராஜா அவர்களும் கருத்தரங்கின் இறுதியில் கலந்துகொண்டு, முதல் பத்து இடம் பிடித்த பிள்ளைகளுக்கு இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட சிறுவர்களுக்கான கந்தபுராணம் நூலும், அப்பியாசக்கொப்பிகளும் வழங்கப்பட்டதுடன், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டது.அத்துடன், அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.இவ் அப்பியாசக்கொப்பிகள் நல்லூர் இலயன்ஸ் கிளப் அமைப்பினால் இலங்கைச் சைவநெறிக் கழகத்திற்கு வழங்கப்பட்ட அப்பியாசக்கொப்பிகளின் ஒரு தொகுதியாகும்.

🙏🏿எல்லாம் திருவருட் சம்மதம்🙏🏿

ஒவ்வொரு திங்கள் கிழமையும் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் சித்தாந்தச் செயற்குழுவினால் அகில இ...
21/05/2026

ஒவ்வொரு திங்கள் கிழமையும் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் சித்தாந்தச் செயற்குழுவினால் அகில இலங்கை இந்து மாமன்றத்தின அனுசரணையில் அடிப்படைச் சைவசித்தாந்த வகுப்பு பம்பலப்பிட்டி அசோக்கா கார்டின் (பூந்தோட்டம்) ஒழுங்கையில் விளங்கும் மாமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. மாலை 4.00 மணியில் இருந்து 6.00 மணிவரை திங்கள் கிழமை தோறும் நடைபெற்று வருகின்றது.

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் மூன்று திருப்பணிகள் வரும் சனி - ஞாயிறு நன்னாள்களில் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது.  1)இலங்...
20/05/2026

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் மூன்று திருப்பணிகள் வரும் சனி - ஞாயிறு நன்னாள்களில் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது.

1)இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவினால் நடத்தப்படும் சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்டமானது, கொழும்பு இந்துக் கல்லூரி-இரத்மலானையில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானைப் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து, மனித நேய நம்பிக்கை நிதியத்தின் பேராதரவுடன் நடத்தப்படத் திருவருள் கூடியுள்ளது. கொழும்பில் சைவப்பெருமக்கள் யாவரும் ஒன்றுகூடி உருவாக்கிய இந்து வித்தியாவிருத்திச் சங்கத்தின் தலையாயத் திருப்பணியாக, இரத்மலானையில் தோற்றுவிக்கப்பட்ட கொழும்பு இந்துக் கல்லூரியானது கல்வியில் மேம்பட்டு விளங்கினால் மட்டுமே, கல்லூரியின் இருப்பானது பாதுகாக்கப்படும் என்று பல நல்ல சைவப்பற்றாளர்களும் சிந்தித்து வருந்திவந்தனர். இதன் விளைவாகப் பழைய மாணவர் சங்கம் எடுத்த நன்முயற்சியால், இக்கல்விச்செயற்றிட்டம் வரும் சனிக்கிழமை 23 - 05 - 2026ஆம் நாள் காலை 9.00மணிக்குத் தொடங்கப்படவுள்ளது.

2)அத்துடன், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச்செயற்குழுவால் களுத்துறை மாவட்டத்தின் 11 தமிழ்ப் பாடசாலைகளை ஒருங்கிணைத்து, அரப்பொலகந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஐந்து மாணவருக்குரிய புலமைத்தேர்வுக் கருத்தரங்கு 23 - 05 - 2026ஆம் நன்னாளில் நடத்தப்படத் திருவருள் கூடியுள்ளது.

3)மேலும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் அருணாசலதேசிகமணியார் சைவ அறநெறிச் செயற்குழுவின் நேரடி நிர்வாகத்தில் நடத்தப்படும் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையானது நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த இடச்சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வாகப் புதிய இடத்தில் பாடசாலை நடத்தப்படத் திருவருள் கூடியுள்ளது. ஏறத்தாழ 120 மாணவர் வருகையால், ஒருசிறு இல்லத்தில் இடவசதிப்பற்றாக்குறையோடு சொய்சாப்புரத்தில் நடத்தப்பட்டுவந்த சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலைக்குப் புதிய இடம் ஒன்று மாணவரின் எண்ணிக்கைக்கு போதுமானதாக அமையுமாறு தேடும்படலம் பலகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. சைவத்திரு.கனக.இரகுநாதன் அண்ணனாரின் பேருதவியினால், அங்குலானை வீதியில் பெரு இடவசதியோடுகூடிய தனியார் வீட்டில் நடத்துவதற்குத் தற்போது ஏற்பாடாகியுள்ளது. இப்புதிய இடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் வகுப்புகள் நடத்தத் திருவருள் கூடியுள்ளது. இதன்பொருட்டு, புதிய இடம் புகும் திருவிழாவுடன் ஞாயிற்றுக்கிழமை வகுப்பு தொடங்கப்படவுள்ளது.

பல பெண் பிள்ளைகள் பூப்படைந்ததும் எமது பாடசாலைக்கு வருகைதருவதனைக் குறைத்துக் கொண்டனர். ஏனென்று ஆராய்ந்தபோது, இடவசதிச்சிக்கலால் ஏனைய பிள்ளைகளோடு மிக நெருக்கமாக இருக்கவைப்பதே காரணம் என்று பெற்றோர் கவலைப்பட்டனர். இதற்கொரு தீர்வு அவசியம் என்று சிந்தித்துப் பலகாலமாகத் திருமுறை விண்ணப்பம் ஒன்றே வழியென்று திருவருளில் தஞ்சமடைந்து முயற்சிகளை மேற்கொண்டவாறு இருந்தோம். அதன்பயனாகத் தற்காலிகத் தீர்வு எட்டப்பட்டது திருவருட்சம்மதப் பேறேயாகும்.

🙏🏾எல்லாம் திருவருட் சம்மதம்🙏🏾

Address

27 NELSON Place
Wellawatte
00600

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை சைவநெறிக் கழகப் பணிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share