25/05/2026
படித்ததில் பிடித்தது.
ஆழமான, மிகவும்
அழுத்தமான பதிவு.
ஒருமுறை படித்து தான் பாருங்கள்....
யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று
நாமோ.....
காலமோ.. முடிவு செய்வதில்லை.
*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*
வாய் தவறி விழும் பேச்சுக்கள்.
கை தவறி விழும் கண்ணாடியை விட மோசமானது....
மிகவும் கூர்மையானது....
*யாரிடம் பேசுகிறோம்....
என்பதை விட....
என்ன பேசுகிறோம்......
எப்படி பேசுகின்றோம்....
என்பதை...
அறிந்து கொண்டு பேசுங்கள்.*
நிம்மதியுடன் வாழ்கிறேன்.
என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.
*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*
மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள்.
*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*
பணம் இருந்தால்
நீ உயர்ந்தவன்.
குணம் இருந்தால் .
நீ *குப்பை.*
நடித்தால்.
நீ *நல்லவன்.*
யதார்த்த்தை உண்மையை பேசினால். *பைத்தியக்காரன்.*
அன்பு காட்டினால்
*ஏமாளி.*
எடுத்துச் சொன்னால்
*கோமாளி.*
இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.
அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.
மிகுந்த பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.
நிலவை....
தூரத்தில் இருந்து ரசிப்பதை போல.
சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்,
*சில வலிகள் இல்லாமல் நிம்மதியாக இருக்க.*
தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில்....
அமைதி மட்டும் உங்கள் அழகான ஆயுதமாக வைத்துக் கொள்ளுங்கள்.
*அவர்களுக்கு புரியவைக்க.*
*வரும் காலம் ஒன்று உள்ளது.*
*சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.*
நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.
*ஒவ்வொரு சோகமும்,
துன்பமும் வாழ்க்கையில் நல்ல பல பாடங்களை கற்று தரவே வருகின்றது.*
யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.
*ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் தான் பார்ப்பார்கள்*😇😇
மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.
தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.
*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*👍👍
பிறந்து விட்டோம் ஏதொவொரு வகையில் வாழ்ந்து தானே ஆகவேண்டும்.
இதுதான் வாழ்வின் யதார்த்தமான உண்மை.
கந்த கணேசதாஸ குருக்கள்