22/06/2026
அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்
வேப்பங்குளம், அரச வீட்டுத்திட்டம் ஓமந்தை, வவுனியா
கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான நன்கொடை வேண்டுகோள்
அன்புடைய பக்த பெருமக்களே!
வவுனியா மாவட்டம், ஓமந்தை வேப்பங்குளம் அரச வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் திருக்கோவிலின் கும்பாபிஷேகத்தை
( 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை ) முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக தங்களின் மேலான ஆதரவை அன்புடன் வேண்டுகின்றோம்.
ஆலயப் புனரமைப்பு, சந்நிதி திருத்தப்பணிகள், மண்டப அமைப்பு மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை சிறப்பாக நிறைவேற்ற நிதி தேவைப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி இப்புனிதப் பணியில் பங்கெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்கொடை செலுத்துவதற்கான வங்கி விபரங்கள்:
வங்கி: Bank of Ceylon
கிளை: ஓமந்தை
கணக்கு இலக்கம்: 0078628912
தங்களின் அர்ப்பணிப்பும் உதவியும் ஆலய வளர்ச்சிக்கும் சமயப் பணிகளுக்கும் பெரும் ஆதாரமாக அமையும். அம்மனின் திருவருளால் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சகல நலன்களும் கிட்ட பிரார்த்திக்கின்றோம்.
இப்படிக்கு,
கும்பாபிஷேக மற்றும் திருப்பணிக் குழு
ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்
வேப்பங்குளம், அரச வீட்டுத்திட்டம்,ஓமந்தை, வவுனியா.
தொடர்புகளுக்கு :
பொருளாளர் - 0776630246
தலைவர் - 0771979806
செயலாளர் - 0763630687
உபதலைவர் -0779793500