METHODIST CHURCH - NILAVELI

METHODIST CHURCH - NILAVELI Nilaveli Methodist Church is one of the oldest church in Trincomalee circuit. It is located in nilav

06/12/2018

இன்றைய சிந்தனைக்காக.....!

25/10/2018
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
02/10/2018

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119:105

18/09/2018

*ஞாயிறு ஆராதனை- என்ன செய்ய வேண்டும்?*

_நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்ளுவேன் (சங்கீதம் 5:7)._

*1. ஆராதனைக்கு ஆயத்தப்படுங்கள்.*
ஆராதனைக்கு செல்லுவதற்கு முன்பதாகவே அதற்கான ஆயத்தங்களை செய்யுங்கள். ஆராதனைகளுக்காகவும், அதை நடத்தும் ஒவ்வொருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். புதிய ஆத்துமாக்களை அழைத்துவர திட்டமிடுங்கள்.

*2. தவறாமல் வாருங்கள்.*
தவிர்க்க முடியாத காரணத்தை தவிர, ஆராதனைக்கு எக்காரணத்தைக் கொண்டும் வர தவறாதீர்கள். “எந்தவொரு வேலையும் அவர் ஆலயம் செல்லுவதிலிருந்து தடுத்தது இல்லை” என்று முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாசிங்டனை பற்றி கூறப்படுகிறது.

*3. சீக்கிரமாய் வாருங்கள்.*
ஆராதனைக்கு காலம் தாழ்த்தி, அவசர அவசரமாக வருவது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உகந்தது அல்ல. ஆலயத்திற்கு சரியான நேரத்திற்கு வரும்போது கர்த்தரை நீங்கள் கனம்பண்ணுகிறீர்கள்.

*4. முழு குடும்பத்தையும் அழைத்து வாருங்கள்* .
ஆராதனை நேரம் என்பது உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் மட்டும் செல்லக்கூடிய சிறப்பு கூடுகை அல்ல. “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று யோசுவா கூறுவதை நினைவுகூருங்கள்.

*5. கூடுமானவரை முன்வரிசையில் அமருங்கள்* .
பின்வரிசைகளை தாமதமாய் வருபவர்களுக்கும், குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு விட்டு விடுங்கள்.

*6. பயபக்தியாய் இருங்கள்.*
ஆராதனை ஸ்தலம் என்பது திரையரங்கமோ அல்லது பொழுதுபோக்கிற்கான இடமோ இல்லை. நீங்கள் ஆராதனைக்கு வருவது கர்த்தரை ஆராதிப்பதற்காகவே தவிர, சிரிப்பதற்கோ, மற்றவர்களோடு பேசிக் கொண்டிருப்பதற்கோ அல்ல. உங்கள் போனை அணைத்து வைக்க வேண்டும் அல்லது சைலென்ட் மோடில் வையுங்கள். ஆராதனை வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் மிகவும் பயபக்திகுரியது.

*7. பரிவுடன் நடந்து கொள்ளுங்கள்.*
வரிசையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை உள்ளே செல்லுங்கள் என்பதை தவிருங்கள். வயதானவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் வசதியான இருக்கைகள் கிடைக்க உதவுங்கள்.

*8. உற்சாகமாய் பங்கு பெறுங்கள்.*
ஆராதனையில் உற்சாகமாக ஈடுபடுங்கள். பிரசங்க நேரத்தில் கவனமாய் கவனியுங்கள், குறிப்பெடுங்கள். அச்சிடப்பட்ட வேதாகமத்தை கொண்டு வர மறக்காதீர்கள். நன்றாய் கைதட்டி பாடுங்கள். பார்வையாளராய் இருக்காதீர்கள். ஆராதனை செய்பவர்களாய் இருங்கள்.

*9. புதிதாய் வருபவர்கள் மேல் நோக்கமாயிருங்கள்.*
அவர்கள் நம்முடைய சிறப்பு விருந்தினர்கள். உங்கள் வீடுகளில் உங்கள் விருந்தினர்களை எப்படி உபசரிக்கிறீர்களோ அப்படி உபசரியுங்கள்.

*10. உற்சாகமாக கொடுங்கள்.*
உற்சாகமாய் கொடுக்கிறவர்களிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார். இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள். உங்கள் காணிக்கை கர்த்தருக்குரியது என்பதை நினைவுக்கூறுங்கள். கர்த்தருடைய சமூகத்திற்கு வெறும் கையாக வர வேண்டாம் என்று வேதம் கூறுகிறது.

*11. முடிந்தவுடன் ஓடாதீர்கள்.*
ஆலயத்தில் தீ பிடித்தது போல ஆராதனை முடிந்தவுடன் ஓடாதீர்கள். மற்றவர்களிடம் நட்புடன் பேசுங்கள். குறைந்தது மூன்று முதல் ஐந்து பேருக்காவது கைக்குலுக்கி செல்லுங்கள். தனிமையாக நிற்பவர்களை கவனித்து விசாரியுங்கள்.

*12. தவறாமல் பங்குபெறுதல்.*
சபையில் உள்ள சிறு சிறு குறைகளை பார்த்து சபைக்கு வராமல் இருப்பதை நிறுத்தாதீர்கள். பூரணமான சபை என்று ஒன்றுமில்லை. நாம் அனைவரும் பூரணத்தை நோக்கி கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

சபை என்பது ஒரு குடும்பம். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” யோவான் 13:35. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
(Copied)

14/07/2018

சின்னண்ணன்.அருள்திரு.சேவக்.I.T.இயேசுசகாயம். காலத்தின் தேவைக்கேற்ப இறையரசின் பணியாளர்களாகவும் உலகிற்குப் பெறுமதி மிகுந்த கொடைகளாகவும், மனித உருக்கொண்ட இறை செய்திகளாயும் மனிதர்களைத் தோன்றச் செய்யும் கடவுள் 18.07.1918 இல் இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள நவாலி என்னும் கிராமத்தில் I.T இயேசுசகாயம் என்ற குழந்தையைத் தோன்றப்பண்ணினார்
திரு.யோசுவா.ஐசக். தம்பிஐயா, திருமதி. மேரிப்பிள்ளை ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்த இவருக்கு ஐந்து சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தாலும் கூட சகோதரி சிறு வயதிலேயே மரித்து விட்டார்.இவரது பெற்றோர் தென் இந்திய திருச்சபையின் (CSI) உறுப்பினராயும் சாதாரண ஒரு குடும்பமாகவும் வாழ்வை முன்னெடுத்து ச் சென்றனர்.எனினும் விசுவாச வாழ்வில் மிக உறுதியானோர். பிறக்கும்போது நெற்றிக்கு மேல் கொம்பு போன்றதோர் அசாதாரண உறுப்போடு பிறந்த குழந்தைக்கு சத்திர சிகிச்சையே பரிகாரம் என கிராமத்தவர் பரிந்துரைத்த வேளையில் தாயார் மேரிப்பிள்ளையின் உறுதியான ஆழமான விசுவாசம் குழந்தைக்கு அற்புதமான சுகத்தை அளித்தது. கொம்பு இருந்த தடயம் கூட இல்லாமற் போய் விட்டது. அவர் தந்த குழந்தை அவருக்கே என திருப்பணிக்காக குழந்தையை அர்ப்பணம் செய்தார்கள் அந்த விசுவாசத் தாய். அதற்கமைய மகனும் தன் வாழ்வை ஆளுகை செய்யும் என்றும் மாறாத ஆண்டவரின் தன்மைகளை சிறு வயதில் இருந்தே சுவைக்க ஆரம்பித்தார். குடும்பமும் திருச்சபையும் இவருக்கு விசுவாசக் களங்களாக அமைந்தன.இவர் தனது ஆரம்பக் கல்வியை நவாலியிலும் உயர் கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் பெற்றார்.இதன் பின்னர் திருப்பணிக்கான ஆண்டவரின் அழைப் பை உறுதிப்படுத்திய இவர் இறையியல் பயிற்சிக்காக இந்தியா சென்றார். பயிற்சி யை நிறைவு செய்து வந்த இவர் மூளாய் தென் இந்திய திருச்சபையின் குருவாக நியமனம் பெற்றார். ஆண்டவர் தன்னை அழைத்தது துறவறம் பூண்டு ஆச்சிரம திருப்பணி செய்வதற்காகவே என்ற உண்மையை இக் காலங்கள் அவருக்கு உணர்த்தின. கிறிஸ்தவம் தன்னாட்டுப்ப டுத்தப்படலின் சிற்பிகளாக அயராது பணி செய்த அருள்திரு அறிவர். D.T நைல்ஸ் பெரியண்ணன் அருள்திரு.சேவக் S.செல் வரெட்ணம் ஆகியோரின் வாழ்வே இவரை ஆச்சிரம திருப்பணிக்காக உந்தித் தள்ளியது.
பெரியண்ணன் ஆச்சிரம திருப்பணியை வடிவமைத்து, நிர்வகித்து வழி நடத்திய அதே வேளை சின்னண்ணன் அப்பணியை ச் செயல்படுத்தினார்.அனைத்துக் கிராமங்களிலும் கிறிஸ்தவர்கள், இந்துக்க ள் என்ற பேதமின்றி மக்கள் இவரை இரு கரம் நீட்டி பேரன்போடு ஏற்றுக் கொண்டனர். இவர் தன் வாழ்வில் பெற்றிருந்த இறைவனின் அருள்கொடை களான இசை ஞானம், கலை ஆற்றல் நாட்டு வைத்தியம்,பாம்புக்கடி வைத்தியம் என்பன மக்களை இவரை நோக்கிக் கவர்ந்து இழுத்தன. இவ ர் இயற்றிய 21 பாடல்களும் தமிழையும், கலாச்சிரத்தையும் பிரதிபலித்த தோடு அவற்றினூடு வாழ்வை மாற்றும் இறை செய்தியை உலகுக்கு அள்ளிக் கொடுத்த ன.ஒவ்வொரு பாடலும் இயேசு க் கிறிஸ்துவோடு அவருக்கு இருந்த மிக நெருங்கிய, ஆழமான இறை அனுபவத் தை உலகிற்கு அளித்தன. அத்தோடு கதாப்பிரசங்கம்,வில்லுப்பாட்டு என்பவை மூலமும் இறை செய்தி வெளிப்பட்டது. இதனால் இவர் உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் சிறப்பு செய்தியாளராகப் பயன்படுத்தப்பட்டார்.
இவரது பாடல்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெவ்வேறு அனுபவங்க ளின் அடிப்படையில் எழுந்தன. ( தகவலுக்கு நன்றி Rev.S.D. தயாசீலன்)

12/06/2018

💢 ஆலயத்தில் காணிக்கை செலுத்த 10 ரூபாய் பெரியது.

💢ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது

💢ஒரு அதிகாரம் பைபிள் படிக்க அலுப்பு

💢100 பக்கம் கதை புஸ்தகம் படிக்க ஆர்வம்

💢ஒரு மணி நேரம் ஜெபம் பண்ண சலிப்பு
____________________
💢3மணிநேரம் டிவி பொழுதுபோக்கு பார்க்க விருப்பம்
____________________
💢பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை
____________________
💢வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
____________________
💢 *ஜெபம் பண்ணும்போது* வார்த்தைகளின் தடுமாற்றம்
____________________
💢பிறரைப் பற்றி குறை கூறுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை
___________________
💢நண்பர்களுடன் கதைபேச முதல் வரிசை
____________________
💢ஆலயத்திற்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் அருகே
____________________
💢அனாவசியமா பேச பல மணிநேரம் சலிப்பேயில்லை
___________________
💢அரைமணி நேரம் பைபிளை பற்றி பேச கசக்கிறது
____________________
💢முழந்தால் படியிட்டு 10நிமிடம் கர்த்தரை துதிக்க அலுப்பு
____________________
💢செல்போனை ஓய்வில்லாமல் தேய்ப்பு
____________________
💢பேஸ்புக் வாட்சாப்பில் அனாவசியமாக பொழுதுபோக்க விருப்பம்
____________________
💢ஆன்லைனில் பைபிளை படிக்கவோ, வசனத்தை மற்றவருக்கு அனுப்பவோ வெறுப்பு
____________________

படித்ததில் பிடித்தது❗❗❗

என்னையும் மாற்றிக்கொள்கிறேன், நீங்களும் மாறுங்கள்.

இப்படிக்கு
___________

இயேசுவின் பிள்ளை

28/05/2018

A very touching and meaningful Greek short film about an old man and his son. I really appreciates this film because its showed why parents are always so sp...

Address

Pulmoddai Road, Nilaveli
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when METHODIST CHURCH - NILAVELI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share