Trinco Janaza Welfare Society

Trinco Janaza Welfare Society திருகோணமலை ஜனாஸா அறிவித்தல்

26/05/2026

🕌 அரஃபா நோன்பின் மகத்துவம் 🕌

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

ஜமாலிய ஜும்மா பள்ளி நாளைய தினம் அரஃபா நோன்பை முன்னிட்டு விசேஷ துஆப் பிரார்த்தனை மற்றும் பயான் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

அரஃபா தினம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் சிறப்புமிக்க மற்றும் புனிதமான நாளாகும். ஹஜ் செய்பவர்கள் அரஃபா மைதானத்தில் நிற்கும் இந்த நாளில், உலக முஸ்லிம்களும் அல்லாஹ்வின் அருளைப் பெற அதிகமாக இபாதத்துகளில் ஈடுபட வேண்டும்.

🌙 அரஃபா நோன்பின் சிறப்புகள்:

▪️ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அரஃபா நோன்பு கடந்த ஒரு வருட பாவங்களையும் வரவிருக்கும் ஒரு வருட பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என்று நான் நம்புகிறேன்.”
— (ஸஹீஹ் முஸ்லிம்)

▪️ அல்லாஹ்விடம் மிகவும் விருப்பமான நாட்களில் ஒன்றாக அரஃபா தினம் கருதப்படுகிறது.

▪️ இந்த நாளில் செய்யப்படும் துஆக்கள் மிகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

▪️ அதிகமான அடியார்களை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுவிக்கும் தினமாகவும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

🤲 நாம் செய்ய வேண்டியவை:

✔️ அரஃபா நோன்பை நிய்யத்துடன் நோற்பது
✔️ அதிகமாக துஆ செய்யுதல்
✔️ தக்பீர், தஸ்பீஹ் ஓதுதல்
✔️ குர்ஆன் தமாம்செய்தல்
✔️ பாவமன்னிப்பு கேட்குதல்
✔️ ஏழை எளியோருக்கு உதவி செய்தல்

📢 எனவே நாளைய இந்த மகத்தான தினத்தை வீணாக்காமல், அனைவரும் அரஃபா நோன்பை முக்கியமாக நோற்று, அல்லாஹ்வின் அருளையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

🤲 அல்லாஹ் நம்முடைய நோன்புகளையும் துஆக்களையும் ஏற்றுக்கொள்வானாக.
ஆமீ

ஜனாஸா அறிவித்தல்யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஜமாலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தி பௌசியா (வைத்தியர்)  இன்று காலை காலம...
25/05/2026

ஜனாஸா அறிவித்தல்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஜமாலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தி பௌசியா (வைத்தியர்) இன்று காலை காலமானார்.

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*

அன்னார் சுபைர் (வைத்தியர்) அவர்களின் மனைவியும், மன்சூர் பெமிலி சொய்ஸ் கடை உரிமையாளர் (கிண்ணியா), ரிஸ்மியா, மன்சில், விஸ்வியா ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா தற்போது அவர்களின் ஆண்டாங்குளம் சம்பாலேன் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகையின் பின்னர் சம்பாலேன் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

*தகவல்*
மகன்
சுபைர் மன்ஸில்
~~~~~~~

22/05/2026

திருகோணமலை ஜனாஸா whatsapp குரூப்பில் நீங்களும் இனிய விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்👇

ஜனாஸா அறிவித்தல்இக்பால் நகரைச்  சேர்ந்த *A.ரூபியா* அவர்கள் காலமானார்கள். *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்* அன்னார் க...
22/05/2026

ஜனாஸா அறிவித்தல்

இக்பால் நகரைச் சேர்ந்த *A.ரூபியா* அவர்கள் காலமானார்கள்.

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*

அன்னார் காலம் சென்ற மர்ஹும் அபூபக்கர் அவர்களின் மனைவியும், றிபாயா என்பவரின் தாயாரும், இம்தியாஸ் என்பவரின் மாமியும், சுல்பியா, சகிலா, ஹனூன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

*ஜனாஸா நல்லடக்கம்*

இன்ஷா அல்லாஹ் *நாளை சனிக்கிழமை* (2026-05-23) காலை 09.00 மணிக்கு இக்பால் நகர் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
I.இம்தியாஸ்
மருமகன்.

 #ஜனாசா_அறிவித்தல் வான் எல, பணிச்சகுளத்தை பிறப்பிடமாக கொண்ட அமீர்கான் ராஜர்கான் என்பவர் இன்று 22-05-2026 காலை 11.00 மணிள...
22/05/2026

#ஜனாசா_அறிவித்தல்

வான் எல, பணிச்சகுளத்தை பிறப்பிடமாக கொண்ட
அமீர்கான் ராஜர்கான் என்பவர் இன்று 22-05-2026 காலை 11.00 மணிளவில் வபாத்தானார்,

"இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்"

அன்னார் மர்ஹும் அமீர்கான், கதீஜா உம்மா என்பவர்களின் அன்பு மகனும்,

பஷ்மியா என்பவரின் அன்புக் கணவரும்,

ரிஜானா,
ரிஸ்கானா,
பாதிமா சீரோ,
ரீஹா என்பவர்களின் அன்புத் தந்தையும்,

சகீல் மௌலவியின் மாமனாரும்,

மசாஹிதா,
மானுன் வீவீ,
ரஹ்மா வீவீ,
தெளபீக்,
நியாஸ்,
ரியாஸ்,
என்பவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்,

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் வான் எல பணிச்சங்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக ஆமீன்

தகவல்:
மகள் ரிஜானா,

20/05/2026

திருகோணமலை ஜமாலியா மையவாடியின் உட்புற பூச்சிப்பணி தற்பொழுது நிறைவடைந்துள்ளது

20/05/2026

ஜமாலியா பொது மையவாடி சுற்றுமதில் வேலைகளின் தற்போதைய நிலை. மேலும் உதவக்கூடியவர்கள் இருந்தால்...
தொடர்புகளுக்கு:
தலைவர் - 077 441 0646
செயலாளர் - 077 456 7775
பொருளாளர் - 0754266903

 #ஜனாஸா_அறிவித்தல்மூதூரை பிறப்பிடமாகவும் பெரிய கிண்ணியா 6ம் வட்டாரத்தை  வசிப்பிடமாகவும் கொண்ட லொட்ஸ் பஷீர் என்றழைக்கப்பட...
18/05/2026

#ஜனாஸா_அறிவித்தல்

மூதூரை பிறப்பிடமாகவும் பெரிய கிண்ணியா 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட லொட்ஸ் பஷீர் என்றழைக்கப்படும் அசனார் லெப்பை வதூத் என்பவர் இன்று 18-05-2026 காலை 7.00 மணியளவில் வபாத்தானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹும்களான அசனார் லெப்பை அஹமது நாச்சியா என்பவர்களின் அன்பு மகனும்

ஆமாத்து ஆசியா உம்மா என்பவரின் அன்புக் கணவரும்

சமீனா, சப்ரி, என்பவர்களின் அன்புத் தந்தையும்

முஜாகித் என்பவரின் அன்பு மாமனாரும்

அப்துல் மஜீது (ஓய்வு பெற்ற பிரிமா உத்தியோகத்தர்),
அப்துல் கபூர் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர், அப்துல் பரீட், றசீது, என்பவர்களின் மச்சானும்,

சித்தி உம்மா, மர்ஹும்களான நாகூர் உம்மா, மைசூரா, என்பவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்,

அன்னாரின் ஜனாஸா இன்று மஃரிப் தொழுகையுடன் மஸ்ஜிதுல் ஹைர் ஜும்மா பள்ளியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு பெரிய கிண்ணியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக ஆமீன்

தகவல்:
மகன் சப்ரி

ஜனாஸா அறிவித்தல்இறக்கக்கண்டியச் சேர்ந்த பதுர்தீன் தாரிக் என்பவர் காலமானர்"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"அன்னார் சம்...
18/05/2026

ஜனாஸா அறிவித்தல்

இறக்கக்கண்டியச் சேர்ந்த பதுர்தீன் தாரிக் என்பவர் காலமானர்

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அன்னார் சம்சுன் பேகம் என்பவரின் அன்புக் கணவரும் முன்ரா, சம்றா, ரக்சானா, அக்குல், அகாத், ருக்ஸானா, முபா ஆகியோரின் அன்புத் தந்தை யும் ஆவார்.

அன்னார் மாஹித், ஹரீஸ், சரூக், நியாஸ், செய்யன முஹமத் என்பவர்களின் சகோதரரும் இம்ஷாத் என்பவரின் மாமானாரும்ஆவார்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின் இறக்கக்கண்டி பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப் படும்.

 #ஜனாஸா_அறிவித்தல் பெரிய கிண்ணியா 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் குறிஞ்சாக்கேணி 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்...
18/05/2026

#ஜனாஸா_அறிவித்தல்

பெரிய கிண்ணியா 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் குறிஞ்சாக்கேணி 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ஹமீத் கிதாயத்துள்ளா ஒய்வு பெற்ற இலங்கை ஊழியர் இன்று 18-05-2026 காலை 9.30 மணியளவில் வபாத்தானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹும்களான அப்துல் ஹமீது, செய்தூன் வீவீ, என்பவர்களின் அன்பு மகனும்,

சித்தி நெளஷா உம்மா என்பவரின் அன்புக் கணவரும்,

கில்மி பொலிஸ் உத்தியோகத்தர், ஜஹான், ஜெஸ்மின், ஜாவித் பொலிஸ் உத்தியோகத்தர், பஹ்மிதா CTB , பிக்லி, என்பவர்களின் அன்புத் தந்தையும்

சனூஸ் முன்னால் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர், றிபாத், நாதிரா, சுந்தூஸ், என்பவர்களின் மாமனாரும்,

மிஃளார் முன்னாள் சதோச ஊழியர், நசுருள்ளாஹ் ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர், மர்ஹும் ரசீது ஓய்வு பெற்ற ஆசிரியர், கிதாயத்துநிஷா, என்பவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையுடன் குறிஞ்சாக்கேணி ஜும்மா பள்ளியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு குறிஞ்சாக்கேணி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக ஆமீன்

தகவல்:
மகன்கள்

Address

Jamaliya Al Quran Madarasa Building, Jamaliya Street
Trincomalee
31000

Telephone

+94767711377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco Janaza Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Trinco Janaza Welfare Society:

Share