Journey to jannah tamil

Journey to jannah tamil ​"அல்லாஹ்வின் திருப்தியை நாடி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நோக்கிய நமது பயணம். அன்றாட துஆக்கள், பயான்கள் மற்றும் இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டல்கள்."

01/02/2026

இஸ்லாமிய வரலாற்றில் முதல் பாங்கு (தொழுகை அழைப்பு) சொன்னவர் யார்?
​Option A: பிலால் (ரலி)
​Option B: அபூபக்கர் (ரலி)
​Option C: உமர் (ரலி)
​மக்கள் பதில் சொல்ல வேண்டிய முறை:
​"சரியான விடை A-வா, B-யா அல்லது C-யா? உங்களுக்குத் தெரிந்தால் உடனே கீழே கமெண்ட் பண்ணுங்க!"

31/01/2026

"அஸ்ஸலாமு அலைக்கும்! 🌟
​நமது ஈமானை உறுதிப்படுத்தவும், அறிவை வளர்க்கவும் இன்றைய ஒரு சிறிய கேள்வி:
​கேள்வி: திருக்குர்ஆனில் உள்ள மொத்த சூராக்களின் (அத்தியாயங்களின்) எண்ணிக்கை எத்தனை?
​A) 110
B) 114
C) 120
D) 100
​சரியான பதிலை தெரிந்தவர்கள் கீழே கமெண்ட் செய்யுங்கள்! இன்ஷா அல்லாஹ், சரியான விடை அடுத்த பதிவில் அறிவிக்கப்படும்.
​நமது Janani to Jannah Tamil சேனலைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். ஜஸாக்கல்லாஹ் ஹைரன்."

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அ...
23/02/2025

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

Journey to jannah tamil பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
22/02/2025

Journey to jannah tamil பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

22/02/2025

Journey to jannah tamil இதை_கேட்டால்_நோன்பு_வைக்காமல்_இருக்க_மாட்டீர்கள்•| to jannah tamil |

21/02/2025

போர்கள் மற்றும் கலவரத்தின் போது
اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!
ஆதாரம்: புகாரி

19/02/2025

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது
اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ
இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!
ஆதாரம்: புகாரி

18/02/2025

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்👇

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்

13/02/2025

தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபாலி வல் ஆஜாமி வள்ளிராபி வல் அவ்திய(த்)தி வ மனாபிதிஷ் ஷஜரி
பொருள் : யா அல்லாஹ்! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

13/02/2025

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது
اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ஃபனீ இதா கான(த்)தில் வஃபா(த்)து கைரன் லீ
பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!
ஆதாரம்: புகாரி

13/02/2025

اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்பன்னாஸி அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபிஹி வஅன்தஷ் ஷாஃபீ லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவு(க்)க ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா.
பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!
ஆதாரம்: புகாரி
لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ
லா பஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்
பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக் கூறலாம்.

Address

654,thaib Nager,Thampalakamam
Trincomalee
31050

Telephone

+96566151047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journey to jannah tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share