துறையூர் News

துறையூர் News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from துறையூர் News, Sammanthurai.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதிக்கீட்டின் கீழ் கௌரவ தவிசாளர்  #மாஹிர் அவர்கள் மாகாண சபை உறுப்பினராக இருந்த போது அவரத...
22/01/2026

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதிக்கீட்டின் கீழ் கௌரவ தவிசாளர் #மாஹிர் அவர்கள் மாகாண சபை உறுப்பினராக இருந்த போது அவரது பிரேரணையின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட ஜ ரோட் திட்ட வீதிகளில் மிக நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த கல்லரிச்சல் சலாம் பள்ளி முன் வீதி மற்றும் மதீனா உம்மா வீதிகள் மீண்டும் பிரதேச சபை கௌரவ தவிசாளர் மாஹிர் அவர்களின் அனுமதியுடன் புனர்நிர்மாண பணிகள் மிக விரைவில் இடம் பெற உள்ளது.
இதன் போது கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் நயீம் ஆசிரியர், பஹ்மி, RDA இன்ஜினியர் , அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் என அனைவரினதும் பங்குபற்றுதலுடன் ஆலோசனைகள் பெறப்பட்டு இன்னும் சில வாரங்களில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

வாழ்த்துக்கள் சம்மாந்துறை மாஹிர் அவர்களே!--------------------------------------------------பொது நிர்வாகம், மாகாண சபைகள் ...
19/01/2026

வாழ்த்துக்கள் சம்மாந்துறை மாஹிர் அவர்களே!
--------------------------------------------------
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நாடு முழுவதுமுள்ள உள்ளூராட்சி சபைகளை 3 பிரிவுகளாகத் தரம் பிரித்துள்ளது தேர்வு நடத்தியது்

இதனடிப்படையில் அதிசிறந்த உள்ளுராட்சி மன்றமாக அம்பாறை மாவட்டத்தில் அகில மக்கள் காங்கிரஸை சேர்ந்த ஐ. எல்.எம். மாஹிர் அவர்கள் தலைமையிலான சம்மாந்துறை பிரதேச சபை முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

தவிசாளருக்கும் உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

Eagle , triple G மற்றும் strikers ஆகிய விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான  6 ஓவர்கள் கொண்ட  சுற்றுப்போட்டியானது சம்மாந்துற...
15/01/2026

Eagle , triple G மற்றும் strikers ஆகிய விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான 6 ஓவர்கள் கொண்ட சுற்றுப்போட்டியானது சம்மாந்துறை பொது மைதானத்தில் 2026.01.09 இடம்பெற்றது...

இப்போட்டியில் strikers கழகம் பட்டத்தை வென்றது...♥️ மேலும் இப்போட்டியில் அதீதியாக கலந்து கொண்ட ஆசிரியர் பிரதேச சபை உறுப்பினர் நயீம் அவர்கள் வீரர்களுக்கான வெற்றிக்கேடயத்தை வழங்கி வைத்தார்.

சம்மாந்துறையின் பெருமைக்குரிய மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கி வைப்பு!சம்மாந்துறை பிரதேச சபையினால் அல்-மர்ஜான் முஸ்லிம் மக...
15/01/2026

சம்மாந்துறையின் பெருமைக்குரிய மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கி வைப்பு!

சம்மாந்துறை பிரதேச சபையினால் அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் மாணவி எம்.ஐ.எப்.ஹிமா, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 10 கல்வி பயிலும் மாணவன் எம்.ஏ.ஏ.அஸ்ரிப், ஆகிய இரு மாணவர்களும் பாடசாலை ரீதியாக நடைபெற்ற புத்தாக்க போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றமைக்கு அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஆதரவுடன், சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் 07ஆவது அமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற பின்னர் குறிப்பிட்ட இரு மாணவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் பணப்பரிசு மற்றும் பெண்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

 #சம்மாந்துறை_சிறுவர்_பூங்கா புணர்நிர்மானம் தொடர்பாக அவ்விடத்தை பார்வையிட்டு பயனாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த கௌரவ ப...
11/01/2026

#சம்மாந்துறை_சிறுவர்_பூங்கா
புணர்நிர்மானம் தொடர்பாக அவ்விடத்தை பார்வையிட்டு பயனாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த கௌரவ பிரதேச சபை தவிசாளர் மாஹிர் அவர்கள்.
மிக விரைவில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட உள்ளது

 #ஜித்தா_ஹஜ் –  #இலங்கை கொன்சியூலர் ஜெனரலாக ஒரு முஸ்லிம் நியமனம் ஏன் அவசியம்?இலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரைக்குச் ச...
03/01/2026

#ஜித்தா_ஹஜ் – #இலங்கை கொன்சியூலர் ஜெனரலாக ஒரு முஸ்லிம் நியமனம் ஏன் அவசியம்?

இலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்திரிகர்களின் மத, நிர்வாக மற்றும் மனிதாபிமான தேவைகளை கருத்தில் கொண்டு, ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் பதவிக்கு ஒரு தகுதியான முஸ்லிம் நியமிக்கப்படுவது காலத்தின் அவசியமாகும்.

ஹஜ் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கியமான ஒரு புனித கடமை. அதன் அமல்கள், ஷரீஅத் சட்டங்கள் மற்றும் மத நடைமுறைகள் குறித்த ஆழமான புரிதல் அவசியம். இவ்வாறான நிலையில், ஹஜ் தொடர்பான விடயங்களில் நேரடி பொறுப்பு வகிக்கும் கொன்சியூலர் ஜெனரல் பதவியில் முஸ்லிம் ஒருவர் இருப்பது யாத்திரிகர்களின் பிரச்சினைகளை சரியாக புரிந்து விரைவாக தீர்வு காண உதவும்.
மேலும், சவுதி அரேபிய ஹஜ் அமைச்சகம், முகவாசல்கள், தங்குமிடம், போக்குவரத்து, உணவு மற்றும் அவசர சேவைகள் தொடர்பான ஒருங்கிணைப்புகளில் முஸ்லிம் கொன்சியூலர் ஜெனரலின் பங்கு மிக முக்கியமானதாகும். இது சேவைகளின் தரத்தை மேம்படுத்தி, இலங்கை ஹாஜிகளின் உரிமைகள் மற்றும் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது
இலங்கை ஒரு பன்மத நாடாக இருப்பினும், ஒவ்வொரு சமூகத்தின் மத உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய ஹஜ் போன்ற புனித மதக் கடமையை நிர்வகிக்கும் முக்கிய பதவியில் ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவது நியாயமானதும் பொருத்தமானதும் ஆகும்.
எனவே, அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்த விடயத்தை தீவிரமாக பரிசீலித்து, ஜித்தா ஹஜ் – இலங்கை கொன்சியூலர் ஜெனரல் பதவிக்கு தகுதி மற்றும் அனுபவம் கொண்ட ஒரு முஸ்லிமை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய அரச துறைகள் மற்றும் அமைச்சரவையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டது போன்று முஸ்லீம்களின் மத நம்பிக்கைகளில் தனது இனபேத உள்தினிப்பை ஏற்படுத்தாமல் நியாயமான முறையில் முஸ்லீம்களின் உணர்வை மதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

Acm Nayeem (B.Ed)
Member of pradeshiya sabha
Sammanthurai

சோசியல் டிவியின் "55ஆளுமைகளை கௌரவிக்கும்" விருது விழா  மிக விமர்சையாக நடைபெற்றது!இலங்கையின் பல்வேறு துறைகளில் தடம் பதித்...
19/12/2025

சோசியல் டிவியின் "55ஆளுமைகளை கௌரவிக்கும்" விருது விழா மிக விமர்சையாக நடைபெற்றது!

இலங்கையின் பல்வேறு துறைகளில் தடம் பதித்த 55 சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விருது வழங்கும் விழா,
​இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் டிசம்பர் 13 திகதி சோசியல் டிவி ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் என்.எம்.சிறாஜ் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதியாக 24 படைப்பிரிவின் தலைமையக இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ. ஜயவீர , விஷேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கையை சேர்ந்த ஊடகம், இலக்கியம், தொழில் முயற்ச்சி போன்ற பல் துறை ஆளுமைகள் 55 பேர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

​மேலும், கிழக்கு கேடயத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ், சம்மாந்துறை TOP STYLE நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஐ.எம். பிரோஸ் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சீ.எம்.நயீம் ஆசிரியர் எஸ்.எல்.எம். பஹ்மி, ஏ.எச். காலித், ஏ.எல். ஹாத்திக் இப்ராஹிம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பெருந்திரளான ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 #சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட செந்நெல் கிராமம்-02 புலியடி இரண்டாம்  வீதி பாதை புனரமைப்பு நடவடிக்கை! 2025....
17/12/2025

#சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட செந்நெல் கிராமம்-02 புலியடி இரண்டாம் வீதி பாதை புனரமைப்பு நடவடிக்கை!

2025.12.17 சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான நயீம் ஆசிரியர், முஹம்மட் ஆசிக், அமீர் அப்னான் மற்றும் வாணி சத்தார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கௌரவ தவிசாளர் மாஹிர் சேர் அவர்களின் பணிப்புரையின் கிழ் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

08/12/2025

#இலங்கை வெள்ள அனர்த்தம் பற்றிய அழகான பாடல் பாடல் வரிகளை எழுதியவரை பாரட்டியே ஆக வேண்டும்
மிஸ் பண்ணாம கேளுங்க

01/12/2025

பணி மூட்டங்களால் நிறைந்த காணப்பட்ட சம்மாந்துறை மாவடிப்பள்ளி

30/11/2025

மழை வெள்ளத்தால் ஊருக்குள் புகுந்த யானை

இன்று மாணிக்கம்பிட்டியில் வெள்ளம் வழிந்தோடிய பின் பதிவான காட்சிகள்
30/11/2025

இன்று மாணிக்கம்பிட்டியில் வெள்ளம் வழிந்தோடிய பின் பதிவான காட்சிகள்

Address

Sammanthurai

Telephone

+94774845155

Website

Alerts

Be the first to know and let us send you an email when துறையூர் News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to துறையூர் News:

Share