05/08/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
2026.08.03 திகதி ஆயிஷா பள்ளி நிர்வாகிகள் ஒன்று கூடி ஏனைய 7 பள்ளிகளின் ஆதரவுடன் ஆயிஷா மஹல்லாவிலே வசிக்கும் ஒரு குடும்பத்தை பற்றி மஹல்லாவாசிகளினால் எழுத்து மூலம் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டு மஹல்லாவாசிகளின் ஒத்துழைப்புடன் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு ஒரு 50 பேர் கொண்ட குழுவாக சென்று அந்த வீட்டில் உள்ள திருமணத் தொடர்பு சம்பந்தமாகவும் போதை வியாபாரம் சம்பந்தமாகவும் அண்டை வீட்டாருடன் ஏற்படுத்தப்படும் சர்ச்சை சம்பந்தமாகவும் கலந்துரையாடல் ஒன்று செய்தோம். அதிலே அவர்கள் அண்டை வீட்டார்களுக்கு தொந்தரவு செய்ய மாட்டோம் செய்வதில்லை எனவும் தாங்கள் போதைப் பொருள் வியாபாரம் செய்வதே இல்லை எனவும் அவ்வாறு செய்வதை உங்களால் நிரூபிக்க முடியுமா எனவும் சவால் விட்டனர். அத்தோடு முறையற்ற திருமண தொடர்பு சம்பந்தமாக ஏற்கனவே 2026.01.14 திகதி நிர்வாகத்தினால் சென்றபோது அவர்களின் கைப்பட எழுதிய ஒப்புதல் கடிதம் (முறையாக திருமணம் செய்து கொள்வேன் என்ற) கடிதத்திற்கு அமைய ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை அவ்வாறு செய்து கொள்ளாததின் காரணமாக எங்களது மஹல்லாவிலே வசிக்க முடியாது என்று முடிவை திட்டவட்டமாக நிர்வாகம் கூறியது ஆகவே புத்தளத்தில் வசிக்கும் இந்த வீட்டுப் பெண்மணி இந்த வீட்டிலேயே வசிக்கலாம் என்றும் ஆணாகிய நீங்கள் வேறு இடத்துக்கு மாற வேண்டும் என்றும் கூறிய பொழுது தாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறினார்கள் அதனை எழுத்து மூலமாக பெறப்பட்ட பின்னர் நிர்வாகம் அந்த வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்தில் உள்ள இன்னொரு வீட்டிற்கு சென்று மஹல்லாவாசிகளின் முறைப்பாட்டிற்கு அமைய மதுபானம் அருந்தும் சகோதரரை சந்தித்து அந்தப் பழக்கத்தை விடுமாறு ஆலோசனை வழங்கிவிட்டு அந்த இடத்திலிருந்து வந்து அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றோம்.
அதன் பிறகு அந்த வீட்டிலுள்ளவர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று நிர்வாகத்துக்கு எதிராக தாங்களை நிர்வாகம் பயமுறுத்தியதாகவும் வெளியே போக சொன்னதாகவும் முறைப்பாடு ஒன்றை செய்யப்பட்டது அந்த நிமிடமே போலீஸிலிருந்து ஆயிஷா பள்ளி தலைவர் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி நாளை காலை நிர்வாக உறுப்பினர்கள் ஓரிரு வருவருடன் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு உத்தரவிட்டார்கள் அதன் பிற்பாடு நாங்கள் ஏழு பள்ளிகளின் தலைவர் செயலாளர் சஹிதம் போலீஸ் நிலையத்திற்கு சென்றோம் அதிலே சம்பந்தப்பட்டவர்களும் அழைப்பிக்கப்பட்டு போலீசாரினால் சமரசம் செய்யப்பட்டு சில அறிவுறுத்தல்களை வழங்கினார்கள். அது பின்வருமாறு
1) அந்தத் தாயின் வயிற்றில் ஒரு பிள்ளை இருப்பதனால் ஒன்றரை மாத கால அளவு கொடுக்குமாறும் அந்தக் காலப்பகுதிக்குள் சிறையிலுள்ள கணவரிடம் விவாகரத்து பெற்று இந்தக் கணவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடித்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை போலீசுக்கும் ஆயிஷா பள்ளி நிர்வாகத்திற்கும் காட்சிப்படுத்துமாறும் அத்தோடு போதை பொருள் வியாபாரம் மற்றும் சொந்தங்கள் இன்றி சம்பந்தமில்லாதவர்களின் வருகையும் வீட்டிற்குள் இருக்கக் கூடாது என்றும் நீங்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அந்தந்த பள்ளி நிர்வாகங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்க்கை நடத்துமாறும் எல்லா மதங்களைப் போல மதஸ்தலங்களுக்கு கட்டுப்படுமாறும் அவ்வாறு கட்டுப்படாவிட்டால் உங்களை அந்த பள்ளிகளினால் உத்தியோகபூர்வமாக ஒதுக்கி வைக்கவும் முடியும் என்பதையும் உறுதியாக கூறிக்கொண்டனர்.
அதன்பின்னர் போதை சம்பந்தமாக சில முடிவுகளை பள்ளி நிர்வாகம் எடுக்கும் பொழுது அதற்கு நாட்டின் சட்ட திட்டங்கள் வழி விடாதிருப்பதையும் நிர்வாகங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாகவும் கௌரவ நகர முதல்வருடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது அந்தக் கூட்டத்திலேயே முதல்வர் சமூகமளிக்க முடியாமையினால் அவர் சார்பாக மூன்று மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபையிலே அழகான முறையில் கலந்தாலோசிக்கப்பட்டு தகவல் திரட்டப்பட்டு எதிர் வரக்கூடிய சபை கூட்டத்திலே சில பிரேரணைகளை முன்வைக்க அனைத்து உறுப்பினர்களும் அனுமதியை பெற்று அதனை செய்து முடித்து வழிநடத்துவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். ஆகவே இந்த முன்னெடுப்புக்கள் வெற்றியடைய ஊர் பொதுமக்களாகிய நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுமாறும் அநியாயங்கள் நடைபெறுகின்ற பொழுது அதனை தட்டிக் கேட்கும் சமூகமாகவும் கட்டுப்படுத்தும் அரசியல்வாதிகளையும் உருவாக்குவோம் என்ற நோக்கத்தை அல்லாஹுத்தஆலா நிச்சயமாக நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கையுடன் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம் இன்ஷா அல்லாஹ். 💪