25/10/2025
எமது பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்பு செய்யப்பட்ட காணியில் இரண்டு கடைத் தொகுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 21.02.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அல்லாஹ்வின் உதவியால் நேற்று 24.10.2025 வெள்ளிக்கிழமையுடன் சகல பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு இன்ஷாஅல்லாஹ் 2 வார்த்தகர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
பள்ளிவாயலுக்கு நிரந்தர வருமானத்தை ஈட்டி தரும் இம்மகத்தான பணிக்கு பொருளாதார ரீதியில் ஒத்துழைப்புக்களை தந்துதவிய தனவந்தர்கள், ஜமாத்தார்கள் அனைவருக்கும் பள்ளிவாயல் நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்லாஹ் எம் அனைத்து பணிகளையும், எண்ணங்களையும் கபூல் செய்வானாக! ஆமீன்.