Ummu Ayman Ladies Hiflul Quran Madhrasa-Nintavur

Ummu Ayman Ladies Hiflul Quran Madhrasa-Nintavur ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?55:13

28/12/2024

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் எமது உம்மு அய்மன் மகளிர் மனனக் கலாபீடத்தின் மற்றுமொரு ஹாபிழா நசார் பாத்திமா நுஹா இன்று முழுக் குர்ஆனை மனனமாக ஓதி ஹாபிழா பட்டம் பெற்றுல்லார்

20/12/2024

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் எமது உம்மு அய்மன் மகளிர் மனனக் கலாபீடத்தின் மற்றுமொரு ஹாபிழா ஆதம் பாவா பாத்திமா நுஷ்ரா இன்று முழுக்குர் ஆனை மனனமாக ஓதி ஹாபிழா பட்டம் பெற்றுல்லார்

14/12/2024

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் எமது உம்மு அய்மன் மகளிர் மனனக் கலாபீடத்தின் மற்றுமொரு ஹாபிழா பிர்தௌஸ் பாத்திமா ஷிம்லா இன்று முழுக்குர் ஆனை மனனமாக ஓதி ஹாபிழா பட்டம் பெற்றுல்லார்

(பிர்தௌஸ் மேசன் அவர்களின் மூத்த புதல்வி)

الحمدلله الحمدلله الحمدلله

08/04/2024
01/04/2024

*இஸ்லாத்தில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி அறிந்து கொள்ளுவோம்*

*• லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும்! ரமலானின் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை நாட்களில் தான் மிகவும் சிறப்புமிக்க லைத்துல் கத்ர் இரவு உள்ளது!*

*• லைத்துல் கத்ர் இரவு என்பது 1000 மாதங்களை விட சிறந்த இரவு ஆகும்! இந்த இரவில் அமல் செய்வது 1000 மாதங்கள் அமல் செய்வதை விட சிறந்தது ஆகும்!*

*கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்!*

(சூரத்துல் : அல் கத்ரி : 03)

*1) ஆயிரம் மாதங்கள் என்றால் சுமார் 83 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகும்! நாம் இந்த ஒரு இரவில் செய்யும் அமல் செய்வது சுமார் 83 ஆண்டுகள் அல்லது அதை விட அதிகம் ஆண்டுகள் அமல் செய்த நன்மைகள் நமக்கு கிடைக்கும்!*

*2) லைலத்துல் கத்ர் இரவில் தான் மலக்கு மார்கள் சிறப்பு வருகை தருகின்றார்கள்! மேலும் மலக்கு மார்களின் தலைவர் ஜிப்ரயில் (அலை) அவர்களும் இந்த இரவில் வருகின்றார்கள்!*

*3) லைத்துல் கத்ர் இரவு இன்னும் சிறந்து விளங்க மற்றொரு காரணம் அல்லாஹ் அல் குர்ஆனை முதன் முதலில் இந்த இரவில் தான் இறக்கி அருளினான்!*

(சூரத்துல் : அல் பகரா : 185)

*4) இந்த இரவில் அமைதி நிலவுகின்றன அதுவும் பஜ்ர் வரை!*

*• அல்லாஹ் இந்த இரவின் சிறப்பை பற்றி கூற சூரத்துல் கத்ர் (97) என்று தனி சூராவே இறக்கி இதன் சிறப்பை பற்றி கூறி உள்ளான்! இதில் இருந்து நாம் இதனுடைய மகத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்!*

*• லைத்துல் கத்ர் இரவு ரமலான் கடைசி ஒற்றைப்படை நாட்கள் ( 21, 23, 25, 27, 29 ) ஆகிய நாட்களில் ஏதோ ஒரு இரவில் அல்லாஹ் மறைத்து வைத்து உள்ளான்!*

*• நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அல்லாஹ் இந்த இரவு எது என்று கூறி விட்டு பின்பு மறக்கடித்து விட்டான்!*

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2016)

*• நாம் கடைசி ஒற்றைப்படை நாட்களில் உறுதியாக அமல் செய்தால் நாம் நிச்சயமாக இந்த கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள முடியும்!*

*💟 லைத்துல் கத்ர் எந்த இரவில் உள்ளது :*

*• நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அல்லாஹ் லைத்துல் கத்ர் எந்த இரவில் உள்ளது என்று அறிவித்து கொடுத்தான் இதை நபி (ஸல்) ஸஹாபாக்களுக்கு கூற வந்த பொழுது!*

*• இரண்டு நபர்கள் சச்சரவு செய்து கொண்டு இருந்தார்கள் இதை பார்த்த நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் லைத்துல் கத்ர் இரவை பற்றி மறக்கடித்து விட்டான்! இதுவும் உங்களுக்கு நன்மையாக தான் இருக்கும் அதான் அல்லாஹ் எனக்கு மறக்கடித்து விட்டான் என்று கூறினார்கள்!*

(நூல் : ஸஹீஹ் புகாரி : 49)

*• மறைக்கப்பட்ட காரணம் சில : இன்றும் நாம் பலரை பார்க்கலாம் ரமலான் மாதங்களில் கூட தொழுகை இல்லாமல் நோன்பு இல்லாமல் பலர் இருந்து கொண்டு உள்ளார்கள்!*

*• நபி (ஸல்) அவர்கள் ஒரு வேலை இந்த இரவு தான் லைத்துல் கத்ர் இரவு என்று குறிப்பிட்டு கூறி இருந்தால் பெயர் அளவில் முஸ்லீம் என்று கூறி கொள்ள கூடியவர்கள் கூட அந்த ஒரு நாளில் மட்டும் நோன்பு வைத்து லைத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ளுவார்கள்!*

*• பின்பு தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் இந்த ரமலானில் அமல் செய்து வந்த முஹ்மின்களுக்கும்! பெயர் அளவில் முஸ்லீம் ஆக உள்ளவர்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது???*

*• உறுதியான நன்மைகளை எதிர்பார்த்து ரமலானில் அதிகம் அமல்கள் செய்ய கூடியவர்களால் மட்டும் தான் இன்ஷாஅல்லாஹ் அந்த இரவை அடைந்து கொள்ள முடியும்!*

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!*

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2017)

*• நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசி ஒற்றைப்படை நாட்கள் ( 21, 23, 25, 27, 29 ) ஆகி நாட்களில் லைலத்துல் கத்ர் இரவை தேட சொல்லி உள்ளார்கள்!*

*• நாம் நன்மையை எதிர் பார்த்து கடைசி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் இரவை தேடினால் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக நாம் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முடியும்!*

*💟 லைலத்துல் கத்ர் 27வது இரவா :*

*• அல்லாஹ் பாதுகாக்கணும் நம்முடைய முஸ்லீம் சமூகத்தின் அறியாமை பலர் ரமலானின் கடைசி ஒரு இரவு 27 யில் மட்டும் லைலதுல் கத்ர் இரவு உள்ளது என எண்ணி அன்று இரவை மட்டும் விஷேசமாக கொண்டாடி புது ஆடை அணிந்து அந்த இரவில் மட்டும் நின்று வணங்கி அமல் செய்து மற்ற நாட்களை விட்டு விடுகிறார்கள்!*

*• நபி (ஸல்) அவர்களுக்கே தெளிவாக கடைசி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு உள்ளது என்று கூறி உள்ளார்கள்!*

*• லைலத்துல் கத்ர் இரவு இந்த இரவு தான் என்று நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது போது நாம் மட்டும் ஒரு குறிப்பிட்ட நாளை லைலத்துல் கத்ர் இரவு எண்னி அமல் செய்வது மடமையே!*

*• ஒரு வேலை 27 வது இரவு லைலத்துல் கத்ர் ஆக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் 27 வது இரவு லைலத்துல் கத்ர் இரவாக இல்லை என்றால் நம்மை விட பெரிய நஷ்டவாளி யாரும் இருக்க முடியாது!?*

*• இன்னும் சிலர் அல்லாஹ் பாதுகாக்கணும் : சூரத்துல் கத்ர் : 97 வது சூராவில் அல்லாஹ் மூன்று முறை லைலத்துல் கத்ரு என்று கூறி உள்ளான்!*

*• இதில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மொத்தம் 9 எழுத்து ஆகும் மூன்று முறை என்றால் 27 ஆகும் அதனால் 27 வது இரவு லைத்துல் கத்ரு இரவு இவர்களே ஒன்றை கணக்கு செய்து தீர்மானித்து கொண்டு உள்ளார்கள் அல்லாஹ் பாதுகாக்கணும்!*

*• ஆனால் இவ்வாறு ஒரு கணக்கு முறை நபி (ஸல்) அவர்கள் யாருக்கும் சொல்லி கொடுக்க வில்லை! ஸஹாபாக்கள் யாரும் இவ்வாறு கூறவில்லை! தாபியின்கள் தபா தாபியின்கள் யாரும் இவ்வாறு ஒன்றை கூறவில்லை சில வழிகெட்ட கொள்கை உடையவர்கள் தான் இவ்வாறு ஒன்றை உருவாக்கி கொண்டார்கள் நவுதுபில்லாஹ்!*

*• நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் 21 வது இரவு 23 வது இரவு அல்லது 25 வது இரவு அல்லது 27 வது இரவு அல்லது 29 வது இரவு தான் லைலத்துல் கத்ர் என்று கூறி உள்ளார்கள்!*

(நூல் : அபூதாவூத் : 1178 | அஹ்மத் : 15466 | புகாரி : 2021 & 2022)

*• அதனால் நாம் கடைசி ஒற்றைப்படை நாட்களில் அதை தேடினல் இன்ஷாஅல்லாஹ் அதை நாம் அடைந்து கொள்ளலாம்!*

*💟 லைலத்துல் கத்ர் இரவின் ஆரம்பம் & முடிவு :*

*• லைலத்துல் கத்ர் இரவு ஆரம்பம் மஹ்ரிப் நேரத்தில் இருந்து பஜ்ர் நேரம் பாங்கு கூறும் முன் வரை இருக்கும்!*

*சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்!*

(சூரத்துல் : அல் கத்ர் : 05)

*💟 லைலத்துல் கத்ர் இரவின் கூலி :*

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய குற்றங்கள் மன்னிக்கப்படும்!*

(நூல் : ஸஹீஹ் புகாரி : 35)

*💟 லைலத்துல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய அமல்கள் :*

*• நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு என்று குறிப்பிட்ட சிறப்பான அமல் எதுவும் செய்தது கிடையாது!*

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் :

*(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்! இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்! (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!*

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2024)

*• நபி (ஸல்) அவர்கள் இந்த இரவில் நின்று அதிகம் தொழுது உள்ளார்கள் பிறரையும் தொழ சொல்லி உள்ளார்கள் !*

*• நாம் ஒற்றை படை இரவுகளில் நமது சக்திக்கு ஏற்றவாறு 2+2 ஆக அதிகம் தொழ வேண்டும்! அல்குர்ஆன் ஓதுதல் தஸ்பீக் செய்தல்! அதிகம் துஆ செய்தால்! அதிகம் தவ்பா (பாவமன்னிப்பு) அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்! இது போன்ற அமல்களில் ஈடுப்பட வேண்டும்!*

*• நபி (ஸல்) அவர்கள் ரமலான் இறுதியில் அதிகம் பேணி செய்த அமல் இஃதிகாஃப் ஆகும்! நாம் குறைந்தது ஒரு நாளாவது பள்ளியில் இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!*

*• அல்லாஹ் பாதுகாக்கணும் சில ஊர்களில் அவர்களே புதியதாக லைலத்துல் கத்ர் இரவுக்கேன்று சிறப்பு தொழுகையை உருவாக்கி கொண்டு அதை தொழுகிறார்கள் ஆனால் இதற்கு எந்த கூலியும் கிடைக்காது!*

*• இன்னும் சில ஊர்களில் தஸ்பீக் தொழுகை தொழுகிறார்கள் இது சம்பந்தமாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கிடையாது இந்த தொழுகையும் நாம் தொழ கூடாது!*

*💟 மாதவிடாய் பெண்களும் லைத்துல் கத்ர் இரவும் :*

*• மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தொழவோ அல்லது நோன்பு வைக்கவோ அல்லது இயதிகாஃப் இருக்கவோ அனுமதி கிடையாது!*

*• இதனால் பெண்கள் இதை தவிர்த்து இந்த இரவில் அதிகம் அல்குர்ஆன் ஓதுதல், தஸ்பீக் செய்தல்! அதிகம் துஆ செய்தால்! அதிகம் தவ்பா (பாவமன்னிப்பு) அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்! இது போன்ற அமல்களில் ஈடுப்பட வேண்டும்!*

*• அல்லாஹ் தான் பெண்களுக்கு மாதவிடாய் என்று ஏற்படுத்தி உள்ளான் அதனால் ஒற்றைப்படை நாட்களில் தொழ முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்! அல்லாஹ் உங்களுக்கு ஏற்ற கூலியை முழுமையாக இன்ஷாஅல்லாஹ் கொடுப்பான்!*

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும் போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும் போது அல்லது பயணத்தில் இருக்கும் போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்!*

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2996)

*💟 லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ :*

*اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي*

*‘ அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி ’*

*பொருள் :* அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன்! மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!

(நூல் : சுனன் திர்மிதி : 3580)

*💟 லைலத்துல் கத்ர் இரவின் சில அடையாளங்கள் :*

*1) லைலத்துல் கத்ர் இரவு குளிராகவோ, சூடாகவோ இருக்காது! மாறாக சாந்தமாகவும் அமைதியாகவும் காணப்படும்!*

(நூல் : இப்னு குஸைமா : 2192)

*2) லைலத்துல் கத்ர் இரவில் மழை பொழியும்!*

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2016)

*3) அந்த இரவை அடுத்து வரும் காலை பொழுதில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மங்கிய நிலையில் காணப்படும்!*

(நூல் : முஸ்னது அஹ்மத் : 20249)

*4) காலை சூரியன் உதிக்கும் போது வெப்பமே இல்லாமல்! (சந்திரனைப் போன்று) உதிக்கும்!*

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2175)

*5) லைத்துல் கத்ர் இரவில் காற்று இல்லாமல் நிதானமாகவும் இருக்கும்!*

*6) அந்த இரவில் சந்திரன் (மேக மூட்டம் இல்லாத காரணமாக) பிரகாசித்துக் கொண்டிருக்கும்!*

*7) அந்த இரவில் குளிரும் இருக்காது வெப்பமும் இருக்காது!*

*8) வானத்தில் ஏறி கற்கள் விழாது!*

(நூல் : அஹ்மத் : 5 / 324)

*9) உணவுத் தட்டின் பாதித்துண்டைப் போன்று நிலா தோன்றும்!*

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2177)

*💟 லைலத்துல் கத்ர் இரவு பற்றி சில குறிப்புகள் :*

*1) இந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் அதிகம் அமல் செய்ய சொல்லி உள்ளார்கள் ஆனால் என்ன அமல் செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று கூறவில்லை!*

*• இன்று பல ஊர்களில் விஷேஷ தொழுகை புதியதாக தொழுகையில் நிறைய சேர்த்து நபி (ஸல்) அவர்கள் காட்டிதராத அமல்களை எல்லாம் செய்கிறார்கள்!*

*2) இந்த இரவை பற்றி வர கூடிய சூரா கத்ர் (97) இந்த சூராவிற்கு என்று எந்த சிறப்பும் நபி (ஸல்) அவர்கள் சொல்ல வில்லை ஆனால் இன்று பலர் இதற்கு நிறைய சிறப்புகள் கூறி இதை ஓதுகிறார்கள் இது ஒரு சூரா என்ற நோக்கில் ஓதலாம் ஆனால் இந்த சிறப்பு உள்ளது என்று ஓதினால் அது பிழையாகும்!*

*3) சில ஊர்களில் ஒற்றை படை நாட்களில் புது ஆடை அணிவது அல்லது 27 வது நாளில் புது ஆடை அணிவது விஷேச உணவு வீட்டை அழங்காரம் செய்வது போன்ற செயல்களை மார்க்கம் என்ற பெயரில் செய்கிறார்கள் ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!*

*இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் பள்ளியில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹ் போன்ற அவ்றாதுகளை சத்தமிட்ட வண்ணம் செய்தவர்களை வன்மையாகக் கண்டித்தார்கள். அத்தோடு அம்ரு இப்னு ஸலமா என்ற ஸஹாபி கூறுகின்றார்: அன்றைய தினம் சத்தமிட்ட வண்ணம் அவ்றாதுகளைக் கூறியவர்களை நகர்வான் என்ற இடத்தில் கவாரிஜ்களுடன் இருப்பதைக் கண்டேன்.*

*(அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்ஸஹீஹா என்ற புத்தகத்தில் பதிவாகியுள்ளது)*

27/12/2023

அஷ் ஷய்க் நஜ்முத்தீன் முப்தி(ஹிழ்ரி)

Address

256, 3rd Cross Street, Nintavur 04
Nintavur
32340

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Sunday 16:00 - 20:00

Telephone

+94774839898

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummu Ayman Ladies Hiflul Quran Madhrasa-Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ummu Ayman Ladies Hiflul Quran Madhrasa-Nintavur:

Share