23/12/2025
🙏ஓம் கன்னி மூல கணபதி பகவானே🙏
🌹சரணம் ஐயப்பா🌹
நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம்
யாத்திரை குழுவின்🙏43 வது மண்டல பூஜை🙏 எதிர்வரும் (27-12-2025)) சனிக்கிழமை மகா மண்டல பூஜை நடத்துவதற்காக ஐயனின் உத்தரவு கிடைத்துள்ளது.
பால்குட பவனி காலை 07.30-08.00 மணி (பக்தர்கள் உரிய நேரத்தில் கலந்துகொண்டு பூஜைகளில் கலந்து ஐயன் அருளைப்பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்!)
(27.12.2025) அன்று நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாச்சார மண்டபத்தில்(YMHA)காலை 08.30 மணி : மஹா கணபதி ஹோமம் நடைபெற்ற பின் பின்னர் பஜனை மற்றும் பகல் 12.00 மணிக்கு மகேஸ்வர பூஜை நிறைவுடன் அன்னதானம் நடைபெறும்.
மாலை : நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாச்சார மண்டபத்தில்(YMHA) மாலை 06.00 மணிக்கு விசேட பூஜைகள் ஆரம்பமாகி பஜனை, தீபாராதனைகள் இடம்பெற்று ஐயன் இந்து இளைஞர் மன்ற கலாச்சார மண்டபத்திலிருந்து சன்னிதானம் சென்றடைவார், அதனைத் தொடர்ந்து ஜோதி பிரசாதம் வழங்கப்படும்.
ஐயப்ப சுவாமிகள் ,அடியார்கள் அனைவரும் மண்டல பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஐயன் ஐயப்பனின் அருள் பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்.
அனைவரையும் வருக வருகவென்று அழைக்கின்றோம்.🙏🙏🙏
♦️அமரர் செ. ரவிச்சந்திரன் குருசுவாமியின் ஆசியுடன் G.ஜெகநாதன் மாஸ்டர் குருசுவாமி.
✍️ Negombo Thanush