Nainativu Nagapooshani Amman Kovil

Nainativu Nagapooshani Amman Kovil Official page of the Nainathivu Nagapooshani Amman Kovil

08/07/2022
நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய சுபகிருது வருட மகோற்சவ விஞ்ஞாபனம் 202229.06.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14....
29/05/2022

நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய சுபகிருது வருட மகோற்சவ விஞ்ஞாபனம் 2022

29.06.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.07.2022 தெற்போற்சவத்துடன் நிறைவடைய அம்பிகையின் திருவருள் கைகூடியுள்ளது.

👉 கொடியேற்றம் - 29.06.2022 (புதன்கிழமை )
👉 முத்துச்சப்பறம்- 03.07.2022(ஞாயிற்றுக்கிழமை)
👉 திருக்கயிலைக் காட்சி - 05.07.2022 (செவ்வாய்க்கிழமை)
👉 திருமஞ்சம் - 08.07.2022 (வெள்ளிக்கிழமை)
👉 கருடசர்ப்ப பூசையும் வாயுபட்ஷணிதிருவீதியுலாவும் - 09.07.2022 (சனிக்கிழமை)
👉 சப்பைரத திருவிழா - 11.07.2022 (திங்கட்கிழமை)
👉 தேர்த்திருவிழா - 12.07.2022 (செவ்வாய்க்கிழமை)
👉 தீர்த்தோற்சவம் - 13.07.2022 (புதன்கிழமை)
👉 தெப்போற்சவம் - 14.07.2022 (வியாழக்கிழமை)

அம்பிகை அடியார்களுக்கான விசேட அறிவித்தல்நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் நிர்வாகப் பணிமனையுடனான தொடர்புகளுக்காக,...
04/05/2022

அம்பிகை அடியார்களுக்கான விசேட அறிவித்தல்

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் நிர்வாகப் பணிமனையுடனான தொடர்புகளுக்காக, ஏற்கனவே பாவனையிலுள்ள தொலைபேசி இலக்கங்களான 021 321 3024, 021 320 7785 என்பனவற்றுக்கு மேலதிகமாக தற்போது 021 432 3440, 021 432 3447 ஆகிய இரு புதிய தொலைபேசி இலக்கங்களினை அடியவர்களின் வசதி கருதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அறியத்தந்துள்ளார்கள்.

மேற்படி நான்கு தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவும் அடியவர்கள் தங்கள் தொடர்புகளினை இலகுவாக மேற்கொள்ளமுடியும் .

அறங்காவலர் சபை
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்
நயினாதீவு

📢 அம்பிகையடியார்களே! மகோற்சவத்தினை காலவரையின்றி ஒத்திவைத்தல்.நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம்,  ...
01/09/2021

📢 அம்பிகையடியார்களே!

மகோற்சவத்தினை காலவரையின்றி ஒத்திவைத்தல்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம், ஜூன் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, செப்டெம்பர் 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதும் நாட்டில் கொரோனாவின் பரம்பல் அதிகரித்துச் செல்வதால், முன்னர் ஒத்திவைக்கப்பட்டதைப் போன்று இம்மாதம் 06ஆம் திகதியன்று மகோற்சவத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த வருடத்திற்கான மகோற்சவமானது, நாட்டில் கொரோனா வைரஸ் அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் இடம்பெறாது என தெரிவித்துக் கொள்கின்றோம்.

அறங்காவலர் சபையினர்,
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில்.

📢 நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் மெய்யடியார்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்.நாட்டில் தற்போதைய கொரோனாத் தொற்று (covid-19) ...
19/08/2021

📢 நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் மெய்யடியார்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்.

நாட்டில் தற்போதைய கொரோனாத் தொற்று (covid-19) தாக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக மறு அறிவித்தல் வரை ஆலயத்திற்குள் அடியார்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதைத் தெரிவிப்பதுடன் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை முற்றாக தவிர்த்து தங்கள் இல்லங்களில் இருந்து அம்பாளை மனக்கண்ணினால் வேண்டி வழிபாடு செய்யுமாறு கேட்டு கொள்கின்றோம்.

ஆலய அறங்காவலர் சபை,
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில்
நயினாதீவு.

⛔ அம்பிகை அடியார்களுக்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கொடும் நோய்த் தொற்று காரணமாக சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய...
03/07/2021

⛔ அம்பிகை அடியார்களுக்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்

கொடும் நோய்த் தொற்று காரணமாக சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மட்டுமே நித்திய பூசைகள் இடம்பெறுகின்றன. அடியார்களின் நேர்த்திகள், அபிஷேகங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீள ஆரம்பிக்கப்பட்டதும் அடியார்களுக்கு அறியத் தரப்படும் என்பதையும், ஆலய தரிசனத்திற்கு தற்போது வருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறும், நாட்டில் சூபீட்சமும் சந்தோஷமும் நீடிக்க அவரவர் இல்லங்களில் இருந்து அம்பாளினை வேண்டிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

அறங்காவலர் சபை,
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில்.

தாயின் மகோற்சவம் ஆரம்பமாவற்கு சில தினங்களே உள்ள வேளையில் இன்றைய தினம் (05.06.2021) தனது ஆலயத்தில் இராஐநாக வடிவில் திருக்...
05/06/2021

தாயின் மகோற்சவம் ஆரம்பமாவற்கு சில தினங்களே உள்ள வேளையில் இன்றைய தினம் (05.06.2021) தனது ஆலயத்தில் இராஐநாக வடிவில் திருக்காட்சி கொடுத்த தருணம்.

படங்கள் - பொ.அன்பரசன்

Address

Nainativu
Nainativu

Opening Hours

Monday 05:30 - 17:30

Telephone

+94213213024

Alerts

Be the first to know and let us send you an email when Nainativu Nagapooshani Amman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Nainativu Nagapooshani Amman Kovil:

Share

Category