மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித், மருதமுனை

  • Home
  • Sri Lanka
  • Maruthamunai
  • மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித், மருதமுனை

மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித், மருதமுனை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித், மருதமுனை, Mosque, Maqbooliya Road, Maruthamunai.

மருதமுனை மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜிதின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.

எமது மஸ்ஜிதோடு தொடர்பான தகவல்கள், வாராந்த குத்பா பிரசங்கங்கள் மற்றும் இஸ்லாமிய உரைகள் என்பவற்றை எமது முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம்.

இவ்வார குத்பா பிரசங்கம் 📆 04.09.2026📍மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித்,மருதமுனை
02/09/2026

இவ்வார குத்பா பிரசங்கம்
📆 04.09.2026

📍மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித்,
மருதமுனை

02/09/2026

🌟 குத்பா பிரசங்கம் (தமிழ்)
📅 28.08.2026

🎙️ அஷ்ஷெய்க். M.H. நஜ்முத்தீன் (ஹாமி, BA)

📍 மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித், மருதமுனை
................................................................................
இது போன்ற பதிவுகளை பெற எமது முகநூல் பக்கத்தோடு இணைந்திருங்கள்.
LIKE | FOLLOW | SHARE

ஊடக அறிக்கைSESDO SRI LANKA 19ஆவது ஆண்டு நிறைவு: பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்கு சான்றிதழ் வழங்கி, நீண்டகால சே...
01/09/2026

ஊடக அறிக்கை

SESDO SRI LANKA 19ஆவது ஆண்டு நிறைவு: பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்கு சான்றிதழ் வழங்கி, நீண்டகால சேவையாளர்கள் கௌரவிப்பு

மருதமுனை | 30.08.2026

மருதமுனை SESDO SRI LANKA தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மஸ்ஜித்களில் கடமையாற்றுகின்ற பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்காக அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், இறை இல்லப் பணியாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஆலோசகர்களை கண்ணியப்படுத்தும் நிகழ்வும் 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மருதமுனை மழ்ஹருள் மக்பூலியா ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

SESDO SRI LANKA நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் நாபி எம். முஸ்னீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் F.M.A. அன்சார் மௌலானா (நளீமி, MA) அவர்கள் சிறப்புரையாற்றினார்.
North London Lecture and Chaplain பதியுதீன் அப்துஸ் ஸமத் அவர்கள் விஷேட உரையை நிகழ்த்தியதுடன், ஓமான் சுல்தான் காபுஸ் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி H.M. நஸிர் அவர்கள் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

மருதமுனை பிரதேசத்தில் உள்ள 21 பள்ளிவாசல்களில் கடமையாற்றுகின்ற பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்கு, அவர்கள் சமூகத்திற்கும் இறை இல்லங்களுக்கும் ஆற்றிவரும் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் வகையிலும், பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

அத்துடன், நீண்டகாலமாக கல்வி, இளைஞர், சமூக மற்றும் மார்க்கப் பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அஷ்ஷெய்க் F.M.A. அன்சார் மௌலானா (நளீமி, MA) அவர்களின் 33 வருட கல்விச் சேவையையும்,
ஜனாப் நழீம் எம். வதுறுதீன் அவர்களின்
33 வருட அரச முகாமைத்துவ சேவையையும்,
ஜனாப் M.T.M. ஹாருன் அவர்களின் 29 வருட இளைஞர் மற்றும் சமூக சேவையையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும்,
அல்-ஹாபிழ் அஷ்ஷெய்க் அப்துர் றஸ்ஸாக் முஹம்மத் ஜரீர் (பஹ்மி) – 23 வருட இமாமத் சேவை
அல்-ஹாபிழ் அஷ்ஷெய்க் A.R. பைசால் கியாஸ் (பலாஹி, BA) – 20 வருட இமாமத் சேவை
M.L. செய்யது அகமது மௌலானா – 37 வருட முஅத்தின் சேவை
ஜனாப் A. பதுறுத்தீன் – 33 வருட முஅத்தின் சேவை
ஆகிய நீண்டகால இறை இல்லப் பணியாளர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டனர்.

நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பையும் நெறிப்படுத்தலையும் நிறுவனத்தின் பிரதித் தலைவர் எம்.ஐ. பௌமி மற்றும் SESDO சமய கலாசார பேரவையின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் றிழா கமால்தீன் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.

நன்றியுரையை நிறுவனத்தின் உயர்பீட உறுப்பினர் ஜே.எம். ஹபீழ் அவர்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர்கள், நிர்வாகிகள், சமூக நலன்விரும்பிகள், ஊர்ப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் அனுசரணையாளர்கள் மற்றும் SESDO SRI LANKA நிறுவனத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு, இறை இல்லப் பணியாளர்களின் நீண்டகால அர்ப்பணிப்பை அங்கீகரித்து, அவர்களின் சேவையைப் பாராட்டுவதுடன், எதிர்கால தலைமுறையினரையும் சமூகப் பணிகளிலும் மார்க்கப் பணிகளிலும் ஈடுபட ஊக்குவிக்கும் ஒரு முன்மாதிரியான நிகழ்வாக அமைந்தது.

வல்ல அல்லாஹுத்தஆலா அனைத்து சேவையாளர்களினதும் பணிகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் மேலும் சிறப்பாக சமூகத்திற்கும் மார்க்கத்திற்கும் சேவையாற்றும் வாய்ப்பை வழங்குவானாக! ஆமீன்.

“2030–2040இல் மருதமுனையை மஸ்ஜித் மைய மக்கள் – மக்கள் நேய மஸ்ஜித்”
Masjith Centred People – People Friendly Masjith என்ற மகுட வாசகம் மக்களின் வெளிச்சம் SESDO SRI LANKA வினால் முன்மொழியப்பட்டது.

ஊடகப் பிரிவு
செஸ்டோ சிறிலங்கா

இவ்வார குத்பா பிரசங்கம் 📆 28.08.2026📍மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித்,மருதமுனை
27/08/2026

இவ்வார குத்பா பிரசங்கம்
📆 28.08.2026

📍மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித்,
மருதமுனை

புதிய மாணவர் அனுமதி 2026/2027            அல்குர்ஆன் மனனம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல்கள் பகுதிநேர பயிற்சிநெறிக்கான புதிய...
27/08/2026

புதிய மாணவர் அனுமதி 2026/2027

அல்குர்ஆன் மனனம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல்கள் பகுதிநேர பயிற்சிநெறிக்கான புதிய மாணவர் அனுமதி

🧒2027 இல் தரம் 06, 07 மற்றும் 08 இல் கற்கும் ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📅விண்ணப்ப முடிவுத் திகதி:
2026.09.05

📞மேலதிக விபரங்களைப் பெற அழையுங்கள்
077 377 8602
மழ்ஹருல் மக்பூலியா அல்குர்ஆன் கற்கை நிறுவனம், மருதமுனை

22/08/2026

🌟 குத்பா பிரசங்கம் (தமிழ்)
📅 21.08.2026

🎙️ அஷ்ஷெய்க். M.H.M. றாயிஸ் (ஷர்க்கி, BA)
அதிபர், அந்நூர் இஸ்லாமிய கல்வி நிறுவனம், மருதமுனை
📍 மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித், மருதமுனை
................................................................................
இது போன்ற பதிவுகளை பெற எமது முகநூல் பக்கத்தோடு இணைந்திருங்கள்.
LIKE | FOLLOW | SHARE

இவ்வார குத்பா பிரசங்கம் 📆 21.08.2026📍மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித்,மருதமுனை
18/08/2026

இவ்வார குத்பா பிரசங்கம்
📆 21.08.2026

📍மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித்,
மருதமுனை

மருதமுனை SESDO SRI LANKA தன்னார்வ தொண்டு அமைப்பின் 19 வருட நிறைவை முன்னிட்டு இடம்பெற்று வரும் நிகழ்வுகளில் இரண்டாவது நிக...
16/08/2026

மருதமுனை SESDO SRI LANKA தன்னார்வ தொண்டு அமைப்பின் 19 வருட நிறைவை முன்னிட்டு இடம்பெற்று வரும் நிகழ்வுகளில் இரண்டாவது நிகழ்வாக "மருதமுனைப் பிரதேச மஸ்ஜித் இமாம்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு" இன்று (16) இடம்பெற்றது.

இந் நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த மருதமுனை SESDO SRI LANKA அமைப்பினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடகப் பிரிவு
மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித்
மருதமுனை

16/08/2026

மருதமுனை பிரதேச மஸ்ஜித் இமாம்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு

🕌 27ஆவது வருடாந்த முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வு         நமது மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இடம்...
14/08/2026

🕌 27ஆவது வருடாந்த முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வு

நமது மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இடம்பெறும் 27 ஆவது வருடாந்த முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வு இன்ஷா அல்லாஹ்,

இன்று 14.08.2026 வெள்ளிக்கிழமை முதல் இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்,
ஊடகப் பிரிவு
மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித்
மருதமுனை

Address

Maqbooliya Road
Maruthamunai
32314

Website

Alerts

Be the first to know and let us send you an email when மழ்ஹருல் மக்பூலியா ஜும்ஆ மஸ்ஜித், மருதமுனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category