ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்-தாயிலான் குடியிருப்பு

  • Home
  • Sri Lanka
  • Mannar
  • ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்-தாயிலான் குடியிருப்பு

ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்-தாயிலான் குடியிருப்பு முத்துமாரி அம்பாள்

மாசியும் பங்குனியும் கூடும் புனித நேரம் – சுமங்கலிகள் போற்றும் காரடையார் நோன்பின் தெய்வீக வரலாறுதமிழ் சமய மரபுகளில் பெண்...
14/03/2026

மாசியும் பங்குனியும் கூடும் புனித நேரம் – சுமங்கலிகள் போற்றும் காரடையார் நோன்பின் தெய்வீக வரலாறு

தமிழ் சமய மரபுகளில் பெண்கள் மிகுந்த பக்தியுடன் கடைப்பிடிக்கும் விரதங்களில் ஒன்று காரடையார் நோன்பு. இந்த விரதம் பெண்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், தாலி பாக்கியம் நிலைத்திருக்க வேண்டும், குடும்பம் செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு புனித விரதமாகும்.

பெண்கள் காமாட்சி அம்மன், பார்வதி தேவி, மகாலட்சுமி போன்ற சக்தி வடிவமான அம்பாள்களை மனமுருகி வேண்டி இந்த நோன்பை கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த விரதம் மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் அந்தச் சந்திப்புக் காலத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நேரம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

காரடையார் நோன்பின் ஆதாரம் – சாவித்திரி சத்யவான் வரலாறு

மகாபாரத காலத்தில் நடந்த ஒரு சம்பவமே இந்த நோன்பின் பின்னணியாக உள்ளது.

ஒரு நாள் பாண்டவர்களின் முதல்வரான யுதிஷ்டிரன் (தர்மன்), மாமேதை மார்க்கண்டேய மகரிஷியிடம் ஒரு கேள்வி கேட்டார்.

“திரௌபதியைப் போல கணவனைப் பற்றிய பக்தியில் உயர்ந்தவர் வேறு யாராவது உள்ளாரா?” என்று கேட்டார்.

அப்போது மார்க்கண்டேய முனிவர் ஒரு அரிய கதையைச் சொல்லத் தொடங்கினார்.

அது சாவித்திரி – சத்யவான் பற்றிய வரலாறு.

பிரம்மனை வேண்டி பெற்ற குழந்தை

பண்டைய காலத்தில் மந்திர நாடு என்ற நாட்டை அஸ்வபதி மன்னன் ஆட்சி செய்தார். அவருக்கும் அவரது ராணிக்கும் நீண்ட காலமாக குழந்தை இல்லை.

அதனால் அவர்கள் இருவரும் கடுமையான தவத்துடன் பிரம்ம தேவனை வேண்டினர்.

அவர்களின் பக்தியால் திருப்தி அடைந்த பிரம்மன், “உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும்” என்று வரம் அளித்தார்.

அவ்வாறு பிறந்த அந்த மகளுக்கு சாவித்திரி என்று பெயர் வைத்தனர்.

சாவித்திரி சிறுவயதிலிருந்தே அறிவு, தைரியம், அழகு, ஒழுக்கம் அனைத்திலும் சிறந்தவளாக வளர்ந்தாள்.

சத்யவானை கண்ட சாவித்திரி

ஒருநாள் சாவித்திரி காட்டிற்குச் சென்றபோது ஒரு காட்சியைப் பார்த்தாள்.

கண்பார்வையற்ற பெற்றோருக்கு ஒருவர் மிகுந்த அன்புடன் உதவி செய்து கொண்டிருந்தான். அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, வழி நடத்தி, அன்புடன் பராமரித்து வந்தான்.

அவன் தான் சத்யவான்.

அவனது நற்குணங்களும் அழகும் சாவித்திரியை மிகவும் கவர்ந்தன.

அவனைத்தான் தனது கணவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

நாரத முனிவரின் எச்சரிக்கை

சாவித்திரி தனது விருப்பத்தை தந்தை அஸ்வபதியிடம் கூறினாள்.

மன்னன் விசாரித்தபோது சத்யவான் ஒருகாலத்தில் செழிப்பாக வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவந்தது. ஆனால் போரில் தோல்வியடைந்ததால் அவரது தந்தை தனது இராச்சியத்தை இழந்து காட்டில் கண்பார்வையற்றவராக வாழ்ந்து கொண்டிருந்தார்.

மன்னன் மகளின் விருப்பப்படி திருமணத்திற்கு சம்மதித்தார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த நாரத முனிவர், சத்யவானைப் பற்றி ஒரு அதிர்ச்சியான உண்மையைச் சொன்னார்.

“சத்யவானின் ஆயுள் மிகவும் குறைவு. திருமணமான ஒரு ஆண்டுக்குள் அவன் இறந்து விடுவான்.”

அதை கேட்டும் சாவித்திரி தனது முடிவை மாற்றவில்லை.

அப்போது நாரதர் கூறினார்:

“நீ பக்தியுடன் காமாட்சி அம்மனை நோக்கி விரதம் இருந்து நோன்பு மேற்கொண்டால், கணவன் உயிருக்கு ஆபத்து வராது.”

காட்டில் வாழ்ந்த தம்பதிகள்

சாவித்திரி சத்யவானை திருமணம் செய்து கொண்டு, அவனுடன் காட்டில் வாழத் தொடங்கினாள்.

அவள் தனது கணவரையும் மாமனாரையும் மாமியாரையும் அன்புடன் சேவித்தாள்.

ஒரு ஆண்டு கடந்து சத்யவானின் இறப்பு நாள் நெருங்கியது.

அன்று சாவித்திரி மனமுருகி அம்பாளை வேண்டி விரதம் இருந்து நோன்பு மேற்கொண்டாள்.

எமனுடன் நடந்த போராட்டம்

அன்றே சத்யவான் காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தான்.

அவன் உயிர் பிரிந்தது.

அவனது உயிரை எடுத்துச் செல்ல எமதர்மராஜன் வந்தார்.

தன் கணவரின் உயிரை எடுத்துச் செல்லும் எமனை பார்த்த சாவித்திரி, தனது பதிவிரத சக்தியால் அவரைத் தொடர்ந்து சென்றாள்.

எமன் கூறினார்:

“உன் கணவரின் உயிரை நான் திருப்பி தர முடியாது. வேறு வரம் கேள்.”

சாவித்திரி கேட்டாள்:

“என் மாமனாருக்கும் மாமியாருக்கும் கண்பார்வை திரும்ப வேண்டும். அவர்கள் இழந்த இராச்சியம் திரும்ப கிடைக்க வேண்டும்.”

எமன் அந்த வரத்தை வழங்கினார்.

அதற்குப் பிறகும் சாவித்திரி எமனை விடாமல் தொடர்ந்து சென்றாள்.

மீண்டும் எமன் கூறினார்:

“இன்னொரு வரம் கேள். ஆனால் கணவன் உயிரை கேட்கக் கூடாது.”

அப்போது சாவித்திரி மிகவும் புத்திசாலித்தனமாக கேட்டாள்:

“என் மாமனாரின் வம்சம் தழைக்க வேண்டும். எனக்கு சத்யவானால் பிறக்கும் குழந்தைகள் வேண்டும்.”

இந்த வார்த்தையை கேட்ட எமதர்மராஜன் சிரித்தார்.

“கணவன் இல்லாமல் உனக்கு குழந்தை எப்படி பிறக்கும்?” என்று கூறி, சாவித்திரியின் பதிவிரத பக்தியைப் பாராட்டி சத்யவானின் உயிரை மீண்டும் திருப்பிக் கொடுத்தார்.

அவ்வாறு கணவனை உயிருடன் மீட்டுச் சென்ற சாவித்திரியின் பக்தியை நினைவுகூர்ந்தே பெண்கள் காரடையார் நோன்பு கடைப்பிடிக்கிறார்கள்.

நோன்பு அனுஷ்டிக்கும் முறை

மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் அந்த நேரத்தில் பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்கிறார்கள்.

2026 ஆம் ஆண்டில் மார்ச் 14 இரவு 7:30 மணி முதல் 8:30 மணிக்குள் நோன்பு முடித்து பூஜை செய்வது உத்தமமாக கருதப்படுகிறது.

அன்று பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வீட்டை சுத்தம் செய்கிறார்கள்.

மாலை வரை விரதமிருந்து பின்னர் கார அடை மற்றும் இனிப்பு அடை தயாரிக்கிறார்கள்.

கார அடை செய்வது

அரிசியை வறுத்து உடைத்து மாவாக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

பின்னர்

தேங்காய் துண்டுகள்

முன்தினம் ஊறவைத்த காராமணி

இவற்றை சேர்த்து, மாவை சிறிது சிறிதாக போட்டு கிளற வேண்டும்.

அது ஆறிய பின் வடை போல தட்டி இட்லி பாத்திரத்தில் வேகவைத்து கார அடை தயாரிக்கப்படுகிறது.

இனிப்பு அடை செய்வது

வெல்லத்தை பாகு செய்து அதில்

தேங்காய்

காராமணி

ஏலக்காய் தூள்

சேர்த்து மாவுடன் கலந்து இனிப்பு அடை தயாரிக்கப்படுகிறது.

பூஜை செய்யும் முறை

பூஜை அறையில் கோலம் போட்டு குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்.

வாழை இலையில் வைத்து

கார அடை

இனிப்பு அடை

வெண்ணெய்

தேங்காய்

வெற்றிலை

பாக்கு

பழங்கள்

வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

மஞ்சள் தடவிய நூலில் சிறிய பசு மஞ்சளை கோர்த்து நோன்பு சரடு தயார் செய்யப்படுகிறது.

பின்னர் பெண்கள் மனமுருகி இந்த மந்திரத்தைச் சொல்வார்கள்:

“உருகாத வெண்ணெயும் ஓர் அடையும் நான் தருவேன்;
என் கணவர் என்னை விட்டு பிரியாமல் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.”

பின்னர் அந்த மஞ்சள் சரட்டை கணவர் கையால் கழுத்தில் கட்டிக் கொள்கிறார்கள்.

அதன் பிறகு கற்பூர ஆரத்தி காட்டி பூஜை நிறைவு செய்யப்படுகிறது.

பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதம் பெற வேண்டும்.

அக்கம் பக்கத்திலுள்ள சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, இனிப்புகள் வழங்குவது வழக்கம்.

திருமணம் ஆகாத பெண்களும் செய்யலாம்

இந்த நோன்பை திருமணம் ஆகாத பெண்களும் கடைப்பிடிக்கலாம்.

அவர்கள் நல்ல குணம் கொண்ட கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளலாம்.

2025ம் ஆண்டு நவராத்திரி விழாவினை சிறப்பாக நடாத்தியமைக்கு ஆலய பிரதம குரு சிவஶ்ரீ.கிருசாந்தகுருக்கள் அவர்களுக்கு  தேவி உபா...
09/03/2026

2025ம் ஆண்டு நவராத்திரி விழாவினை சிறப்பாக நடாத்தியமைக்கு ஆலய பிரதம குரு சிவஶ்ரீ.கிருசாந்தகுருக்கள் அவர்களுக்கு தேவி உபாசகர் எனும் சிறப்பு விருதை ஆலய பரிபாலன சபையினர் வழங்கி வைத்த போது

ஆலய புது தோற்றம்2026 கடந்த 50 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மன்னார் தாயிலான்குடியிருப்பு ஹீ முத்துமா...
09/03/2026

ஆலய புது தோற்றம்2026


கடந்த 50 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மன்னார் தாயிலான்குடியிருப்பு ஹீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி வேளைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது ஆகவே அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை பொருட்கள் மூலமாகவே பண உதவி மூலமாகவே செய்து அம்பாளின் அனுக்கிரகம் பெருவீர்களாக...கணக்கிலக்கம் (020020091267)
மேலதிக விபரங்களுக்கு ஆலய கட்டுமான குழுவை தொடர்பு கொள்ளவும். 0770763308 தீபன், 0779903146 குகன், 0776745083 சிவபாலன்

09/03/2026
கடந்த 50 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மன்னார் தாயிலான்குடியிருப்பு ஹீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்ப...
09/03/2026

கடந்த 50 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மன்னார் தாயிலான்குடியிருப்பு ஹீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி வேளைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது ஆகவே அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை பொருட்கள் மூலமாகவே பண உதவி மூலமாகவே செய்து அம்பாளின் அனுக்கிரகம் பெருவீர்களாக...கணக்கிலக்கம் (020020091267)
மேலதிக விபரங்களுக்கு ஆலய கட்டுமான குழுவை தொடர்பு கொள்ளவும். 0770763308 தீபன், 0779903146 குகன், 0776745083 சிவபாலன்

ஆலய பழைய தோற்றம்

2025ம் ஆண்டு நவராத்திரி விழா
09/03/2026

2025ம் ஆண்டு நவராத்திரி விழா

மகாளய பட்சம் : வீடு தேடி வரும் முன்னோர்கள் - திதி கொடுத்தால் என்னென்ன நன்மைகள் பற்றிய தகவல்கள்...பித்ரு தோஷத்தினால் பாதி...
08/09/2025

மகாளய பட்சம் : வீடு தேடி வரும் முன்னோர்கள் - திதி கொடுத்தால் என்னென்ன நன்மைகள் பற்றிய தகவல்கள்...

பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

"மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது" என்பது பழமொழி. திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மகாளய பட்ச காலத்தில் செய்யும் தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறார் என்பது நம்பிக்கை. புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.

வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் மகாளயம் செய்யுமாறு வழி கூறினார்.

பித்ரு தர்ப்பணம் கடமை

இந்த வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும் நமது முற்பிறப்பு பாவ புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுவே. அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில் பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

மகாளய அமாவாசை

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிரார்த்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூர வேண்டும்.

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.

இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள்.

முன்னோர்களின் ஆசி

மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

முன்னோர்களுக்கு திருப்தி

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எமதர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர்.

முன்னோர்கள் சாபம் நீங்கும்

மகாளய பட்ச காலத்தில் புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் கூடவே தானமும் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பபணம் செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மகாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். அப்படி செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்காளிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

பித்ரு பூஜையின் மகிமை

நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை புரிந்து கொள்ளலாம். பூமியில் பிறந்த எந்த ஜாதி,மதம்,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள்,கரும்பு,அன்னம்,பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும். ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.

தீராத கஷ்டங்கள் தீரும்

நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையே ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது என்பது நம்பிக்கை. பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது. மஹாளய அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பசுவிற்கு பழம்

அவரவர் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம். அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம். இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும். தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம்.

என்ன நாளில் என்ன பலன்

மகாளய பட்ச காலமான 14 நாட்களில் எந்தெந்த நாளில் திதி கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.பிரதமை : செல்வம் பெருகும் துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி) திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும். சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்) பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி) சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்) சப்தமி : மேல் உலகத்தினர் ஆசி அஷ்டமி : நல்லறிவு வளரும். நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும். ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம். துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும். திரயோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும். சதுர்த்தசி : முழுமையான இல்லறம் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மஹாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்.

14/04/2025

2025 ஆம் ஆண்டு விசுவாவசு வருடப்பிறப்பு

Address

தாயிலான் குடியிருப்பு, சின்னக்கரிசல், பேசாலை
Mannar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்-தாயிலான் குடியிருப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category