குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்

  • Home
  • Sri Lanka
  • Kurumbasiddy
  • குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்

குரும்பசிட்டி  முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம், Hindu temple, kurumbasiddy, Kurumbasiddy.

அம்பாளின் அருளதனை அனுதினமும் நினைந்துருகிதம் முடல் பொருளாவி தந்து என்றும் தொண்டாற்றும்இரத்தின கணேஸ்வர ஐயாநின்றொரு முயற்ச...
08/10/2026

அம்பாளின் அருளதனை
அனுதினமும் நினைந்துருகி
தம் முடல் பொருளாவி
தந்து என்றும் தொண்டாற்றும்
இரத்தின கணேஸ்வர ஐயா
நின்றொரு முயற்சியினால்
சிந்தாந்தம் கற்றுயர்ந்து
சித்திபெற்றுச் சிறப்புடனே
பெற்றாரே முதுகலை மானியெனும்
நற்றமிழால் நல்லதோர் பட்டம்
உற்றோமே பெருமை யெங்கள்
ஊர் குரும்பசிட்டி என
சித்தாந்தம் என்பதுவே சைவத்தின்
சத்தாகும் ,சத்தியத்தின் சான்றாகும்
வித்தகத்தின் விளக்கத்தை
விரும்பி படித்துயர்ந்த ஐயா!
முத்தமிழும் முத்துமாரி தந்தகொடை
சுத்தியினி சித்தாந்தம் சிறக்கட்டும்
சுடர்போல மெய்ஞ்ஞானம்
சூட்சுமத்தை விலக்கட்டும்
கும்பாபிஷேகம் அம்பாளுக்கு
கும்பிட்ட அருள் பெருக்கிது
மண்சார்பாய் மனம் மகிழ்ந்து
மனதார வாழ்த்துகின்றோம்
ஐயா! உங்கள் பணி ஊர்கடந்து
அகிலமெல்லாம் பரவட்டும்.

கவி :- ஐங்கரன் (குரும்பசிட்டி)

07 .10.2026 புதன்கிழமை ஆகிய இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சைவசித்தாந்தத்தில்  #முதுகலைமாணிப்பட்டத்த...
07/10/2026

07 .10.2026 புதன்கிழமை ஆகிய இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சைவசித்தாந்தத்தில் #முதுகலைமாணிப்பட்டத்தை பெற்றுக்கொண்ட குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் பிரதம சிவாச்சாரியார் #இரத்தின_கணேஸ்வரக்_குருக்கள் ஐயா அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

அவர்களுக்கு எமது பரிபாலன சபை சார்பிலும் தொண்டர்கள் சார்பிலும் ஊர்மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்...

அம்பிகையை சரண் புகுந்தால் அதிகவரம் பெற்றுடலாம் .

வாழ்த்துகள் ஐயா. Thanu Balan

06.10.2026 மண்டலாபிஷேகம்
06/10/2026

06.10.2026 மண்டலாபிஷேகம்

04.10.2026 மண்டலாபிஷேகம்
04/10/2026

04.10.2026 மண்டலாபிஷேகம்

02.10.2026 மண்டலாபிஷேகம் 🌺 முத்துமாரி அம்மா 🌺முத்தெனும் மழையாய் அருளைத் தருவாய்,மூவுலகும் காக்கும் அன்னையே!துன்பங்கள் தீ...
02/10/2026

02.10.2026 மண்டலாபிஷேகம்

🌺 முத்துமாரி அம்மா 🌺

முத்தெனும் மழையாய் அருளைத் தருவாய்,
மூவுலகும் காக்கும் அன்னையே!
துன்பங்கள் தீர்த்து, துயரங்கள் போக்கி,
துணையாய் நிற்பாய் மாரியம்மனே!

வேப்பிலை வாசம் வீசும் நேரம்,
விழியெங்கும் உந்தன் திருவுருவம்;
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து,
குறைகள் தீர்ப்பாய் கருணை வடிவம்.

மஞ்சள் மணக்கும் உன் திருமேனி,
மங்காத ஒளியாய் விளங்குதம்மா;
குங்குமம் சூடி உன்னைப் பணிந்தால்,
குறையெல்லாம் நீக்கிடுவாய் அம்மா!

மழை பொழியட்டும் வளம் பெருகட்டும்,
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்;
முத்துமாரி அம்மா உன் அருளாலே,
மண்ணில் என்றும் நன்மை நிலைக்கட்டும்!

“ஓம் சக்தி! பராசக்தி!
முத்துமாரி அம்மனே போற்றி!
அம்மன் திருவடிகளே சரணம்!” 🙏🌺

மண்டலாபிஷேகம் 14 ம் நாள்
01/10/2026

மண்டலாபிஷேகம் 14 ம் நாள்

01/10/2026
17.09.2026. பதிவு:- 02குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷமஹா கும்பாபிஷேக பெ...
23/09/2026

17.09.2026. பதிவு:- 02
குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ
மஹா கும்பாபிஷேக பெருவிழா – 2026
7ம் நாளான கும்பாபிஷேகம் என்று சொல்லப்படுகின்ற குடமுழுக்கு வைபவம் வெகு விமரிசையாகவும் பக்தி பூர்வமாகவும் நந்திப்பெருமானின் வரவேற்புடன் தவில் நாதஸ்வர வித்துவான்களின் நாத சமர்ப்பணத்துடனும் கிராமிய வழிபாட்டு இசையில் அமைந்த வானத்தை கிழிக்கும் பாரம்பரிய பறை இசை முழக்கத்துடன் சங்கு சேமக்கல சத்தங்களும் முழங்க இந்த மண்ணின் பல கனவுகளை சுமந்து பல்லாண்டு காலமாக அருள் புரியும் அம்பாள் கும்பத்திலே ஆடி ஆடி மகிழ்ந்து வீதியுலா வந்து உரிய முகூர்த்த வேளையில் கும்பாபிஷேகம் நடைபெற்று அனைத்தும் மிகச்சிறப்பாக நிறைவு பெற்றது.

17.09.2026. பதிவு:- 01குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷமஹா கும்பாபிஷேக பெ...
23/09/2026

17.09.2026. பதிவு:- 01
குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ
மஹா கும்பாபிஷேக பெருவிழா – 2026
7ம் நாளான கும்பாபிஷேகம் என்று சொல்லப்படுகின்ற குடமுழுக்கு வைபவம் வெகு விமரிசையாகவும் பக்தி பூர்வமாகவும் நந்திப்பெருமானின் வரவேற்புடன் தவில் நாதஸ்வர வித்துவான்களின் நாத சமர்ப்பணத்துடனும் கிராமிய வழிபாட்டு இசையில் அமைந்த வானத்தை கிழிக்கும் பாரம்பரிய பறை இசை முழக்கத்துடன் சங்கு சேமக்கல சத்தங்களும் முழங்க இந்த மண்ணின் பல கனவுகளை சுமந்து பல்லாண்டு காலமாக அருள் புரியும் அம்பாள் கும்பத்திலே ஆடி ஆடி மகிழ்ந்து வீதியுலா வந்து உரிய முகூர்த்த வேளையில் கும்பாபிஷேகம் நடைபெற்று அனைத்தும் மிகச்சிறப்பாக நிறைவு பெற்றது.

16.09.2026 குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷமஹா கும்பாபிஷேக பெருவிழாவிலே ...
23/09/2026

16.09.2026
குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ
மஹா கும்பாபிஷேக பெருவிழாவிலே 6 ம் நாள் கிரியை வழிபாடுகள் சில பதிவுகள்

மற்றும் மறுநாள் குடமுழுக்கு வைபவத்தில் கும்பங்கள் வீதியுலா வருவதற்க்காக தொண்டர்கள் இணைந்து தோரணம் கட்டி வெளி வீதி உள் வீதி சுத்தம் செய்து நள்ளிரவு கடந்தும் வெளி வீதிக்கு தண்ணீர் தெளித்து அதிகாலை 4.00 மணியளவில் கடமையை நிறைவு செய்தனர்

Address

Kurumbasiddy
Kurumbasiddy
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category