Swami Vipulananthar Memorial Activities Committee

Swami Vipulananthar Memorial Activities Committee சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிம?

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
18/07/2026

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு விபுலானந்தர் வீதியில் இடம்பெறவுள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுர...
18/07/2026

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு விபுலானந்தர் வீதியில் இடம்பெறவுள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலை புதிய நினைவிடஅங்குரார்ப்பண நிகழ்வு சிறக்க ஏற்பாட்டுக்குழுவினருக்கும், அதிதிகள் பெருமக்களுக்கும், சுவாமியின் அபிமானிகளுக்கும் எமது மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் இப் புதிய நினைவிடத்தினை அமைக்க நிதியுதவி வழங்கிய சுவாமி விபுலானந்த அடிகளாரின் பற்றாளரும், என்றும் எம்மக்களை நேசித்து எமது மக்களின் விடிவிற்காக பல்வேறு வழிகளிலும் பாடுபட்டுவருபவருமான உயர்திரு. ஞானமுத்து அஜந்தா பெருமகனாருக்கு எமது நன்றிப்பூக்களைச் சொரிகின்றோம். இவர் முத்தமிழ் வித்தகருக்கு முதன்முதலில் காரைதீவு கிராமாட்சி முன்றலில் திருவுருவச் சிலை அமைக்கவும், காரைதீவு மண்ணில் சுவாமி விபுலானந்தர் மணிமண்டபம் அமையப்பெறவும் தலைமைத்துவம் வழங்கியவரும், எமது பணிமன்ற ஸ்தாபக தலைவருமான அமரர் வைத்திய கலாநிதி மா. பரசுராமன் அவர்களின் மருகர் என்பது குறிப்பிடத்தக்கது.

1931 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது   பட்டமளிப்பு விழாவின்போது ராஜா அண்ணாமலைச் செட்டியார், ஆளுனர்  ஆர்தர் ஹோப...
13/06/2026

1931 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவின்போது ராஜா அண்ணாமலைச் செட்டியார், ஆளுனர் ஆர்தர் ஹோப் முதலான பிரமுகர்கள் மற்றும் பட்டதாரிகளுடன் சுவாமி விபுலானந்த அடிகள்.
-The Hindu, November 17, 2021

1988 முதல் 2026 வரை, தனது அர்ப்பணிப்பான இறைப்பணி மற்றும் சேவையின் மூலம் எண்ணற்ற உள்ளங்களில் அழியாத நினைவுகளைப் பதித்த சு...
21/05/2026

1988 முதல் 2026 வரை, தனது அர்ப்பணிப்பான இறைப்பணி மற்றும் சேவையின் மூலம் எண்ணற்ற உள்ளங்களில் அழியாத நினைவுகளைப் பதித்த சுவாமி ராஜேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களின் பிரிவு உபசார விழா பக்திப்பூர்வமாகவும் மிக உன்னதமான முறையிலும் 17-05-2026 அன்று மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில், மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகாராஜ் அவர்களின் திருமுன்னிலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சுவாமிகளின் உன்னத சேவைக்கான நன்றியறிதலை தெரிவிக்;கு முகமாக இராமகிருஷ்ண மிஷனுக்கு மகத்தான இரு துறவியரை அர்ப்பணித்த காரைதீவு மண்ணிலிருந்து, காரைதீவு ஆலய அறங்காவலர் ஒன்றியத் தலைவரும், காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வண்ணக்கரும், காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற ஆலோசகருமான இரா. குணசிங்கம் அவர்களும், காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றச் செயலாளரும், அம்பாரை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தருமான கு. ஜெயராஜீ, காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற பொதுச் சபை உறுப்பினர் ஆ. பூபாலரெத்தினம், காரைதீவு அரசடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பொருளாளர் திரு. சி. சிறிகாந்தன் மற்றும் நிருவாக சபை உறுப்பினர் சி. துலக்ஷன் உள்ளிட்ட இராமகிருஷ்ண மிஷன் அபிமானிகள் கலந்துகொண்டனர். காரைதீவு மக்கள் சார்பாகவும் சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றம் சார்பாகவும் பாராட்டு மங்கல வாழ்த்துப் பாவானது திரு. சி. துலக்ஷன் அவர்களால் வாசிக்கப்பட்டு பிரமுகர்களால் சுவாமிகளிடம் வழங்கி நல்லாசிகளைப் பெற்றுக்கொண்டனர். மேலும், காரைதீவு சிவானந்தியன்கள் சார்பாக கு.ஜெயராஜி அவர்களால் அனுபவப் பகிர்வு உரையினை நிகழ்த்தினார்

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
30/04/2026

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

1931ம் ஆண்டு நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக முதலாவது பட்டமளிப்பு நிகழ்வில் பேராசிரியர் சுலாமி விபுலானநந்த அடிகள்.source...
20/04/2026

1931ம் ஆண்டு நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக முதலாவது பட்டமளிப்பு நிகழ்வில் பேராசிரியர் சுலாமி விபுலானநந்த அடிகள்.
source : https://www.thehindu.com/features/metroplus/Madras-Miscellany/article16578514.ece

1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் திகதி இரவு.07.45 மணிக்கு திருச்சி வானொலியில் "Music of the Tamils" (தமிழர்களின் இசை) என...
18/04/2026

1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் திகதி இரவு.07.45 மணிக்கு திருச்சி வானொலியில் "Music of the Tamils" (தமிழர்களின் இசை) எனும் தொனிப்பொருளில் ஏழ்பெரும் பாலைகள் தொடர்பாக சுவாமி விபுலானந்தர் அடிகள் உரையாற்றவுள்ளதாகவும் K.P.சிவானந்தம் அவர்களினால் சுருதி வீணைமூலமான செய்முறை வழங்கப்படவுள்ளதாகவும் THE INDIAN LISTENER: Vol. VII. No. 19. (22nd SEPTEMBER 1942) எனும் பத்திரிகையில் வெளிவந்த செய்தித் துணுக்கு மற்றும் சுவாமியின் அரிய புகைப்படம்

Address

Vipulananda Road, Karaitivu
Karativu
32250

Telephone

+94779309257

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swami Vipulananthar Memorial Activities Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share