Hudha Jummah Masjith Kalmunai

Hudha Jummah Masjith Kalmunai கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் உத்தியோகபூர்வ முக நூல் பக்கம் (Hudha Jummah Masjith)

21/08/2026

#மாபெரும்_இஸ்லாமிய_மாநாடு
ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் - கல்முனை.

 #மாபெரும்_இஸ்லாமிய_மாநாடுஇன்ஷா அல்லாஹ் 21.08.2026 எதிர்வரும் வெள்ளிக்கிழமை.குடும்ப சகிதம் கலந்து பயன்பெற்றிடுங்கள்!
20/08/2026

#மாபெரும்_இஸ்லாமிய_மாநாடு
இன்ஷா அல்லாஹ் 21.08.2026 எதிர்வரும் வெள்ளிக்கிழமை.
குடும்ப சகிதம் கலந்து பயன்பெற்றிடுங்கள்!

20/08/2026

#ஜும்ஆ_பேருரை 21.08.2026
#அஷ்ஷேக்:- முர்ஷித் (அப்பாஸி)
🕌ஹுதா ஜும்ஆ மஸ்ஜித், கல்முனை.

20/08/2026

அல்ஹம்துலில்லாஹ் ஸஹாபாக்கள், ஸாலிஹீன்கள், நேர்வழி பெற்ற இமாம்கள் போல் எம்மையும் இப்படியான இணைவைப்பு பாடல்களை வீணே படிப்பதை விட்டும் பாதுகாத்த இறைவனுக்கே புகழனைத்தும்.

இது இணைவைப்பு இல்லை என்றால் எதனை இணைவைப்பு என்பது?

எமது பாவங்களை நபி ஸல் அவர்களால் மன்னிக்க முடியுமா? இப்படி கேட்டவுடன்

உடனே சொன்னார்கள் ஓர் விளக்கம் அது உலகில் நபியவர்களுக்கு செய்த பாவங்கள் தவறுகளை மன்னிப்பார்கள் என்றுதானே நாங்கள் பாடுகின்றோம்.😄

கேள்வி:- நீங்கள் என்ன பாவம், குற்றம், தவறு செய்தீர்கள் நபி ஸல் அவர்களுக்கு!

நீங்கள் என்ன பெரும் பாவம் செய்தீர்கள் செய்தீர்கள் நபி ஸல் அவர்களுக்கு!

நபி ஸல் அவர்கள் இவ்வுலகில் உங்கள் கண்முன் இருந்து நீங்கள் மன்னிப்புக் கேட்டால் பரவாயில்லை இப்போது மன்னிப்பு கேட்டால் எப்படியப்பா இது உலகத் தவறுக்கானது என்று கூற முடியும்....

ஒரு லாஜிக் வேண்டாமா?😄

22/07/2026

பிற மத கொடியேற்றத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை....

ஆதாரங்களை தவறாக சித்தரித்து தர்ஹாக்களில் நடக்கும் இணைவைப்பிற்கு ஆதாரம் தேடும் சூபி சகோதரர்கள் சற்று சிந்தித்து விலகி நமது அமல்களை பாதுகாப்போம்.

இணைவைத்தால் அமல்கள் அழிந்துவிடும்.

சிந்தியுங்கள்! நபி ஸல் அவர்கள் எந்த தர்ஹாவில் கொடியேற்றி அரோகரா சொன்னார்கள்??

ஸஹாபாக்கள் எந்த அவ்லியாவின் தர்ஹாக்களில் கொடியேற்றி ஸலவாத் சொன்னார்கள்??

ஒரு ஆதாரமும் இல்லை இது பின்னர் இந்துக்களடு கலந்து வாழ்ந்த நமது முன்னோர்கள் அவர்களிடமிருந்து copy பண்ணியதே இக்கொடியேற்றங்களாகும்.

22/07/2026

நேர்வழி என்பது அது எங்கிருந்து எப்படி வந்ததோ அதனை எவ்வித கூடுதல் குறைவுகளும் இன்றி அப்படியே ஏற்பதாகும்.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :- யார் ஒருவர் இஸ்லாத்தில் நல்லது எனக்கருதி ஒரு பித்அத்தை புதுமையை உண்டுபண்ணுகின்றாறோ அவர் முஹம்மது ஸல் அவர்கள் இந்த மார்க்கத்தில் மோசடி செய்துவிட்டார்கள் என எண்ணியவராவார் எனக் கூறினார்கள்.

எனவே நாமாக எதனையும் கூட்டவோ குறைக்கவோ அனுமதியில்லை இந்த மார்க்கத்தில்.....

உள்ளதை உள்ளபடி பின்பற்றி நடப்போம் நேர்வழி பெறுவோம்.

22/07/2026

#ஜும்ஆ_பேருரை 24.07.2026
#அஷ்ஷெய்க்:- MIM. றிஸ்வான் (ஹாமி, ரியாதி)
🕌ஹுதா ஜும்ஆ மஸ்ஜித், கல்முனை.

22/07/2026

தர்கா வழிபாடு என்பது முஸ்லிம்களுக்கு மத்தியில் புகுத்தப்பட்ட முற்றிலும் ஒரு அனாச்சார செயல்.

இஸ்லாமிய போதனைகளுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

தர்காக்களுக்கு சென்றால்…

நல்லது நடக்கும்;
நோய் குணமாகும்;
பிரச்சனைகள் தீரும்;
மன அமைதி கிடைக்கும்;
செல்வம் பெருகும்;
வறுமை ஒழியும்;
குழந்தை பிறக்கும்;
பரிட்சையில் பாஸாகலாம்;
துன்பம் தொலையும்;
மனமகன் கிடைப்பான்;
மனமகள் கிடைப்பாள்;
விசா வரும்;
எதிரியை வீழ்த்தலாம்;
சூனியத்தை எடுக்கலாம்;
ஜின்களை விரட்டலாம்…

என்ற நம்பிக்கைகள் எல்லாம் வீண் கற்பனைகள், பொய்யும் புரட்டும், மூட நம்பிக்கைகளும் ஆகும்.

இவற்றுக்கு இஸ்லாமில் எந்த ஆதரமும் இல்லை, அடிப்படையும் இல்லை.

அங்கு மந்திரிக்கின்ற, தாயத்து தகடு தருகின்ற பவாக்கள், பீர்கள், மற்றும் சாயிபுகளுடைய செயல்கள் எதுவும் மார்க்கத்திலும் அடிப்படையற்றவை; அறிவியலிலும் அடிப்படையற்றவை.

மக்கள் யாராக இருந்தாலும் அங்கு செல்வதும் நேர்ச்சை செய்வதும் அங்கு செலவழிப்பதும் அங்கு துஆ கேட்பதும் அது பலிக்கும் என்று நம்புவதும் முற்றிலும் மூட நம்பிக்கை அன்றி வேறில்லை.

சிந்தியுங்கள்!! உண்மையை புரியுங்கள்!!

22/07/2026

#பித்அத்தில்_நல்லதா??
இது எப்படி என்றால் சாராயத்தில் நல்ல சாராயம் என்பதைப் போல் உள்ளது.

பித்அத் அனைத்தும் வழிகேடு என்பதே நபிமொழி ஏன் தெளிவாகவே ஹதீஸில் "இந்த மார்க்கத்தில் எவர் ஒருவர் அதில் இல்லாத ஒரு புதுமையை உண்டுபண்ணுகின்றாரோ அது நிராகரிக்கப்படும்" (புஹாரி) எனக் கூரிவிட்டார்கள்.

நல்ல புதுமைகளை மார்கத்தில் உண்டு பண்ண முடியும் என்றால் ஏன் இறைவன் நபித்துவத்தை முழுமைப்படுத்தினான்? எதற்காக நபி ஸல் அவர்களை அனுப்பினான்??

அப்படியாயின் நபி ஸல் அவர்கள் நன்மையான காரியங்களை எமக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டு சென்றுவிட்டார்களா?? நஊதுபில்லாஹி மின்ஹா?

நபிவழியை பின்பற்றுவோம் பிறகு உருவாக்கப்பட்ட பித்ஆக்களை வழிகேடுகளை விட்டும் தூரமாகுவோம்.

 #ஹஜ்ஜுப்_பெருநாள்_தொழுகை.  #ஹுதா_திடல்_கல்முனை28.05.2026 வியாழக்கிழமைகாலை 06:30 மணிக்கு தொழுகை ஆரம்பம்.
26/05/2026

#ஹஜ்ஜுப்_பெருநாள்_தொழுகை. #ஹுதா_திடல்_கல்முனை
28.05.2026 வியாழக்கிழமை
காலை 06:30 மணிக்கு தொழுகை ஆரம்பம்.

Address

Hudha Jummah Masjith, Beach Road, Kalmunai/09
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Hudha Jummah Masjith Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Hudha Jummah Masjith Kalmunai:

Shortcuts

Share