Islam is a way of Life

Islam is a way of Life அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவ?

22/04/2020
21/04/2020

சிங்கக் கொடியை தேசியக்கொடியாக அறிமுகம் செய்த முஸ்லிம்.

இலங்கையின் தேசியக் கொடியாக சிங்கக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் முதலில் பிரேரணை சமர்ப்பித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் அஹமத் சின்ன லெப்பை ஆவர்.

மட்டக்களப்புத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அஹமத் சின்ன லெப்பை 1948 ஜனவரி 16ம் திகதி இந்த யோசனையை சமர்ப்பித்தார்.

கண்டி ராஜ்யத்தின் கடைசி மன்னர் ஸ்ரீவிக்ரம ராஜசிங்கவின் சிங்கக்கொடி இலங்கையின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவரது பிரேரணை அமைந்திருந்தது.

தேசியக் கொடி பற்றி ஆராய்வதற்கான ஏழு பேர் அடங்கிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் ஜீஜீ பொன்னம்பலம், எஸ் நடேசன் ஆகிய இரண்டு தமிழர்களும், ரி.பி ஜாயா என்ற முஸ்லிமும் இடம்பெற்றிருந்தார்கள்.

1951மார்ச் 02ல் தேசியக் கொடியில் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த பிரேரணையை தயாரித்தவர் அன்றைய களனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் JRஜயவர்தன ஆவார்

அஹமத் சின்ன லெப்பை , மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ரிஸ்வி சின்ன லெப்பையின் பாட்டனாராவார்.

படம் :- பாராளுமன்ற உறுப்பினர் அஹமத் சின்ன லெப்பை மற்றும் அவரால் முன்மொழியப்பட்ட சிங்கக்கொடி.

Source : Help to Smile

14/04/2020
Ceylon Voices
09/04/2020

Ceylon Voices

06/09/2016

பல்கலைக்கழகக் கல்வியும்!
பறிபோகும் கண்ணியமும்!

"அறிவைத்தேடி பெற்றுக்கொள்வது முஸ்லிமான ஆண், பெண் இருபாலார் மீதும் கடமையாகும்." என்ற நபிமொழிக்கமைய...
நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம். அதைச் சொல்லிச் சொல்லியே கற்றுக்கொண்டும் இருக்கின்றோம். கற்பித்துக்கொண்டும் இருக்கின்றோம்.

ஆனால்...
எதைக் கற்பது?
எதற்காகக் கற்பது?
எப்படிக் கற்பது?
எங்கு கற்பது?
எப்போது கற்பது?
எதுவரை கற்பது?
என்பதைத் தீர்மானிப்பதில் தான் பிழைத்து விடுகின்றோம்.

இப்பொழுது எம் சமுதாய இளைஞர்களும் யுவதிகளும் அதிகமாக, ஆர்வமாக படித்து பல்கலைக்கழகம் செல்கின்றனர். உயரிய குறிக்கோள்களை மனதில் பதித்து, உயர்கல்வியைத் தொடங்குகின்றனர்.
பெற்றவர்களும் தம் பிள்ளைகள் நல்ல நிலையில் சிறப்பாக, சமூக அந்தஸ்தோடு பலர் முன் தலைநிமிர்ந்து
வாழவேண்டும் என்பதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில், நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து, கஷ்டங்களை சகித்து, பொருளாதார சிக்கல்களை சமாளித்து பிள்ளைகளை படிக்கவைக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
அப்பெற்றோரை அள்ளாஹ் பொருந்திக் கொள்வானாக!

ஆனால் இந்த உயர்கல்வியைத் தொடரும் #ஒரு-சில-சகோதர-சகோதரியர்... (அனைவரும் அல்ல)
குறிப்பாக #பெண்கள்
தங்கள் நோக்கம் மறந்து...
மார்க்கம் துறந்து...
தாக்கம் அறியாமல்...
நடந்து கொள்ளும் முறைகள் மிக மிகவேதனைக்குறியது. அவமானத்திற்குறியது.

இவர்கள் நல்ல குடும்பப் பின்னனியில் இருந்தும், இஸ்லாமிய முறையில் வாழ்ந்தும் வந்தவர்கள். மார்க்கம் தெரிந்தவர்கள். ஆனால் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த பின் தன் #மானம், #மார்க்கம் இரண்டையும் பறக்கவிட்டு......
மாற்று மத தோழியருடன் சேர்ந்து,
மஹ்ரமல்லாத உறவுகளுடன் பேசுவது மட்டுமல்லாது, நெருங்கிப் பழகுவது, தொட்டுப்பேசுவது, பகிடி, கேலி, தமாஷ் என எத்தனையோ வடிவங்களில் கூடி சிரித்து மகிழ்வது, விளையாடுவது என அனாச்சாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இத்துடன் நிறுத்தாமல் #காதல் என்று ஒரு கூட்டம் அலையும் அவலநிலை வேறு.
"கெம்பஸ் போனால் இதெல்லாம் சகஜம்" என்ற ஒரு சமாளிப்பு. அங்கு படிப்பதில் ஓர் மமதை.
இவர்கள் தங்கள் பெற்றோரைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் படைத்தவனைப்பற்றிய பயம் கூட இல்லாமல் போய் கண்டபடி அந்நிய கலாச்சாரத்தில் ஊறிப்போய் வாழ்கின்றனர். அவர்களுக்கு தவறுகள் தவறுகளாகத் தெரிவதில்லை. அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை. அது தான் நாகரீகம் என்று அதற்குள் அமிழ்ந்து விடுகின்றனர்.
மூடி மறைத்து முக்காடிட்டவர்கள் சிலர் தலைகீழாக மாறி மாற்று மத சகோதரிகளையே ஆடை விடயத்தில் மிஞ்சி விடுகின்றனர்.
"இந்த நாகரீகம் நரகத்துக்கு வழி வகுக்கும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்."

#••முத்தெடுக்கப்போய்~மூச்சுத்திணறி~மூழ்கி விடுகின்றனர்••

இப்படியானவர்களைக் கண்டபின் தான் சில பெற்றோர் தங்கள் படிக்கக் கூடிய பெண்பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பத் தயக்கம் காட்டுகின்றனர். தம் பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் அப்படிப்பட்ட சூழலில் வழிதவறி விடுவார்களோ என்ற அச்சம் இப்படியானவர்களை பார்த்ததும் வருவது இயல்பு தானே.

வழிகாட்டிகள் தவறான பாதையை தேர்ந்து கொண்டால்.....
முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே முறைதவறி, நடக்கும் போது.... பின்பற்றித் தொடர வேண்டிய இளைய தலைமுறை பிழைத்துப் போகும் வாய்ப்புக்கள் உருவாகலாம்.

சிலரின் இவ்வாறான நெறிபிறழ்ந்த நடைமுறைகளினால்... இறையச்சத்தோடு, ஒழுக்கமாக வாழும் சகோதரிகளின் நிலை பரிதாபத்திற்குறியதாகின்றது. அவர்கள் பரிகாசிக்கப்படுகின்றனர். அவர்களின் கண்ணியமான ஆடைகளும் இஸ்லாமிய நடத்தைகளும் விமர்சனம் செய்யப்படுகின்றன.

எமது சமூகத்தையே தலைகுனிய வைக்கும் இந்த மேதைகள் எப்போது தங்கள் தவறுகளை சீர்திருத்தப் போகின்றார்கள்?
ஏன் சிலர் இப்படி மூளையை அடகுவைத்து நடக்கின்றனர்?
ஏன் இவ்வாறு மாறத் துணிகின்றனர்?
எம்மால் எமது மார்க்கம் காட்டித் தந்திருக்கும் வரையறைக்குள் இருந்து கொண்டே கற்றுத்தேற முடியாதா?
இஸ்லாமிய விழுமியங்களுடன் பன்முகத்தேர்ச்சி பெற்ற எத்தனை ஆளுமை நிறைந்த இஸ்லாமிய சகோதரிகள் எமக்குள் இருக்கின்றனர்.
ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்?

"கல்வி கற்பது அவசியம். அதைவிட மார்க்கம் அத்தியவசியம்.
இறைகட்டளைகளை மீறி, கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, தன் இஷ்டத்திற்கு நடந்து தான் பட்டம் பெறவேண்டும் என்றால்... அந்த படிப்பும் பட்டமும் பதவியும் தேவையில்லை."
என்பதை அனைவரும் உணர்ந்து நடக்கவேண்டும். உணர்த்தப்படல் வேண்டும்.

இவர்களைப் போன்ற எத்தனை இஸ்லாமிய உறவுகள் அழகான முறையில், மரியாதையாக கெம்பஸ் வாழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றனர் என்பதை ஏன் எண்ணிப்பார்ப்பதில்லை.

இவற்றை ஆழமாக சிந்திப்பதும், அவசரமாக ஓர் தீர்வை அமுல்படுத்துவதும் இன்றைய காலத்தின் அவசிய, அவசரத் தேவையாகும்.
இதற்கு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மார்க்க அறிஞர்கள், பள்ளி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரதும் பங்களிப்பு கட்டாயம் வேண்டும். அப்போது தான் ஒரு நல்ல, சீரான சமுதாயமாக எம் இளம் தலைமுறையினரை உருவாக்கலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இன்ஷாஅள்ளாஹ்!

(கட்டுப்பாடு மீறி நடப்பவர்களுக்கு மட்டும்)

19/08/2016

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
உலகத்தில் யாருமே ஏழை இல்லை
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

எல்லோரும் ஏதோ ஒருவகையில் செல்வந்தர்களே


அல்லாஹ் சிலருக்கு அழகை கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!


சிலருக்கு அறிவை கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!


சிலருக்கு குடும்பசெல்வாக்கை கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!


சிலருக்கு அழகான மக்கள் செல்வத்தைக் கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!


சிலருக்கு வீரத்தைக் கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!


சிலருக்கு நல்ல நண்பர்களைக்கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!

✍....
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் செல்வந்தராகவே இருக்கின்றனர் இவ்வுலகத்தில்.

ஆனால்
👁👁
நாம்தான் இறைவனின் அருட்கொடைகளை அறியாமல் செயல்படுகின்றோம்.

அதனால் நமக்கு ஏதாவது கஷ்டம் வந்து விட்டால்
எப்படி நினைக்கிறோம்

அல்லாஹ் நமக்கு மட்டும்தானா இவ்வளவு கஷ்டத்தையும் விடவேண்டும்

என் வாழ்க்கையில் சந்தோஷமே வராதா என்று கவலைப்படுகின்றோம்

இவ்வுலகில் பணம்தான் சந்தோஷம் என்றால் பிர்அவ்ன் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கனும்

அழகு தான் சந்தோஷம் என்றால் அல்லாஹ் யூசுப் நபியை சோதித்திருக்கமாட்டான்

இந்த உலகத்தில் அல்லாஹ் எதையுமே மனிதனுக்கு நிரந்தரமாக சந்தோசம் தரும் எதையும் படைக்கவில்லை

நாம் செய்யும் அமல்களைத்தவிர

நாம் ஆசைப்படும் எதுவும் நிரந்தரமல்ல
அதனால் நாம் கவலைப்படுவதில் அர்த்தமே இல்லை

நாம் உறுதியாக இருக்க வேண்டும்
எனக்கு என்ன வந்தாலும் அது நிரந்தரமில்லை.

நிரந்தர சுவனத்தை அடைய நம்வாழ்வை இவ்வுலகில் பயன்படுத்தி
நாம் அல்லாஹுக்காகவே வாழ்வோம்.
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

 embassy of Cairo
16/06/2016

embassy of Cairo

Address

75/M, Mannikkam Piitye Road
Kaduruwela
51000

Telephone

0112719714

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam is a way of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share