07/03/2026
திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த புதிய பிரிவுக்கான வகுப்புகள் இலங்கை சைவநெறிக்கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை இந்துமாமன்றம், இலங்கை சைவசமயப்பேரவை - Ceylon saivism council , யாழ்ப்பாணச் சைவசித்தாந்தரத்தின மன்றம்
இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றம் ஆகிய அமைப்புகளின் அனுசரணையில் இந்து மாமன்ற அலுவலக கட்டடத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
சிவகதியடைந்த சித்தாந்தரத்தினம்,
திருமுறைநெறிச்செல்வர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்த முதுகலைமாணி தெய்வத்திரு.ந.சிவபாலகணேசன் ஐயா அவர்களின் நல்லாசிகளோடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்ததுறை மூத்த விரிவுரையாளரும்,
சித்தாந்தரத்தினம், சித்தாந்தச்செம்மல்,சிவஞானச் செழுமணி, சைவப்பண்டிதர், சைவப்புலவர் முதலிய சிவஞானவிருதுகளை உடையவருமான கலாநிதி சிவத்திரு. இளையதம்பி ஜெயந்திரன் ஐயா அவர்கள் தலைமைப்பேராசானாக விளங்க
இலங்கை சைவநெறிக்கழகத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் மரு சிவத்திரு பிரதாபனார்.
பதில் தலைவர் சிவத்திரு வினோதரூபனார் ஆகியோரும்
இலங்கை இந்துமாமன்ற பதில் தலைவர் விடைக்கொடிச்செல்வர் சைவத்திரு தனபாலா அவர்களும் கதிர்காம யாத்திரிகர் சங்க செயலாளரும் இந்து மாமன்ற உப தலைவருமான சைவத்திரு சிவஞானம் ஐயா அவர்களும்,
இலங்கை சைவசமயப்பேரவையின் தலைவர் சிவத்திரு அகோரசிவம் உமையரசு சிவாசாரியார் அவர்களும்.
இலங்கை ஆரூரர் சைவப் பணிமன்றத்தின் தலைவர் சிவத்திரு சிவசதீபனார் அவர்களும்
யாழ்ப்பாணச் சைவசித்தாந்தரத்தின மன்றத்தின் தலைவர் சைவத்திரு புவனதாஸ்,செயலாளர் சைவத்திருமதி சரண்யா மற்றும் உறுப்பினர்கள் திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த யாழ்ப்பாணப்பயிற்சி மையத்தின் பழையமாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
புதிய பிரிவில் ஏராளமான மாணவர்கள் சைவசித்தாந்த கல்வியில் இணைந்து கொண்டனர்.
🙏திருச்சிற்றம்பலம் 🙏