Marainathi Jaffna Diocese

Marainathi Jaffna Diocese This is an official Page run by the diocesan commission for social communication - Jaffna Diocese
(1)

தர்மபுரம் பங்கின் பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்...
19/04/2026

தர்மபுரம் பங்கின் பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

08ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

இறை இரக்க பக்தியை முன்னெடுத்து இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கொட்டில் ஆலயமான பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் ஆலயம் வன்னியில் நடைபெற்ற இனப்படுகொலை போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்து இறைவனின் இரக்கத்தை அனுபவித்த ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக அமைந்திருப்பதுடன் இவ்வாலயத் திருநாளில் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் பக்தியுடன் பங்குகொள்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னார் மறைமாவட்ட முன்நாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஜந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை ம...
19/04/2026

மன்னார் மறைமாவட்ட முன்நாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஜந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து நினைவுப்பேருரையும் நடைபெற்றன.

நினைவுப்பேருரையை அரசியல் ஆய்வாளர் திரு. நிலாந்தன் அவர்கள் “தமிழ் அரசியல் மீது சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீடு” என்னும் தலைப்பில் வழங்கினார்.

நினைவுப்பேருரை நிறைவில் மன்னார் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆயர் அவர்களின் சிலைக்கு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மன்னார் நகரசபை முதல்வர் திரு. வசந்தன், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை ...
19/04/2026

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் தவக்கால உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை கொண்டு முழங்காவில் ஆதார வைத்தியசாலை சிறுவர் நோயாளி பிரிவுக்கு தேவையான இலத்திரனியல் வெப்பமானி, நிறை அளக்கும் உபகரணம், மற்றும் உணவுப்பொருட்களும் வன்னேரி முதியோர் இல்ல முதியோருக்கு அத்தியாவசிய பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.

திருவுள சபை அங்கதத்வர்களுக்கான உயிர்ப்பு பெருவிழா ஒன்றுகூடல் சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தி...
19/04/2026

திருவுள சபை அங்கதத்வர்களுக்கான உயிர்ப்பு பெருவிழா ஒன்றுகூடல் சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

சபை ஆலோசகர் குழுவின் ஒழுங்குபடுத்தலில் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் - சணா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து கருத்துரை, அங்கத்தவர்கள் அறிமுகம், குழு கலந்துரையாடல், திருப்பலி என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இலங்கையில் பணியாற்றும் சபை குருக்கள், மணத்துறவு ஆண்கள், யாழ்ப்பாண, கொழும்பு மற்றும் மன்னார் வட்டார குடும்பத்தினரென 80 வரையானவர்கள் பங்குபற்றினர்.

சில்லாலை புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த “அருளானந்தம்” மண்டப திறப்புவிழா சித்திரை மாதம் 10ஆம் தி...
19/04/2026

சில்லாலை புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த “அருளானந்தம்” மண்டப திறப்புவிழா சித்திரை மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்து மண்டபத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் மற்றும் பங்குமக்கள் கலந்துகொண்டனர்.

ஆலயத்தின் முதலாவது குருவாகிய அருட்தந்தை அருளானந்தம் அவர்களின் குருத்துவ 40ஆவது ஆண்டு நிறைவாக அமைக்கப்பட்ட இம்மண்டபத்தின் கட்டுமான பணிகளுக்கான நிதியனுசரணையை அருட்தந்தை அருளானந்தம் மற்றும் அவரது சகோதரி திருமதி எலிஸ்ரன் மலர் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு யூபிலி கலைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி சித்திரை மாதம் 11,1...
19/04/2026

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு யூபிலி கலைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி சித்திரை மாதம் 11,12,13ஆம் திகதிகளில் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் ஆலயத்தின் 50 வருட படிமுறை வளர்ச்சி, சிறப்பு நிகழ்வுகள் போன்றவற்றின் புகைப்படங்கள், பங்குத்தந்தையர்கள் விபரங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

கண்காட்சியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டணிஸ்ரன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுக் கூட்டம் சித்திரை மாதம் 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அகவொளி குடும்பநல நிலையத்தில்...
19/04/2026

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுக் கூட்டம் சித்திரை மாதம் 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அகவொளி குடும்பநல நிலையத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் கிளரீசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வருகின்ற வைகாசி மாதம் 31ஆம் திகதி யாழ் மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படவுள்ள மறைமாவட்ட அன்பிய ஞாயிறு தொடர்பாகவும் மறைமாவட்ட மறைக்கோட்ட மற்றும் பங்கு ரீதியாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்து உயிர்ப்பு விழா சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்க...
19/04/2026

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்து உயிர்ப்பு விழா சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலவச மருத்துவ பரிசோதனை, பங்குமக்களுக்கான விளையாட்டுக்கள், உணவுப்பொருள் விற்பனை என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

மன்னார் மறைமாவட்டம் மாந்தை, வவுனியா மறைக்கோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட சமூக மேய்ப்புபணி கருத்தமர்வுகள் அண்மை...
19/04/2026

மன்னார் மறைமாவட்டம் மாந்தை, வவுனியா மறைக்கோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட சமூக மேய்ப்புபணி கருத்தமர்வுகள் அண்மையில் நடைபெற்றன.

மாந்தை மறைக்கோட்ட கருத்தமர்வு சித்திரை மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்திலும் வவுனியா மறைக்கோட்ட கருத்தமர்வு 15ஆம் திகதி புதன்கிழமை இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் நடைபெற்றன.

மன்னார் மறைமாவட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாட்டு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் தலைமையில் “மறைமாவட்டத்தின் சமூக மேய்ப்புப்பணி சார்ந்த தேவைகள் மட்டில் தூய ஆவியருக்கு செவிமெடுத்தல்” என்னும் கருப்பொருளில் இக்கருத்தமர்வுகள் நடைபெற்றன.

இந்தியாவிலிருந்து வருகைதந்த இயேசு சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்திய இக்கருத்தமர்வுகளில் கருத்துரை, குழுஆய்வு, கலந்துரையாடல் என்பன இடம்பெற்றன.

மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறை இரக்க தியான இல்லத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்செய்தி பெ...
19/04/2026

மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறை இரக்க தியான இல்லத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்செய்தி பெருவிழா சித்திரை மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை நடைபெற்றது.

தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, திருப்பலி, நற்செய்தி பகிர்வு, நற்கருணை வழிபாடு என்பன இடம்பெற்றன.

இறுதிநாள் வழிபாடுகள் சித்திரை மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுடன் அன்றைய தினம் இறையிரக்க பெருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இவ்வழிபாடுகளில் 3000ற்கும் அதிகமான இறைமக்கள் கலந்து செபித்தனர்.

காலி மறைமாவட்டம் உடுகம பங்கு மக்கள் இணைந்து முன்னெடுத்த திருயாத்திரையும் கள அனுபவ பயணமும் சித்திரை மாதம் 11,12,13ஆம் திக...
19/04/2026

காலி மறைமாவட்டம் உடுகம பங்கு மக்கள் இணைந்து முன்னெடுத்த திருயாத்திரையும் கள அனுபவ பயணமும் சித்திரை மாதம் 11,12,13ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை லசந்த சஞ்சீவ பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டங்களை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களையும் இடங்களையும் பார்வையிட்டதுடன் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களையும் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.

இவ்யாத்திரையில் 150 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

திருகோணமலை மறைமாவட்ட இறையிரக்க திருத்தல 25ஆவது ஆண்டு திருவிழா பரிபாலகர் கப்புச்சின் சபை அருட்தந்தை அமல உதயம் அவர்களின் ஒ...
19/04/2026

திருகோணமலை மறைமாவட்ட இறையிரக்க திருத்தல 25ஆவது ஆண்டு திருவிழா பரிபாலகர் கப்புச்சின் சபை அருட்தந்தை அமல உதயம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

06ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

Address

MARAINATHI Catholic Media Centre
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Marainathi Jaffna Diocese posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Marainathi Jaffna Diocese:

Share