12/11/2013
சிரியாவில் 105 அடி உயரமான வெண்கல இயேசு கிறிஸ்து சிலை.
சிரிய மலைப் பிராந்தியமொன்றில் 105 அடி உயரமான இயேசு கிறிஸ்துவின் சிலையொன்று ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டில் உள்நாட்டு போர் உக்கிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே மேற்படி சிலை செட்னயா மலையில் ஸ்தாபிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த உருவச்சிலையை உருவாக்குவதற்கு 8 வருட காலம் செலவிடப்பட்டுள்ளது.மேற்படி சிலை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளாகிவரும் பிராந்தியத்தில் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிலை இரு பாகங்களாக செட்னயா மலைப் பிராந்தியத்துக்கு கொண்டுவரப்பட்டது.னினும் அல் கொய்தா போராளிகள் செல்வாக்குப் பெற்றுத் திகழும் அந்தப் பிராந்தியத்தில் இந்த இயேசு கிறிஸ்துவின் சிலை பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சிலை அவ்விடத்தில் ஸ்தாபிக்கப்படுகின்றமைக்கு இயேசு கிறிஸ்துவின் கிருபையே காரணம் என பிராந்திய கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.சிரியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது பிறப்பு மேற்படி தளத்திலேயே இடம்பெறும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.