Sathya Sai International Organization-THAVADY

Sathya Sai International Organization-THAVADY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sathya Sai International Organization-THAVADY, Religious organisation, Near to pillayar temple Thavady, Jaffna.

இன்று 19.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது அனைவரும் வாரீர் உதிரம் வழங்கும் உன்னத...
19/04/2026

இன்று 19.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது அனைவரும் வாரீர் உதிரம் வழங்கும் உன்னத சேவைக்கு...

17/04/2026
ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏 இன்று (24.02.2026) சத்திய சாயி ஆன்மிகக் கல்வி மாணவர்களுக்கு சர்வமத ஒற்றுமையை வலியுறுத்தும் முகமாக.....
23/02/2026

ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏

இன்று (24.02.2026) சத்திய சாயி ஆன்மிகக் கல்வி மாணவர்களுக்கு சர்வமத ஒற்றுமையை வலியுறுத்தும் முகமாக...

1)சிவ தொண்டன் நிலையம் சென்று
அங்கு சத்திய சாயி ஆன்மிகக் கல்வி மாணவர்கள் நற்சிந்தனை பாடல்கள் பாடினர்.

2) பள்ளிவாசல் சென்று
அங்கு மௌலவி சர்வமத ஒற்றுமை, இஸ்லாமிய வழிபாட்டு முறைகள் என்ற தலைப்பில் உரையும், சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் வழங்கியிருந்தார்.

3) பாஷையூர் அந்தோனியார் தேவாலயம்

4) நாக விகாரை (ஆரிய குளம்)
ஆகிய இடங்களை தரிசித்தனர்

5) யோகர் சுவாமிகளின் சமாதி தரிசனமும் அதனைத் தொடர்ந்து சிவபுராண பாராயணமும் பின்னர் யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் திரு.யோகேஸ்வரன்‌ அவர்கள் யோகர் சுவாமி பற்றிய சிற்றுரையினை வழங்கியிருந்தார்
அதன் பின் சத்திய சாயி ஆன்மிகக் கல்வி மாணவர்கள் யோகர் சுவாமிகளின் சமாதியின் முன் நற்சிந்தனை பாடல்களைப் பாடி நாம பஜனையும் செய்திருந்தனர்.

6) நிறைவாக வாலாம்பிகை ஆலயத் தரிசனத்துடன்
தாவடி சத்திய சாயி சேவா நிலையத்திற்குத் திரும்பி அங்கு மதிய போசணத்தில் கலந்து கொண்டனர்.

இந்த அதிர்வலைகள் மிகுந்த ஆன்மிகப் பயணத்தில்
சத்திய சாயி ஆன்மிகக் கல்வி மாணவர்கள்,
மகளிர் பிரிவினர்
இளைஞர்கள்
என 37 அன்பர்கள் ஆன்மிக அதிர்வுகளை பெற்றுக் கொண்டனர்.

🙏 ஜெய் சாய் ராம் 🙏

18/01/2026
14/01/2026

வடபிராந்திய ரீதியான இளைஞர்கள் பயிற்சி பட்டறை – 02
📍 தாவடி சாயி நிலையத்தில்
🗓️ 16.01.2026 (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
அனைத்து இளைஞர்களும் தவறாமல் பங்கேற்று
🙏 சுவாமியின் அருகாமையை மேலும் உணர்வோமாக.

🌼 ஜெய் சாயிராம் 🌼

ஓம் ஸ்ரீ சாய்ராம் தாவடி சத்திய சாயி சேவா நிலையத்தால் தெரிவு செய்யப்பெற்ற 11 குடும்பங்களுக்கு 13.01.2026 அன்று பொங்கல் பொ...
14/01/2026

ஓம் ஸ்ரீ சாய்ராம்

தாவடி சத்திய சாயி சேவா நிலையத்தால் தெரிவு செய்யப்பெற்ற 11 குடும்பங்களுக்கு 13.01.2026 அன்று பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பெற்றன...

ஓம் ஸ்ரீ சாய்ராம் தாவடி சத்திய சாயி சேவா நிலையத்தில் 11.01.2026 திங்கட்கிழமையன்று நடைபெற்ற திருவாசக முற்றோதலின் போதான பத...
14/01/2026

ஓம் ஸ்ரீ சாய்ராம்

தாவடி சத்திய சாயி சேவா நிலையத்தில் 11.01.2026 திங்கட்கிழமையன்று நடைபெற்ற திருவாசக முற்றோதலின் போதான பதிவு....

🙏ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏01.01.2026 வியாழக்கிழமையன்று  தாவடி சத்திய சாயி சேவா நிலையத்தில் அகண்ட காயத்ரி சாதனை நடைபெற்றது இதன்...
04/01/2026

🙏ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏

01.01.2026 வியாழக்கிழமையன்று தாவடி சத்திய சாயி சேவா நிலையத்தில் அகண்ட காயத்ரி சாதனை நடைபெற்றது இதன் போது அதிகாலை ஓம்காரம்
சுப்ரபாதம்
திருப்பாவை
சிவலிங்க அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 06.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை தொடர்ச்சியான காயத்ரி மந்திர உச்சாடனமும் அதனைத் தொடர்ந்து நாமபஜனை மற்றும் மஹா மங்கள ஆரத்தி என்பன நடைபெற்றன.

🙏 ஜெய் சாய் ராம் 🙏

Address

Near To Pillayar Temple Thavady
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sathya Sai International Organization-THAVADY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share