JDCSI Official CSI Jaffna Diocese

Website

JDCSI Official  CSI Jaffna Diocese Faith • Education • Service
Official page of the Jaffna Diocese of the Church of South India (JDCSI)
www.jdcsi.lk

01/10/2026
எமது கிறிஸ்த சேவா ஆச்சிரமத்தின்ஜெரோம் அன்னண்ணின் தாயார் திருமதி.ஸ்டெல்லா புஷ்பாவதி கிங்ஸ்லி தயாளகுணசீலன் அவர்கள் 20.09.2...
21/09/2026

எமது கிறிஸ்த சேவா ஆச்சிரமத்தின்
ஜெரோம் அன்னண்ணின் தாயார் திருமதி.ஸ்டெல்லா புஷ்பாவதி கிங்ஸ்லி தயாளகுணசீலன் அவர்கள் 20.09.2026 அன்று இரவு 9.50 மணிக்கு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னாரின் நல்லடக்க வழிபாடு 22.09.2026 செவ்வாய் கிழமை காலை 10. 00 மணிக்கு கிரான் ஆச்சிரமத்தில் நடைபெறும்.

18/09/2026

1:06
Testimony -1_from JDCSI Youth Camp 2026

வட்டிப்போட்டமடு ஜெபாலயத்தில் பேராயர் நற்கருணை வழிபாடுமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள அடிப்படை வ...
17/09/2026

வட்டிப்போட்டமடு ஜெபாலயத்தில் பேராயர் நற்கருணை வழிபாடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள அடிப்படை வசதிகள் குறைந்த வட்டிப்போட்டமடு கிராமத்தில் அமைந்துள்ள ஜெபாலயத்திற்கு தென்னிந்திய திருச்சபை – யாழ்ப்பாண ஆதீனப் பேராயர். கலாநிதி V. பத்மதயாளன் அவர்கள் 13.09.2026 அன்று விஜயம் செய்து, தூய நற்கருணை வழிபாட்டை நடத்தினார்.

1953ஆம் ஆண்டு ஆச்சிரமத் தொண்டராகிய சின்னண்ணன் (சேவக் ஜேசுசகாயம்) அவர்களின் அர்ப்பணிப்பான பணியின் மூலம் இப்பகுதியில் வழிபாட்டு மனை மற்றும் சிறிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அவை அழிவடைந்தன.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஆச்சிரம அன்பர் ஒருவரின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பின் மூலம் மீண்டும் வழிபாட்டு மனை அமைக்கப்பட்டு, அது “ஜெபாலயம்” என அழைக்கப்பட்டு வருகிறது. வயல் நிலங்களால் சூழப்பட்டுள்ள இவ்விடத்தில் அமைந்துள்ள ஜெபாலயம், அப்பகுதி மக்களின் இறைநம்பிக்கைக்கும் வழிபாட்டு வாழ்விற்கும் சாட்சியாக விளங்குகிறது.

பேராயர் அவர்களின் விஜயத்தின் போது நடைபெற்ற தூய நற்கருணை வழிபாட்டில் அருட்பணி ஜெரோம் அவர்களும் உடனிருந்தார். வழிபாட்டின் போது பேராயர் இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு அருளுரை வழங்கி, இப்பகுதியில் முன்னோடியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சின்னண்ணன் (சேவக் ஜேசுசகாயம்) அவர்களின் தியாகப் பணியை நினைவுகூர்ந்தார்.

1953ஆம் ஆண்டு தொடங்கிய இந்த இறைப்பணியின் தொடர்ச்சியாக இன்று ஜெபாலயத்தில் வழிபாடு நடைபெறுவது இறைவனின் வழிநடத்தலுக்கும் கிருபைக்கும் சாட்சியாகும். இப்பணிக்காகவும், முன்னோடியாக உழைத்த சின்னண்ணன் அவர்களின் தியாகத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

இறைவனுக்கே புகழ் உண்டாகுக!

பொதுக்கூட்டம் - சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்பு.மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் தென்னிந்...
15/09/2026

பொதுக்கூட்டம் - சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்பு.

மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் தென்னிந்திய திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனத்தின் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேராயர் பேரருட்திரு கலாநிதி வி. பத்மதயாளன் அவர்களின் தலைமையில் சிறப்பான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் காத்தான்குடி தலைவர் சாஜகான் மௌலவி அவர்களும், திருப்பெருந்துரை முருகன் ஆலயத்தின் பிரதம குருக்கள் அவர்களும் கலந்து கொண்டு தமது வாழ்த்துச் செய்திகளையும் ஆசிகளையும் வழங்கினர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு. சிவயோகநாதன் சீலன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துச் செய்தியை வழங்கினார்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, திருப்பெருந்துரை பகுதியில் தென்னிந்திய திருச்சபையின் பணிகளை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் உழைத்தவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. திருமதி புஷ்பராணி, திரு. தேவமனோரஞ்சன் மற்றும் திரு. தர்ஷன் ஆகியோர் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அதேவேளை, தென்னிந்தியா திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனத்தின் பேராயர் பேரருட்திரு கலாநிதி வி. பத்மதயாளன், பொருளாளர் திரு. ஜோ. இன்பராஜ் மற்றும் சென்னைப் பேராயத்திலிருந்து வருகை தந்த அருட்பணி பிரின்ஸ் ஆகியோரும் திருச்சபை மக்களினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பேராயர், திருச்சபையின் எதிர்காலப் பணிகள் குறித்து எடுத்துரைத்ததுடன், தென்னிந்தியா திருச்சபை தனது பணிகளை சமூகத்தின் அனைத்து தரப்பினருடனும் இணைந்து முன்னெடுக்க எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைப் பணியாளர்களுடன் இணைந்து சமாதானம், நல்லிணக்கம், சமூக நீதி மற்றும் மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பதற்கான திருச்சபையின் அர்ப்பணிப்பையும் அவர் வலியுறுத்தினார்.

மதங்களுக்கிடையிலான நல்லுறவையும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் வலுப்படுத்தும் வகையில், திருச்சபையின் எதிர்காலப் பணிகள் அமைந்திருக்க வேண்டும் எனவும் பேராயர் குறிப்பிட்டார்.

திருப்பரந்துரையில் புதிய ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வு, ஒரு புதிய வழிபாட்டுத் தலத்தின் ஆரம்பம் மட்டுமன்றி, இப்பகுதி மக்களின் ஆன்மிக வாழ்வுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் சேவைக்கும் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.

13/09/2026

JDCSI New church opening in Batticaloa.

மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைப்புதென்னிந்தியத் திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனத்தின் கிழக்...
13/09/2026

மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைப்பு

தென்னிந்தியத் திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனத்தின் கிழக்குப் பிராந்தியப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 13 செப்டம்பர் 2026 அன்று மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு தென்னிந்தியத் திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனத்தின் பேராயர் பேரருட்திரு கலாநிதி வி. பத்மதயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. புதிய ஆலயத்தின் பிரதிஷ்டை ஆராதனை பேராயர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றதுடன், திருவிருந்து ஆராதனையும் அருளுரையும் பேராயர் அவர்களால் நடத்தப்பட்டது.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் கிழக்குப் பிராந்தியத்தில் தென்னிந்திய திருச்சபையின் பணிகள் மீண்டும் சிறப்பாக நடைபெற்று வரும் இவ்வேளையில், நிரந்தர ஆலயக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கியமான விடயமாகும்.

இந்த புதிய ஆலயம் இப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திருச்சபையின் ஆராதனை மற்றும் ஊழியப் பணிகளுக்கு வலுவான தளமாக அமையும் எனவும், இப்பகுதி மக்களின் ஆன்மிக வாழ்வுக்கும், விசுவாச வளர்ச்சிக்கும், சமூக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கும் பெரும் பங்களிப்பைச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

10/09/2026

JDCSI YOUTH CAMP 2026 DAY 3

பெற்றோருக்கான ‘இயற்கை நண்பர்கள் கழகம்’ நிகழ்வு3, 4 மற்றும் 5 வயதுடைய சிறார்களின் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “இ...
08/09/2026

பெற்றோருக்கான ‘இயற்கை நண்பர்கள் கழகம்’ நிகழ்வு

3, 4 மற்றும் 5 வயதுடைய சிறார்களின் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “இயற்கை நண்பர்கள் கழகம்” நிகழ்வு, தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் முன்னெடுக்கப்படும் ‘கடவுளின் அன்பு’ திட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயற்கை முறையில் தாவரங்களை வளர்ப்பது, தாவரங்களுக்குத் தேவையான உரங்களை முறையாகப் பயன்படுத்துவது, அவற்றைப் பாதுகாத்து பராமரிப்பது மற்றும் நீர்ப்பற்றாக்குறை நிலவும் காலங்களிலும் தாவரங்களைச் சிறப்பாகப் பராமரித்து வளர்ப்பது தொடர்பான பயனுள்ள தகவல்கள் பெற்றோருக்கு வழங்கப்பட்டன.
நிகழ்வின் வளவாளராக விவசாயத் திணைக்கள அதிகாரி திரு. A. ரெஜிதாஸ் கலந்து கொண்டு, தாவர வளர்ப்பு மற்றும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கும் முறைகள் தொடர்பில் நடைமுறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், நிகழ்வில் பங்கேற்ற பெற்றோருக்கு பாக்கு மற்றும் மாதுளை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் வீடுகளில் இயற்கைச் சூழலை மேம்படுத்துவதுடன், தாவர வளர்ப்பில் பெற்றோர்களையும் சிறார்களையும் ஊக்குவிக்கும் நோக்கமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மொத்தமாக 20 பெற்றோர்கள் பங்கேற்றனர். நிகழ்வை R. பிரமிளா மற்றும் M. கிருஷாலினி ஆகியோர் திட்டமிட்டு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர்.

பெற்றோர் மற்றும் சிறுவர் கற்றல் கழக நிகழ்வுபெற்றோர் மற்றும் சிறுவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சியை ம...
08/09/2026

பெற்றோர் மற்றும் சிறுவர் கற்றல் கழக நிகழ்வு
பெற்றோர் மற்றும் சிறுவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சியை முன்னிறுத்தி, பெற்றோர் மற்றும் சிறுவர் கற்றல் கழக (Parents & Children Learning Club) நிகழ்வு நேற்று பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை புதுக்குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.
தென் இந்திய திருச்சபை – யாழ் ஆதீனத்தின் தூய திரித்துவ ஆலயத்தில் நடைபெற்று வரும் “கடவுளின் அன்பு” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், 55 சிறுவர்கள், 40 பெற்றோர்கள் மற்றும் 19 பணியாளர்கள் என மொத்தம் 114 பேர் கலந்துகொண்டனர்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொறுப்பான பெற்றோர்மையை ஊக்குவித்தல், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு ஆதரவான வழிகாட்டல்களை பெற்றோர்களுக்கு வழங்குதல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தன.
இந்நிகழ்வின் வளவாளராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்தர் கலந்துகொண்டு, பெற்றோர்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறுவர் பாதுகாப்பு, பெற்றோரின் பொறுப்புகள் மற்றும் சிறுவர்களின் வளர்ச்சி தொடர்பான பயனுள்ள தகவல்களையும் வழிகாட்டல்களையும் வழங்கினார். அவரது சிறப்பான வழிகாட்டுதலுடன் நிகழ்வு பயனுள்ள முறையில் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக, 11 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் தங்களது கருத்துக்களையும் பங்களிப்பையும் வழங்கினர். அவர்களின் உற்சாகமான பங்கேற்பு நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்தது.
சிறுவர்களை துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதுடன், அவர்களின் உடல், உளவியல், சமூக மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் பெற்றோரின் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
சிறுவர் பாதுகாப்பு, பொறுப்பான பெற்றோர்மை மற்றும் சிறுவர்களின் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் இத்தகைய நிகழ்வுகள் சமூகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

Address

Diocesan Office, Vaddukoddai
Jaffna
44000

Alerts

Be the first to know and let us send you an email when JDCSI Official CSI Jaffna Diocese posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share