Masjidhul Aqsa - Deltota

Masjidhul Aqsa - Deltota Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masjidhul Aqsa - Deltota, Religious organisation, Aqsa Colony, Deltota.

விசேட துஆ பிரார்த்தனை07.08.2026 வெள்ளிக்கிழமை இன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து, எமது மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் விஷேட து...
07/08/2026

விசேட துஆ பிரார்த்தனை

07.08.2026 வெள்ளிக்கிழமை இன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து, எமது மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் விஷேட துஆ பிரார்த்தனை நடைபெறவுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் A/L பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, பள்ளிவாசல் நிர்வாக சபையினால் வழமை போன்று இவ்வருடமும் இந்த துஆ பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஊர் ஜமாஅத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலவச மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!மஸ்ஜிதுல் அக்ஸா – தெல்தோட்டை நிர்வாக சபையினால் ஏற்பாடு செய்...
03/08/2026

இலவச மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்!

மஸ்ஜிதுல் அக்ஸா – தெல்தோட்டை நிர்வாக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம் 25.07.2026 (சனிக்கிழமை) அன்று அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக நடைபெற்றது.

35 வயதிற்கு மேற்பட்ட சமூக மக்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரோல் பரிசோதனைகள் உள்ளிட்ட இலவச சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு தங்களது நேரத்தையும், அர்ப்பணிப்பையும் வழங்கி சமூகத்திற்கு மகத்தான சேவையாற்றிய தெல்தோட்டை வைத்தியசாலையின் Staff & Management அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல், நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த மஸ்ஜிதுல் அக்ஸா நிர்வாக சபை, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் கலந்து கொண்டு பயனடைந்த அனைத்து சமூக உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆரோக்கியமான சமூகமே வளமான சமூகமாகும்.
அல்லாஹ் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் நலவாழ்வையும் அருள்வானாக. ஆமீன்.

25.07.2026

🌙 Muharram 1448 AH Mubarak 🌙May this blessed month of Muharram inspire us to strengthen our faith, increase our good dee...
17/06/2026

🌙 Muharram 1448 AH Mubarak 🌙

May this blessed month of Muharram inspire us to strengthen our faith, increase our good deeds, and follow the path of truth, patience, and sacrifice. May Allah (SWT) grant peace, blessings, guidance, and success to you and your family throughout the year.

Muharram Mubarak!
May Allah fill your life with His mercy, protection, and countless blessings. Aameen. 🤲✨

“Happy New Islamic Year 1448 AH”
May this new year bring us closer to Allah and make us among those who strive for righteousness and sincerity. 🌙💫

📢 தாருள் அர்கம் குர்ஆன் மத்ரஸா – வாராந்திர அஸர் அதான் பொறுப்பாளர்கள் 🕌மாணவர்களின் தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் இஸ...
08/06/2026

📢 தாருள் அர்கம் குர்ஆன் மத்ரஸா – வாராந்திர அஸர் அதான் பொறுப்பாளர்கள் 🕌

மாணவர்களின் தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் இஸ்லாமிய பண்புகளை வளர்க்கும் நோக்கில், மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயிலின் கீழ் இயங்கி வரும் தாருள் அர்கம் குர்ஆன் மத்ரஸாவில் இந்த வாரத்திற்கான அஸர் அதான் கூறும் பொறுப்பாளர்களாக மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அல்லாஹ்வின் இல்லத்தில் சேவை செய்யும் இந்த அரிய வாய்ப்பை பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். 🌿

அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அறிவையும், ஈமானையும், நல்லொழுக்கத்தையும் அதிகரித்து, இஸ்லாத்தின் சிறந்த பணியாளர்களாக வளர அருள் புரிவானாக. ஆமீன். 🤲

🕌✨

தாருல் அர்கம் குர்ஆன் மத்ரசா நடத்திய அதான் பயிற்சி 🔻🔻🔻🔻🔻🔻🔻அல்லாஹ்வின் அருளால்,  உங்கள் தொட்டி மஸ்ஜிதுல் அக்ஸாவில் இயங்கி...
04/06/2026

தாருல் அர்கம் குர்ஆன் மத்ரசா நடத்திய அதான் பயிற்சி
🔻🔻🔻🔻🔻🔻🔻

அல்லாஹ்வின் அருளால், உங்கள் தொட்டி மஸ்ஜிதுல் அக்ஸாவில் இயங்கிவரும் தாருல் அர்கம் குர்ஆன் மதரசாவில் அதான் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

🎙️ இந்நிகழ்ச்சியை சகோதரர் FAZLAN அவர்கள் வழிநடத்தி, அதானின் சரியான உச்சரிப்பு, அழகிய குரல் நடை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி வழங்கினார்.

🌟 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர். இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிகழ்ச்சியை பள்ளிவாசல இமாம் மௌலி ரிகாஸ் மஹ்பலி நெறிப்படுத்தினார்.

18.05.2026

🌿 நன்றியுடன் பாராட்டுகிறோம் 🌿தெல்தோட்டை ( அரக்வெல) மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் பயன்பாட்டிற்காக ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன...
02/06/2026

🌿 நன்றியுடன் பாராட்டுகிறோம் 🌿

தெல்தோட்டை ( அரக்வெல) மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் பயன்பாட்டிற்காக ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று (28.05.2016) Vacuum Cleaner ஒன்றை அன்பளிப்பாக வழங்கிய சகோதரர் நிலாப்தீன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சகோதரி சித்தி நிஹாரா ( Razas' mother) அவர்களும் ஒரு Vacuum Cleaner தருவதாக வாக்களித்திருக்கின்றார். Alhamdulillah

அல்லாஹ் அவர்கள் செய்த இந்த நற்செயலை ஏற்றுக்கொண்டு, அவர்களின் செல்வத்திலும், ஆரோக்கியத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் பரக்கத் அருள்வானாக.

மேலும் இம்மை மற்றும் மறுமை வெற்றிகளை வழங்கி, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை அருள்வானாக. ஆமீன்.

🤝 பள்ளிவாசல் மற்றும் சமூக நலப் பணிகளுக்கு பங்களிப்பு செய்வது தொடர்ச்சியான நன்மைகளை வழங்கும் சிறந்த ஸதகாக்களில் ஒன்றாகும். எனவே சமூகத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்களால் இயன்ற வகையில் இத்தகைய நற்காரியங்களில் பங்கெடுத்து அல்லாஹ்வின் திருப்தியைப் பெற முன்வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

“நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 5:2)

بارك الله فيكم

01/06/2026

Eid Ul Adha - 2026

கண்டி Silvester  கல்லூரியில் எமது அக்ஸா கொலனி Sayyaf🔰🟡🔰🟡🔰🟡🔰🟡எமது அக்ஸா கொலனியை சேர்ந்த கௌரவத்திற்குரிய அஷ்ஷேக் Seyyaf அவ...
03/04/2026

கண்டி Silvester கல்லூரியில் எமது அக்ஸா கொலனி Sayyaf
🔰🟡🔰🟡🔰🟡🔰🟡

எமது அக்ஸா கொலனியை சேர்ந்த கௌரவத்திற்குரிய அஷ்ஷேக் Seyyaf அவர்கள் கண்டி சில்வர்ஸ்டார் கல்லூரியில் 27.03.2026 அன்று ஆசிரியராக தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அல் ஹம்துலில்லாஹ்.

உண்மையில் எமது ஊருக்கு பெருமை சேர்த்த செய்யாப் நளீமி அவர்கள் நன்கு திறமையும் ஆற்றலும் கொண்ட ஒருவராவார்.

எமது பள்ளிவாசலோடு சிறுவயது முதல் நெருக்கமான உறவை மேற்கொண்டவர். தற்பொழுது எமது நிர்வாக சபையிலும் ஒரு உறுப்பினராக இணைந்து கொண்டிருக்கின்றார். அல்லாஹுத்தஆலா அவருக்கு நல்ல ஆற்றலையும் உடலில் தேக ஆரோக்கியத்தையும் வழங்கி எமது ஊருக்கும் எமது சமூகத்துக்கும் எமது தேசத்துக்கும் நற்பணி செய்யக்கூடிய ஒருவராக அல்லாஹுத்தஆலா அவரை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.... வாய்ப்புகளை வழங்க வேண்டும்... என்று இறைவனிடத்திலே பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்.

வெற்றிகரமான அவருடைய ஈருலக வாழ்க்கைக்கும் எமது பிரார்த்தனைகள் என்றென்றும் இருக்கிறது.

Beruwela ஜாமியா நளீமியா கல்லூரியில் சேர்த்து விடுவதற்காக அவரை நான் அழைத்துச் சென்ற பொழுது அவர் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் ஒரு நல்லதொரு நிலைமைக்கு வருவார் என்ற நம்பிக்கை தென்பட்டது.

எமது ஊரிலும் ஆற்றலும் உற்சாகமும் உள்ள நிறைய மாணவர்கள் இருக்கின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என்று நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்வோம்.... வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்போம்..... உற்சாகப்படுத்துவோம்.....
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

வாழ்த்துக்களுடன்

✍️ ஏ .ஆர் .ஐ யாகூப்
தலைவர்,
நிர்வாக சபை,
Masjidh Al Aqsa,
Deltota.

அன்புள்ள அக்ஸா கொலனி ஜமாஅத் உறவுகளே,    விசேட பயான்         நிகழ்வு🔰🔰🔰🔰🔰🔰🔰அஸ்ஸலாமு அலைக்கும்   தொழுகை-  ஒரு முஸ்லிமின் வ...
13/03/2026

அன்புள்ள
அக்ஸா கொலனி ஜமாஅத் உறவுகளே,

விசேட பயான்
நிகழ்வு
🔰🔰🔰🔰🔰🔰🔰

அஸ்ஸலாமு அலைக்கும்

தொழுகை-
ஒரு முஸ்லிமின் வாழ்வின் அடித்தளம்

என்ற தலைப்பில் சிறப்பு பயான் ஒன்று இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

✳️ பயான் நிகழ்த்துபவர்:

கௌரவ மௌலவி A.S. ரிரகாஸ் ( மஹ்பலி )

✳️ திகதி:
14.03.2026
✳️நேரம்: இரவு.
9.00 மணி
✳️இடம்:
Masjidul Aqsa

எனவே,
அக்ஸா கொலனி ஜமாஅதின் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு, இந்நிகழ்வை பயனுள்ள ஒன்றாக அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் ரமழானை சிறப்பாக , முழுமையாகப் பூரணப்படுத்திக் கொள்ளும் நல்வாய்ப்பை அருள்புரிவானாக.
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

✍️ A.R.I. யாகூப்

Grand Iftar ProgramHijri 1447 / 2026🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 Date: Tuesday, 10th March 2026 Venue: Masjid Al Aqsa, Arakwela Aqsa Colony,...
10/03/2026

Grand Iftar Program
Hijri 1447 / 2026
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Date: Tuesday, 10th March 2026
Venue: Masjid Al Aqsa, Arakwela Aqsa Colony, Deltota

Sponsored by:
As Sheikh Dr. Muneer Sadiq
(Member of Patha Hewaheta Pradeshiya Sabha)

Organized by:
Board of Management
Masjid Al Aqsa
Arakwela Aqsa Colony
Deltota

Address

Aqsa Colony
Deltota
20430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masjidhul Aqsa - Deltota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share